என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தேர்பவனி இன்று இரவு நடைபெறுகிறது.கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட உள்ள அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கவைக்க உள்ளார்.

    பங்குதந்தை அதிபர் தங்கசாமி திருவிழாவை பற்றி கூறுகையில்.ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு ஆந்திரா. கர்நாடகா. கேரளா. பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்களின் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெயும் மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்வார்கள். திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும், மின்விளக்கு வசதிகளும் செய்து வருகிறோம் என்று கூறினார்.


    • மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் இந்திரா நகர் ராவுத்தன்பட்டி சின்னராசு மகன் செந்தில்குமார்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் சேர்ந்த யமுனா என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிமையில் வசித்து வந்த செந்தில்குமார் வீட்டில் தூக்கில் அழுகிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • தா.பழுர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பாக சிலால் சாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றி கோடைகால தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். மேலும் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சிலால் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தா.பழுர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் புத்தக திருவிழாவில் அடுப்பில்லா சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது
    • சிறுதானியங்களைக் கொண்டு அடுப்பில்லாமல் சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அடுப்பில்லா சிறுதானிய உணவு வகைகளின கண்காட்சி நடைபெற்றது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் இந்த கண்காட்சியில், கலந்து கொண்ட அங்கன்வாடிகளைச் சேர்ந்த பணியாளர்கள், கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அடுப்பில்லாமல் சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலும் இக்கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்களிடம், நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றோம். இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறை உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்றவையால் பாதிப்பு அடைகிறோம்.

    எனவே, இளம்பருவத்திலுள்ள மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறுதானிய உணவு வகைகளைஅதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.மாலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பாக சிறுதானியத்தில் உணவு சமைத்த அங்கன்வாடியைச் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


    • திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிக்கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பெ.ஜெயபாரதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

    • அரியலூரில் வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
    • பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் வரும் 1-ந் தேதி (தொழிலாளர் தினத்தன்று) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் காவலாளியை தாக்கினர்
    • புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் இடையார் காலனி தெருவை சேர்ந்த பிச்சபிள்ளை என்பவரது மகன் ரஜினிகாந்த் (வயது 38). இவர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் ஒப்பந்த அடிப்படையில் (காப்பாளராக) பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் பணியில் இருக்கும் போது குடிபோதையில் வந்த திருக்களப்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் கூலி தொழிலாளியான விக்ரம் (36) என்பவர் தன் மனைவி சிவசக்திக்கு குழந்தை பிறந்ததை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

    அப்போது ரஜினிகாந்த் இரவு நேரம் என்பதால் நோயாளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், காலையில் வந்து பார்க்கலாம் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம் ரஜினிகாந்தை தகாத வார்த்தைகளால் பேசி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் காயமடைந்த ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர். மேலும் அரசு மருத்துவமனை காப்பாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • இடையான்குடிகாடு தும்பிக்கை ஆழ்வார், வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர:

    அரியலூர் மாவட்டம் இடையன்குடி காடு தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ம் தேதி முதல் காலம் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. 25-ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜையும், சாந்தி ஹோமம் பூர்ணாஹீதியுடன் மூன்றாம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வாணவேடிக்கை, பட்டாசு முழக்கத்துடன் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கும்பாஷேக விழாவில் இடையான்குடிகாடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தளவாய் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் சவரிக்காடு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜேந்திரன்(வயது 58). விவசாயியான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் வயிற்று வலியால் இவர் அவதி பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மயக்க நிலையில் இருந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


    • அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 1.1.2023 முதல் வழங்கவேண்டிய 3 சதவீத அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.ஐ செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்கிட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சரவணசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.வட்டத் தலைவர் து. ஜெயராஜ், துணைச் செயலர் செந்தில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    • ஜெயங்கொண்டத்தில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது
    • புகாரின் அடிப்படையில் பெட்டி கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவிராயர் மகன் வீரமணி (வயது 38). இவர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 10 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் பெட்டி கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, நகராட்சி ஆணையர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ் மற்றும் அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் வீரமணி பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பாகவும், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மர்மநபர்கள் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.எனவே அந்த பஸ் நிறுத்தம் அருகே சில சமூக விரோதிகள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • புதுச்சாவடி கிராமத்தில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • விழாவில் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன் தினம் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநில நிர்வாகி ராம பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×