என் மலர்
தெலுங்கானா
- கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
- ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், அப்துல் சமாத் 21 ரன்களும், ராகுல் திரிபாதி 20 ரன்களும், மயங்க் அகர்வால் 18 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், மார்கோ ஜான்சன் ஒரு ரன்னும் எடுத்தனர்.
புவனேஷ்வர் குமார் 5 ரன்களுடனும், மயங்க் மார்கண்டே ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.
- டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய அந்த அணி 171 ரன்களை சேர்த்தது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் சரத்பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஐதராபாத்:
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (71). வயது முதிர்வு, உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நடிகர் சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சரத்பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் சரத்பாபு மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார். அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
- பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகிறார்.
வேலையின்மைக்கு எதிராக நடைபயணமாக மைதானத்திற்கு வரும் பிரியங்கா காந்தி முன்னதாக எல்.பி. நகரில் உள்ள ஸ்ரீ காந்தா சாரி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
பிரியங்கா காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது எதிரணியினருக்கு அதிர்ச்சி தரும் மாநில கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
- கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொடர்ச்சியாகப் பல மாநில பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் அண்மையில் ஹிமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. அந்த உற்சாகத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் சூழல் ஏற்பட்டால், யார் ஆட்சியமைப்பது என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் துருப்புச் சீட்டாக செயல்படும்.
இத்தகைய சூழலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது.
கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளது. பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உடன் இணைந்து கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பை ஈதினா டாட் காம் நடத்தியுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளிலிருந்து 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் பா.ஜ.க.விற்கு 57-ல் இருந்து 65 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசைவிட 10 சதவீதம் குறைவாக 33 சதவீத வாக்குகளை பாஜக பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக தலைநகரான ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 31-ல் இருந்து 37 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் பா.ஜ.க.வுக்கு இரண்டிலிருந்து நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 40-லிருந்து 46 இடங்கள் கிடைக்கும் என்றும், தெற்கு கன்னடத்தில் காங்கிரசுக்கு 26 முதல் 32 தொகுதி வரையும், பெங்களூருவில் 16-லிருந்து 20 தொகுதி வரையும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர்.
மேலும் கர்நாடகத்தின் மத்திய கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கும் 3-ல் இருந்து 4 தொகுதிகளும், பாஜக 19 லிருந்து 23 தொகுதிகளும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகத்தில் பாஜகவிற்கு 10 லிருந்து 14 தொகுதிகள் வரையும், காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
- நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர்.
சென்னையை சேர்ந்தவர்கள் மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் திரைப்பட நடன கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றனர். அங்குள்ள லாட்ஜில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் இரவு படப்பிடிப்பு முடிந்து லாட்ஜிக்கு வந்த 4 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர். தங்களது செல்போனில் சத்தமாக பாடலை வைத்துவிட்டு நடனம் ஆடியபடி மது குடித்தனர்.
இதனால் லாட்ஜில் தங்கி இருந்தவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. இதுகுறித்து காவலாளி யாதகிரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மொட்டை மாடிக்கு சென்று அங்கு நடனம் ஆடி கொண்டிருந்தவர்களை கண்டித்தார்.
அப்போது நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர். கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். யாதகிரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையை சேர்ந்த மணி, பீமா, நரேஷ், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.767 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- வங்கி வட்டியாக மாதம் ரூ.7 கோடி கிடைக்கிறது.
ஐதராபாத் :
தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கட்சியின் நிறுவன நாள் விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி சேர்ந்துள்ளது. இதில் ரூ.767 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கட்சியை நடத்துவதற்கும், மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் கட்டுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கும் கட்சி நிதி செலவிடப்பட்டுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்காக மாதம் ரூ.7 கோடி வட்டி கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில், கட்சியின் நிதி நிர்வாகம் பற்றியும், நிதி விவகாரத்தை கட்சித்தலைவர் கவனிப்பது குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் அலுவலகம் அடுத்த மாதம் 4-ந் தேதி திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாரத ராஷ்டிர சமிதி கட்சியை நாட்டு மக்களிடம் பெருமளவில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக டி.வி. சேனல்களில் விளம்பரங்கள் செய்யவும், திரைப்படம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கட்சி சார்பில் ஒரு டி.வி. சானல் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சர்மிளா சென்றார்
- சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சியின் (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா சென்றார்.
வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது.
ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த பச்சுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவன்குமார், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் கவுட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்திக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பாசு பள்ளியை சேர்ந்த குமார் (வயது 35), பிரகதி நகரை சேர்ந்த சீனிவாச ராவ் (33), ராம்பாபு (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20.3 லட்சம் மற்றும் 7 செல்போன்கள், 2 லேப்டாப், 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
- கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது.
- குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக எல்லோருக்கும் 2 கைகளிலும் 10 விரல்கள், 2 கால்களிலும் 10 விரல்கள் என 20 விரல்கள் தான் இருக்கும். அரிதாக 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை சில நேரங்களில் காண முடியும். அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 24 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்குள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கோரட்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது. இது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அந்த குழந்தையை தெய்வத்தின் அவதாரம் என்று கூறி வழிபட்டு செல்வதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 24 விரல்களுடன் பிறந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
- மகன் இறந்தது முதல் துக்கம் தாங்காமல் பெற்றோர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ஷங்கர் தாண்டவை சேர்ந்தவர் புக்யா பிகோஜி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மகன் சித்து (வயது 7). ஒரே மகன் என்பதால் அவரது பெற்றோர் மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தது முதல் துக்கம் தாங்காமல் அவரது பெற்றோர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் தங்களது அன்பு மகனுக்கு சிலை வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து சிலை செய்பவரிடம் சென்று தனது மகனின் போட்டோவை கொடுத்து அதேபோல் சுமார் 5 அடி உயரத்தில் மெழுகு சிலையை தயார் செய்தனர்.
தயார் செய்யப்பட்ட சித்துவின் சிலையை கொண்டு வந்து தங்களது நிலத்தில் சிறிய அளவில் மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தனர். தங்களது மகன் சிலைக்கு காலை, மாலை இருவேளையும் பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.
- தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முந்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அவரின் அந்த ஹெலிகாப்டர் பயணம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் வந்த ஹெலிகாப்டரில் பைகளில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டது என்று உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி.
நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






