என் மலர்
ஒடிசா
- கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார்.
- ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநில சுகாதார மந்திரி நபா கிஷோர் தாஸ் நேற்று அரசு விழாவில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்புக்கு வந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாசை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை ஒடிசா போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கொலையாளி கோபால கிருஷ்ணதாஸ் மனநல பாதிப்புக்காக சுமார் 8 ஆண்டுகள் சிகிச்சை எடுத்தவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எளிதில் கோபப்படும் தன்மை கொண்டவராக சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அவர் கோபத்தை குறைத்து கொள்வதற்கான மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் மந்திரியை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் அவரது பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார். 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் தனக்கு ரூ.34 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். 70- க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ள அவர் அவற்றை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
மேலும் சுரங்க தொழிலிலும் அவர் ஈடுபட்டு இருந்தார். எனவே தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஒடிசா போலீசார் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.
- இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.
- இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.
புவனேஸ்வர்:
15-வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்றது. தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் நேருக்குநேர் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் 2 கோல்களை அடித்தது. ஜெர்மனி ஒரு கோலை அடிக்க 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஜெர்மனி மீண்டும் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற சம நிலை வகித்தன. இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
- சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
- பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
- புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமானது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
- துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
இதில் மந்திரி நபா கிஷோர் தாஸ் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதை கண்டதும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
போலீஸ் பாதுகாப்பை மீறி மந்திரி மீது துப்பாக்கி சூடு நடத்து இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
ரூர்கேலா:
16 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ரூர்கேலாவில் நேற்று நடந்த 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்திய அணியில் அபிஷேக் 5-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12-வது நிமிடத்திலும், ஷாம்ஷெர் சிங் 45-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 49-வது நிமிடத்திலும், சுக்ஜீத் சிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மிம்வி சாம்கிலோ 49-வது நிமிடத்திலும், முஸ்தபா காசிம் 60-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அர்ஜென்டினாவுடன் இணைந்து 9-வது இடத்தைப் பெற்றது.
- பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி முன்னிலையில் இருந்தது.
- பெனால்டி ஷுட்அவுட் முறையில் ஜெர்மனி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.
ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2-0 என சமநிலை பெற்றது. இதனால் பெனால்டி ஷுட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஜெர்மனி 4-3 என வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
சகோதரர்கள் மேட்ஸ் மற்றும் டாம் இருவரும் மான்செங்லாட்பாக் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கல்லூரியில் படித்து தற்போது கொலோனில் உள்ள ரோட்-வீஸ் கோல்ன் கிளப்பில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரகசிய தகவலின் பெயரில்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மதுபாட்டில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டத்தில் அதிகாரப்பட்டி, வெங்கடசமுத்திரம், நத்தமேடு, மெனசி, மாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில்.
கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக அதிகாரப்பட்டி, வெங்கடசமுத்திரம், நத்தமேடு, மெனசி, மாம்பட்டி,
மாரியம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த கந்தசாமி மகன் கிருஷ்ணன் (வயது 60), தேரேஷ் நாதன் மகன் முத்து (55),
கணேசன் மகன் தர்மன் (37), சிவன் மகன் சூர்யா (28), முருகன் மகன் மணியன், அஜிஸ் ஆகிய 6 நபர்களையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 301 மதுபாட்டில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- நியூசிலாந்து ‘லீக்’ சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது.
- நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.
15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா ஆகியவை 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், 9-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருந்தது.
அர்ஜென்டினாவுடன் 3-3 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
ஸ்பெயின் அணி 'லீக்' சுற்றில் 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடமும், 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்று இருந்தது. வேல்சை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2-வது சுற்றில் மலேசியாவை தோற்கடித்தது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதியில் பெல்ஜியம்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வி அடையவில்லை. அந்த அணி தென் கொரியாவை 5-0 என்ற கணக்கிலும், 7-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.
அந்த அணி நியூசிலாந்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.
நியூசிலாந்து 'லீக்' சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது. நெதர்லாந்து (0-4), மலேசியாவிடம் (2-3) தோற்று இருந்தது. 2-வது சுற்றில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.
- ஆசிய நாடுகளில் தென் கொரிய அணி மட்டுமே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- ஜெர்மனி அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற கிராஸ்ஓவர் போட்டியில் தென் கொரிய அணி, 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் 3-2 என தென் கொரியா வெற்றி பெற்றது. ஆசிய நாடுகளில் தென் கொரியா மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி, 5-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. ஜெர்மனி அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.
- விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3 -3 என சமனிலை வகித்தன.
- போட்டியின் முடிவில் 5-4 (பெனால்டி ஷூட்) முறையில் என்ற நியூசிலாந்து வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
புவனேஸ்வர்:
15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3- 3 என்ற கணக்கில் கோல் அடித்து சமனிலை வகித்தன.
இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பாக நடந்த ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டதுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது.






