என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் 21-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்-கலெக்டர் தகவல்
- மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” மேற்பார்வை பொறியாளர், தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
- மின்நுகர்வோர்கள்,விவசாயிகள் மற்றும்விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடையலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக வருகிற 21.06.2022 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் "மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" மேற்பார்வை பொறியாளர், தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே அது சமயம் இக்கோட்ட மின்நுகர்வோர்கள்,விவசாயிகள் மற்றும்விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திடவேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூட்டத்தில்கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






