என் மலர்
நீங்கள் தேடியது "கிரிவலம். KRIVALAM"
- கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது.
- கோவிலில் தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று மாலை கணக்க விநாயகர் ேகாவிலில் மகா அபிஷேகம், தீபாராதனையும், அதைத்தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்கி நடைபெற்றது.
கோவிலில் தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






