ஐதராபாத்தில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்- 3 பேர் கைது

ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்தில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்- 3 பேர் கைது
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது.

ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த பச்சுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவன்குமார், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் கவுட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்திக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட பாசு பள்ளியை சேர்ந்த குமார் (வயது 35), பிரகதி நகரை சேர்ந்த சீனிவாச ராவ் (33), ராம்பாபு (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.20.3 லட்சம் மற்றும் 7 செல்போன்கள், 2 லேப்டாப், 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com