என் மலர்
தெலுங்கானா
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
- ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.
ஐதராபாத்
இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.
யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.
பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.
முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.
பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.
இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
- காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது.
- மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும்.
ஐதராபாத் :
தெலுங்கானாவில் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள கொத்தூர் என்ற இடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத்தில் காங்கிரசுக்கு திடமான அடித்தளம் உள்ளது. அங்கு பா.ஜனதாவுக்கு எதிராக அதிருப்தி அலை பலமாக இருக்கிறது. ஆம் ஆத்மியை பற்றி ஊடகங்கள், ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டன. ஆனால் அக்கட்சி காற்றில்தான் இருக்கிறதே தவிர, களத்தில் இல்லை.
எனவே, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அங்கு நான் பிரசாரம் செய்வது பற்றி மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் ஊழல், அணுகுமுறை ஆகியவை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது. மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும். ஆனால் இது மந்திரக்கோல் அல்ல. குஜராத் தொங்கு பால விபத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கானா முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம்.
மகபூப் நகர்:
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மகபூப்நகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
கடந்த 35 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அதே வேளையில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. இங்கே முதலமைச்சரும் (சந்திரசேகர் ராவ்) அங்கே பிரதமரும் (மோடி) பணக்காரர்களுக்கு முழு ஆதரவாக உள்ளனர்.
தெலுங்கானாவில் ஒரு விவசாயி எவ்வளவு கடினமாக உழைத்தாலும், உரிய வருமானத்தை பெற முடியவில்லை. ஒருபுறம் விவசாயிகளுக்கு எதிராக கறுப்புச் சட்டங்களை மோடி இயற்றிய, மறுபுறம் தெலுங்கானாவில் உங்கள் முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஜிஎஸ்டி விதித்ததால் லட்சக்கணக்கான நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஆர்எஸ் அரசு நெசவாளர்களுக்கு உதவவில்லை.
எங்கள் ஆட்சி வந்தவுடன் தெலுங்கானா நெசவாளர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன். நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பா.ஜ.க பரப்புகிறது. யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடந்து வருகிறது. இதுதான் உண்மையான இந்தியா. இதுதான் நமது வரலாறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மீண்டும் யாத்திரை தொடங்கியது.
ஐதராபாத்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மக்தல் சட்டமன்றத் தொகுதியின் குடேபெல்லூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. குடேபெல்லூரில் இருந்து நாராயண்பேட்டை மாவட்டம் யெலிகண்ட்லா வரை 26.7 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடந்தார்.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவரான முகமது அசாருதீன் ராகுல் காந்தியைச் சந்தித்து அவருடன் கைகோர்த்து நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
மாநிலத்திலும் மத்தியிலும் டி.ஆர்.எஸ். (ராஷ்டிர சமிதி கட்சி) மற்றும் பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது. டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசுகளின் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் டி.ஆர்.எஸ். பா.ஜ.க.வுக்கு உதவுகிறது, மேலும் மாநிலத்தில் டி.ஆர்.எஸ்.ஸுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கிறது. இந்த 2 கட்சிகளும் ஜனநாயகத்திற்கு எதிரானவை.
டி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தெலுங்கானா மக்கள் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க பேரம் பேசப்படும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும்
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து மசோதாக்களையும் டிஆர்எஸ் முழுமையாக ஆதரித்தது.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை டிஆர்எஸ் ஆதரிக்கவில்லை. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த மாநிலம் டிஆர்எஸ் தலைமையிலான தெலுங்கானாதான்.
ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என தெரிவித்தார்.
- திருமண வீடியோவை செல்போனில் பதிவு செய்த சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் வைரலாக பரவி வருகிறது.
- திருமணத்திற்கு சிலர் வாழ்த்துக்களும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். விவசாயி. ஏழ்மையான குடும்பத்தில் மூத்தவராக பிறந்த இவர் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க பணத்தை சேமித்து வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் 70 வயதான முதியவர் ஆதரவு இன்றி தனியாக வசித்து வந்தார். வயதான காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என எண்ணி அவரது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார்.
முதியவரின் நேர்மை மற்றும் நன்னடத்தையை அறிந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 20 வயது மகளை 70 வயது முதியவருக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு அவரது மகளும் விருப்பம் தெரிவித்ததால் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தில் முதியவர் தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் முதியவரின் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இவர்களின் திருமண வீடியோவை செல்போனில் பதிவு செய்த சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் வைரலாக பரவி வருகிறது.
இந்த திருமணத்திற்கு சிலர் வாழ்த்துக்களும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
- உலக பசுமை நகர விருதுகள் 2022 என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது.
- சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கம் விருது கிடைத்தது மகிழ்ச்சி என தெலுங்கானா முதல்வர் தெரிவித்தார்.
ஐதராபாத்:
சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'உலக பசுமை நகர விருதுகள் 2022' என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது.
தென் கொரியாவின் ஜெஜூவில் நடைபெற்ற தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விருதுகள் விழாவில், ஐதராபாத் 6 பிரிவுகளிலும் 'உலக பசுமை விருதை' வென்றது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் தெலுங்கானா தலைநகரான ஐதராபாத் மட்டுமே.
ஐதராபாத், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமையை மேம்படுத்துவதற்காக மதிப்புமிக்க ஏஐபிஹச் குளோபல் 'வேர்ல்ட் கிரீன் சிட்டி விருதுகள் (உலக பசுமை நகர விருதுகள்) பெற்றுள்ளது.
ஐதராபாத் மாநகரத்திற்கு புகழ்பெற்ற "சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கம்" விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்று தெலுங்கானா முதல் மந்திரி கே சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வதேச விருதுகள் தெலுங்கானா மற்றும் நாட்டின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச விருதுகளுக்கு இந்தியாவின் ஒரே நகரமாக ஐதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
- பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
- ஆட்டோக்களை வாடகையில் ஈடுபடுத்தியது குறித்து அந்த நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர்:
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோமீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த வாடகை ஆட்டோக்ளில் குறைந்தபட்சமாக ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
வாடகை கார்களை மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்களை வாடகையில் ஈடுபடுத்தியது குறித்து அந்த நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன், திருமாவளவன் சந்திப்பு.
- புதிய கட்சி தொடக்க விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பு.
ஐதராபாத்:
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுவதற்காகவே சந்திரசேகரராவ் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கட்டளைப்படி சந்திரசேகர ராவ் செயல்படுவதாகவும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.
- தெலுங்கானா ராஷ்டிர சமிதி வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.
- புதிய கட்சி குறித்த அறிவிப்பை விஜயதசமி நாளில் சந்திரசேகர ராவ் அறிவிக்கிறார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கடந்த மாதம் 5-ம் தேதி பேசிய சந்திரசேகர ராவ் மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த மாதம் 12-ம் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், விஜயதசமி தினத்தன்று (நாளை) புதிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 186 ரன் எடுத்தது.
- இந்திய தரப்பில் சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன் குவித்தார்.
ஐதராபாத்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 54 ரன் அடித்தார்.
இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன் எடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்னும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்னும் எடுத்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 25 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
- 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
- ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 54, கேமரூன் கிரீன் 52, டேனியல் சாம்ஸ் 28 ரன்கள் எடுத்தனர்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர்.ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார். பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
- ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
ஐதராபாத்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.






