என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளு காய்ச்சல் பரவலை தடுக்க முககவசம் அணிய அறிவுறுத்தல்
    X

    புளு காய்ச்சல் பரவலை தடுக்க முககவசம் அணிய அறிவுறுத்தல்

    • புளு காய்ச்சல் பரவலை தடுக்க முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது

    அரியலூர்

    கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அனைவரும் முக கவசம் அணிந்தனர். தற்போது அதன் பாதிப்பு குறைந்தவுடன் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிவது சிறந்த பயனைக்கொடுக்கும். கொரோனாவின் வீரியம் குறைந்தபோதிலும் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்புளுயன்சா என்ற வைரஸ் மூலமாக புளு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு காணப்படுகிறது. புளு காய்ச்சல் பரவலை தடுக்க நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது முககவசம் ஆகும். கொரோனாவுக்காகவே முககவசம் அணிய வேண்டும் என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும். புளு காய்ச்சலும் காற்றின் மூலமாகவே பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது பரவுகிறது. பொது இடங்களில் அவர்கள் முககவசம் அணியாவிட்டால், அவர்கள் மூலமாக பலருக்கு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக கவசம் அணிவதால் கொரோனா, இன்புளுயன்சா, சார்ஸ் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் தனபால் தெரிவித்தார்."

    Next Story
    ×