என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
- தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் சவரிக்காடு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜேந்திரன்(வயது 58). விவசாயியான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் வயிற்று வலியால் இவர் அவதி பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






