என் மலர்
குஜராத்
- மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் வழக்குகளை திரும்பப் பெறுவோம்
- குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்ய சட்டம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் கூறியதாவது:-
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். குஜராத் மின் மிகை மாநிலம் என்று இப்போது ஆளும் பாஜக கூறினாலும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், அதுவும் பகலில் வழங்கப்படும். மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மின் திருட்டு வழக்குகளையும் திரும்பப் பெறுவோம்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருவோம். விவசாயிகளிடமிருந்து 20 கிலோ வேளாண் விளைபொருட்களை வாங்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கம் கூடுதலாக 20 ரூபாய் போனஸ் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூவண்ண தேசிய கொடி இந்திய பன்முகத் தன்மையின் சின்னம்.
- நமது மூவண்ணக்கொடி கடந்த காலத்தின் பெருமை.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும், சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு இன்னும் சில தினங்களில், கொண்டாடப்பட உள்ளது.
நாடு முழுவதும் மூலை,முடுக்கெல்லாம் மூவண்ணக்கொடி ஏற்றி, வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு நாம் அனைவரும் தயாராகி வருகிறோம்.

சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், ஒரு சிறிய இந்தியாவை காண முடிகிறது. சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர் மூவண்ணக் கொடியின் உண்மையான ஒற்றுமை உணர்வை சூரத் வெளிப்படுத்தி உள்ளது.
நமது தேசியக் கொடியே நாட்டின் காதி மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இந்திய தேசிய கொடியில் மூன்று நிறங்கள் மட்டுமல்ல, நமது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது.
நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சின்னம். சுதந்திரத்தில் ஈடுபட்ட போராளிகள், மூவண்ணக்கொடியில் நாட்டின் எதிர்காலம் குறித்த கனவையும் கண்டனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கும்போது, மூவண்ணக்கொடி இந்தியாவின் ஒற்றுமையையும், உணர்வையும் மீண்டும் பிரதிபலிக்கிறது.
வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு புதிய இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.
- இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ₹ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி ₹40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:-
போடாட் எஸ்பி கரன்ராஜ் வகேலா மற்றும் அகமதாபாத் ஸ்பி வீரேந்திரசிங் யாதவ் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளோம். இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் தகவல்
- விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.
ஹிம்மத்நகர்:
குஜராத் மாநிலம் சபார் பால் பண்ணையில் இன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டர் கலக்கப்பட்ட நிலையில், இப்போது 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் பலன் இப்போது தெரிகிறது. விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் மற்றும் தேன் உற்பத்தி போன்ற வணிக நடவடிக்கைகளை ஊக்குவித்ததும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க செய்துள்ளது. கால்நடைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பிரதமர்மோடி பேசினார்.
- பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ₹ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி ₹40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சுமார் 30 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொடாட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்டை மாவட்டமான அகமதாபாத்தின் தண்டுகா தாலுகாவைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், " போலி நாட்டு மதுபானம் தயாரித்து விற்பனை செய்த பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம்.
நேற்று அதிகாலை பர்வாலா தாலுகாவின் ரோஜித் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற கிராமங்களில் வசிக்கும் சிலரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பர்வாலா மற்றும் பொடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது" என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மது விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பாவ்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார்.
குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.
- குஜராத்தில் காங்கிரஸை விட ஆம் ஆத்மியின் தொழிலாளர் தளம் பெரிதாக வளர்ந்துள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை குஜராத் சென்றடைந்தார்.
இந்நிலையில், ராஜ்கோட் நகரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், குஜராத்தில் காங்கிரஸை விட ஆம் ஆத்மியின் தொழிலாளர் தளம் பெரிதாக வளர்ந்துள்ளதாக கெஜ்ரிவால் கூறினார்.
இந்நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபைத் தொகுதிகளில் சுமார் 50 இடங்களைக் கொண்ட சௌராஷ்டிரா தொகுதியில் கெஜ்ரிவால் கவனம் செலுத்துகிறார்.
- மத்திய அமைச்சர் அமித் ஷா 211 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் உயர்த்தப்படும்.
மத்திய அரசின் 'சுதந்திர தின அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலிறுயுறுத்தி உள்ளார்.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் போபால் மற்றும் குமா பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது தொகுதியின் கீழ் 211 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமித் ஷா உரையாற்றியதாவது:-
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் வீடுகளுக்கு சுத்தமான நர்மதா குடிநீர் உறுதி செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் தேசியக் கொடிகள் கிடைக்கும். பொதுமக்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி அதனுடன் செல்ஃபி எடுத்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான மூன்று நாள் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதி
- டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.
சூரத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்ததும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். டிசம்பர் 2021 வரையிலான நிலுவையில் உள்ள மின் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்திருக்கிறது. அவர்களிடம் புதிய யோசனைகள் இல்லை. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாத பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்த தேர்தல் அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே, எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தமுறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
- குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது.
- புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் அப்போதைய குஜராத் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய முதல் மந்திரி மோடி மீதும் புகார் கூறப்பட்டது.
இதில் கலவரம் தொடர்பாக அதிகாரிகள் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும், பொதுமக்களை திசைதிருப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர்.
புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல் மந்திரியாக இருந்த மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியது.
இதையடுத்து இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட் கைது செய்யப்பட்டார்.
இதுபோல முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமாரும் கைதானார். இவர்கள் இருவரை தொடர்ந்து கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்தல், சாட்சியங்களை உருவாக்குதல் போன்ற காரணங்களுக்காக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட்டை கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
சஞ்சிவ் பட் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பலன்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். குஜராத் கலவரத்தில் இப்போது சஞ்சிவ் பட் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பலன்பூர் ஜெயிலில் இருந்து மாற்றப்படுவார் என்று அகமதாபாத் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதன்யா தெரிவித்தார்.
- இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா விவசாயம் சார்ந்த நாடு.
- அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழி நடத்துகிறது.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய முறை குறித்த மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
75-வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பணிகள் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் பெரும் மாற்றங்களுக்கு அடிப்படையாகத் திகழும். நாட்டின், வளர்ச்சி அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வின் அடிப்படையிலானது. இந்த உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழி நடத்துகிறது.
ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்றுள்ள வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.
கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமல்ல என்று கூறுபவர்களுக்கு நாடு அளிக்கும் பதில், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் அசாதாரண வெற்றிதான். மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதை நமது கிராமங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இயற்கை விவசாயம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இந்த இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்கள், பெரும் பலனை அடைவார்கள். நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை நமது விவசாய முறை தான்.
இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு. எனவே, நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால், விவசாயமும் முன்னேறி, அதன் மூலம் நாடும் முன்னேறும்.நீங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நீங்கள் பூமித் தாய்க்கு சேவையாற்றலாம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம்.
பண்டைக்கால அறிவாற்றலை தற்காலத் தேவைகளுக்கேற்ப விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது பற்றி வல்லுநர்கள், தொண்டு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம்.
ரசாயணக் கலப்பு இல்லாத இயற்கை விளைபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இயற்கை விவசாயமும் பன்மடங்கு அதிகரிக்கும். இயற்கை விளைபொருட்களுக்கு தர சான்று உத்தரவாத முறை செயல்படுத்தப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட இயற்கை விளை பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






