என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    சில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
    ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

    ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.

    சில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    பெண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால் ஏற்படும் மாற்றங்கள் :

    பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் இது போன்ற உடல் உறுப்புகளில் முடி வளர்ச்சிகள் அதிகமாகும்.

    ஒரு பெண்ணின் முகத்தில், முகப்பருக்கள் அடிக்கடி அதிக தொல்லைகள் ஏற்பட்டால், அது அப்பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

    நமது உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் இருந்தால், திடீரென்று உடல் பருமனடைந்து, சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கச் செய்யும்.

    நமக்கு மாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

    தலைமுடியின் அடர்த்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே அதிக முடி உதிர்வுகள் இருந்தால், அது அவர்களின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிககரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

    ஒரு பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் கட்டியினால் பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும். 
    முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

    1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.

    2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.

    3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

    4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.

    5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.

    6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;

    7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
    கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து. எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
    கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

    கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து. எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

    கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அப்படியாக அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும். அதேவேளையில் `இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?’ என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை வரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது

    கர்ப்பிணி தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    1. கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும்.

    2. பொதுவாக எண்ணெய், அதிக மசாலா, காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    3. துரித உணவகங்களில் தயாரிக்க‍ப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள்ள‍ பால் பொருட்களை சாப்பிடக்கூடாது

    4. ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை, பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது.

    5. பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்க‍கூடாது.

    6. உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.

    7. அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
    தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு நிறைய ஆதரவும், கவனிப்பும் தேவைப்படுகிறது. அந்த ஆதரவையும் கவனிப்பையும் அந்த தாய்மார்களின் அருகாமையில் நீங்கள் (கணவர்) இருக்கும்போதுதான் கிடைக்கும்.
    தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு நிறைய ஆதரவும், கவனிப்பும் தேவைப்படுகிறது. அந்த ஆதரவையும் கவனிப்பையும் அந்த தாய்மார்களின் அருகாமையில் நீங்கள் இருக்கும்போதுதான் கிடைக்கும். அவர்கள் பாலூட்டும்போது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியின் போது தான் உங்கள் குழந்தைகள் பேசும் மொழியை உங்களால் உணர முடியும்.

    தந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே.

    முதலில் பாலூட்டுதலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றின் தன்மைகள் என்ன,வழிமுறைகள் என்ன, அவற்றிற்கான சிக்கல்கள் என்ன என்பதற்கான உங்களது தேடல்களும்,அவற்றிற்கான பதில்களுமே அவளுக்கு பெரும் துணையாய் இருக்கும்.

    இயல்பு வாழ்க்கையில் பாலூட்டுவது மிகவும் சவாலான விஷயங்களாகும். பாலூட்டும்போது அவளது உடலும், மனமும் சோர்வடையும். சாய்ந்துக் கொள்ள தலையணையைத் தருவது, தண்ணீர் அல்ல அவளுக்கு தேவைப்படும் உணவை கொடுப்பது, அவள் புன்னகைக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசுவது, வீட்டில் செல்லப் பிராணிகள் மற்றும் உறவினர்கள் அந்நேரத்தில் அவளிடம் வராத வகையில் ஒரு காவலாய் நிற்பது, போன்றவைகள் அவர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும்

    ஆரம்ப நாட்களில் தாய்ப்பால் கொடுப்பது முதல் முறையாய்த் தாய்மையடையும் பெண்களுக்கு கடினமாகவே இருக்கும். பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஒத்துழைக்காது. நீங்கள் அந்நேரத்தில் பொறுமையை இழக்காதீர்கள், தாயை ஊக்குவியுங்கள். நீங்கள் பக்கத்திலிருப்பீர்கள் என்று உறுதியைக் கொடுங்கள் . அந்த சிறந்த தாய்ப்பாலைத் தொடர அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

    குழந்தை பராமரிப்பில் உதவுங்கள் : தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும், உங்கள் குழந்தைகளின் டயப்பரை நிறைய முறை மாற்ற வேண்டியிருக்கும். அதை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்த பிறகு, உங்கள் குழந்தையை நீங்கள் கவனமாக பற்றிக் கொள்ளுங்கள்.

    தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதை உணர்ந்தால் லேக்டேஷன் ஆலோசகரைத் (lactation consultant) தொடர்பு கொள்ளுங்கள். தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான உங்கள் கவலைகளைப் பகிர்வதற்கும், ஆலோசனைகள் கொடுப்பதற்கும் நீங்கள் உள்ளூர் அல்லது ஆன்லைனில் தாய்ப்பால் கொடுக்கும் குழுக்களில் உறுப்பினராக சேரலாம்.

    ஆரம்ப மாதங்களில் புதிய தாய்மார்களுக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்படுத்தும். எனவே, அவளுக்கு போதுமான அன்பையும் பாசத்தையும் காட்ட மறக்காதீர்கள். அவள் உறவு கொள்ள விரும்பவில்லை என்றால் பொறுமையாய் இருங்கள்.

    ஓரிரு மாதங்கள் கழிந்து, சேமித்து வாய்த்த தாய்ப்பாலை நீங்களே பாட்டிலுள் உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

    உங்கள் குழந்தையை உங்கள மார்போடு அணைக்கும் போதும் ஸ்லிங் கேரியர் போக்கில் தூக்கி சுமக்கும் போதும் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான தொடர்பை நீங்கள் ஆழப்படுத்துவீர்கள்.
    பிறக்கப்போகிற குழந்தையை எப்போது பார்ப்போம், என்று தாய் மனது ஏங்கித் தவிக்கும். பிரசவமானதும் இந்த மனநிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
    பிறக்கப்போகிற குழந்தையை எப்போது பார்ப்போம், குழந்தை எப்படி இருக்கும், யாரின் சாயலில் இருக்கும்... இப்படி எல்லாம் தாய் மனது ஏங்கித் தவிக்கும். பிரசவமானதும் இந்த மனநிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும். பிரசவ வலி தந்த பயம், சிசேரியனாக இருந்தால் அந்தக் காயமும் வலியும் ஏற்படுத்திய வேதனை என எல்லாம் சேர்ந்துகொள்ளும்.

    ‘இனிமே நமக்கு பழைய, சாதாரண வாழ்க்கை சாத்தியமே இல்லையோ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம்‘ என்கிற மிரட்சி தலைதூக்கும்.

    பிறந்த குழந்தையை தூக்கவோ, கையாளவோ தெரியாமல் தவிப்பார்கள். பிரசவமான அடுத்தடுத்த நாட்களில் ஆரம்பிக்கும் இந்தக் கலக்கம், இரண்டு வாரங்கள்வரை நீடிக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் காரணம், குழந்தைபெற்ற பெண்ணின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள். பெரும்பாலும் பிரசவமான இரண்டு வாரங்களுக்குள் இந்த மனநிலை மாறிவிடும். அப்படி மாறாமல் தொடர்ந்தால்தான் பிரச்சினை.

    சில பெண்களுக்கு இந்த பாதிப்பு சில மாதங்கள்கூட நீடிக்கலாம். அதற்குப் பிறகும் தொடர்ந்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ என்று சொல்வார்கள். அதாவது இந்த நிலையில் இந்த அறிகுறிகளுடன் தன்னையோ, தன் குழந்தையையோ துன்புறுத்திப் பார்க்கிற குரூர மனநிலையும் கூட சேர்ந்துகொள்ளலாம். இது அரிதான பாதிப்பு என்றாலும், அலட்சியம் கூடாது.

    கூட்டுக்குடும்பங்களில் வாழ்கிற பெண்களுக்கு இந்த பாதிப்பு வருவதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில், இப்போதெல்லாம் பல பெண்கள் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குப் போவதைக்கூடத் தவிர்த்து, தாமே சமாளித்துக்கொள்ள நினைக்கிறார்கள். உறவுகள் இல்லாத, உதவிக்கு ஆட்கள் இல்லாத குடும்பச் சூழலே, பிரசவத்துக்குப் பிறகான மனக்கலக்கத்துக்கு முக்கியக் காரணம். ஒற்றை குழந்தையாக வளர்ந்த பெண்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். மனதளவில் திருமணத்துக்கு தயாராகாத இளவயதிலோ, திருமண வயதை கடந்தோ இல்லற வாழ்வில் இணைகிறவர்களுக்கும் வரலாம். முதல் பிரசவத்தில் மேற்கண்ட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அடுத்த பிரசவத்திலும் அந்த பாதிப்பு தொடரலாம்.

    தீவிர மன அழுத்தம், காரணம் புரியாத கவலை, தோல்வி மனப்பான்மை. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற நிலை, குற்ற உணர்வு, எதற்கும் லாயக்கற்றவள் என்ற எண்ணம், எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது, குழந்தையை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப்படுதல், குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா? என்கிற பயம், வீட்டில் தனியே இருக்கவும் வெளியே செல்லவும் பயப்படுதல், அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை, எந்த வேலையிலும் ஆர்வமின்மை என்பன போன்ற அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில், தாய்மார்கள் உஷார் ஆக வேண்டியது அவசியம்.

    உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம். மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச் சரியாக இனம்காண முடியும். அவர்களிடம் இந்த பிரச்சினையைக் கண்டறிவதற்கென கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்த பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு தாய்மார்கள் எப்படி பதிலளிக்கிறார்கள்? என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள். 
    50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணத்தையும் இதனை தவிர்க்கும் முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
    16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை  இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும்.

    இதைத் தவிர்க்க பிரச்னைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.

    இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.

    அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்னை வராமல் தவிர்க்கலாம். இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது.  நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம்  பாதுகாப்பற்றவை.

    சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.
    சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றாலும் பெண்களுக்கு தான் பாதிப்புகள் அதிகம்.
    சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இது குறித்து விரிவாக அறிந்த கொள்ளலாம்.

    1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

    2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமல் மலடியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause) சீக்கிரமே துவங்கி விடும்.

    5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

    6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். 
    தாய், சேய் உடல்நல பாதிப்புகளும், தாய்ப்பால் கொடுக்காததினால் விளையும் பொருளாதாரச் சுமைகளும் உலக அளவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன
    தாய்ப்பால் கொடுக்காததன் பாதிப்புகள் உலகளாவிய அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    தாய், சேய் உடல்நல பாதிப்புகளும், தாய்ப்பால் கொடுக்காததினால் விளையும் பொருளாதாரச் சுமைகளும் உலக அளவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சாட்சியாக சர்வேக்கள் கொடுக்கும் தரவுகள் நிரூபித்திருக்கின்றன.

    இந்தியாவை எடுத்துக் கொண்டால், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் அரசாங்கத்தின் மருத்துவச்செலவு ஓராண்டிற்கு, ரூ.727 கோடி என்றும், மக்களின் மருத்துவ செலவு ரூ.25,394 கோடி எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,47,91,524, நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள்-24,70,429, உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் 40,382, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,976, கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,748, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 87,855.

    இவை எல்லாம் தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பதும், குறிப்பாக இந்த மதிப்பீடுகள் கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியான தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் செயல்பாட்டைப் பொறுத்து டபிள்யூ.ஏ.பி.ஏ. என்ற அமைப்பு மதிப்பெண் கொடுக்கும். அதில் இந்தியா பெற்றுள்ள மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? நூற்றுக்கு 45.

    உலக நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா பெற்றுள்ளது 78-வது இடம். இது எல்லாவற்றையும் விட மோசமான செயல்பாட்டிற்காக இந்தியாவிற்கு ‘ரெட்’ குறி வேறு கொடுத்திருக்கிறார்கள். 2025-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய நிலைக்கான செயல்திட்டத்தையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

    பவுடர் பாலின் விலை 1 டின் ரூ.500 என்று வைத்துக் கொண்டால், ஒரு வருடத்திற்கு கணக்குப்போட்டால் எவ்வளவு ஆகும்? பணம் இவ்வளவு செலவாவது தெரியாமலேயே வாங்கிக் கொண்டிருப்பார்கள். பால் பவுடரை அடைத்து விற்கும் கன்டெய்னர்களின் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், அதை அப்புறப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு என பாதிப்புகளின் பட்டியல் நீள்கிறது. அது மட்டுமல்லாமல் பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிறு உப்பிசம், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் என்று அடிக்கடி நோய்கள் வருவதால் அதற்காக அடிக்கடி மருத்துவமனைகளில் அனுமதிக்கும் செலவும் கூடுதல் சுமையாகிறது. இந்தக் குழந்தைகளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறுவதால் அடிக்கடி பசி வந்து அழ ஆரம்பிப்பார்கள். செயற்கை பால் பவுடரில் சோயா, சோளம், காய்கறி எண்ணெய் போன்றவற்றை கலந்து செய்வதால், வயிறு உப்பிசம் வந்து குடித்தவுடன் குழந்தை தூங்கிவிடும். இதைப்பார்த்து, குழந்தைக்கு வயிறு நிரம்பி நிம்மதியாகத் தூங்குகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

    பார்க்க வேண்டுமானால் குழந்தை புஷ்டியாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், சுறுசுறுப்பாக விளையாட மாட்டார்கள். ஆனால் தாய்ப்பாலில், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், குழந்தை சுறுசுறுப்பாக விளையாடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு தாய் தன் குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுப்பதை உற்சாகப்படுத்த முடியும். 
    வைட்டமின் டி குறைபாடுள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு.
    உலக அளவில் ஏழு பெண்களில் ஒருவருக்கு ஏற்படும் இந்தக் கர்ப்ப கால சர்க்கரைநோய் ஏற்படுவதாக தெரிவிக்கின்றன புள்ளிவிவரங்கள். பொதுவாக, கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படும். கர்ப்பகால சர்க்கரைநோயை `ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' (Gestational Diabetes) என்று அழைக்கப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். சிலருக்கு தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கருச்சிதைவு, பிறவி ஊனம், குறைப் பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு நேரடியான பாதிப்பையும் கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்தக் கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படுத்துகிறது.

    கர்ப்பகால சர்க்கரை நோய் வருவதற்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜின் ஜியா மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

    இது குறித்து ஜின் ஜியா பேசுகையில், ``107 கர்ப்பிணிகளிடம்  கர்ப்பம் தரித்த பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் வைட்டமின் டி குறைபாட்டால் சர்க்கரைநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே வைட்டமின் டி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படாமல் முன்னதாகவே தடுக்க முடியும்" என்கிறார்.
    'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்' (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்' (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.

    சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

    கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கலர் கலராக விற்கும் குளிர்பான பாட்டில்களை விடப் பல மடங்கு ஆரோக்கியமானது எனினும் கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் எனினும் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.

    அதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க முடியும். அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.

    கரும்புச்சாற்றுடன் ஐஸ் கலந்து குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான கரும்புச்சாறு கடைகளில், கரும்பு அரைக்கும் மிஷினிலே கரும்புடன் சேர்த்து எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொடுப்பார்கள். இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் கிடைக்கும்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

    உடல் சூடு காரணமாக சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்சி தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது ஆரோக்கியமானது.

    கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது நல்லது.

    கரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு பருகலாம்.

    கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம்.

    கரும்பு பிழியும் இயந்திரங்கள் சுத்தமின்மை, சுத்தமில்லாத ஐஸ், ரோடுகளில் உள்ள தூசிகள் இவையெல்லாம் உடல் நலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
    பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தனியாக நேரம் ஒதுக்குவது இல்லை எனினும் நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருந்த படி சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவுகள் எடுத்து வந்தாலே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமானது.
    ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து பெண்களும் (womens) விரும்புகின்றனர். ஆனால் முறையற்ற உணவு முறையினாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் உடல் எடை அதிகரித்தும், ஆரோக்கியம் அற்றும் உள்ளனர். இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தனியாக நேரம் ஒதுக்குவது இல்லை எனினும் நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருந்த படி சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவுகள் எடுத்து வந்தாலே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமானது.

    பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவே சரிவிகித உணவு என்றழைக்கப்படுகிறது. வைட்டமின், புரதம், மாவுசத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். உணவில் பச்சை காய்கறிகளை அதிகளவு சேர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்தவற்றை தவிர்ப்பது நல்லது.

    பெரும்பாலும் மூன்று வேளை அதிகளவு சாப்பிடுவதற்கு பதிலாக ஆறு வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இல்லையென்றால் இடைவேளை நேரத்தில் பழங்கள், நட்ஸ் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்தவற்றை சாப்பிடலாம். ஏதாவது ஒரு தானியம், காய்கறி, பழங்கள் ஆகிவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    இன்றைய இளம்பெண்கள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாக பாலிசிஸ்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் மாத்திரை மூலம் கரைக்க முடியும். ஆனால் நீர்க்கட்டி பெரிதானாலோ அல்லது கர்ப்பப்பைக்கு அருகில் இருந்தாலோ அறுவை சிகிச்சை செய்து அகற்றும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிக்க கசப்பு மற்றும்  துவர்ப்பு சுவை நிறைந்த பாகற்காய், வாழைப்பூ, அத்திக்காய் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்

    வைட்டமின் டி நிறைந்த உணவுகளான கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக சால்மன் மீனை வாரந்தோறும் சாப்பிட வேண்டும். கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது சூரிய ஒளி படும் வகையில் வெயிலில் நிற்க வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளதாக ஆரோக்கிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    வைட்டமின் டி குறைபாட்டால் தசை மற்றும் எலும்புகள் பலவீனம் ஏற்படுகிறது. எனவே இதைனை தவிர்க்க சூரிய ஒளியில் சற்று நேரம் நடக்க வேண்டும். முட்டை, பால், மீன் எண்ணெய், மீன், காளான், ஆரஞ்சு பழம் உள்ளிவைகளில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. கீரை வகைகள், பேரிட்சை, அத்தி பழங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

    பெண்கள் மட்டும் அல்லாது அனைவரும் உடற்பயிற்சி செய்வதை தினசரி பழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுகிறது. குறைத்தது 60 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது நிற்பது கூட உடற்பயிற்சிகள் தான். நிற்பதால் ஒரு மணி நேரத்திற்கு 190 கலோரிகள் செலவாகிறது.

    எனவே அலைபேசியில் பேசும் போதாவது நின்று கொண்டே பேசுவதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் உடல் சோர்வு மற்றும் உடல் உறுப்புகளை வலு இழக்க செய்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும். மேலும் லிப்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும்.  

    பெண்கள் பருவம் அடைவதில் தொடங்கி இல்வாழ்க்கை, குழந்தை பேறு, மோனோபஸ், முதுமை என பல்வேறு கட்டங்களை கடந்து வருகின்றனர். இந்த காலகட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது யோகா செய்ய வேண்டும். முதன்முறையாக யோகா செய்பவர்கள் யோகா செய்ய தொடங்கும் முன்னர் அங்க பிரதட்சணம் செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் தளர்வடையும்.

    சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரைகளுக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். புட்டிகளில் அடைத்து விற்கப்படும் பானங்களுக்கு பதிலாக இளநீர் அல்லது பழ ஜூஸ் அருந்தலாம். பெருமைப்பாலும் பழங்களை ஜூஸ் செய்த சிறிது நேரத்திற்குள் குடித்தால் மிகவும் நல்லது.
    ×