என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 127 பேர் கொரோனா ெதாற்றில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 560 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 929 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,816 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆவேரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 3 பேர் சுமார் 600 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலச்சந்திரனின் மகன் பாரதிதாசன்(வயது 23), காமராசுவின் மகன் சின்ராசு(24), ஜெயங்கொண்டம் காமராஜர் நகரை சேர்ந்த செல்வேந்திரன் மகன் பிரபாசங்கர்(21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை வழிபாட்டிற்காக திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.
தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருங்காட்சியகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழக அரசு அனுமதி அளிக்காததன் காரணமாக நேற்று கோவில் திறக்கப்படவில்லை.
அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்த மாவட்டங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. எனவே, மத்திய அரசு வழிகாட்டுதலின்பேரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை திறந்து, தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வெந்நீர் கருவியை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அறிவு வழங்கியதை நோயாளிகளின் உபயோகத்திற்காக அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குருவாலப்பர் கோயில், பூவாயிகுளம், சோழங்குறிச்சி, தேவனூர், புதுக்குடி உள்பட 7 இடங்களில் ஓ.என்.ஜி.சி. மூலம் ைஹட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரியலூர் மாவட்டம் உள்ளிட்ட 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதிக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். விவசாயிகளை பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஜெயங்ெகாண்டத்திலும் இந்த திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவத்தின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. எனினும் ஒரு சில கிராமங்களில் உரிய விழிப்புணர்வு இல்லாததால் நோய்த்தொற்று சிறிது அதிகரித்து வருகிறது. அக்கிராமங்களை கண்டறிந்து சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்துவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் குறித்து கேட்டபோது, தற்போது கொரோனா காலமாக இருப்பதால் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருவதால் நிலக்கரித் திட்டம் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர், முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலையை அமைச்சரிடம் வழங்கினார். இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சார்ந்த சிவமுத்துவின் மகன்கள் சிவசர்மா, சிவசுகில் ஆகியோர் தங்களது சேமிப்பு பணத்தை அமைச்சரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியின்போது ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தர்மதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
ஜெயங்கொண்டம் பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நகரப் பகுதிகளில் அனைத்து ஏரிகளிலும் சாக்கடை நீர் கலந்து நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே திறந்த நிலையில் உள்ள சாக்கடைகளை உடனடியாக மூடி அனைத்து சாக்கடை நீரும் ஒரே இடத்தில் சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பையும் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அரியலூர்:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இதையடுத்து கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நெடுவாசல் அருகே கருக்காகுறிச்சி வடதெரு பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் விட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுப்புக்கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அதற்குள் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நேற்று (15-ந்தேதி) தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004 ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உரிமம் பெற்றது. இந்த பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் எனும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக்கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக்கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 13-ந்தேதி ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலம் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ளபோது அதை மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட வேலாயுத நகர், தெற்கு வெள்ளாளர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2 நாட்களில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணியின் மகன் சுரேஷ்(வயது 28). இவர் மேலூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள்(60) என்பவருடன் சென்று, திருச்சி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பினார். திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர். பூண்டி பிரிவு பாதை அருகே வந்தபோது எதிரே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். கலியபெருமாள் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,619 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,619 ஆக உயர்ந்துள்ளது. இதில் 170 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,420 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 164 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,029 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 278 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,528 ஆக உயர்ந்துள்ளது. இதில் 169 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 278 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,102 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் 1,171 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,966 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 150 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெயங்கொண்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர்.
அரியலூர்:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூரில் மேல அக்ரஹார தெருவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார், லாரிகள் வைத்து தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்து, விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கம்பில் கட்டி தூக்கியவாறு நூதன முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் அருகே முத்துவாஞ்சேரி சாலையில் அரியலூர் தெற்கு ஒன்றிய வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய வட்டார தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாதுரை, வட்டார தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிமடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பாலு, மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தா.பழூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, வட்டாரத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செந்துறையில் ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அரியலூர்:
அரியலூர் புதுமார்க்கெட் 6-வது தெருவில் வசிப்பவர் சுரேஷ். நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்கு பசும்பலூர் சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுபற்றி அரியலூர் போலீசில், சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கரி சாம்பல் ஏற்றிச்சென்ற லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு, ராட்சத லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் பெரியாத்துக்குறிச்சி சோதனைச்சாவடி வழியாக செல்ல முயன்ற ராட்சத லாரியை மறித்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு, அதனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவர் தப்பித்து ஓட முயன்றனர். அவர்களை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி(வயது 47), அதே ஊரில் தோப்பு தெருவை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும், அவர்கள் நெய்வேலியில் இருந்து கும்பகோணத்திற்கு லாரியில் நிலக்கரி சாம்பல் அள்ளிச்சென்றதும், தெரியவந்தது.
மேலும் லாரியின் உள்ளே சோதனை செய்தபோது, அதில் 61 குவார்ட்டர் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும், தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்து, அரோக்கியசாமி, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.