என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் உத்தரவிட்டார்
- துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அரியலூரில் முன்னதாக, மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
- சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை காலை 6 மணியளவில் நடக்கிறது
- பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்
- ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
- அரியலூருக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரின் வழியாக ஓடும் மருதையாற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் மருதையாற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. அந்த பாலம் முன்பு மழையால் அடித்து செல்லப்பட்டதில் பலர் இறந்தனர். அவர்களின் நினைவாக ஒரு நினைவு தூண் அமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரியலூருக்கு காலையில் செல்ல கூடுதல் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- போலீசார் நகரமெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
- புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்கள் கொண்டாட்டினர்
அரியலூர் :
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நகரமெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரியலூர் பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் பாதுகாப்பு புத்தாண்டு என்ற நோக்குடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பங்கேற்றனர்.
- சிறப்பு முகாம்கள் நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது
- 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த ஆதார் எண்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் (வட்டாசியர், நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்) அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை (வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய கடவுச்சீட்டு போன்றவற்றை) நேரில் தாக்கல் செய்து புதுப்பித்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டையை புதுப்பிக்க முதல் கட்டமாக சிறப்பு முகாம்கள் நாளை (2ந்தேதி) முதல் 5ம் தேதி வரை செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உடையார்பாளையம் வட்டாசியர் அலுவலகம் மற்றும் தத்தனூர் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட முகாம்களை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
திருச்சி மாவட்டம், உறையூர் காவேரி நகர், 6வது தெருவைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மகன் விக்னேஷ்ரவன்(வயது24). இவர் ெகாரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். கீழப்பழுவூர் தனியார் சிமென்ட் ஆலை அருகே சென்று போது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு முந்தியுள்ளார். அப்போது எதிரே அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது
- அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரியும், அந்த மருத்துவமனைக்கு புதிதாக வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதனை விரிவாக்கம் செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்ட வேண்டும். ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கூடுதலாக வரும் நோயாளிகளுக்கு தகுந்த அளவில் டாக்டர்களையும், நர்சுகளையும் நியமித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட்டு பிரேத பரிசோதனை செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் துரைராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி ேபசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்
- மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் வாலிபர் பிணமாக தொங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன். இவர் தற்போது கும்பகோணத்தில் தங்கி உள்ளார். இவரது மகன் அசோக்குமார்(வயது 19). இவர் தனது நண்பர் கணேசனின் அக்காள் வீடான சின்னவளையம் தெற்கு தெருவில் உள்ள மணிகண்டன்- கவுரி தம்பதியின் வீட்டில் சுமார் 3 மாதங்களாக தங்கி, தள்ளுவண்டியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஏதோ மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார்ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்
- திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருச்சி மாவட்டம், தொட்டியம் வடுக தெருவை சேர்ந்த ஜெயபிரகாசின் மகன் சுபாசை (வயது 25) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுபாசை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுபாஷ் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளிலும், மருவத்தூர், வி.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கிலும், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுபாஷிடம் இருந்து 20 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சுபாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- திருமானூர் அருகில் நோய் தீர்க்கும்
- பாரம்பரிய அரிசியில் பழையசோறு வழங்கும் விழா நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியில் பழையசோறு வழங்கும் விழா அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் பழைய இயற்கை பாரம்பரிய உணவுமுறையை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை, முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில் வேகவைத்து, பின்னர் கஞ்சி வடித்து, ஆறவைத்த சோற்றில் ஆறிய கஞ்சி தண்ணீரை ஊற்றி சிறிது வெண்ணெய் நீக்கிய நாட்டு மாட்டுப் பாலை காய்ச்சி உறை ஊற்றி மோர் தயாரித்து அதனை கஞ்சி நீர் கலந்த பூங்கார் அரிசியில் சமைத்த சோற்றுடன் கலந்து ஊறவைத்து காலையில் தேவையான அளவு மோர் கலந்து தயாரிப்பதுவே பழையசோறு .இந்த பழைய சோறு வயிற்றுப்புண்ணை ஆற்றும். நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், பெண்களுக்கான கருப்பை நோய் குழந்தைப்பேரின்மை, சுகப்பிரசவம் முதலியவற்றிற்கு உதவும். மேலும் செல்போனிலும் கணினி எனப்படும் கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் பணிபுரிவதால் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கவல்லது. ரத்தசோகையை நீக்கி புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலும் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு உண்டு என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.பழையசோறுடன் நாட்டு சின்ன வெங்காயம், பிரண்டை, இஞ்சி, கொத்தமல்லி, புளி வைத்து அம்மியில் அரைத்த துவையல், நார்த்தங்காய் ஊறுகாயும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு பழையசோற்றினை தயாரிக்கும் முறைகளை விளக்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுமதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கையில் இயங்கும் செயற்பாட்டாளர்களுக்கு நம்மாழ்வார் உருவப்படம் பொறித்த துணிப்பை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில்தமிழ்க்களம் இளவரசன், ஆசிரியை செங்கொடி, எழுத்தாளர் சோபனா உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்று இயற்கை உணவின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தனர்.
- டாப்செட்கோ டாம்கோ சார்பில் அரியலூரில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது
- கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் டாப்செட்கோ, டாம்கோ சார்பில் நடைபெறும் லோன் மேளாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விண்ணப்பித்து கடனுதவி பெறலாம் என கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துளளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது. தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள், உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். வருகிற 4ம் தேதி அன்று அரியலூர் ஜிம்மா மசூதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை5 மணி வரையும் நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதி அன்று மணப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 20ம் தேதி அன்று கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டார், சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






