என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
    நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

    கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.

    கட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

    கட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.



    சில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.

    கட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.

    உங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.

    பெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.

    பலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

    யாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..! 
    கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம்.
    இப்போதைய சூழலில் கர்ப்பிணியை மனதளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

    கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப்பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

    கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

    * கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

    * போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

    * புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

    * உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    * கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

    * வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

    * சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
    கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    * சிலருக்கு முதல் ட்ரைமெஸ்டர் வரை வாந்தி இருக்கும். சிலருக்கோ குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள்வரை விடாமல் அது தொடரும். ஒரு சிலருக்கு எப்போதாவது மட்டும் வாந்தி வரும்; மற்றபடி அவர்கள் நார்மலாகவே இருப்பார்கள். இன்னும் சிலருக்கு வாந்தி வருகிற உணர்வு மட்டுமே இருக்கும்… ஆனால், வாந்தியெடுக்க மாட்டார்கள். இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு இருக்கும்; சிலரோ வழக்கம்போல சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

    * கருவுறுதலின் ஆரம்ப அறிகுறியாக எல்லாப் பெண்களுக்கும் மார்பகங்கள் மென்மையாகும்; வலியெடுக்கவும் செய்யும்.



    * கருத்தரித்த ஆரம்பத்தில், சில பெண்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. தண்ணீர்கூட அவர்களுடைய நாக்குக்கு தேவையற்றதாகத்தான் தெரியும். சிலருக்கோ அதிகமான பசி உணர்வு இருக்கும்.

    * கருவுற்ற ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். அதற்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் காரணமாக இருக்கலாம், கவனம்.

    * இயற்கையாகக் கருத்தரித்த பெண்களுக்கு மலச்சிக்கல் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கருவுறுதலுக்கான மாத்திரைகள் உட்கொண்டவர்களுக்கு, அவற்றில் இருக்கிற புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    * கருக்கலைந்துபோன அனுபவம் உள்ள பெண்கள் மீண்டும் கருவுறும்போது `மனம் அலைபாய்தல்’ என்கிற மூட் ஸ்விங் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக  10% பெண்களே கருவுறுதலின் அறிகுறியாக மூட் ஸ்விங்ஸை எதிர்கொள்கிறார்கள்.

    * முதல் ஒரு மாதம் வரைக்கும் மாதவிடாய் வராமல் இருந்து, திடீரென லேசான ரத்தக்கசிவு ஏற்படுதல் 20% பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கிறது. ரத்தக்கசிவு வலியில்லாமல் இருந்துவிட்டால் இது குறித்து பயப்படவேண்டிய அவசியமில்லை.
    இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
    பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை; மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை.

    ஏனெனில், மகிழ்ச்சியான மனநிலை பெண்களுக்கு சுரக்கும் பல ஹார்மோன்களை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கும்; பிரசவ நேரத்தில் இடுப்புத் தசை இயக்கங்களைக் குஷிப்படுத்தி, பிரசவம் எளிதாக நிகழ்வதற்கும்; பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பைத் தன்னிலை மீள்தல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சரியாக நிகழ்வதற்கும் துணைபுரிகிறது. எனவே, கர்ப்பிணிகளுக்கு மனமும் இதமாக இருக்க வேண்டியது அவசியம்.

    கர்ப்பிணிகளுக்கு மனச்சோர்வு (Depression) ஏற்படுவது சாதாரண நடைமுறைதான். இதில் மிதமான மனச்சோர்வு, தீவிர மனச்சோர்வு என இரண்டு வகைகள் உண்டு. மனச்சோர்வின் அறிகுறிகள் மிதமான மனச்சோர்வு பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படவே செய்யும். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், தீவிர மனச்சோர்வு ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டியது அவசியம். உறக்கம் குறைவதும், உடலில் சக்தி இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுவதும் தீவிர மனச்சோர்வுக்கு முதலில் தோன்றும் அறிகுறிகள். இந்த இரண்டுமே கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் இயல்பாகவே இருக்கும் என்பதால், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகக் கருதப்படுவது சற்று தாமதமாகலாம்.

    அடுத்ததாக, பசி குறைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, காரணமற்ற கவலை, எரிச்சல், கோபம், அழுகை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை எல்லாமே மகப்பேறு மருத்துவரின் சரியான ஆலோசனைகள் மூலம் சரியாகிவிடும்.தீவிர மனச்சோர்வு பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகுதான் ஏற்படும். ஒரு சிலருக்குக் கர்ப்ப காலத்திலும் ஏற்படலாம். இவர்களுக்கு பயம், பதற்றம், மனக்குழப்பம், குழந்தையைப் பேணுவதில் ஆர்வமின்மை, குடும்பத்தாருடன் பேசுவதும் பழகுவதும் குறைவது, தற்கொலை முயற்சி, குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சி போன்ற மோசமான
    அறிகுறிகள் தோன்றும்.

    மனநலப் பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் தொடக்கத்திலிருந்தே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், சிலருக்குப் பிரசவ நேரத்தில் கருப்பை வாய் திறப்பது தாமதமாவது, குழந்தை கீழிறங்குவது தாமதமாவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சுகப்பிரசவம் ஆவது தடுக்கப்படலாம்; சிசேரியன் பிரசவம் தேவைப்படலாம்.
    ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

    புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.



    * மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

    * மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

    * BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

    * வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
    பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
    பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

    அறிகுறிகள்

    * மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

    * இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

    * இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

    * வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.



    உடல்ரீதியான மாற்றங்கள்

    1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.

    இதற்கு நிவாரணம் - ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

    2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.

    3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த  சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

    4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

    5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது,  இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

    பெண்கள் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எட்டிய உடன் அவளது காம உணர்வுகள் அனைத்தும் மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒரு யோகியைப் போல வாழ்பவள் என்ற கருத்தாக்கத்தை அவளது மனதில் திணிக்கிறது.
    பெண்கள் ரொம்பவும் ரொமான்டிக்கானவர்கள். காமத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையோடு மனதில் பதிந்து நினைவுகளால் மீட்டி மகிழும் தன்மை பெண்களுக்கே உண்டு. சின்ன கோபத்தால், செல்லச் சீண்டல்களால் அலாதி இன்பத்தை உணரும் தன்மையும் பெண்களுக்கே உண்டு.

    Premenopause காலகட்டத்தில் அவள் மனம் அடையும் மாற்றங்கள் அதிகமானவை. ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் இரண்டும் இனம் புரியாத துன்பங்களை சந்திக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறாள். சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது.

    மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.



    பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

    வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம்.

    மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

    இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது.

    பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.
    பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

    பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின்னர், அதன் சத்துகள்தாம் தாய்ப்பாலின் மூலமாகக் குழந்தைக்குச் சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாலூட்டும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். மலக்கட்டுப் பிரச்சனையை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட்ஸ், பிஸ்கட், பிரெட் போன்ற உணவுகளைப் பிரசவம் முடிந்த முதல் 15 நாள்களுக்குத் தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

    தளர்வான பருத்தி ஆடைகளே பாலூட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் மென்மையான சருமத்தை உரசிப் பதம்பார்க்கும். ஃபீடிங் நைட்டி, வெளியே செல்லும்போது ஃபீடிங் குர்தி என அணிவது பாலூட்ட வசதியாக இருக்கும்.

    இரவெல்லாம் விழித்திருந்து குழந்தைக்குப் பாலூட்டுவது, தொட்டில் ஆட்டுவது, டயப்பர் மாற்றுவது போன்ற பொறுப்புகளால் தாயின் தூக்கம் பறிபோகும். உறக்கமின்மையால் கோபம், பசியின்மை போன்றவை ஏற்படும். அடுத்தகட்டமாக ஸ்ட்ரெஸ்கூட ஏற்படலாம் என்பதுடன், ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகப் பால் சுரப்பு குறையலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, குழந்தை உறங்கும்போதெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையைத் தூக்குவதை, கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவதை, முத்தம் கொடுப்பதை எல்லாம் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தையை ஒருவரின் கைகளில் தர நேர்ந்தால், முன்னதாக அவர் கைகழுவ, ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்த வைக்கவும். வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தையின் உடைகளை நன்கு அலசி, வெயிலில் உலரவைத்துப் பயன்படுத்தவும்.

    பிரசவத்துக்குப் பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது டாக்டர் பரிந்துரைத்த கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். குழந்தை பிறந்த 15 நாள்களுக்குப் பின்னர், மகப்பேறு மருத்துவரிடம் ஒரு செக்கப் செய்துகொள்ளவும். மன அழுத்தத்துக்குள்ளானால், கவுன்சலிங் பெறுவது நல்லது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு தாம்பத்யத்தைத் தவிர்க்கவும்.
    கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடாமல் இருப்பதற்காக கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.

    அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.

    மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.
    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும்.
    ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.

    தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.

    சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    * உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.

    * உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.



    * உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.

    * நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

    * உடலுறவு குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

    * உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.

    * ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.
    கர்ப்பகாலத்தில் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.
    கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.

    * கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண்கள் முகப்பரு பிரச்சனையை சந்திப்பார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் துத்தநாகத்தின் அளவு குறைவதும், முகப்பரு தோன்றுவதற்கான அடிப்படை காரணம். இதனால் முகப்பருக்கள் எளிதில் குணமாகாது. அந்த காலக்கட்டத்தில் வைட்டமின் சி, சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் முகப்பரு பரவுவதையும் தடுக்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மை கூட முகப்பரு தோன்ற காரணமாகும். அதை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். பொதுவாக முகப்பரு தோன்றும் போது, டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். கர்ப்பகாலத்தில் நாம் வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்பதால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    * பிரசவமும், பால் சுரப்பும் சருமத்தில் நீரிழப்பை உண்டாக்கும். மேலும் சருமம் மந்தமான மற்றும் உயிரற்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். ஆரோக்கியமான ரத்த அணுக்கள் நல்ல முறையில் செயல்பட, தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் தாய்ப்பாலின் ஒரு முக்கிய அங்கமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்ல பால் சுரப்புக்கு தண்ணீர் மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தின்போதும் அதற்கு பிறகும் நிறைய திரவங்கள் குடிப்பது, மலச்சிக்கலை எளிதாக்கும், தோலை மென்மையாக்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றும், நீர்க்கட்டை குறைக்கும், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் போன்ற அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.



    வெறும் தண்ணீர் மட்டுமே எப்படி குடிப்பதுன்னு பலருக்கு தோன்றலாம். தண்ணீர் மட்டும் இல்லாமல் மற்ற திரவ சார்ந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, பால், பழச்சாறுகள், சூப் வகைகள், ஸ்பார்க்லிங் வாட்டர் (நுரைக்கும் தண்ணீர்), டீ, காபி (காபீன் நீக்கப்பட்டது), பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இதை எல்லாம் மீறி, உங்கள் சருமம் வறண்டு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் சரும நிபுணரை அணுகி மெடிஃபேஷியல்ஸ் ஃபார் ஹைட்ரேஷன் (MediFacials for Hydration) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்தில் ஏற்பட்டுள்ள நீரிழப்பை கட்டுப்படுத்தும். கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு பிறகும் கூட இந்த சிகிச்சையை டாக்டரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.

    * நிறமி, என்பது பேறுகால பசலை. கர்ப்ப காலத்தில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் நிறமியின் பாதிப்பு ஏற்படும். மெலஸ்மா, முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் பொதுவாக நெற்றியில், கன்னங்கள் மற்றும் கழுத்தில் தோன்றும். முழங்கைகள், முழங்கால்கள், கைகளின் கீழ்ப்பக்கம் உள்ள தோல் கூட கருப்பாக மாறும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வெயிலில் செல்லும் போது எல்லாம் எஸ்.பி.எஃப் 30 உள்ள ஒரு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க தொப்பி அணியலாம். சூரிய ஒளி உங்கள் முகத்தில் பட்டால் கரும்புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான சிறப்பு சிகிச்சைகளும் உள்ளன. மருத்துவர் ஆலோசனைபடி செய்து கொள்ளலாம்.

    * கர்ப்பகாலத்தில் குழுந்தை கருவில் இருப்பதால், வயிறு பெரிசாகும். உடல் வேகமாக வளரும்போது வரித் தழும்புகள் தோன்றும். சரும அடிப்பகுதியில் உள்ள மீள்நார்கள் விரிவடைவதாலும் வரித் தழும்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இவை பெரும்பாலும் அடிவயிறு, மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் ஏற்படும். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில், சராசரியாக 9 முதல் 12 கிலோ வரை எடைக் கூடும். இதற்கு மேல் எடை கூடினால் வரித் தழும்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது. சில சமயம் வரித் தழும்பு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். கர்ப்பத்திற்கு பிறகும் சிலருக்கு மறைந்துவிடும். ஒரு சிலருக்கு தங்கிவிடும். அவர்கள் லேசர் சிகிச்சை மூலம் சீர் செய்து கொள்ளலாம்.
    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

    மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்சனைகள்.

    குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

    உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

    ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

    உடல் மற்றும் முகச்சருமம் உலர்ந்து விடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம். எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

    மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
    ×