என் மலர்
ஒடிசா
- ஒடிசாவின் கட்டாக் நகரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- இதில் நோ பால் கொடுத்த அம்பயர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கட்டாக்:
ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ளூரைச் சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்த முடிவானது.
இதில் பெர்ஹாம்பூர் மற்றும் சங்கர்பூர் பகுதியைச் சேர்ந்த இரு அணிகள் பங்கேற்றன. போட்டி நடுவராக லக்கி ராவத் (22), என்பவர் செயல்பட்டார்.
பெர்ஹாம்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அம்பயர் நோ பால் வழங்கினார். பொதுவாக நடுவர் வழங்கும் தீர்ப்பை வீரர்கள் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போட்டியின்போது தவறான முடிவை வழங்கிவிட்டார் எனக்கூறி மோதல் தொடங்கியது.
நடுவரின் முடிவால் இரு அணியினரும் தகராறில் ஈடுபட்டனர். இந்த மோதல் முற்றியதில் பெர்ஹாம்பூர் அணியின் விளையாட்டு வீரரான ஜக்கா பேட்டால் லக்கியை தாக்கினார்.
மேலும் ஸ்முருதி ரஞ்சன் ராவத் என்ற மோனு என்பவர் ஆத்திரத்தில் மைதானத்தில் புகுந்து லக்கியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த லக்கி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை பிடிப்பதற்கான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பயர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஜீவா (வயது27). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 30-ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன விஸ்வநாதன், தனது மகனை உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் காணவில்லை.
இதுகுறித்து தந்தை விஸ்வநாதன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
- தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது.
அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த சப்-கலெக்டர் ராமசந்திர கிஸ்கு, தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். இந்த தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார்.
- இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
புவனேஸ்வர் :
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.
வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.
மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.
இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-
இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.
3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஒரு லட்சம் பேரில் 80 பேருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக டாக்டர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கூறினார்.
- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர்.
புவனேஸ்வர் :
உலக சிறுநீரக தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புவனேஸ்வர் மருத்துவக்கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் சிறுநீரகவியல் பிரிவு தலைவர் டாக்டர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, உலக அளவில் 80 கோடி பேர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். அதாவது ஒரு லட்சம் பேரில் 80 பேருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக அவர் கூறினார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருவதாக தெரிவித்த டாக்டர் மொகந்தி, இதனால் நிலைமை மிகவும் மோசமடைவதாகவும் கவலை வெளியிட்டார்.
- தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் அருகில் உள்ளது.
- வணிக வளாகம் அருகில் ஏராளமான ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கும் தீ பரவியது.
பூரி:
ஒடிசா மாநிலம் பூரியில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கடை முழுவதும் பற்றி எறிந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கும், இங்கும் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் அருகில் உள்ளது. வணிக வளாகம் அருகில் ஏராளமான ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கும் தீ பரவியது.
மகாராஷ்டிரா, நாசிக்கில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் அருகில் தங்கி இருந்தனர். சுமார் 106 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பூரி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெயந்த் சாரங்கி, தீ விபத்து தடுப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.
- ஆன்லைன் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
- அந்த புகாரின்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகங்கை
ஆன்லைன் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட வர்கள் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ள னர். சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்ற ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கி அதில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்து உள்ளனர்.
முதிர்வு காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
எனவே மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு பணத்தை திரும்ப பெறாத பொதுமக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சிவகங்கை நகர் திருப்பத்தூர் மெயின் ரோடு, நாகு நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம். அந்த புகாரின்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை பனி மூட்டம் அதிகம் இருந்ததால் எதிரில் வந்த வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிலர் மினி லாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் சஜ்பூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற மினி லாரி மீது மற்றொரு லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இன்று காலை பனி மூட்டம் அதிகம் இருந்ததால் எதிரில் வந்த வாகனங்கள் தெரியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
- துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
- அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புவனேஸ்வர்:
துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.
- சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 முறை மந்திரி நபா கிஷோர் தாசை பின்தொடர்ந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கோபால்தாஸ் மனநலம் பாதிப்பிற்கு மருந்து எடுத்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும் வரை எதுவும் தெரியாது என்று குற்றப்பிரிவு போலீசார் ஒருவர் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மந்திரி நபா கிஷோர் தாஸ் கடந்த 26-ந் தேதி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜார்சுகுடா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் என்பவர் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 முறை மந்திரி நபா கிஷோர் தாசை பின்தொடர்ந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் ஒருவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட கோபால்தாஸ், கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை ஜார்சுகுடாவில் உள்ள நபா கிஷோர்தாசின் இல்லத்திற்கு அருகில் காத்திருந்து மந்திரி உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியில் சென்று உள்ளாரா என அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது மந்திரி வீட்டில் இல்லை என்றாலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒவ்வொருமுறையும் தனது துப்பாக்கியுடன் தான் மந்திரி வீட்டிற்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மந்திரியின் பயண திட்டத்தை அறிந்துள்ளார்.
எனவே அவர் திட்டமிட்டு தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதுகிறோம். கோபால் தாஸ் தனது உறவினருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், தன்னை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் மந்திரி நபா கிஷோர்தாசை 3 மாதங்களுக்கு முன்பே அணுகி உள்ளார். அப்போது மந்திரி நபா கிஷோர்தாஸ் சப்-இன்ஸ்பெக்டரை அவமதித்தாக அவர் கருதியுள்ளார்.
இந்த ஆத்திரத்தில் தான் அவர் அமைச்சரை சுட்டிருக்கலாம் என சந்தேகிக்றோம். அவர் மனநலம் பாதிப்பிற்கு மருந்து எடுத்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும் வரை எங்களுக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






