search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "odisha minister"

    • சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 முறை மந்திரி நபா கிஷோர் தாசை பின்தொடர்ந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • கோபால்தாஸ் மனநலம் பாதிப்பிற்கு மருந்து எடுத்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும் வரை எதுவும் தெரியாது என்று குற்றப்பிரிவு போலீசார் ஒருவர் கூறியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மந்திரி நபா கிஷோர் தாஸ் கடந்த 26-ந் தேதி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    ஜார்சுகுடா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் என்பவர் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 முறை மந்திரி நபா கிஷோர் தாசை பின்தொடர்ந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் ஒருவர் கூறியதாவது:-

    கைது செய்யப்பட்ட கோபால்தாஸ், கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை ஜார்சுகுடாவில் உள்ள நபா கிஷோர்தாசின் இல்லத்திற்கு அருகில் காத்திருந்து மந்திரி உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியில் சென்று உள்ளாரா என அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

    அப்போது மந்திரி வீட்டில் இல்லை என்றாலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒவ்வொருமுறையும் தனது துப்பாக்கியுடன் தான் மந்திரி வீட்டிற்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மந்திரியின் பயண திட்டத்தை அறிந்துள்ளார்.

    எனவே அவர் திட்டமிட்டு தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதுகிறோம். கோபால் தாஸ் தனது உறவினருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், தன்னை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் மந்திரி நபா கிஷோர்தாசை 3 மாதங்களுக்கு முன்பே அணுகி உள்ளார். அப்போது மந்திரி நபா கிஷோர்தாஸ் சப்-இன்ஸ்பெக்டரை அவமதித்தாக அவர் கருதியுள்ளார்.

    இந்த ஆத்திரத்தில் தான் அவர் அமைச்சரை சுட்டிருக்கலாம் என சந்தேகிக்றோம். அவர் மனநலம் பாதிப்பிற்கு மருந்து எடுத்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும் வரை எங்களுக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார்.
    • ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சுகாதார மந்திரி நபா கிஷோர் தாஸ் நேற்று அரசு விழாவில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்புக்கு வந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாசை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை ஒடிசா போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கொலையாளி கோபால கிருஷ்ணதாஸ் மனநல பாதிப்புக்காக சுமார் 8 ஆண்டுகள் சிகிச்சை எடுத்தவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எளிதில் கோபப்படும் தன்மை கொண்டவராக சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக அவர் கோபத்தை குறைத்து கொள்வதற்கான மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் மந்திரியை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் அவரது பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார். 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் தனக்கு ரூ.34 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். 70- க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ள அவர் அவற்றை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    மேலும் சுரங்க தொழிலிலும் அவர் ஈடுபட்டு இருந்தார். எனவே தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஒடிசா போலீசார் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

    ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.

    • சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

    காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
    • புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.

    பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

    காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமானது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ×