என் மலர்
மணிப்பூர்
- அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
- நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.
- நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
- நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.
- மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் என்ற இடத்திற்கு வருடாந்திர பள்ளி ஆய்வுச் சுற்றுலா சென்றனர். அப்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள மலை பிரதேச மாவட்டத்தின் லாங்சாய் பகுதிக்கு அருகில் உள்ள பழைய கச்சார் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் வீடியோ தொகுப்பை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் என். பிரேன் சிங், "பழைய கச்சார் சாலையில் இன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க மீட்புக்குழு, மருத்துவக் குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- 6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இம்பால் :
6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று, புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்பட 20 பேருக்கு இப்படி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா பற்றி முதல்-மந்திரி பீரன் சிங் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் குறிப்பிடுகையில், "ஒலிம்பிக் பூங்கா திறப்புக்கு தயாராக உள்ளது. நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நமது புகழ்பெற்ற ஒலிம்பிக் சாதனையாளர்களின் சிலைகளை நாம் பார்க்கலாம்" என தெரிவித்திருந்தார்.
ஆனால் மேரிகோமின் சிலையின் தோற்றம் பற்றி அவரது கணவர் ஆன்லர் கரோங் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "ஒலிம்பிக் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள என் மனைவி மேரிகோமின் சிலைத்தோற்றம், அவரைப்போல இல்லை" என தெரிவித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேரிகோமின் சகோதரர் ஜிம்மி கோம், "இந்த ஒலிம்பிக் பூங்காவை திறந்து வைப்பதற்கு முன்பாக மேரிகோமின் சிலை மாற்றப்படும் என்று முதல்-மந்திரியின் அலுவலகம் எனக்கு உறுதி அளித்துள்ளது" என தெரிவித்தார்.
ஆனால் இதுபற்றி முதல்-மந்திரி அலுவலகத்தில் விசாரித்தபோது, "இந்தப் பிரச்சினை பற்றி நாங்கள் பேச மாட்டோம்" என கூறிவிட்டனர்.
ஆனால் ஜிம்மி கோம் மேலும் கூறும்போது, "இது அவரது (ஆன்லர் கரோங்) தனிப்பட்ட பிரச்சினை. எனது சகோதரி வெளியூர் சென்றிருந்தார். இப்போதுதான் ஊர் திரும்பி உள்ளார். அவருக்கு இந்த விவகாரம் குறித்து புதன்கிழமைதான் தெரிய வந்தது. நமது வீரர்களை, வீராங்கனைகளை கவுரவிக்கிற வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படலாம்" என தெரிவித்தார்.
- ஒரு குழந்தைக்கு ராணுவ சீருடை அணிவித்தால் கூட, அதன் ஆளுமை மாறிவிடும்.
- நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திக்க விரும்புவேன்.
இம்பால் :
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் சென்றார். இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57-வது மலைப்பகுதி பிரிவின் வீரர்களை சந்தித்தார். அவர்களிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
இளம்வயதில் நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்காக ஒருதடவை தேர்வாணைய எழுத்து தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், என் தந்தை மரணம் உள்ளிட்ட குடும்ப சூழ்நிலைகள் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
ஒரு குழந்தைக்கு ராணுவ சீருடை அணிவித்தால் கூட, அதன் ஆளுமை மாறிவிடும். அந்த அளவுக்கு இந்த சீருடையில் ஒரு ஈர்ப்புசக்தி உள்ளது.
இந்தியா-சீனா மோதலின்போது நடந்த எல்லா விவரங்களும் உங்களுக்கு தெரிந்திருக்காது. நமது வீரர்கள் காண்பித்த துணிச்சலையும், வீரத்தையும் நானும், அப்போதைய ராணுவ தளபதியும் அறிவோம். உங்களுக்கு நாடு கடன்பட்டிருக்கிறது.
நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திக்க விரும்புவேன். உங்களை சந்திப்பது எனக்கு பெருமையான விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இம்பாலா:
மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் மறியல் செய்தனர்.
இந்த நிலையில் பிஷ்ணு பூர் மாவட்டம் பூகாகசாவ் கிராமத்தில் நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் வேனுக்கு தீ வைத்தது. நேற்று இரவு மாணவர் அமைப்பினர் அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் காயம் அடைந்தனர். போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போராட்டத்தை தீவிர படுத்தவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதனால் கலவரம் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பதட்டத்தை தணிக்க இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில கூடுதல் செயலாளர் ஞானபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்களிடம் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் சமூகவலை தளங்களில் கருத்துகள் பரவாமல் தடுக்க இன்று முதல் 5 நாட்கள் மொபைல் இணையதள சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 2 மாதங்கள் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார் .
பல்வேறு பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதால் மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இம்பால்:
மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
- தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆக உள்ளது.
இம்பால் :
மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- மணிப்பூரில் இன்று மேலும் 3 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.
இம்பால்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்தது. ஜூன் 30 அன்று அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.
ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 3 உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 8 பேரை தேடும் பணிகள் நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது.
- மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இம்பால்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.
ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று 3-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
- கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
- காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தின் நானி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 தொழிலாளர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது, மேலும் காணாமல் போன 38 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்றன. நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ரயில்வே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர்களின் பெயர்களை அசாம் அரசு வெளியிட்டது. இவர்களில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
- நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் ராணுவ வீரர்கள்.
மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்தார்.






