என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
பெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்ளாடையின் தரமும், கட்சிதமாகப் பொருந்த உதவும் அதன் அளவும்தான் மேலாடைக்கு எடுப்பான தோற்றத்தைத் தரும். எனவே கடைக்குச் சென்று உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் காட்டக்கூடாது. நாப்கின்களை பெண்களே முன்வந்து வாங்கிச்செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல உள்ளாடை மீதான விழிப்புணர்வும் பெண்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம்.
பருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.
தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க 'அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் 'பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்படிப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக்களை வைத்திருத்தல் அவசியமாகும்.

உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.
நவம்பர் 11: சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் இறந்தனர். தரமற்ற மருந்து மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 6: கோவை மாநகர அரசு மருத்துவமனையில் கலைவாணி என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போதிய படுக்கை வசதி, சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அடிப்படையில் சிகிச்சை என்பது உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதானே ஒழிய, உயிரைப் பறிப்பது அல்ல. மேற்கூறியவை போலவே, இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளியில் தெரியாமல் வேறு காரணங்களை கூறி மறைக்கப்பட்டிருக்கின்றன.

“பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணையும்போதுதான் சிசு உருவாகிறது. அவற்றை இணையாமல் தடுப்பதுதான் கருத்தடையின் அடிப்படை. கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் நிரந்தரமான வழிதான் கருத்தடை அறுவை சிகிச்சை. இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணைகிற கரு இணை குழாய் துண்டிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் மயக்குனர்தான் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத் தூய்மையும் முக்கியம். சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, Cidex திரவத்தின் மூலம் 15 நிமிடங்கள் நுண்கிருமிகளை நீக்குதல் (Sterilization) செய்யப்பட வேண்டும். ரத்தக்கொதிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகையில் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருக்க வேண்டும்.
மயக்கம் தெளிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் வரை, முறையாக பராமரிக்க பணியாளர்கள் வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளாவது ஓய்வெடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால், தரமான மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிக மிக அரிது. உயிரின் மதிப்பும் மகத்துவமும் தெரியாதவர்கள் மருத்துவர்களே அல்ல. ஓர் உயிர் மீதான அக்கறையோடு செயல்பட்டாலே இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கமலா செல்வராஜ்.
கமலா செல்வராஜ்.

ஊக்கத்தொகை கொடுக்கிறோம், அரசு சலுகைகள் கிடைக்கும்’ என்றெல்லாம் ஆவலைத் தூண்டி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரவழைக்கும் அரசு நிர்வாகம் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா? இல்லவே இல்லை. அப்படி மேற்கொண்டிருப்பின் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

“பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணையும்போதுதான் சிசு உருவாகிறது. அவற்றை இணையாமல் தடுப்பதுதான் கருத்தடையின் அடிப்படை. கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் நிரந்தரமான வழிதான் கருத்தடை அறுவை சிகிச்சை. இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணைகிற கரு இணை குழாய் துண்டிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் மயக்குனர்தான் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத் தூய்மையும் முக்கியம். சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, Cidex திரவத்தின் மூலம் 15 நிமிடங்கள் நுண்கிருமிகளை நீக்குதல் (Sterilization) செய்யப்பட வேண்டும். ரத்தக்கொதிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகையில் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருக்க வேண்டும்.
மயக்கம் தெளிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் வரை, முறையாக பராமரிக்க பணியாளர்கள் வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளாவது ஓய்வெடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால், தரமான மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிக மிக அரிது. உயிரின் மதிப்பும் மகத்துவமும் தெரியாதவர்கள் மருத்துவர்களே அல்ல. ஓர் உயிர் மீதான அக்கறையோடு செயல்பட்டாலே இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கமலா செல்வராஜ்.
கமலா செல்வராஜ்.
கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும்.
கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், அவர்களின் கருப்பையே பலவீனமாக இருக்கும்பட்சத்தில் (குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லாது போவதால்) நிச்சயம் குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் குறைவு என்கிற நிலைதான் இருந்து வந்தது. இதனால் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்ட நிலையில், இதற்குத் தீர்வாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை முறை மருத்துவத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான கர்ப்பப்பை கொண்ட பெண், குழந்தை பேற்றுக்குப் பிறகு, தன் கருப்பையைத் தானமாக வழங்க விரும்பினால் குழந்தையின்மை பிரச்னையைக் குறைக்க முடியும். ஒருவகையில் கருப்பை தானம் என்பது, கிட்னி, இதயம், கல்லீரல் தானம் போன்றதுதான். அப்படிப் பொருத்தப்படும் கருப்பையை அந்தப் பெண் ஐந்து வருடம் மட்டுமே உடம்பில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு உடலிலிருந்து கருப்பையை அகற்றிவிடுவார்கள். இல்லையென்றால் செப்டிக் ஆகத் தொடங்கிவிடும். கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்ணால் சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உடலில் உண்டாகிற வியர்வையால் கிளம்பும் நாற்றத்தை வாசனையான சோப்பு, சென்ட், டியோடரன்ட் என எதையோ வைத்து மறைத்து விடலாம். சில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அந்தரங்க உறுப்பில் உண்டாகும் ஒருவித திரவக் கசிவும் பாக்டீரியாவும் சேர்ந்து அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை ஆரோக்கியமாக, அதாவது, 4.5 அளவில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஒருவித வாடை வருவது இயல்புதான். அது அதிகமானால்தான் பிரச்னை. அந்த வாடையை உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியாதது, அரிப்பு, வலி, எரிச்சல் போன்றவை இருந்தால் அது அதீதமானது என அர்த்தம். அதீத வாடைக்கான காரணங்கள் பல...
பொதுவாக அந்தரங்கப் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களே இருக்கும். அரிதாக அவை தொந்தரவு செய்யப்பட்டால் ஆரோக்கியமற்ற Bacterial Vaginosis (BV) வரும். இது தாக்கினால் சாம்பல் நிறக் கசிவு, துர்வாடை இருக்கும். இதை அலட்சியப்படுத்தினால் தீவிரத் தொற்றில் கொண்டு போய் விடும். எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்ட்டிபயாடிக் எடுத்து சரி செய்துவிடலாம்.
வெங்காயம், பூண்டு, கரம் மசாலா போன்ற கடுமையான வாசனை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடலிலும் அந்தரங்க உறுப்புகளிலும் துர்வாடை கிளம்பலாம்.
வேறு பிரச்னைகளுக்காக ஆன்ட்டிபயாடிக்கோ, மருந்துகளோ எடுத்துக் கொள்ளும் போது, அந்தரங்க உறுப்பின் பி.ஹெச் அளவு மாறி வாடையைக் கிளப்பலாம். சிலவகை ஒவ்வாமை மருந்துகளாலும் அந்தரங்க உறுப்பு அளவுக்கதிகமாக வறண்டு, கெட்ட வாடையைத் தூண்டலாம்.
அக்குள் பகுதியைப் போலவே அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள சருமத்திலும் அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையும் அந்தரங்க உறுப்புக் கசிவும் சேரும்போது அது சகித்துக் கொள்ள முடியாத வாடையை உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மாதிரியான வியர்வை சிந்தும் வேலைகளுக்குப் பிறகு உடனடியாக உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.
மாதவிலக்குச் சுழற்சியின் போது இந்த வாடையில் மாற்றங்கள் தெரியும். கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளும் பிறப்புறுப்பின் பி.ஹெச் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தி, வாடையைக் கிளப்பும். மெமனோபாஸும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஈஸ்ட் தொற்று மற்றும் Bacterial Vaginosis ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.
நீண்ட நேரமாக மாற்றப்படாத நாப்கின் மற்றும் டாம்பூன்கள் கொடுமையான வாடையை ஏற்படுத்தும். ரத்தப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பழைய நாப்கின்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை வாடையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீவிரமான தொற்றையும் உண்டாக்கி விடும்.
வாடையை நீக்க நீங்களாகவே கடைகளில் விற்கும் சென்ட், மருந்துகள், வாசனை சோப்பு, அரோமா ஆயில் போன்றவற்றை உபயோகிக்கக்கூடாது. அவை எல்லாம் பி.ஹெச் அளவை தாறுமாறாக மாற்றி, பிரச்னையை அதிகப்படுத்தும்.நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையே பிரச்னையில் இருந்து விடுபடும் முதல் வழி. மிகவும் மைல்டான சோப்பு உபயோகித்து அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, இருமுறை உள்ளாடைகளை மாற்றுவது போன்றவையும் அவசியம். பிரச்னை தீவிரமானது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பதே சிறந்தது.

திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் பூஜை அல்லது பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.
பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:
* பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
* ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.
* எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
* அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:
* வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.
* வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.
* பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.
பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
அந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.
* பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
* ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.
* எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
* அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:
* வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.
* வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.
* பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.
‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். சரியாக நடக்க ஒரு அரை மணி நேரமாவது ஆகிவிடும். இது பொதுவாக பெண்கள் மட்டுமே சொல்லும் புகார். அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த குதிகால் வலி வருகிறது?
‘‘குதிகாலில் வரும் இந்த வலியை Plantar fasciitis என்று சொல்வோம். அதாவது, பாதத்தின் அடிப்பகுதியில் குதிகால் எலும்பையும், கால்விரல்களையும் இணைக்கும் Plantar fascia எனப்படும் தடிமனான திசுநார்ப்பகுதி வீக்கமடைவதால் இந்த வலி உண்டாகிறது.
பெண்களைப் பொருத்தவரையில், கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுதல், உடல்பருமன் நோய் காரணமாக தீடீரென்று உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக வீட்டை பராமரிக்கும் பெண்மணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, உடல்பருமன், தைராய்டு நோய்களின் காரணமாக உடல் எடை கூடுவது போன்ற காரணங்களாலும் Plantar fasciitis இவர்களை அதிகம் பாதிக்கிறது.
அறிகுறிகள்
முதலில் குதிகால் வலி என்றுதான் வருவார்கள். அதற்குப்பின்னால் உடலில் இருக்கும் பிற பிரச்னைகள் தெரிய வரும். பெரும்பாலும் காலையில் எடுத்து வைக்கும் முதல் அடியில் இந்த குத்தல் வலி ஏற்படும். நடக்க, நடக்க வலி குறைந்து போனாலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ, நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நின்றாலோ திரும்பவும் வலிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் இடது பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். போகப்போக இரண்டு பக்கமுமே பாதிப்படையும். பாதத்தில் வலி இருப்பதால், நடப்பதை தவிர்ப்பார்கள். இதனால், எடைகூடி வலி அதிகரிக்கும்.
சிகிச்சை
Plantar fasciitis பிரச்னைக்கு சிகிச்சை காலுக்கு பயிற்சி கொடுப்பதுதான். படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் முன்னால் பாதங்களை நன்றாக மசாஜ் செய்யலாம். ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்து காலை அதில் ஊற வைக்கலாம். 2 கப்புகள் எடுத்துக் கொண்டு, ஒன்றில் வெந்நீரும் மற்றொன்றில் குளிர்ந்த நீரும் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் சுடுநீரில் 1 நிமிடம் வரை வைத்திருந்து, காலை வெளியே எடுத்து நன்கு துடைத்துவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் காலை 1 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி 5 அல்லது 6 தடவைகள் வரை செய்யலாம். அதிகவலி இருப்பவர்கள், அதிகபட்சமாக 3 நிமிடம் வரையிலும் இரண்டு தண்ணீரிலும் மாற்றி ஊறவைக்கலாம். காலுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
முன்பெல்லாம் வலியைக் குறைக்க பாதத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்துவார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் இப்போது பயன்படுத்துவதில்லை. அதிக வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவது மற்றும் நடப்பதை குறைத்துக் கொள்வது, எடை குறைப்பு நடவடிக்கை, நீரிழிவு கட்டுப்பாடு போன்று சின்னச்சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.
இதைத்தவிர, காலணிகளில் மாற்றங்களும் செய்யலாம். கால்விரல்களை பிரிக்கும் ஸ்பிலின்டுகள் (Night Splints) உள்ளன. இரவில் படுக்கும்போது இதை அணிந்து கொள்வதால் தசைநார்களின் இறுக்கத்தை குறைக்கும். மேலும் கால்வலிக்கென்றே Arch வைத்த பிரத்யேகமான காலணிகள் உள்ளன.
Plantar Fasciitis பிரச்னையைப் பொருத்தவரை மூன்று முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்.
செயல்முறை நடவடிக்கைகள், வாழ்வியல் மாற்றங்கள், மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இவற்றை 6 மாதங்கள் வரை பின்பற்றி வந்தால் வலி பூரண குணமாகிவிடும். 6 மாதங்களுக்குப்பின்னும் வலி தொடரும் பட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்

அன்னையின் கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள்.
அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்- இது பிரபுதேவா நடித்த படத்தின் புகழ் பெற்ற பாடல் வரி. கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் கருவில் இருந்த 2 குழந்தைகளுக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் குழந்தையின் முதுகு தண்டுவட எலும்புகள் சரியாக உருவாகாமல், தண்டுவடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுவது ‘ஸ்பைனா பிபிடா‘ என்ற குறைபாடாகும். தண்டுவடம் சரியாக உருவாகாத காரணத்தினால், அதன் உள்ளே இருக்கும் திரவம் கசியத் தொடங்கும்.
இது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிப்பதோடு, பிறந்த பிறகு குழந்தை நடப்பதில் சிக்கல் ஏற்படுத்தி, பல்வேறு நீண்ட கால உடல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இந்தப் பிரச்சினைக்கு மருத்துவர்கள் குழந்தையின் தாயின் வயிற்றில் சிறு துளைகளின் மூலம் கருவிகளை உள்ளே செலுத்தி குழந்தையின் முதுகு தண்டுவடத்தில் 90 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக்கியுள்ளனர்.
எலும்புகள் உருவாகாமல் வெற்றிடம் காணப்பட்ட பகுதியில் தையல் போட்டு, அதிலிருக்கும் திரவம் கசிவது தடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு செய்யப்படும் இந்த சிகிச்சை, தாயின் கருவில் இருக்கும்போதே வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இந்த உலகை காண வந்துவிட்டன. வெற்றிக் களிப்பில் மருத்துவர்கள் உள்ளனர்.

கூடிய எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் பிரசவத்திற்குப் பின் ஒரு 6 வார காலம் கழித்து ஆரம்பியுங்கள்.
பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் மறுசீரமைப்பிற்கு சில காலம் எடுத்துக்கொள்கிறது. பொதுவாக பெண்களைப் பொறுத்த வரை பிரசவதிற்குப் பின் 6 முதல் 20 கிலோ வரை உடல் எடை கூடுகிறது. கூடிய எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் பிரசவத்திற்குப் பின் ஒரு 6 வார காலம் கழித்து ஆரம்பியுங்கள். நீங்கள் பாலூட்டும் தாயானால் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி இரண்டு மாதம் கழித்துத் துவங்குங்கள். தாய்ப்பால் ஊட்டும் சமயம் அதிக கலோரி உடலுக்குத்தேவைப்படுவதால் அப்போது உணவு கட்டுப்பாடு என்பது கூடாது. பழைய நிலமைக்கு உங்கள் உடல் எடையைக் கொண்டுவர விரும்பினால் நிதானமாகவும்,சீரகவும் செயல்படுங்கள்.
எடை குறைப்பு:
சிறிய மற்றும் எளிய உடற்பயிற்சிகள் தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அவசரப்பட்டு அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்து அசெளகரியப்படாதீர்கள். உங்களுக்கு பிரசவம் எளிதாக நடக்கவேண்டும் என்பதற்காக நமது உடலில் ரிலாக்சின் எங்கின்ற ஒரு ஹார்மோன் சுரக்கிறது. இது எதற்கு தெரியுமா? இந்த சுரப்பு ஹார்மோன் உங்கள் உடலில் உள்ள தசைநார்களையும்,தசைகளையும் மிருதுவாக்கி விடுகிறது. வயிற்றுத்தசைகள் பிரசவத்தின் போது சற்று வலுவிழந்து காணப்படும் அவை வலுப்பெறும் வரை ஒரு வருடம் வரை உங்கள் உடற்பயிற்சி செய்கையில் சிறிது கடினமாக இருப்பதாக உணரலாம்.
கீழ்க்கண்ட எளிதான உடற்பயிற்சிகளைத் தொடங்கலாம்:
1.இடுப்பை வலுப்படுத்தும் பயிற்சி – pelvic floor exercises
2.வயிற்றை வலுவாக்கும் பயிற்சி – gentle stomach clenching exercises
3.குழந்தையை நடைவண்டியில் வைத்துக்கொண்டு நடத்தல் பயிற்சி
பிரசவத்திற்குப் பின் உடல் வலுப்பெற்ற பிறகு, கலோரிகளை எரிப்பதற்கு சில உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். அதற்கு ஒரு வாரத்தில்மூன்று முறை உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும் விதமாக 20 – 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
1.விறுவிறு நடைப்பயிற்சி
2. pilates,
3.யோகா
4.நீச்சல் பயிற்சி
5.(சைக்கிள்) மிதிவண்டி ஓட்டுதல்
6.உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்தல்.
உணவு முறைகள்:
பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக உணவுக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு உசிதமானது அல்ல. ஏனெனில் பெண்கள் தங்கள் உடம்பைப் பேணுவதற்கு ஒரு நாளைக்கு 1200 கலோரி தேவை. உடலில் சக்த்தியைப் பேணுவதற்கு 1500 - 2200 கலோரி தேவை. அதிலும் பாலூட்டும் தாய் என்றால் 1800 கலோரிகள் அவசியம் தேவை.
தடாலடியான உடல் எடை குறைப்பு உங்கள் பால் சுரப்பைக் குறைப்பதுடன், உடல் கொழுப்புகளில் உள்ள நச்சுத்தன்மையை குருதியிலும்,தாய்ப்பாலிலும் கலந்து விடக்கூடும். ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது ஒரு வாரத்திற்கு 0.450 கிராம் முதல் 0.680 கிராம் வரை இருத்தல் நலம். இதற்கு இணையாக 500 கலோரி உணவுகளை குறைத்தோ அல்லது அந்த அளவு கலோரிகளை எரித்தோ செயல்படவேண்டும். முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்ணுவதை மாற்றி சிறுசிறு பகுதியாகப் பிரித்து 6 முறையாக உண்ணுதல் நலம்.
சிறுசிறு உணவுகள் என்பது கேரட் துருவல்,சாண்ட்விச்,பழங்கள் மற்றும் பால் சத்து நிறைந்த பானங்கள். காலை உணவினை எக்காரணத்தை கொண்டும் கைவிடாதீர்கள். பிரசவத்திற்குப் பின் கொழுப்பு குறைந்தபால்,மற்றும் பால் பொருட்கள், கோதுமை ரொட்டிகள்,தானியங்கள், குறைந்த கொழுப்பும் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள்,பழங்கள்,வெள்ளை இறைச்சி,மீன் போன்றவைகள் உடல் எடையைக் குறைப்பதாக உணவுத் துறை வல்லுனர்கள் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
மாவுச்சத்திலும், புரத்த்திலும் இருப்பதை விட அத்க அளவு கலோரிகள் கொழுப்பில் உள்ளது. எனவே கொழுப்பினை உணவில் குறைத்துக் கொள்வது உடல் எடை குறைப்பிற்கு நல்ல வழி. ஆனால் உடலுக்கு சிறிய அளவிலான கொழுப்புச் சத்து தேவை என்பதால் அதனை அடியோடு ஒதுக்கிவிடாதீர்கள். நல்ல கொழுப்புகளை (monounsaturated and polyunsaturated fats) சேர்த்துக்கொண்டு கெட்ட கொழுப்புகளை (saturated and trans fats) விலக்குங்கள். இனிப்புச் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள்,மது வகைகள்,காஃபி இவற்றில் கலோரிச் சத்துக்கள் மறைந்து இருக்கும் ஆகவே அவற்றைத் தவிர்த்து நிறைய தண்ணீர் பருகுங்கள்.

பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும்.
பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும். அவற்றுள் சில.
கருப்பு உளுந்து
களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்து பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் இயங்கவும் கறுப்பு உளுந்து உதவும்.
நல்லெண்ணெய்
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லது.
நாட்டு முட்டை
பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகள்
மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீரை வகைகள்
ரத்தச்சோகை வராமல் இருக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாகற்காய், சுண்டைக்காய்
சில பெண் குழந்தைகளுக்கு உடலில் ரத்த அளவு குறைவால் மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. இந்த பூச்சிகளால் இரத்த சோகை ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி பூச்சி மாத்திரைகள் உண்ணலாம்.
சத்துமாவு உருண்டை
கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு என நவதானியங்களால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை தினமும் சாப்பிட கொடுக்க வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.
கொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக் கடலையை வேகவைத்தோ அல்லது முளைக்க வைத்தோ வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.

பல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.
பெண்களின் வலி தாங்கும் திறன் ஆணை விட அதிகம். நான்கைந்து அறுவைச் சிகிச்சை செய்த பெண் அசால்ட்டாக இருப்பாள். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்தினரை கவனிப்பாள். இரண்டு நாள் காய்ச்சலுக்கு வீட்டை அதகளம் பண்ணும் ஆண்களும் உண்டு.
நாப்பது வயதை எட்டும் போது பெரும்பாலும் பெண்கள் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகளின் கூடாரமாக மாறிப்போவது தான் கொடுமை. வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியை மெழுகாக உருக்கி விடுகிறது. ஏழை வீட்டு மனைவியும் எட்டடுக்கு வீட்டு கோடிஸ்வரன் மனைவியும் ஒரே விதமான மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். புலம்பி எதுவும் மாறப்போவதில்லை பெண்ணே! நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
பல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.
மார்பக காம்புகளில் ஏதாவது மாற்றம், தோல் சிவந்து அல்லது திடிரென ஆரஞ்சு பழத்தோல் மாதிரி சொரசொரப்பாக மாறுவது, நிப்பிள் இருந்து இரத்தம் கலந்த நீர் வடிதல், வலியற்ற கட்டிகள், வீக்கம், மார்பகங்கள் அளவில் மாற்றம்.
சிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாதீர்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்பக சுயப்பரிசோதனை செய்யுங்கள்.
மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு ஓவரியில் உள்ள புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
உடலுறவுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு, மலம், சிறுநீரில் இரத்தத்திட்டுக்கள் வெளிப்படுவது.
விடாத இருமல், தொடர்காய்ச்சல்
திடீரென எடைக்குறைவு, பசியின்மை, சோர்வு
அடிவயிற்றில் வலி
அடிக்கடி காய்ச்சல் தோன்றுதல்
கழுத்து, அக்குள், கை மடிப்பில் உள்ள தோலில் திட்டுக்கள் (skin bruises)
மச்சத்தில் ஏதேனும் மாற்றங்கள்
அறிகுறிகள் உடல் எதிர்க்கொள்ளவிருக்கும் அபாயத்தின் எச்சரிக்கை மணிகள் எனவே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள்.

கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.
பெண்மையின் தனித்துவம், வாங்கி வந்த வரம் அனைத்தும் கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே.கர்ப்பப்பையில் நோய்த்தொற்று, நீர்க்கட்டி என இவை தரும் தொல்லைகள் தனி. கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.
சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, பூப்படையும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள்
அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.
ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.
பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.
மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.
இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.
நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.
அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.
கர்ப்பப்பை இறக்கத்திற்க்கான அறிகுறிகள் :
கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.
கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.
அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.
சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.
அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.
மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.
பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்வு ஆகும். இந்த பிரசவத்திற்கு பிறகான முடி உதிர்வு பிரச்சனை என்பது பல பெண்கள் சந்திக்க கூடியது தான். கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.
கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கிய சப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.
முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.
சால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு, பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாமல் வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும். முடி உதிர்வதை தடுக்கும்.
மாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.