என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த லீக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் செட்டை 21-13 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 24-22, 21-18 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
    • திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.

    இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை போக்க அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் பல திட்டங்களில் ஒன்று இலவச உணவு திட்டம். இத்திட்டமே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரபோவோவின் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது. விழா ஏதுவும் இன்றி சாதாரணமாக நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 190 சமையல் அறைகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.



    இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் போது 2029 ஆம் ஆண்டில் நாட்டின் 280 மில்லியன் மக்கள்தொகையில் 82.9 மில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள் 3 மில்லியனாக அதிகரிக்கும் என்றார். 

    • இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் படகு ஒன்று சென்றது. சுமார் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மீட்புக்குழு தலைவர் முகமது அராபா கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார்.

    • சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த விமான விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை
    • பயணிகள் அலறியடித்து ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்தோனேசியா நாட்டின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திரிகானா ஏர் 737-500 என்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.

    விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறப்பது மற்றும் பயணிகள் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சென்டானி விமான நிலைய அதிகாரி சூர்யா ஏகா தெரிவித்தார்.

    இந்த விபத்து காரணமாக இந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது என்றும் பயணிகளை வேறு விமானத்தில் மாற்றி அனுப்பி வைக்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்.

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன.

    அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதில், வீடுகள் எரிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். நெருப்புக்குழம்பு வெளியேறுவதால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.

    • ஐபோன் 16 சீரியஸ் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்தது.
    • பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது.

    ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.

    உள்ளூர் உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்ளூரில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

    பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உற்பத்தி ஆலை தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்பும் உள்ளூர் பொருளாதாரமும் உயரும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

    அவ்வகையில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழிற்சாலை தொடங்க நெருக்கடி கொடுக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    • சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
    • எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்
    • இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது

    இந்தோனேசியவில் சுற்றுலாப்  பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தோனேசிய கிராமங்களில் உள்ள இளம்பெண்கள் இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் [Puncak] நகரில் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகிறன. மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.

    PLEASURE மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்கு சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் அங்குத் தங்கியுள்ள காலம் வரை, வாரக் கணக்காகவோ மாதக் கணக்காகவோ அவர்களுக்கு இப்பெண்கள் மனைவியாக வாழ்வர். சுற்றுலாப் பயணிகள் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது.

     

    ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வகை திருமணத்தில் தள்ளுகின்றன. பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்யேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இம்முறைக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறன. விஜய் சிம்ரன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரயமானவளே' படத்தில் ஹீரோ ஹீரோயினை கான்டிராக்ட் திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

    ×