என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • திடீரென அடுக்குமாடி குடியிருப்பு தீ பற்றி எரிந்ததால் உறக்கத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
    • காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது.

    இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 10 கியாஸ் சிலிண்டர்களும் இருந்தன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர குடோனில் இருந்த கியாஸ் சிலிண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர தீ பரவியது. மரக்கடையில் இருந்த கட்டைகளில் தீப்பற்றி மளமளவென எரிந்தன.

    தீ மரக்கடைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்திற்கு பரவியது. அதிகாலை நேரம் என்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென அடுக்குமாடி குடியிருப்பு தீ பற்றி எரிந்ததால் உறக்கத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

    2-வது தளத்தில் வசித்து வந்த நரேஷ் (வயது 37), அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் மீது தீ பற்றியது. அவர்கள் உடல் கருகி வீட்டுக்குள்ளேயே இறந்தனர்.

    குடியிருப்பு முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் அங்திருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு உயிர் பயத்தில் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுக்கு மாடியில் யாராவது சிக்கிக் கொண்டார்களா என ஒவ்வொரு வீடாக தேடிப் பார்த்தனர்.

    அப்போது நரேஷ் அவரது மனைவி, மகன் உடல்களை மீட்டனர். இதனை கண்டு அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த தீ விபத்தில் பெண்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • வாலிபர் ஒருவரை அவரது பெற்றோர் நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையாக அழைத்து வந்தனர்.
    • சக்கர நாற்காலி கிடைக்காததால் அவரது பெற்றோர் மகனின் 2 கால்களையும் பிடித்து தரதரவென லிப்ட்டுக்கு இழுத்து சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அவரது பெற்றோர் நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையாக அழைத்து வந்தனர்.

    அதிக அளவில் மது குடித்து இருந்ததால் வாலிபரால் நடக்க முடியவில்லை. இரவு முழுவதும் நோயாளிகள் தங்கும் அறையில் தனது மகனை வைத்திருந்தனர்.

    பின்னர் மறுநாள் காலை வாலிபருக்கு சிகிச்சை அளிக்க 2-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்குமாறு பணியில் இருந்த டாக்டர் பரிந்துரை செய்தார்.

    சுய நினைவு இன்றி இருந்த தங்களது மகனை மாடிக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியை தேடினர். சக்கர நாற்காலி கிடைக்காததால் அவரது பெற்றோர் மகனின் 2 கால்களையும் பிடித்து தரதரவென லிப்ட்டுக்கு இழுத்து சென்றனர்.

    பின்னர் லிப்டிலிருந்து வார்டு வரை கால்களை பிடித்து இழுத்துச் சென்றதை கண்ட நோயாளிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதால் இதுகுறித்து விசாரணை நடத்த தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் உத்தரவிட்டார். இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் அரசு ஆஸ்பத்திரி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழக்க நேரிடும் எனவே இது போன்ற வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் கலெக்டர் ராஜீவ் காந்தி கூறுகையில்:-

    ஆஸ்பத்திரியில் தேவையான அளவு சக்கர நாற்காலிகள், உபகரணங்கள் உள்ளது. மேலும் உபகரணங்கள் தேவை என்றால் அதற்கு ஏற்றவாறு வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் கூறுகையில், வாலிபரை காலை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவத்திற்கும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவரது பெற்றோரே மகனை இழுத்துச் சென்று உள்ளனர். எங்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

    • எங்கள் அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
    • பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி சந்திரசேகர ராவ் பேசினார்.

    ஆனால் ஒரு பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், எங்கள் மாண்புமிகு அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.

    அவர் நமது அரசியலமைப்பின் தந்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அவர் தனது வார்த்தைகளை முன்வைத்துள்ளார்.

    நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்றார்.

    • விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
    • எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது.

    இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.

    இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.

    இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.

    நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    • அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    ஐதராபாத் :

    இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.

    ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.

    இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்படுகின்றன.

    பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநிலத்தின் 119 தொகுதிகளில் இருந்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் விழாவில் பங்கேற்பவர்களுக்கு சட்டசபை வளாகத்தில் உணவு, இனிப்பு, மோர், தண்ணீர் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று ஆய்வு செய்தார். மேலும் மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம் சீமலா பள்ளியில் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநாடு நேற்று இரவு நடந்தது.

    இதனால் மாநாட்டு பந்தலில் ஏராளமான கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள ராமுலு நாயக் எம்.எல்.ஏ, ராம நாகேஸ்வரராவ் எம்.பி. உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் காரில் வந்தனர்.

    மாநாட்டு பந்தல் அருகே தலைவர்களின் கார் வருவதை கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசுகளை கொளுத்தினர். தொண்டர்கள் கொளுத்திய பட்டாசு தீப்பொறி பறந்து மாநாட்டு பந்தல் கூரையில் விழுந்தது.

    இதில் மாநாட்டு பந்தல் தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    கட்சி தொண்டர்களுக்காக மாநாட்டு பந்தலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சமையல் செய்யும் பணி நடந்து வந்தது.

    அந்த இடத்தின் மேற்கூரையிலும் தீ பரவியது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுகள் நவீன், தேஜாவத் மற்றும் கட்சித் தொண்டர் பாஸ்கர் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    தீவிபத்தைக் கண்டு கட்சித் தொண்டர்கள் சிதறி ஓடியதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இந்த விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்திர ரெட்டி எப்போது மது குடித்தாலும் அவரது ஆடு அருகில் சென்று அவரிடம் மது வாங்கி குடிப்பதை வழக்கமாக்கி கொண்டது.
    • ஆடு தள்ளாடி... தள்ளாடி... வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மொடுகுண்டா பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர ரெட்டி. இவர் தனது நிலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது வளர்ப்பு ஆடு அருகில் சென்றுள்ளது. உடனே தனது ஆட்டுக்கும் ஒரு கிளாஸ் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். அதை குடித்த ஆட்டுக்கு பிடித்து போய் விட்டது. ரவீந்திர ரெட்டி எப்போது மது குடித்தாலும் அவரது ஆடு அருகில் சென்று அவரிடம் மது வாங்கி குடிப்பதை வழக்கமாக்கி கொண்டது.

    இதனால் அந்த ஆடு தள்ளாடி... தள்ளாடி... வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆடு தள்ளாடி வருவதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • நிராகரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.
    • முக்கிய மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெலுங்கானா அரசு வட்டாரம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து அரசியலமைப்பு முட்டுக்கட்டை ஏற்படுத்தியதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மீதான மனுவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.

    தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் தெலுங்கானா ஆளுநரின் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன, மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை.

    இது தெலுங்கானா அரசுக்கு கவர்னர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டை தெலுங்கானா அரசு நாடியது.

    இந்தநிலையில் வனவியல் பல்கலைக்கழக தெலுங்கானா மசோதா, 2022 மற்றும் தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022 ஆகிய 2 முக்கிய மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெலுங்கானா அரசு வட்டாரம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், மாநில அரசு தனது ஒப்புதலுக்காக அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது கவர்னர் எடுத்த நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விரிவான விவரம் அளிக்கப்பட்டது.

    • சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
    • சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.

    கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்தது.
    • மயங்க் மார்க்கண்டே 4 விக்கெட் எடுத்தார்.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடுகிறது.

    ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×