என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    நீர்க்கட்டிகள் தோன்றுவதற்குரிய மரபணு ஒவ்வொருவரிடத்தில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் ஒன்றிணையும் போதுதான் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாகிறது.
    இன்றைய திகதியில் இளம்பெண்களுக்கு பி.சி.ஓ.டி எனப்படும் நீர்க்கட்டிகளுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் இதுகுறித்து பெற்றோர்களும், இவர்களும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இந்த நீர்கட்டிகள் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்துகிறார்கள்.

    ஒவ்வொரு பெண்களுக்கும் நீர்க்கட்டிகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறு உண்டு என்றாலும், அவை பாரம்பரிய மரபணுவின் காரணமாகவும், அதனை தூண்டுவதற்குரிய நடைமுறை நிகழ்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதினாலும் தான் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அதாவது நீர்க்கட்டிகள் தோன்றுவதற்குரிய மரபணு ஒவ்வொருவரிடத்தில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் ஒன்றிணையும் போதுதான் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாகிறது.

    இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பரீட்சையின் போதே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற மன அழுத்தம் உண்டாகிறது. இது ஏ லெவல் மற்றும் உயர் கல்வியிலும் தொடர்கிறது. படிப்பதில் கவனம் செலுத்துவதால் உறக்கத்தின் அளவும், கால அவகாசமும் குறைகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவுகளை உண்பதாலும், பக்கரி தயாரிப்புகள் மற்றும் துரித உணவுகளை உண்பதாலும், உடற்பயிற்சி என்பதே இல்லாததாலும், நீர்க்கட்டிகள் வருவதற்கான சாத்தியக்கூறை நாம் உண்டாக்கிக் கொள்கிறோம்.

    ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு நீர்க் கட்டிகள் வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், தவறாமல் பரிசோதனைகளை செய்து கொண்டு, பாதிப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
    பெண்களிடம் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று பெரும் மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்பழக்கத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
    மேலை நாட்டு கலாசாரம், நம் இந்தியாவிலும் பரவி கிடக்கிறது. ஐ.டி. துறையின் வளர்ச்சி என்பதை மட்டுமே இதற்கு காரணமாக்கிவிட முடியாது. இந்தியர்கள் மேலை நாடுகளில் கல்வி பயில்வதும், மேலை நாட்டு திரைப்படங்களை விரும்பி பார்ப்பதும் இதற்கு முக்கிய காரணமாகின்றன. இப்படி மேலை நாட்டு கலாசாரங்களால் ஈர்க்கப்படும் இந்தியர்கள், அதை வெகு விரைவிலேயே பின்பற்ற தொடங்கிவிடுகின்றனர்.

    பீட்சா, பர்கர், கபாப் போன்ற உணவு பழக்கமும், அரைகுறை ஆடை டிரெண்டிங்கும், ‘லிவ்விங் டூ கெதர்’ கலாசாரமும் இந்தியாவில் அப்படி பிரபலமானதுதான். இவற்றுடன் தற்போது ‘சோசியல் டிரிங்கிங்’, ‘சோசியல் ஸ்மோக்கிங்’ போன்ற பழக்கங்களும் இணைந்துவிட்டன. அதாவது அலுவலக நண்பர்களின் நிர்ப்பந்தத்தினால் புகைப்பிடிப்பது, கொண்டாட்டங்களின் போது நண்பர்களின் மனதிருப்திக்காக மது அருந்துவது என நம்மை சுற்றியிருக்கும் சமூகத்திற்குள் புதுப்புது பழக்கங்கள் தலைதூக்கிக்கொண்டிருக்கின்றன. இவை நவீன பெண்கள் மனதில் குடியேறியிருப்பதுதான், வேடிக்கையான உண்மை.

    ஆம்...! சமீபகாலமாக இந்திய பெண்களிடம் ‘சிகரெட் பழக்கம்’ அதிகரித்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, இந்திய ஆண்களும், பெண்களும், புகைப்பழக்கத்தில் சம உரிமையை வெகுவிரைவில் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், கடந்த 10 வருடங்களில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    பெண்களிடம் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று பெரும் மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்பழக்கத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

    எதற்காக பெண்கள் சிகரெட் புகைக்கிறார்கள்

    இதன் காரணம் குறித்து அறிய பல நாடுகளில், பல அமைப்பு களின் மூலம் பலவிதமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஆண்களுக்கு இணையாக தங்களை காட்டி கொள்வதற்கும், அலுவலக வேலையில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கவும், சமூக பார்வைக்காக தொடங்கி நாளடைவில் அதற்கு அடிமையாவதாகவும் அதிகபடியான பெண்களின் பதிலாக அமைந்திருக்கிறது. இந்திய பெண்களிடம் நடத்திய ஆய்விலும் இத்தகைய பதில்களே கிடைத்திருக்கின்றன.

    சிகரெட் பழக்கம் இந்தியாவில் பரவியது எப்படி

    2012-ம் ஆண்டிலிருந்துதான், இந்திய பெண்களிடம் புகைப்பழக்கம் வேகமாக பரவியிருக்கிறது. அதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாய் இலை மறை காயாக சமூகத்தில் இருந்து வந்த பழக்கம், ஐ.டி. மோகத்தினால் பூதாகரமாக வெடித்தது. ஐ.டி. அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்மோக்கிங் ஏரியா’வில் புகைப்பழக்கத்தை தொடங்கி, இன்று கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களிலேயே தைரியமாக சிகரெட்டை பற்ற வைக்கிறார்கள்.

    ‘சோசியல் ஸ்மோக்கிங்’ என்றால் என்ன

    இந்திய பெண்களிடம் வேகமாக பரவி வருவது, ‘சோசியல் ஸ்மோக்கிங்’தான். அதாவது புகைப்பழக்கம் இருக்கும் உயரதிகாரிகளின் முன்னிலையில், மரியாதை நிமித்தமாக புகைப்பிடிப்பதும், நண்பர்களின் மதுவிருந்து கொண்டாட்டங்களின்போது அவர்களுக்காக புகைப்பிடிப்பதுமே சோசியல் ஸ்மோக்கிங். இந்த பழக்கம்தான், இந்திய பெண்களின் உதட்டில் சிகரெட்டை பற்ற வைத்தது. சோசியல் ஸ்மோக்கிங் என்ற பெயரில் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று ‘கேசுவல் ஸ்மோக்கிங்’காக கொழுந்துவிட்டு எரிகிறது.

    சிகரெட் புகைமூட்டத்தில் மெட்ரோ நகரங்கள்

    இந்தியாவின் மற்ற நகரங்களைவிட, மெட்ரோ நகரங்கள் என அழைக்கப்படும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை போன்ற பகுதிகளில்தான், பெண்கள் அதிகளவில் புகைக்கிறார்கள். ஏனெனில் மெட்ரோ நகரங்களில்தான், அதிகளவிலான ஐ.டி.நிறுவனங்கள் இயங்குகின்றன. ஐ.டி.தாக்கத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம் என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    கடந்த 10 ஆண்டுகளில்....

    கடந்த 10 ஆண்டுகளில் சிகரெட் பழக்கம் ஆண்களிடம் குறைந்தும், பெண்களிடம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதற்கு புகைப்பழக்கத்தால் நோய் தாக்குதலுக்கு ஆளான பெண்களே சாட்சியம் பகிர்கின்றனர்.

    எலக்ட்ரானிக் சிகரெட், ஹுக்கா

    நவீன பெண்கள் சிலர், விதவிதமான சிகரெட்டுகளை மட்டுமின்றி, எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் ஈ சிகரெட்டையும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அரபு நாடுகளில் பிரபலமான ஹுக்காவையும் புகைக்கிறார்கள். எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் ஹுக்கா இவை இரண்டுமே, நமக்கு வேண்டிய வாசனைகளில், பிளேவர்களில் புகைக்கமுடியும் என்பதால், இவை நவீன பெண்களின் தேர்வாக இருக்கிறது.

    வேப்பிங் மோகம்


    உலகளவில், புகைப்பிடிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் ‘வேப்பிங்’ பழக்கத்தினால், புகைப்பிடிக்க ஆரம்பித்தவர்களாகவே இருப்பர்.

    வேப்பிங் என்பது, மேலை நாட்டு கலாசாரம். அதாவது எலக்ட்ரானிக் சிகரெட்டை கொண்டு உருவாகும் புகையை, பலவிதமான வடிவங்களில் வெளியிடுவதைதான் வேப்பிங் என்கிறார்கள்.

    வட்டமாக புகைவிடுதல், வட்டத்திற்குள் வட்டமாக புகைவிடுதல், புதுமையான வடிவங்களை உருவாக்குவது... என வேப்பிங் கலையில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தாக்கத்தினாலும், பெண்களின் சிகரெட் பழக்கம் நாளுக்கு நாள் கூடிவருகிறது.
    தாய்மை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களின் ஏக்கத்தை தீர்க்க இலைமறைவு காயாக உருவானது வாடகைத்தாய் முறை. ஆனால் இப்போது அதுவே ஒரு பேஷனாக அவதாரமெடுத்திருக்கிறது.
    வாடகைத்தாய் முறை உருவானது வெளிநாட்டில். அங்கு தனித்து வாழ்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அவசிய தேவையாக இருந்தது. நம் நாட்டை பொறுத்தவரை குழந்தை இல்லாத, குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லாத தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் நாளடைவில் பலரும் வாடகைத்தாய் வசதியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே கணவன், மனைவியாக வாழ்பவர்கள் மற்றும் தனித்து வாழும் ஆண், பெண் இருபாலரும் இந்த முறையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் கலாசாரம் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. பணம் தேவைப்படும் பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வாடகைத் தாய்களாக அமர்த்தப்படுகிறார்கள். குழந்தையை பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

    பிரபல மருத்துவர் நய்னா பட்டேல் 10 ஆண்டுஎகளாக வாடகைத்தாய் மூலமாக சுமார் 1120 குழந்தைகளை சமூகத்திற்கு தந்திருக்கிறார். வாடகைத்தாய் முறை விவாதமாக மாறிவருவது பற்றி அவர் சொல்கிறார். ‘‘சமூகத்தின் எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஒரு சேவை இருக்கிறது என்றால் பலரும் அதை பயன்படுத்தத்தான் முயற்சிப்பார்கள். அதை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் எந்த கலாசாரத்தையும் காப்பாற்றிவிட முடியாது. குழந்தை இல்லாத தம்பதிகளின் மன வேதனையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் பலர் வாடகைத்தாயாகி, குழந்தை இல்லாத தம்பதியரின் ஏக்கத்தை போக்குவதற்கு முன்வந்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? விபசாரத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும்போது வாடகைத்தாய் விஷயத்தை ஏன் குரூரமான கண்களோடு பார்க்க வேண்டும்.

    எந்த சட்டம் என்றாலும் அது இயற்றப்படுவதற்கு முன்பு அதில் சம்பந்தப்பட்டவர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். வெளிநாட்டு தம்பதிகள் கூட இந்தியா வந்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு போகிறார்கள். அவர்கள் அதற்கு 11 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ரூ.6 லட்சம் வரை செலவழிக்கிறார்கள். இந்த தொகை வாடகைத்தாயாகும் பெண்ணின், ஏழை குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். அதை ஏன் தடுக்க வேண்டும்?’’ என்கிறார், அவர்.

    வாடகைத்தாய்மார்கள் சில வரைமுறைகளுக்கு உட்படவேண்டியதிருக்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக வேண்டும். அதற்கு முன்பாக ஒரு குழந்தையாவது ஆரோக்கியமாக பெற்றெடுத்திருக்க வேண்டும். வயது அதிகமாக இருக்கக்கூடாது. உடலில் வேறு எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

    அதேபோல குழந்தை தேவைப்படும் தம்பதிகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் வாடகைத்தாய் முறையை கையாள வேண்டும். திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் மட்டுமே இந்த முறையை பயன்படுத்தலாம். குழந்தை என்பது உணர்வுபூர்வமான விஷயம். ஏற்கனவே குழந்தையை பெற்றெடுத்தவர்கள் மீண்டும் வாடகைத்தாய் மூலம் மற்றொரு குழந்தையை பெற்றெடுக்கும் விஷயம் பிரச்சினைக்குரியது.

    அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது அதன் மனநிலை பாதிப்புக்குள்ளாகும். அதுபற்றி சிந்திக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஆண் மட்டும் தனியாக வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது கஷ்டமான காரியம். இதையெல்லாம் சிந்திக்காமல் விளையாட்டுதனமாக வாடகைத்தாய் சேவையை பயன்படுத்தக்கூடாது என்ற எதிர்ப்பு குரலும் ஒலிக்கிறது.

    வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது உருவாகும் பின் விளைவுகளை பற்றியும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும். எதையும் சமுதாயம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் நன்மை, தீமை உள்ளடங்கி இருக்கிறது. பெற்ற தாயைவிட குழந்தைக்கு இந்த உலகத்தில் முக்கிய பாதுகாப்பு வேறு எதுவுமில்லை. பெற்றெடுக்காதவர்கள் குழந்தைக்கு தாயாகுவது சிரமம்தான். பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிவிடலாம். ஆனால் பணத்தை கொடுத்து அம்மாவை வாங்க முடியாது.

    வாடகைத்தாய் முறையில் ஐ.வி. எப். சிகிச்சை குறிப்பிடத்தக்கது. தாயின் கரு முட்டையையும், தந்தையின் விந்தணுவையும் ஒன்று சேர்த்து பரிசோதனை கூடத்தில் வளர்த்து வாடகைத்தாயின் கர்ப்பத்தில் புகுத்தப்படுகிறது. அந்த கருவை வளர்த்து முழுமையாக்கி குழந்தையாக பெற்றுத்தரும் வேலைமட்டும்தான் வாடகைத்தாய்க்குரியது.

    அதனால் குழந்தை தாய்-தந்தையின் பண்பை பெற்றிருக்கும். இதனால் பலரும் இந்த முறையை விரும்புகிறார்கள். ஆனால் கருமுட்டை தாயிடம் இல்லாதபோது அதற்கு வேறு அணுகுமுறை அவசியப்படுகிறது. அப்போது வாடகைத்தாயின் கருப்பை மட்டுமல்ல, கருமுட்டையையும் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். அல்லது வேறு யாரிடமிருந்தாவது கருமுட்டை பெறலாம்.

    மகப்பேறு மருத்துவர் ஒருவர் சொல்கிறார்: ‘‘ஆரம்பத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்து வந்த விஷயம் இப்போது பரவலாகி விட்டது. வாடகைத்தாயாக இருப்பதற்கு பல பெண்கள் முன்வருகிறார்கள். நாங்கள் வாடகைத்தாயின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அவர்கள் குழந்தை பெறும் நிலையில் இருக்க வேண்டும்.

    குடும்பத்தில் உள்ளவர்களிடம் முறையாக தெரிவித்துவிட்டு அவர்கள் அனுமதித்தால் மட்டுமே நாங்கள் சம்மதிக்கிறோம். விருப்பமுள்ள சில குடும்பத்தினரை நானே அழைத்து பக்குவமாக எடுத்துரைக்கிறேன். இந்தியாவில் சில ஆயிரம் சிகிச்சை மையங்கள் உள்ளன. வாடகைத்தாயாக விருப்பம் தெரிவிப்பவர் களுக்கென தனி வாடகை வீடு எடுக்கப்பட்டு குழந்தை பெறும் வரை அவர்கள் அங்கு குடியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, முறையான சிகிச்சை அனைத்தும் வழங்கப்படுகிறது. மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கப்படு கிறார்கள்’’ என்கிறார். இவர் சொல்வது போன்று வாடகைத்தாய் முறை வேகமாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும்.
    மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும். அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

    பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம்.

    கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம்.

    சிசேரியன்களுக்கு சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.

    கர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

    சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்துகொள்ளலாம்.

    பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
    பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள் ஆரோக்கியத்திற்கும் கொடுத்து முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாக்கும் வரை அவர்களுக்குத் தொல்லைத் தந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்கள்தாக்கிக் கொண்டே தான் இருக்கும்.

    பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். இருந்தாலும் பல பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் வரை அதைப் பற்றிக் கடுகளவும் தெரிவதில்லை.

    ஈஸ்ட்ரோஜென் என்னும் பெண்களுக்கான ஹார்மோன் அவர்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாயைப் போலவே புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்த கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்தப் பாதுகாப்பை முறித்து இருதய நோயை ஏற்படுத்துகின்றன.

    சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாகக் கண்டுகொள்கிறார்கள், ஏனெனில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை.

    அவர்களுக்குக் காய்ச்சல் வந்தது போல மிகவும் சோர்வாகவோ அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல்/வாந்தி அல்லது முதுகு, கை, தாடை ஆகிய ஒன்றில் வலி வரலாம்.

    இதன் விளைவாகச் சிலருக்கு மாரடைப்புக்குப் பின்னர் வாழ்நாளை அதிகரிக்கும் பீடா பிளாக்கர்ஸ், ACE இஹிபிடர்ஸ், ஆஸ்பிரின் போன்ற உயிர் காப்பான்கள் கிடைக்கின்றது. 38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள் ஆண்களில் 25% பேர் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள்.
    கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சில காம்ப்ளிகேஷன்களை ஏற்படுத்தக்கூடிய அபார்ஷன் ஒன்றும் சாதாரண விஷயமில்லை. எனவே, அபார்ஷன் என்ற முடிவை எடுக்கும் முன்பு நூறு தடவை யோசிப்பது நல்லது. இதைத் தடுப்பது அதைவிட நல்லது. அபார்ஷனால் ஏற்படும் காம்ப்ளிகேஷன்களைத் தெரிந்துகொண்டால், இதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தானாகவே வரும்.

    கர்ப்பத்தை கணவனும், மனைவியும் சரியான நேரத்தில் பிளான் செய்யாததுதான் அபார்ஷனுக்கு முதல் காரணம். கருத்தரித்த பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனையில் சில தம்பதிகள் இருப்பதுண்டு. இதனால் கடைசி நிமிஷத்தில் முடிவு எடுத்து அபார்ஷனில் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கருத்தரிக்கும் முன்பே குழந்தை அவசியமா? இல்லை தள்ளிப்போடலாமா என்று யோசித்து அதற்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

    கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது. கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற டயலமாவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், காம்ப்ளிகேஷன்கள் அதிகமாகி விடுகிறது.

    சரி… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

    * கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.

    * கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்..

    * ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.

    * கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.

    * கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.

    * கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.

    கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை…

    * அதிகப் படியான வயிற்றுவலி.

    * காய்ச்சல்.

    * பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான பிளீடிங் இருந்தால்,

    * கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.

    இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

    கருக்கலைப்பில் நீங்கள் யோசிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் உண்டு. கல்யாணமாகி உண்டான முதல் கருவைக் கலைத்தால், அடுத்து குழந்தைப் பேறு அடைவதில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதைச் சரிப்படுத்துவதில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்து, அடிக்கடி செய்யப்படும் கருக்கலைப்பினால் கருக்குழாயில் அடைப்புகள் ஏற்படலாம்.

    ஒருமுறை கருக்கலைப்பு செய்துகொண்ட பின்பு அடுத்து ஆறு மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது. சில நேரங்களில் கருக்கலைப்பு அவசியம் தேவைப்படும். தாய்க்கு இருதய நோய், டயாபடீஸ், ஹைபர்டென்ஷன், பிறப்பு உறுப்பில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எபிலெப்ஸி, கருத்தரித்த நாளிலிருந்து கண்ட்ரோல் பண்ணமுடியாத வாமிட்டிங், இதுபோன்ற கேஸ்களில், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களே கருக்கலைப்புக்குப் பரிந்துரைப்பார்கள்.

    இந்தச் சூழ்நிலையில் கருக்கலைப்புக்குச் சம்மதிக்காமல் போனால், தாயின் உயிருக்குப் பாதகமாகிவிடும். இதுபோன்ற கேஸ்களில் கர்ப்பத்தைத் தொடரவிட்டால், குழந்தை மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் குன்றியே பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!
    வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையை செயல்படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.
    உலக அளவில், வாடகைத் தாய் முறை அதிகம் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்படுகிறது. அதனால், வாடகைத் தாய் சட்ட (ஒழுங்குமுறை) மசோதா 2019, ஜூலை மாதம் மக்களவையில் முன் வைக்கப்பட்டுள்ளது. வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையை செயல்படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.

    இந்த மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவர், எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகியோர் வாடகைத்தாய் நடைமுறைக்காக வியாபார ரீதியாக செயல்படக்கூடாது. இது தொடர்பாக விளம்பரம், பிரசாரம், ஊக்கமளிப்பது, இப்படி எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது.

    வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் நோக்கம் பொதுநல அக்கறையோடு இருக்க வேண்டும். வாடகைத் தாயை நியமிக்க முடிவெடுக்கும் தம்பதி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துபூர்வமான சான்றை, மாவட்ட மருத்துவக் குழுமத்தில் இருந்து பெற வேண்டும். இந்த மருத்துவக் குழுமத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். வாடகைத்தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.

    வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகை தாயாக அமர்த்திக்கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாதபோது, வாடகை தாயாக வருபவர், தன் கருமுட்டையையும் தானமாக கொடுப்பார்.

    புதிய சட்ட மசோதாவின்படி, அந்த பெண் தனது கருமுட்டையை தானமாக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியின் கருமுட்டை, விந்தணு இணைந்த கருவை தனது கருப்பையில் வைத்து வளர்த்துக்கொடுத்தாலே போதும். ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகை தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அத்தகைய சான்றிதழை, மேலே குறிப்பிட்டபடி தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்குவார்கள்.

    அதேபோல் வாடகைத்தாயை நியமிக்கும் தம்பதிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாயை ஏற்பாடு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும். தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்து குழந்தையோ, வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது. தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால், அவர்களுக்கு சொந்த குழந்தை இருந்தாலும் வாடகை தாயை நியமித்துக்கொள்ள முடியும்.

    வாடகைத் தாயாக வருபவருக்கு பணம் கொடுக்கக் கூடாது. தம்பதிக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. திருமணமாகாத அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதியில்லை.
    தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கான காரணத்தையும், தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
    தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் அவதிப்படுகின்றனர்.

    மாதவிடாய் நாட்களில் வலி ஏற்பட காரணம்

    அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது.

    ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாதவிடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.

    தவிர்க்க கூடாதவை

    காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம். ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்

    வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் வலி வராமல் இருக்க கடுக்காய் சிறந்த மருந்தாகும். கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும்,

    இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும்.

    கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

    அதன் பின் சிறிது லவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் வராது.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன, இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதை தான் மணிக்கட்டு குகை நோய் என அழைக்கப்படுகிறது. இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக அமைய, இதற்கு காரணம் திரவம் சுரப்பதாலே. இந்த வீக்கம் நரம்பை பாதிக்க, இதனால் உணர்ச்சி என்பது அற்று உங்கள் கைகள் காணப்படுகிறது. இதனால் உங்கள் கைகள் அசைப்பதற்கு கடினமான நிலையுடன் காணப்படுகிறது.

    இந்த பிரச்சனை என்பது கர்ப்ப காலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் தொடங்குகிறது. இதனால் உங்கள் கைகள் முழுவதும் வலி இருக்க, காலை சுகவீனத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் இரவில் உங்கள் கைகள் புரண்டு காணப்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் நீங்கள் அதிக எடையை கொண்டு காணப்பட்டால், இந்த பிரச்சனை என்பது அதிகமாக காணப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாக இந்த பிரச்சனை என்பது அமைகிறது. அது என்னவென்றால்,

    1. ஒன்றுக்கு மேல் குழந்தை பிறக்க வாய்ப்பிருந்தால் இப்பிரச்சனை என்பது இருக்கும்.

    2. கர்ப்ப காலத்துக்கு முன்னரே நீங்கள் கனத்த உடம்புடன் இருந்தால் இந்த பிரச்சனை என்பது இருக்கும்.

    3. கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும்.

    இந்த கைகள் நரம்பு சுருக்க பிரச்சனை என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதில்லை. அதனால், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிடலாம்.

    உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து கொள்வது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து பங்கு காய்கறி மற்றும் பழம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    வைட்டமின் பி6 நரம்பு பிரச்சனையை போக்கும். மேலும்,

    1. சூரிய காந்தி மற்றும் எள் விதை

    2. ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள்

    3. பூண்டு

    4. மெல்லிய இறைச்சி துண்டு

    5. வெண்ணெய் பழம்

    6. எண்ணெய் கொழுப்பு கொண்ட மீன் (சால்மன், காட் போன்ற மீன்கள்)

    நீங்கள் வைட்டமின் பி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.
    மாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
    மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி போன்றவை அவர்களை பாடாய்ப்படுத்தும்.

    மாதவிலக்கு சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று அர்த்தம். மாதவிலக்கு ஏற்படும்போது உடல் அசதி, கால் வலி, தசைவலி உடன் வருகிறதே என வருத்தப்படாதீர்கள். சீரற்ற முறையில் ஏற்படாமல் இருந்தால் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    மாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். பருவகால மாற்றம் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையின் காரணமாக ஒரு முறை ஏற்படலாம். ஆனால் தொடர்ந்து சீரற்ற மாதவிலக்கு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. சில உடல்நல பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இங்கு சீரற்ற மாதவிலக்கு உண்டாவதற்கான காரணம் தான் என்ன?…

    அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல், உடலில் கொழுப்பின் அளவு மிகவும் குறையும். கொழுப்பு பாலின ஹார்மோன்கள் சுரப்பில் இன்றியமையாத ஒன்று. கொழுப்பு குறையும் போது ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது. இதனால் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும்.

    தைராய்டு பிரச்சனை மற்றும் மன அழுத்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாதவிலக்கு சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். கொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்பு அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிலக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

    மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் அதிகமாகும்போது, அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்பதால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.

    போதுமான அளவு தூங்காமல் இருத்தல், தாமதமாக தூங்குதல், இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீரற்ற மாதவிலக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இது குறித்து கவலையடைய தேவையில்லை.
    தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
    உடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில், தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.

    அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

    அதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    தைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
    ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

    மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.

    நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

    இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
    ×