என் மலர்
அரியலூர்
- 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்குந்தபுரம் கலியபெருமாள் மகன் பிரபாகரன் வீட்டில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றதாக இவரை கைது செய்து அவரிடமிருந்து 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.
- பதவி உயர்வு வழங்க கோரிக்கை
- அரியலூர் அண்ணாசிலை முன்பு போராட்டம் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். 10ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு விரைந்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் அங்கன் வாடி ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வி.ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் த.சகுந்தலா, பொருளாளர் பி.ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- பணிநீக்கம் செய்து புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யவிருப்பதற்கு எதிர்ப்பு
அரியலூர்,
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். 10ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு விரைந்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் அங்கன் வாடி ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்டபோராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வி.ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் த.சகுந்தலா, பொருளாளர் பி.ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்கிறார்கள்
- கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டு
அரியலூர்,
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி-வினா, வானவில் மன்றம், கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு விழா போன்றவை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் அனைவரும் மாநில அளவிலான சிறப்பு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் பிரணவ் கார்த்திக் வினாடி-வினா போட்டியிலும், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தீக்ஷிதா பேச்சுப்போட்டி (இலக்கிய மன்ற போட்டியிலும்), புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் நிதிஷ்குமார் வானவில் மன்றம் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மேற்கண்ட 3 மாணவ-மாணவிகளும் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் என்ற ஆசிரியரும் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு பள்ளி கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் உடனிருந்தனர். மேலும் இவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணமாக பின்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
- ஜெயங்கொண்டம் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்றது
- பச்சரிசி, சர்க்கரை கலந்து படையலிட்டனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவத்தி கொல்லை, வடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையை முன்னிட்டு பஞ்சாங்க முறைப்படி திசைகள் குறிக்கப்பட்டு நல்லேர் பூட்டி வழிபாடு செய்தனர்.முன்பு உள்ள கால கட்டங்களில் வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அவைகளை குளிப்பாட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிவித்து நிலங்களில் நிறுத்தி வழிபாடு செய்து விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என வேண்டுதல்கள் வைத்து வழிபாடு செய்து நல்லேர் பூட்டுவது வழக்கம்.தற்போது ஏர் உழும் காளைகள் வளர்ப்பு குறைந்த காரணத்தினால் விவசாயத்திற்கு பெரிது பயன்படுத்தப்படும் மண்வெட்டி, டிராக்டரை வரிசையாக நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்தனர். இதில் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சரிசி, எள், சக்கரை கலந்து படையலிட்டனர்.
பின்னர் மண்வெட்டியால் நிலத்தை கொத்தியும், டிராக்டர் மூலம் நிலங்களை உழுதும் வழிபாடு செய்தனர்.
- அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
- மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஈஸ்வரன், இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- நாய்கள் துரத்தி கடித்ததில் ரத்தம் கொட்டி செத்தது
- உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை, சுத்தமல்லி, பூவந்திகொல்லை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது சுத்தமல்லி நீர் தேக்கம். இதில் உள் பகுதிகள் காடுகளாக இருப்பதால் மான், மயில், பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் காலை நெல் கொள்முதல் நிலையம் அருகே பெண் புள்ளி மான் ஒன்றை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியதை கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு உள்ளனர். பின்னர் அந்த மானை மீட்டு பொதுமக்கள் பார்த்த போது மானில் உடலில் பல இடங்களில் நாய்கடி காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.இது குறித்து தா.பழூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அங்கு வருவதற்குள் மான் பரிதாபமாக இறந்தது. உயிரிழந்த மானின் உடலை அங்கே உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறையினர், அதன் பின்னர சுத்தமல்லி வனப்பகுதியில் புதைத்தனர்.
- 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி தலையைல் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ஜெயங்கொண்டம் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், துணை ஆசிரியர் இளங்கோவன், மீன்சுருட்டி தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பிற்கான விடை தாள் மதிப்பீடு செய்யும் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் குறித்து முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர் ஆய்வாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மகள் வீட்டிற்கு தாய் சென்றிருந்தபோது பின் கதவை உடைத்து கொள்ளை
- கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவரின் மனைவி சாந்தி. கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆண்டிமடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்தநிலையில், இன்று காலை இடங்கண்ணி கிராமத்தில் அவரது வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டின் தோட்டத்தில் இருந்த நாய்க்கு உணவு வைக்க சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தவர்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சாந்தி ஆண்டிமிடத்திலிருந்து தா.பழூர் வந்து சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பார்த்த போது வீட்டில் பின்பக்க கதவில் தாழ்ப்பாழ் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.வீட்டிற்குள் சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளும், ரூ.30 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடையவியல் நிபுண் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டது.போலீஸ் மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் மலர் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்று விட்டது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது
- பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அவர் பேசும்போது, மனிதன் பேராசையால் பூமியின் இயற்கை வளம் அதிகமாக சுரண்டப்படுகிறது. உலகில் உயிர் வாழ சாதகமான சூழல் கொண்ட ஒரே கிரகம் பூமி மட்டுமே . ஆனால் சுற்று சூழல் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பூமியை காக்க காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும். மரங்கள் அதிகம் வளர்க்க வேண்டும் என்று அவர் பேசினார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி,ரமேஷ், கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலஷா ஆகியோர் செய்திருந்தனர்.
- அரியலூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கான சலுகை அறிவிப்பு
- வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.






