என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • கால நிலை மாற்றங்களால் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.

    அரியலூர்:

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் ரபி பருவம் 2022-23ல் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கேட்டு–க்கொள்ளப்படுகிறது.

    மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இது பாதிப்புகளிலிருந்து வாழ்வாதரத்தினையும், பொருளாதார இழப்பினை–யும் பாதுகாக்க காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டு–க்கொ–ள்ளப்படு–கிறது.

    பயிர் காப்பீடு செய்வ–தற்கு ஆதார் அட்டை நகல், வங்கி களாக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி தகவல்களுடன் கூடிய பாஸ் புக்கின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்ட–ணம் செலுத்தலாம்.

    பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 பிரிமியம் செலுத்திட கடைசி நாள் : 28.12.2023 செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டு–க்கொள்ள–ப்படுகிறது.

    எனவே விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.

    மேலும் சம்மந்த–ப்பட்ட வட்டார அலுவல–ர்கள்சிவகுமார், துணை தோட்டக்கலை அலுவலர், அரியலூர்-9943841155,

    சந்தியா, தோட்டக்கலை அலுவலர், திருமானூர் 8760531338, தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள–லாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்க–ப்பட்டுள்ளது.

    • நகைக்காக 2 ெபண்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
    • சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை

    அரியலூர்

    நகைக்காக பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜெயங்கொண்டம் அருகே மலர்விழி, கண்ணகி என 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • புளு காய்ச்சல் பரவலை தடுக்க முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது

    அரியலூர்

    கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அனைவரும் முக கவசம் அணிந்தனர். தற்போது அதன் பாதிப்பு குறைந்தவுடன் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிவது சிறந்த பயனைக்கொடுக்கும். கொரோனாவின் வீரியம் குறைந்தபோதிலும் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்புளுயன்சா என்ற வைரஸ் மூலமாக புளு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு காணப்படுகிறது. புளு காய்ச்சல் பரவலை தடுக்க நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது முககவசம் ஆகும். கொரோனாவுக்காகவே முககவசம் அணிய வேண்டும் என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும். புளு காய்ச்சலும் காற்றின் மூலமாகவே பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது பரவுகிறது. பொது இடங்களில் அவர்கள் முககவசம் அணியாவிட்டால், அவர்கள் மூலமாக பலருக்கு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக கவசம் அணிவதால் கொரோனா, இன்புளுயன்சா, சார்ஸ் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் தனபால் தெரிவித்தார்."

    • விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தொடங்கி வைத்தார். ஊர்வலமானது அரியலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது, குடிசை பகுதிகள், மருத்துவமனை பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நிலைய அலுவலர் செந்தில்குமார், செந்துறை, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • நாளை தீபாவளி பண்டிகை

    அரியலூர்

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மேலும் நேற்று முன்தினம் முதல் தொடர் முறை வந்ததால் ஏராளமானவர்கள் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் அரியலூரில் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது."

    • ஏழு கண் மதகில் புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது
    • முதல் 'ஷட்டர்' கடந்த 18-ந் தேதி உடைந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் பூவாய் மண்டபம் ஏழு கண் மதகின் முதல் 'ஷட்டர்' கடந்த 18-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்தது. இதனால் கோடாலிகருப்பூர், அண்ணங்காரம்பேட்டை, கீழக்குடிகாடு ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்திருந்த மதகை அப்புறப்படுத்தி, புதிய 'ஷட்டர்' பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆற்றின் வெள்ளநீர் குறையாமல் இருந்ததால் பழைய உடைந்த ஷட்டரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் புதிய 'ஷட்டர்' தயாரிக்கப்பட்டு கோடாலி கருப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததன் காரணமாக வடிகால் ஓடையின் உட்புகுந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கு திரும்பத் தொடங்கியது. வெள்ளநீர் குறைந்ததும் உடைந்த 'ஷட்டர்' தெரிய தொடங்கியது. 4 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு நேற்று மாலை பழைய 'ஷட்டர்' அகற்றப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் புதிய 'ஷட்டர்' பொருத்தும் பணியை பொறியாளர்கள் மேற்கொண்டனர். நேற்று மாலை மதகில் புதிய ஷட்டரை பொருத்தி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூவாய் மண்டபம் ஏழு கண் மதகு வழியாக வடிகால் ஓடைக்குள் தண்ணீர் புகுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்."

    • அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஒத்த தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும். புதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுத்தெருவில் சிமெண்டு சாலை, மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைவருக்கும் நகைகளை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது."

    • ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடை–பெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்நக–ராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் கருணா–நிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வ–ராஜ், அம்பிகாபதி, ராஜ–மாணிக்கம், ரங்கநாதன், சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்காஆனந்த், சமந்தா பாய், மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர்ராஜகோ–பாலன் பணி மேற்பார்வை–யாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட–னர்.

    கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் வரி போன்ற–வற்றில் ஏலம் எடுத்தவர்கள் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் பாக்கி தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து அதை வசூலிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் பல உறுப்பின–ர்கள் அடிப்படை வசதி–களான தார் சாலை சிமெண்ட் சாலை தெருவிளக்கு உள்ளிட்டவற்றைப் பற்றி கோரிக்கை விடுத்தனர். முடிவில் நகராட்சி மேலா–ளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.

    • ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • ஊக்கத்தொகை வழங்கும் விழா

    அரியலூர்:

    அரியலூர் பால் உற்பத்தி–யாளர்கள் கூட்டு–றவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, திருச்சி ஆவின் பொது மேலாளர் பெருமாள், துணை பொது மேலாளர் நந்தகோபால், உதவி பொது மேலாளர் முனுசாமி, அரியலூர் பால்வளத் துணைப் பதிவாளர் பார்த்திபன், பால் சொசைட்டி செயலாளர் கொளஞ்சிநாதன், சங்க தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மிகப் பழமையானது. தனியார் பால் பண்ணைகள் பல இருந்த போதும் கூட்டுறவு சங்கத்தை நாடி வருகிறார்கள் என்பது பெரிய விஷயமாகும்.

    2020-21ஆம் ஆண்டி–ற்கான சுமார் 3,420 உற்பத்தியாளர்களுக்கு சுமார் 95 லட்சத்தில்ஊக்க தொகை வழங்க–ப்படுகி–ன்றது, பால்வள–த்துறை அமைச்சரிடமும், தமிழக முதலமைச்சர் கவன–த்தில் கொண்டு சென்று அரிய–லூரில் ஆவின் பால் பொருட்கள்உற்பத்தி தொழிற்சாலை அமைக்க பெரும் முயற்சி மேற்கொ–ள்வேன் என பேசினார்.

    • காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆயதப் படை மைதானத்திலுள்ள நீத்தார் நினைவுத் தூணில், வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆளிநர்கள் 63 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆய்வாளர பத்மநாபன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜர், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட குற்ற ஆவணக் காப்பாளர் சுரேஷ் மற்றும் அரியலூர், கீழப்பழுவூர், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    • பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் விலையை உயர்த்தக்கோரி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கறவை மாடுகளை கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 5 ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடக்காததை கண்டித்தும், 6 மாதத்திற்கு ஒருமுறை மகாசபை கூட்டம் நடத்த கோரியும், பால் உற்பத்தியாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தீவனத்தை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். பால் அதிகளவில் கொள்முதல் செய்வதால் கூடுதலாக பால் குளிரூட்டும் நிலையம் 5000 லிட்டர் கொள்ளளவில் அமைக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு லோன் வழங்க வேண்டும். தீபாவளியையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×