என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    • குடிசை வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சிகளை உள்ளடக்கியது. தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி காவிரி டெல்டா பாசன விவசாயம் செய்யும் பசுமையான பகுதியாகவும், ஒரு பகுதி மானாவாரி பயிர்கள் செய்ய ஏதுவான மணல் பாங்கான நிலப்பரப்பாகவும், மற்றொரு பகுதி செம்மண் பூமியாக உள்ள முந்திரி காடுகள் அமைந்த பகுதியாகவும், சில பகுதிகள் கரிசல் மண், களிமண் கலந்த விவசாய பூமியாகவும் அமைந்துள்ளது.

    தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுமொத்தமாக விவசாயத்தை நம்பியே இருக்கக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் விவசாய கூலி தொழிலாளர்கள், குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    தா.பழூர் ஒன்றியத்தில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக நிறுவனங்களில் ஆண்டுக்கு 100 முதல் 150 சிறிய அளவிலான தீ விபத்துகள் முதல் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. தா.பழூர் தாலுகாவில் தீயணைப்பு மீட்பு படையினரின் தேவைகள் இருக்கும் சமயங்களில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் மிக அத்தியாவசிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ஜெயங்கொண்டம், அரியலூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து தா.பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தீயணைப்பு மீட்பு படையினரின் வாகனங்கள் வந்து சேர்வதற்கு முன்பாக அதிகளவில் தீ பரவி பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்துகிறது.

    தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு ஜெயங்கொண்டம் நகரில் மட்டுமே தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. 3 ஒன்றியங்களில் உள்ள 98 ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட சுமார் 220 குக்கிராமங்களில் எங்கு தீ விபத்து நடந்தாலும் ஜெயங்கொண்டத்தில் இருந்து மட்டுமே தீயணைப்பு வீரர்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் நீண்ட தூர பயணம் செய்த பிறகே சம்பவ இடத்தை தீயணைப்பு மீட்புப்படையினரால் அடைய முடிகிறது.

    எனவே தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • மதில் சுவா் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
    • பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா்.

    அரியலூா் :

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44). இவரது வீட்டின் அருகாமையில் வசிப்பவா் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா (44). இவா்களிடையே இடப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ,

    ஆத்திரமடைந்த ராஜா ஜெயந்தியை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், ராஜாவை கைது செய்தனா்.


    • கொரோனாவுக்கு 3 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

    அரியலூர்:

    கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளார்.

    நேற்று அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் வட்டாரத்தில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, அவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


    • மதுவை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சம் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சாத்தம்பாடி செக்காள் தெருவை சேர்ந்த நீலகண்டன் (வயது 24) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது அவரது வீட்டிலிருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கொரைக்குரி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (23) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


    • அரியலூர் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் மாதாந்திர கூட்டமைப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடந்தது.
    • நிலக்கரிக்காக கையகப்படுத்திய நிலங்களை எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் திரும்ப விவசாயிகளுக்கே ஒப்படைத்த தமிழக அரசுக்கு பாராட்டும், அகவிலைப் படி உயர்வை தாமதிக்காமல் வழங்கி உதவும் வகையில் ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும்

    அரியலூர்:-

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

    அரியலூர் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் மாதாந்திர கூட்டமைப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் நிலக்கரிக்காக கையகப்படுத்திய நிலங்களை எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் திரும்ப விவசாயிகளுக்கே ஒப்படைத்த தமிழக அரசுக்கு பாராட்டும்,

    அகவிலைப் படி உயர்வை தாமதிக்காமல் வழங்கி உதவும் வகையில் ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்) ஆகியோர் தலைமையில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
    • அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து, 45 கிலோ 754 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அரியலூர்

    திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில்,

    திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்) ஆகியோர் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசாரால் சிறப்பு அதிரடி வேட்டை கடந்த 16-ந்தேதியும், நேற்று முன்தினமும் நடத்தப்பட்டது.

    இதில் அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து, 45 கிலோ 754 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 9 கிலோ 919 கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

    • சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
    • இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த காரைகாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி வாசுகி.

    இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 14-ந் தேதி மதுபானம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் அன்னகெளந்தன் பெரியஏரி உள்ளது. இதில் 10 குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதில் மூன்று குடும்பத்தினர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். இதில் சிலர் அகற்றாமல் இருந்து வந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூரை வீட்டில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சண்முகம் (வயது 53), என்பவரது வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனை மிகவும் கவனமாக பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பை தடுத்தனர்.

    பின்னர் அவரை சமாதானப்படுத்திய போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், கருணாநிதி ஆகியோர் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றினர். மேலும் அங்கு குடியிருந்தவர்களில் சிலர் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம சுகாதார தன்னிறைவுத் திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடை பெற்றது.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஊராட்சி செயலர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம சுகாதார தன்னிறைவுத் திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஊராட்சி செயலர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, ராதிகா கண்ணன், 35 பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” மேற்பார்வை பொறியாளர், தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
    • மின்நுகர்வோர்கள்,விவசாயிகள் மற்றும்விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடையலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக வருகிற 21.06.2022 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் "மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" மேற்பார்வை பொறியாளர், தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே அது சமயம் இக்கோட்ட மின்நுகர்வோர்கள்,விவசாயிகள் மற்றும்விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திடவேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் கூட்டத்தில்கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட பழங்குடியினவிவசாயி–களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

    இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ளஅரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு வெளியிட்ட ஆணையின்படி 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடியஇடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணபிரியா(23) என்பவரை படநிலை கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
    • கிருஷ்ணபிரியா தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மறுநாள் காலை கிருஷ்ணபிரியாவையும், அவரது குழந்தையையும் காணவில்லை.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 51).

    இவர்களுடைய மகள் கிருஷ்ணபிரியா(23) என்பவரை படநிலை கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 3 வயதில் சக்தி என்ற பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதனால் தாய் வீட்டில் இருந்த கிருஷ்ணபிரியாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

    ஆனால் அன்று மாலையே கிருஷ்ணபிரியா தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மறுநாள் காலை கிருஷ்ணபிரியாவையும், அவரது குழந்தையையும் காணவில்லை. அவர்களை அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரியாவையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.

    ×