என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
- இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த காரைகாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி வாசுகி.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 14-ந் தேதி மதுபானம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.