என் மலர்
இந்தியா
அகமதாபாத் விமான விபத்து - சம்பவ இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
- விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
- மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இருந்தனர்.
இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.








