என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    சிலர் கர்ப்ப காலங்களில் பெண்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்லுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிலர் கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். உண்மையில் பெண்கள் கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிடுவதனால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஏனெனில் கொய்யாவிலுள்ள கால்சியம் கர்ப்பகால உணவுக் கட்டுப்பாட்டில் மிக முக்கியமானது என கருதப்படுகின்றது. அந்தவகையில் கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    * கொய்யாக்களை உண்ணும் போது உடலில் உள்ள சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து கொய்யா விடுதலை அளிக்கிறது.

    * கொய்யா உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள்ளும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கருக்கலைப்பு, அல்லது குறை பிரசவம் போன்றவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

    * கொய்யா பழம் ஹீமோகுளோபின்களை அதிகரிக்கப் பயன்படுகிறது. இதனால் கர்ப்பகால பெண்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் தற்காத்துக் கொள்கிறது.

    * கொய்யாவில் உள்ள வைட்டமின் பி சத்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    * கர்ப்பகாலத்தில் பொதுவாகக் காணப்படும் அல்சர், இரத்த நாளங்கள் உடைப்பு, ஈறுகளில் இரத்தப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகின்றது.

    * கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கல், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை கொய்யா தீர்த்து வைக்கிறது.

    * கொய்யாவில் உள்ள ஆண்டி ஆக்சிடன்கள் மற்றும் டாக்சின்கள் கிருமிகள் மற்றுகள் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகின்றன.

    * கொய்யாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்றவை கர்ப்பகால பெண்களுக்கு நோய்த் தாக்குதலை கிட்ட கூட நெருங்கவிடாமல் பாதுகாக்கின்றன.

    * கொய்யா பழத்தை அதன் விதைகளுடன் உண்ணும் போது தான் மலச்சிக்கலிலிருந்து விடுதலை அளிக்கிறது.

    * கொய்யாவிலுள்ள மெக்னீசியம் உடலின் தசை மற்றும் நரம்புகளுக்கு ஓய்வை அளிக்கிறது.

    * கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை கூடுதலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட இது மிகவும் அவசியமாகிறது.

    * கொய்யாவிலுள்ள வைட்டமின் பி-9 மற்றும் போலிக் அமிலங்கள் குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
    கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம்.

    இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. கருவுறாமை என்னும் பிரச்சனை இன்று பெண்களுக்கு அதிக எண்ணிக்கைகளில் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் அவற்றைக் குணப்படுத்தப் பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.

    இந்த கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் அவருக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.

    ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகின்றது?


    அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
    கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்.
    கருப்பை வாயில் பிரச்சனை.

    * மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது. மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்சனையின் அறிகுறியே ஆகும். நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க அனேக வாய்ப்புள்ளது. ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

    * அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகக் குழந்தைப் பேறுவைத் தள்ளிப் போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் காலகட்டத்திலே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்கால மன உளைச்சல்களைத் தவிர்க்கும்.

    * ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    * பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சாலச் சிறந்தது.

    * கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சனை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக கர்ப்பத்தின் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பொதுவாக அதிக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளவும்.

    கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி. இதனால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறையும்.

    சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

    ஈரத்துணியை கொண்டும் அல்லது ஐஸ் கட்டி (Ice pack) கொண்டு நன்கு ஒத்தரம் கொடுக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிகபட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும். கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச்சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்.

    ஊட்டச்சத்து பொட்டாசியத்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம். வாழைப்பழம், அவகேடோ அத்திப்பழம், லீட்டாஸ், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.

    தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது.
    கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

    விரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது கணிசமாக குறைந்துவிட்டது. சோம்பல் காரணமாக அன்றாட உணவுகளை கூட இணையதளம் மூலமாக ‘ஆர்டர்’ செய்து, சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கை முறை சூழலால் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை. எண்ணில் அடங்காத நோய்கள் மனிதனை ஆட்டிப்படைத்து வருகின்றன.

    பெண்களிடையே உடல் இயக்கம் குறைந்து வருவதால் சுகப்பிரசவமும் குறைந்து வருகிறது. எந்திரமயமான இந்த காலக்கட்டத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது. இதுபோன்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகப்பிரசவத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரத்துறை தொடங்கி இருக்கிறது. இந்த சிகிச்சை முறைக்கு கர்ப்பிணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனைக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 தாய்மார்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துறையின் டாக்டர் திவ்யா யோகா பயிற்சி அளித்து வருகிறார். தாடாசனம், உட்கட்டாசனம், மர்ஜரி ஆசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் உள்பட 12 வகையான கர்ப்பகால யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    கர்ப்பம் தரித்த 3 மாதங்களில் இருந்து குழந்தை பிரசவிக்கும் வரை பெண்களுக்கு இந்த கர்ப்பகால யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், எந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்? என்பது பற்றி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஷோபா நேரிலும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். டாக்டர்களின் ஆலோசனையின்படி முறையான உடற்பயிற்சிகளையும் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டும். யோகா பயிற்சியின் மூலமாக தான் சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும்.

    யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும். கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.
    கர்ப்பமாக இருக்கும் பெண் பல ஹார்மோன் மற்றும் உடல்சார்ந்த மாற்றங்களை அனுபவிக்கிறார். இதனால், அவரது தூக்கத்தின் தரம் பாதிக்கப்படக்கூடும்.
    கர்ப்பமாக இருக்கும் பெண் பல ஹார்மோன் மற்றும் உடல்சார்ந்த மாற்றங்களை அனுபவிக்கிறார். இதனால், அவரது தூக்கத்தின் தரம் பாதிக்கப்படக்கூடும். அடுத்தடுத்த மாதங்களில், இந்தத் தூக்கத் தொந்தரவுகள் மாறுகின்றன. கர்ப்பத்தின்போது ஏற்படும் சில பொதுவான தூக்கத் தொந்தரவுகள்:

    * கர்ப்பத்தினால் உண்டான உணர்வு, உடல் அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படுதல்

    * ப்ரொஜெஸ்டெரோன் அளவு அதிகமாவதால், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லவேண்டியிருத்தல்

    * கரு வளர்வதால் ஏற்படும் பொதுவான அசௌகர்யம், வலிகள்

    * இரவில் சரியான தூக்கம் இல்லாததால் பகல்நேரத்தில் தூக்கக்கலக்கமாக உணர்தல்

    * பொதுவான களைப்பாலும், கூடுதல் எடையைச் சுமப்பதாலும் கால்களில் பிடிப்பு

    * இரவில் படுத்திருக்கும்போது அதிகம் ஏற்படும் அசிடிட்டி, நெஞ்செரிச்சல்

    * ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூக்குச் சவ்வு உள்ளிட்ட பகுதிகளில் மூச்சடைப்பு

    * கால்களில் தொடர்ந்து கூச்சவுணர்வு ஏற்படுவதால், அவற்றை நகர்த்தத் தோன்றிக்கொண்டே இருப்பது, இதனை நிலைகொள்ளாத கால் குறைபாடு (RLS) என்பார்கள்

    * மூச்சடைப்பால் ஏற்படும் தூக்க அப்னீ, குறட்டை விடுதல்

    * அதிகப் பதற்றத்தால், தூக்கமின்மை

    கர்ப்பமாக உள்ள ஒரு பெண் இந்தப் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம்?

    கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குத் தூக்கம் போதாவிட்டால், அல்லது மற்ற தூக்கப் பிரச்னைகள் இருந்தால், அவர் தன்னுடைய மருத்துவரிடம் இதுபற்றிப் பேசவேண்டும். இந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் நன்கு தூங்க உதவக்கூடிய சில உத்திகள்:

    * உடற்பயிற்சியானது தூக்கத் தரத்தை மேம்படுத்தலாம், ஆனால், தூங்கச்செல்லுமுன் உடற்பயிற்சி வேண்டாம்

    * காஃபைன் அதிகமுள்ள பொருள்களை உட்கொள்ளவேண்டாம், இவை தூக்கத்தைத் தொந்தரவுசெய்யும்

    * சர்க்கரையும் அவரது ஆற்றல் அளவுகளை அதிகரிக்கும், இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது

    * தூங்கச்செல்லுமுன் மனத்தைத் தளர்வாக வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, வெதவெதப்பான தண்ணீரில் குளிக்கலாம், மெல்லிசை கேட்கலாம், அவரைத் தளர்வடையச்செய்யும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்

    * பகல் நேரத்தில் நிறைய திரவப்பொருள்களைக் குடிக்கலாம், தூங்கும் நேரம் நெருங்க நெருங்க, அதன் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்

    * பகல் நேரத்தில் தூக்கம் வந்தால், இயன்றவரை காலை நேரத்தில் தூங்கவேண்டும், இரவில் தூங்கவேண்டிய நேரத்துக்குப் பக்கத்தில் தூங்கவேண்டாம்

    * தூங்கச்செல்லுமுன் எதையாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், பசியினால் நடுராத்திரியில் எழுந்திருக்கவேண்டியிருக்காது

    * கூடுதல் தலையணைகளைப் பயன்படுத்தி முதுகு, வயிற்றில் அழுத்தத்தைக் குறைக்கலாம்

     கர்ப்பமாக இருக்கும் பெண் எந்தப் பிரச்னையைச் சந்தித்தாலும் அதைத் தன் மருத்துவரிடம் சொல்வது முக்கியம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடவேண்டாம்.
    கர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள் இவை இக்கால கட்டம் உள்ளடக்கியது.
    செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரம், கடந்த ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்விற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அவசியமான சூழல்!

    வறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும், அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது. இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி வயதுக்கேற்ற போதிய உயரமின்மை கொண்ட 46.6 மில்லியன் குழந்தைகளையும், உயரத்திற்கேற்ற போதிய எடையின்மை கொண்ட 25.5 மில்லியன் குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளது. யுனிசெப் அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு விதமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க அதிக உடல் எடை கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் இந்தியா தாயகமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான ஊட்டம் என்கிற இரட்டைச் சுமையைக் கொண்ட நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.

    இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கருத்தாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பஞ்சசீல கொள்கையை போன்று ஐந்து முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம், ரத்த சோகை மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, தனி மனித சுகாதாரம், சரிவிகித ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை.

    ஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரம்பிப்பது முதல் பிறக்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1000 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. இந்த ஆயிரம் நாட்களே ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை தீர்மானிக்கும் காலகட்டமாக, மறைமுகமாக ஒரு தேசத்தின் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முக்கிய நாட்களாக அமைகிறது.

    கர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, அத்தியாவசிய தடுப்பூசிகள், சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள், சுகாதாரம் என இவை அனைத்தையும் இக்கால கட்டம் உள்ளடக்கியது.

    பற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக்குறைவு, ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும்.

    குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது. நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எளிதாக செரிமானம் ஆகிறது. ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கிற அறியாமையின் காரணமாக பல தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கூடுதல் உணவுகளை ஆரம்பித்து விடுகின்றனர். மறுபுறம் ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் உணவுகளை வழங்க வேண்டிய அவசியம் குறித்த சரியான விழிப்புணர்வின்மையினால் குறிப்பிட்ட சதவீத தாய்மார்கள் இருப்பதும் நிதர்சனம்!

    முறையாக தாய்ப்பால் கொடுப்பது வயிற்றுப்போக்கை தடுக்கும். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழப்பதற்கு இந்த வயிற்றுப்போக்கே காரணமாகிறது. இதனை எளிமையாக மிக மலிவான விலையில் கிடைக்கும் உப்பு, சர்க்கரை கரைசலைக் கொண்டு பாக்கெட்டுகளை கொண்டு குணப்படுத்திவிடலாம் என்பது இன்னும் அனைவரையும் சென்று சேரவில்லை.

    ரத்த சோகையினால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, படிப்பில் கவனம் இன்மை, நெஞ்சில் படபடப்பு, சோர்வு, அன்றாட பணிகள் செய்ய இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சுண்டைக்காய், உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கோதுமை, பொட்டுக்கடலை, மீன், முட்டை, இறால் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சோகையைத் தடுக்கும்.

    பெ.உமா மகேஸ்வரி, துணை பேராசிரியர், ஊட்டச்சத்தியல் துறை, தனியார் கல்லூரி, சென்னை.
    இன்றைய இளம் பெண்களுக்கு பிசிஓடி என்று அழைக்கப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் வாழ்வியல் மாற்றங்களே ஆகும்.
    இன்றைய இளம் பெண்களுக்கு பிசிஓடி என்று அழைக்கப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் வாழ்வியல் மாற்றங்களே. பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபட முடியும். இதற்கு பெண்கள் பின்பற்ற வழிமுறைகள் பல உள்ளன.

    ‘சர்க்கரை விஷத்துக்கு சமம்‘ என்பதால் அதை அறவே தவிர்ப்பது சிறந்தது. சர்க்கரை தான் வில்லன் என்கிற நினைப்பில் வெல்லம், பனங்கற்கண்டு, தேன், பழச்சாறு இப்படி இனிப்பாக இருக்கும் மற்ற எல்லாம் ஓ.கே. என அர்த்தப்படுத்தி கொள்ள வேண்டாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகள் வேண்டாம். மைதா, பேக்கரி உணவுகள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், உப்பு அதிகம் சேர்த்த நொறுக்குத்தீனிகள் வேண்டவே வேண்டாம். ஒருமுறை உபயோகித்து, மீண்டும் சூடுபடுத்தப்படும் எண்ணெய், சரியாக மூடப்படாத நிலையிலிருக்கும் எண்ணெய் சீக்கிரமே ஆக்சிடைஸ் ஆகும்.

    அதனால், எண்ணெயை எப்போதும் காற்றுப்புகாத பாட்டில்களில் நிரப்பிவைக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிட்டு எண்ணெய், மிக குறைந்த அளவு நெய் மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தலாம்.

    உணவை தவிர்த்துவிட்டு பெரிய கிண்ணம் முழுக்க பழங்கள் சாப்பிடுவது அவர்களின் பிசிஓடி பிரச்சினைக்கு உதவாது. பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது ஆற்றலை எல்லாம் கொழுப்பாக மாற்றக்கூடிய (குறிப்பாக வயிறு மற்றும் இடுப்பை சுற்றிலும்) இன்சுலின் ஹார்மோன் வெளியேற்றத்தை தூண்டும். பெரும்பாலான பருப்பு வகைகளில் 50 முதல் 55 சதவீதம் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது. பெண்கள் சிலருக்கு இவை இன்சுலின் ஹார்மோன் சுரப்பை தூண்டி, அதன் விளைவாக ஆற்றல் எல்லாம் கொழுப்பாக மாறக் காரணமாவதுண்டு என்பதால், அதை தவிர்க்கலாம்.

    கார்போ ஹைட்ரேட் உணவுகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மதிய உணவுக்கோ, இரவு உணவுக்கோ சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். சிலருக்கு மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டை கூட உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் அதை தவிர்த்துவிட்டு பழங்கள், காய்கறிகள் மற்றும் மஞ்சள் நிற பருப்புகளை மட்டும் சேர்த்து கொள்ள வேண்டும். சரியான புரத உணவுகள் உட்கொள்ளப்படும்போது, ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் தாறுமாறான ஏற்ற, இறக்கங்கள் சமநிலைக்கு வரும். மனநிலையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களும் மாறும். இனிப்பின் மீதான தேடல் குறையும். அடிக்கடி ஏற்படுகிற பசி உணர்வும் குறையும். ஒரே வாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழும். மீன், சிக்கன் அல்லது மட்டன் எதுவானாலும் குறைந்த அளவு எண்ணெயில் வீட்டிலேயே சமைத்து உண்பதுதான் சிறந்தது.

    கோதுமை, பார்லி போன்றவற்றையும் பால், சீஸ், கேக், மில்க் ஷேக், கோல்டு காபி, லஸ்ஸி, மில்க் சுவீட்ஸ் போன்றவற்றையும் தவிர்க்கும்போது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை உணரலாம். இரவில் 10 மணிக்கு தூக்கம். காலை வெயில் உடலில் படும்படி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி. தினமும் சில நிமிடங்கள் யோகாசன பயிற்சி என வாழ்வியல் முறையை மாற்றிக்கொண்டால் இந்த கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் பிரச்சினையில் இருந்து பெண்கள் விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 
    சில பெண்களுக்கு சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் சமயத்தில் வயிற்றின் ஒரு புறம் வலி ஏற்படுவது உண்டு.
    சில பெண்களுக்கு சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் சமயத்தில் வயிற்றின் ஒரு புறம் வலி ஏற்படுவது உண்டு. இது மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படுவதால், இதனை மிட்டல்ஸ்மெர்ஸ்(ஜெர்மன் மொழியில் ‘நடு வலி‘ என்று பொருள்) என்றும் அழைப்பர். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் கொண்டது எனில், இந்த வலி 14-வது நாள் ஏற்படும்.

    பெண்களில் சுமார் பாதி பேருக்கு, வாழ்வில் ஒருமுறையேனும் கருமுட்டை வெளியிடப்படும்போது தோன்றும் இந்த வலி ஏற்பட்டிருக்கும். சுமார் 20 சதவீதம் பெண்களுக்கு எல்லா மாதங்களும் இந்த வலி இருக்கும். இது மாதவிடாயுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வுதான்.

    வலிக்கான துல்லியமான காரணம் என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சினைப்பையின் சுவரை துளைத்துக்கொண்டு முட்டை வெளிவரும்போது, சிறிதளவு திரவம் அல்லது சிலசமயம் ரத்தம் வந்து அது அருகிலுள்ள நரம்புகளில் எரிச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்த வலி உண்டாகக்கூடும் என்று கருதப்படுகிறது. முட்டை உடனே வெளியேறியவுடன் அல்லது உடல் அந்த திரவம் அல்லது ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டவுடன் வலி மறைந்துவிடுகிறது.

    இந்த வலி சில நிமிடங்கள் வரை இருக்கலாம் அல்லது ஓரிரு நாள் நீடிக்கலாம். வலியானது, வயிற்றின் வலது மற்றும் இடது சினைப்பைகளில் எது கருமுட்டையை வெளியிடுகிறதோ, அதற்கேற்ப ஏதேனும் ஒரு பக்கத்தில் ஏற்படக்கூடும். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளுக்கு பிறகு வரும் இரண்டு வாரங்களில், அதாவது மாதவிடாய் சுழற்சியின் மத்தியில் வலி ஏற்பட்டால், அது கருமுட்டை வெளியிடப்படுவதால் ஏற்படும் வலி என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

    வழக்கத்தை விட குறைந்த அல்லது நீண்ட மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு, மாதவிடாய் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு வலி ஏற்படலாம். இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்த, மருத்துவர் உங்கள் மாதவிடாய் சுழற்சியை அட்டவணையாக குறிக்குமாறு கேட்டுக்கொள்வார், நீங்கள் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, எந்த இடத்தில் வலி உண்டாகிறது (பொதுவாக அடிவயிற்றில் வலி இருக்கும்) என்பதையெல்லாம் நீங்கள் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும்.

    உடல் பரிசோதனைகளின்போது உங்களுக்கு கடுமையான வலி இருந்தால் அல்லது பிற பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், வலிக்கான காரணத்தை தீர்மானிப்பதற்காக எக்ஸ்ரே அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

    கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலி குறித்து கவலைப்பட வேண்டுமா? இந்த வலி சாதாரணமானது, பெரும்பாலும் இதனால் தீங்கு எதுவும் ஏற்படாது. இருப்பினும், சிலருக்கு அது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக ஏற்படலாம். அந்த வலியும் கருமுட்டை வெளியீட்டினால் ஏற்டும் வலி போலவே தோன்றலாம். எண்டோமெட்ரியோசிஸ், பால்வினை நோய்த்தொற்றுகள், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால் இப்படி வலி ஏற்பட காரணமிருக்கிறது. வலி கடுமையாக இருந்தால் அல்லது தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். 
    கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.
    கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், நீங்கள் எதை எல்லாம் சாப்பிட்டால் முடி வளரும் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

    முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.

    சால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு, பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாமல் வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும். முடி உதிர்வதை தடுக்கிறது.

    மாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் புட்டும், நல்லெண்ணெயில் உளுந்தவடை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நலுங்கு வைப்பதும் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்தது. வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு போன்றவை சேர்ந்த நலுங்கு மாவைப் பூசி மேலே சொன்ன உணவுகளை உண்ணக் கொடுப்பதன் மூலம் பெண்கள் நல்ல உடல் வளம் பெறுவார்கள். இது தமிழர் கலாசாரத்தில் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

    சிறப்பு உணவுகளாக கற்றாழை லேகியம் கொடுப்பார்கள். கற்றாழையைப் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுப்பதால் அது மாதவிடாய் பூப்பு அழற்சியை ஒழுங்குபடுத்தும். இது மெட்டபாலிசத்தைச் சரிசெய்யும். சர்க்கரைநோய், மூலம், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

    இன்றைக்கு வளரிளம் பெண்களுக்கு சிவப்பணுக்கள் குறைவாக உள்ளன. மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, 15 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் ஆவது, நீண்டநாள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமலிருக்க எள், உளுந்து போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிடுவது, கீரைகளை அதிகம் சாப்பிடுவது, மாதுளம்பழத்தை சாப்பிடவேண்டியது அவசியம். இவை மாதவிடாய் சுழற்சி உண்டாக பெரிதும் உதவும்.

    பெண்களுக்கு ஏற்படும் உடல்சூட்டால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த வெள்ளைப்படுதலாலும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று காரணமாக விந்தணுக்கள் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலில் சாதாரண படிகாரத்தைப் பொடியாக்கி, தண்ணீரில் கரைத்துக் கழுவினால், கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும்.

    இப்போதெல்லாம் தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்க்கிருமிகள் உண்டாகி பாதிப்பு ஏற்படுகிறது. நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளைப் பெண்கள் அணிய வேண்டும் என்று நம் பாரம்பர்ய தமிழர் கலாசாரத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. தாவணி, புடவை உடுத்துவது இடுப்புப் பகுதியில் உள்ள வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    கர்ப்பப்பையின் தசைகள் லகுவாக சம்மணம் போட்டு தரையில் அமர்வது, பாண்டி ஆட்டம் ஆடுவது போன்ற விளையாட்டுகள் உதவும். எண்ணெய்க் குளியல், காய்கறிகள், பழங்கள், மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும். சிலர் `சீஸ் சாப்பிடுகிறார்கள். அது நம் பெண்களுக்கு ஆகாது. அதற்குப் பதில் நெய் சாப்பிடலாம்.
    ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

    ஒமேகா 3 ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன. அதாவது புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது.

    ஒமேகா 3 மாத்திரைகள் மகப்பேரிலும் பயன்களை கொண்டுள்ளது. அதாவது ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது. ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

    கர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம். மேலும் ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள். அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

    நல்ல மீன் மாத்திரைகளை உண்பது நல்லது. இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம். ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

    நீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள். மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தயாரிப்புகளில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகள் எப்போதும் வாசனை வர வாய்ப்பில்லை.
    சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் மருத்துவர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

    சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவரிடம் கேட்டபோது, "பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது" என்கிறார்.

    "சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.

    சானிட்டரி நாப்கின்

    சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து பேசிய அவர், "மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை" என்று விவரிக்கிறார்.

    மாதவிடாய் காலத்தின்போது துணியை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தியே சானிட்டரி நேப்கின்கள் சந்தையில் இடம்பிடித்த நிலையில், மீண்டும் துணியை பயன்படுத்துவதற்கான அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பியபோது, வெறும் துணியை பயன்படுத்துவதன் மூலம் சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியாது. அதை உருவாக்க தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.
    ×