என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரிடம், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
    • சேவை கட்டணமாக ராேஜந்திரனிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 51 ஆயிரத்து 200-ஐ இணையதளம் மூலம் பெற்றுள்ளார்.

    அரியலூர் :

    அரியலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரிடம், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது பெங்களூருவில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்களை காப்பீட்டுதாரர்களாக சேர்த்து விடுவதாக கூறி, அதற்கு சேவை கட்டணமாக ராேஜந்திரனிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 51 ஆயிரத்து 200-ஐ இணையதளம் மூலம் பெற்றுள்ளார்.

    இதையடுத்து அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றியதாக ராஜேந்திரன் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் கர்நாடக மாநிலம் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு மாருதி சேவா நகர் பகுதியை சேர்ந்த சங்கல ராயப்பாவின் மகன் சந்தோசை(வயது 27) கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி, ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் நந்திபெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது.
    • கோவிலில் தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று மாலை கணக்க விநாயகர் ேகாவிலில் மகா அபிஷேகம், தீபாராதனையும், அதைத்தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்கி நடைபெற்றது.

    கோவிலில் தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47).
    • இவரது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட் , 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியதத்தூர் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). நேற்று அதிகாலை இவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை பராமரிப்பதற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கார் செட்டில் கார் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை எழுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்த போது கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட், கார் செட், 20 உர மூட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து அரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் தானாக எரிந்ததா அல்லது வேறு யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • அனுமதி இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்ட
    • லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கிராமத்தில் திருச்சி மண்டல உதவி புவியியலார் பறக்கும் படை நாகராஜன் என்பவர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • பசுமாட்டை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • சிறையில் அடைத்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மலத்தான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 34). இவர் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சினை பசு மாடு ஒன்றை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சித்ரா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுமாட்டை திருடிய மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    • செல்போன் டவர் பேட்டரியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் செல்போன் டவர் கம்பெனியில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் பகுதியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் உள்ள செல்போன் டவருக்கு ஆனந்தன் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவர் செல்போன் டவர் பேட்டரியை கழட்டி தூக்கி சென்றார். அப்போது ஆனந்தனை கண்டதும் பேட்டரியை கீழே போட்டுவிட்டு அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் ஆனந்தன் அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கூவத்தூரை சேர்ந்த மார்ட்டின் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."

    • பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் விஜி (வயது 20). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவியை அவர் தனது நண்பருடைய உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது பெற்றோர் மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • வீட்டை இடித்ததை தட்டிக்கேட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன்கள் பாண்டியன் (வயது 45), காமராஜ் (44). இந்தநிலையில் இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டை பாண்டியன் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இதனை தட்டிக்கேட்ட காமராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
    • பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நடந்தது

    அரியலூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு பொய்யாதநல்லூர் குறுவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பொய்யாதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    • மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். அதன்படி கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க மகா மாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். கோவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    ×