ஒடிசா அமைச்சர் மறைவு வருத்தமளிக்கிறது- பிரதமர் மோடி இரங்கல்

சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசா அமைச்சர் மறைவு வருத்தமளிக்கிறது- பிரதமர் மோடி இரங்கல்
Published on

ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென நபா தாஸை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com