என் மலர்
குஜராத்
- குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறினார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி அகமதாபாத் சென்றார். அங்கு நடைபெற்ற பேரணியில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம். பா.ஜ.க. அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியது.
பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
சர்தார் படேல் விவசாயிகளின் குரலாக இருந்தார். பா.ஜ.க. ஒரு பக்கம் அவரது உயரமான சிலையை உருவாக்கியது. இன்னொரு பக்கம் அவர் யாருக்காக போராடினார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம்.
குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய 3 லட்சம் வரை உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும்.
வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடியும். குஜராத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
- மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
- சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் சிறை நிர்வாகமும் ஒரு முக்கிய அங்கம், அதை நாம் புறக்கணிக்க முடியாது.

சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை. தண்டனை இல்லை என்றால் பயம் இருக்காது, பயம் இல்லை என்றால் ஒழுக்கம் இருக்காது, ஒழுக்கம் இல்லையென்றால் ஆரோக்கியமான சமுதாயத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.
கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்திற்கு அவர்களை சிறந்த மனிதர்களாக தர வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடரும் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்து சிறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாற்றும் வகையில் மாதிரி சிறைச் சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்ட சிறைகளையும் நீதிமன்றங்களுடன் இணைக்கும் வகையில் காணொலி வசதியை மாநிலங்கள் வழங்க வேண்டும்.
தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளை தனித்தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- யாத்ரீகர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தின் கலோல் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த யாத்ரீகர்கள் மீது கார் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மேலும் ஏழு யாத்ரீகர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற அம்பாஜி கோவில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தை ஒட்டிய அரவல்லியை இணைக்கும் சாலையில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
யாத்ரீகர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தின் கலோல் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000ம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரவல்லி மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
- இந்தியா ஜப்பான் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- சத்தம் இல்லாமல் இயங்குவதே மின்சார வாகனங்களின் சிறப்பம்சம்.
காந்திநகர்:
இந்தியாவில் ஜப்பான் நிறுவனமான சுசூகி, வாகன தயாரிப்பில் 40 ஆண்டு கால நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரியானாவில் மாருதி சுசுகி வாகன உற்பத்தி நிலையம் மற்றும் குஜராத்தில் சுசுகி நிறுவன பேட்டரி ஆலைக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:-
கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இந்தியா-ஜப்பான் இடையேயான கூட்டாண்மையின் வலுவை மாருதி-சுசுகியின் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. எங்களின் முயற்சிகள் ஜப்பானுக்கு எப்போதும் மரியாதையும் அளித்தன. அதனால்தான் சுமார் 125 ஜப்பானிய நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன.
மின்சார வாகனங்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அவை சத்தம் இல்லாமல் அமைதியாக இயங்குவதுதான். 2 சக்கர வண்டிகளோ, 4 சக்கர வண்டிகளோ எதுவாக இருந்தாலும் மின்சார வாகனங்கள் சத்தம் போடுவதில்லை. இந்த மவுனம் நாட்டில் ஒரு மவுனப் புரட்சியின் தொடக்கமும் கூட.
இந்தியாவில் தற்போது மின்சார வாகன சந்தை விரைவான வேகத்தில் வளர்ந்து வருகிறது, இது கற்பனை செய்து பார்க்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் எளிமையான கடன் செயல்முறை போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பைத் தயாரிக்க நிறைய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன விநியோகம், தேவை மற்றும் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதன் மூலம், மின்சார வாகன உற்பத்தி துறை முன்னேற்றம் காணப் போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த நினைவகம் கிட்டத்தட்ட 470 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- நினைவிடத்தில் நிலநடுக்கத்தின்போது உயிரிழந்த மக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குஜராத்தின் கட்ச் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் வகையில் ஸ்மிருதி வான் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
2001-ம் ஆண்டு பூஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 13,000 பேர் இறந்ததைத் தொடர்ந்து, இந்த நினைவகம் கிட்டத்தட்ட 470 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தில் நிலநடுக்கத்தின்போது உயிரிழந்த மக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிநவீன ஸ்மிருதி வான் பூகம்ப அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும், இந்த அருங்காட்சியகத்தில் குஜராத்தின் நிலப்பரப்பு, 2001 பூகம்பத்திற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மற்றும் அதன் வெற்றிக் கதைகளை காட்சிப்படுத்துகிறது. பல்வேறு வகையான பேரழிவுகள் மற்றும் எதிர்காலத்தில் எந்த வகையான பேரழிவுக்கான தயார் நிலையையும் இது தெரிவிக்கிறது.
இதைத்தவிர குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
- நேற்று தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.
அகமதாபாத்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற பிரதமர் மோடியும் ராட்டையில் நூல் நூற்றார்.
இதையடுத்து, அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள 984 அடி நீளமும், 45 அடி அகலமும் உள்ள நடைபாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபா பென்னை சந்தித்துப் பேசினார். அவரிடம் ஆசி பெற்றார். கட்ச் மாவட்டத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.
- பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார்.
- குஜராத்தின் சபர்மதி ஆற்றின் இரு கரைகளை இணைக்கும் நடைபாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
அகமதாபாத்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற பிரதமர் மோடியும் ராட்டையில் நூல் நூற்றார்.
இதைத் தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள 984 அடி நீளமும், 45 அடி அகலமும் உள்ள நடைபாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். எல்.இ.டி., விளக்குகள் அலங்காரத்துடன் கூடிய இந்த நடைபாலத்தை மக்கள் நடந்தபடி கடக்கலாம். சைக்கிளில் செல்லும் வசதியும் உள்ளது. பாலத்தின் நடுவே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரைக் கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, அடல் என பெயரிடப்பட்டுள்ளது.
சபர்மதியின் மேற்குப் பகுதியில் உள்ள மலர் பூங்காவையும், கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ள கலை மற்றும் கலாசார மையத்தையும் இணைக்கும் வகையில் இந்த நடை பாலம் அமைந்துள்ளது.
நடைபாலத்தைத் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 1996ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் மிகப் பெரிய சாதனை வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தை நேசித்த அவருக்கு குஜராத் மக்களின் சிறந்த மரியாதையாக இந்தப் பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் சபர்மதி நதியின் இரண்டு கரைகளை மட்டும் இணைக்கவில்லை. புதுமை மற்றும் புதிய வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. காற்றாடி திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.
- சுதந்திரத்திற்குப் பிறகு அதே கதர் ஆடை தரக் குறைவான பொருளாகக் கருதப்பட்டது.
- கதர் ஆடை உற்பத்தியுடன் தொடர்புடைய கிராமத் தொழில் அழிக்கப்பட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கதர் நூல் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்து அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை வரலாறு கண்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளை நாட்டின் சுயமரியாதைச் சின்னமாக மகாத்மா காந்தி மாற்றினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு அதே கதர் ஆடை தரக் குறைவான பொருளாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக, கதர் உற்பத்தியுடன் தொடர்புடைய கிராமத் தொழில் அழிக்கப்பட்டது, அது எங்கள் நெசவாளர்களைப் பாதித்தது
சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு 7,500 பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ராட்டைகளை சுற்றி புதிய சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் உறுதிமொழியை நிறைவேற்றவும், தன்னம்பிக்கை இந்தியா என்ற கனவை அடையவும் கதர் ஆடை உற்பத்தி ஒரு உத்வேகமாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- குஜராத்தில் மட்டும் கதர் விற்பனை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத்:
சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி அறிவுறுத்தியதை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கதர் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7,500 பெண்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கேற்றார். 1920களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பல்வேறு தலை முறைகளை சேர்ந்த 22 ராட்டைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ராட்டைகள் முதல் இன்று பயன்படுத்தப்படும் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட ராட்டைகள் வரை இதில் இடம் பிடித்தன. கதர் துணியை பிரபலப்படுத்தவும், கதர் ஆடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களிடையே கதர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடியின் தொடர் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முயற்சியின் விளைவாக, 2014 முதல், இந்தியாவில் கதர் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதேசமயம், குஜராத்தில் மட்டும் கதர் விற்பனை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பேசினார்.
- இன்னும் 3 நாளில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்யும் என்றார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஆண்டு இறுதியில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவி தொகையாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டார்.
இதற்கிடையே, கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல் மந்திரி சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதலில் அகமதாபாத் நகருக்கு நேற்று சென்று, மக்களிடையே ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளாக பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் பேசுகையில், அடுத்த 10 நாட்களில், மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்யும் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் தற்போது அடுத்த 2 முதல் 3 நாட்களிலேயே அவர் கைது செய்யப்படுவார் என நான் உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
- 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
அவர்கள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.
அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதையடுத்து, இவ்விஷயம் தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது.
அந்த குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவ்விவகாராம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் வழக்குகளை திரும்பப் பெறுவோம்
- குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்ய சட்டம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் கூறியதாவது:-
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். குஜராத் மின் மிகை மாநிலம் என்று இப்போது ஆளும் பாஜக கூறினாலும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், அதுவும் பகலில் வழங்கப்படும். மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மின் திருட்டு வழக்குகளையும் திரும்பப் பெறுவோம்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருவோம். விவசாயிகளிடமிருந்து 20 கிலோ வேளாண் விளைபொருட்களை வாங்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கம் கூடுதலாக 20 ரூபாய் போனஸ் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






