என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம் KUMBABISHEKAM"

    • ஒட்டப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ேகாவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    கரூர்

    வாங்கப்பாளையம், 3 எல்லையில் ஒட்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் யாகசாலையில் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ேகாவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் ஒட்டப்பிள்ளையார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குல தெய்வமான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் செல்வவிநாயகர், பாலமுருகர், நாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், திரவிய ஹுதி, மஹா பூர்ணா ஹுதி ஆகியவை நடைபெற்றது. நேற்று நாடி சந்தானம், மங்கள திரவிய யாகத்தோடு யாக சாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். அதன்படி கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க மகா மாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். கோவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழச்சேரிகொடுகவயல் மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா கீழச்சேரி கொடுகவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • ஆகாய வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் உள்ள ஆகாய வீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, முதற் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை நேற்று காலை தொடங்கி நடந்தது. இதைத்தொடர்ந்து கடகங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான பதினெட்டு கருப்பு, ஆகாய வீரன், பச்சைவாழியம்மன் மூலஸ்தான விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது."

    ×