என் மலர்tooltip icon

    குஜராத்

    • ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
    • ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.

    எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."

    ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
    • மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.

    உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சனிக்கிழமை, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

    நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

    இந்நிலையில் இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.

    அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். காரணம், 250 ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஐக்கிய இராஜ்ஜியத்தை இந்தியா முந்தியது" என்று தெரிவித்தார்.

    • ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை.
    • இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

    மே 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

    குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி பேசுகையில், "1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது அன்றிரவே, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

    பாகிஸ்தான் முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. அப்போதே முஜாஹிதீன்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் மீட்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்தக்கூடாது என அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார்.

    ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்த இந்த முஜாஹிதீன்களின் ரத்தக்களரி 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது பினாமி போர் அல்ல. அவை பாகிஸ்தானால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். அதுதான் அவர்களின் போர் உத்தி. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் போரை நடத்துகிறது பாகிஸ்தான்.

    இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பிரதமர் விளக்கினார். "ஆபரேஷன் சிந்தூர், 22 நிமிடங்களில் 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இது கேமராக்கள் முன் நடந்தது. இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை" தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் கருத்துக்கள் வந்துள்ளன.

    • பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது.
    • பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

    பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அங்குள்ள தாஹோத்தில் நடைபெற்று பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில் (மே26- 2014) ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானேன்.

    * நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.

    * மக்கள் ஹோலி, தீபாவளி மற்றும் வினாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

    * நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இங்கேயே செய்யப்பட வேண்டும்

    * பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை

    * நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.

    * பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது

    * பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

    * இந்தியாவின் இலக்கு வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாறுதல்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
    • ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.

    2 நாட்கள் பயணத்தில் அவர் ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி இன்று காலை தாஹோத் நகரில் ரெயில் என்ஜின் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த தொழிற்சாலை உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் 9 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட மின்சார ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும். இந்த தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரெயில் என்ஜினையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வேயின் சரக்கு ஏற்றுதல் திறனை அதிகரிக்க இந்த ரெயில் என்ஜின்கள் உதவும்.

    அதை தொடர்ந்து தாஹோத் பகுதியில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் நிறைவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இவற்றில் ரெயில்வே திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களும் அடங்கும். வேராவல்-அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலையும், வல்சாத்-தாஹோத் இடையே விரைவு ரெயிலையும் அவர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் திறந்து வைத்ததோடு அதில் ஒரு சரக்கு ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பூஜ் நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.53,400 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கு நிறை வடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காந்தி நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 22 ஆயி ரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.

    • ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்க பிரதமர் மோடி குஜராத்தை வருகிறார்.
    • பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    குஜராத்தின் டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

    மேலும், பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    இந்நிலையில், அகமதாபாத் வரும் பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுக பிரதமரின் புகைப்படத்துடன் 'ஆபரேஷன் சிந்தூர்' விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தனது அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. . சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தன.

    இந்நிலையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.

    சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்ததாகவும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரித்தும் தொடர்ந்து அவர் முன்னேறியதால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் உயிரிழந்தார் என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

    முன்னதாக தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தினார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்- நிகோலஸ் பூரன் ஜோடி 221 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 117 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், சுப்மன் கில் 35 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த ரதர்போர்டு-ஷாருக் கான் ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரதர்போர்டு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி சார்பில் ரூர்கி 3 விக்கெட்டும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

    • ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும்.
    • குஜராத் வனத்துறையால் 5 ஆண்டுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அகமதாபாத்:

    ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும். தற்போது கிர் தேசிய பூங்காவுக்கு வெளியேயும், காடுகள் அல்லாத மற்றும் கடலோர பகுதிகள் உள்பட குஜராத்தின் 11 மாவட்டங்களிலும் இந்த சிங்கங்கள் பரவி உள்ளன. குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அதன்படி 6-வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறியதாவது:

    ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்துள்ளன. மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது. கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டன. எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டன. இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக் குட்டிகள் அடங்கும்.

    கடைசியாக 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன என தெரிவித்தார்.

    • சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
    • பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாஜகவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் தலைவர் ஜே.பி. நட்டா பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.

    அதாவது, பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 13 முதல் மே 23 வரை 10 நாள் திரங்கா யாத்திரை திட்டமிடப்பட்டது.

    இந்த யாத்திரையில் மக்களிடம் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகளைப் பற்றி எடுத்துக்கூற பாஜக விழைகிறது. சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.

    முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை யாத்திரையில் முன்னிலைப் படுத்த பாஜக திட்டமிட்டது.

    இந்நிலையில், குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் "திரங்கா யாத்திரை" நடைபெற்றது.

    ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அகமதாபாத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி அமித் ஷா பேரணியில் பங்கேற்றார்.

    • பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார்
    • குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.

    மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாக பல்வந்த் சிங் கபாத் புகார் அளிக்கப்பட்டது.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகன் பல்வந்த் சிங்கின் நிறுவனம் எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
    • தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

    குஜராத்தில் கடந்த மே 8 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.

    அதாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய தனக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் அவர் குழம்பிப்போனார். 

    இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்த பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.

    சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தெரிவித்தார்.

    ×