என் மலர்
பெண்கள் மருத்துவம்
காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது, என மருத்துவ வல்லுனர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
காச நோய் என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் கிருமியால் உருவாகும் நோய். இது உலக அளவில் மிகப்பெரும் தொற்று நோயாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,400 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வு. காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி பலோபியன் குழாயையும் பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது, என மருத்துவ வல்லுனர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மைக்கோபாக்டீரியம் கருப்பையை பாதிக்கும்போது அது பிறப்புறுப்புக் காச நோயாக மாறுகிறது. இதனால் குழந்தை கருப்பையில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கரு இறந்துவிடும். ஆண்களைக் காட்டிலும் பல பெண்கள் இந்த பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு இதனால் கருப்பைக் குழாய் மிகவும் அடர்த்தியாக மாறி, கருப்பையில் கருவை உட்செலுத்த முடியாமல் பாதியிலேயே நின்று இயற்கையாகவே கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும்.
இந்த மைக்கோபாக்டீரியம், ரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளையும் தாக்குகிறதாம். குறிப்பாக இனப்பெருக்கத்தை நிகழ்த்தக் கூடிய உறுப்புகளான பெலோபியன் குழாய், கருப்பை ஆகிய இடங்களை பாதிக்கிறது என ஆய்வில் கூறுகின்றனர். ஒருவேளை பெண்களுக்கு காசநோய் தாக்கக் கூடிய அறிகுறிகள் தெரிந்தால், குறைந்த அளவில் பெலோபியன் குழாயை பாதித்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நீக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தன்மையையும் ஏற்படுத்திவிடும்.
இதைக் கண்டறிய சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான அடி வயிறு வலி, அதிகப்படியான ரத்தப்போக்கு, அதிக துர்நாற்றம், உடல் உறவிற்குப் பின் ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.
2018-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் ஏராளமான இந்தியப் பெண்கள் பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தது. அதுவும் 2011-ம் ஆண்டு 19 சதவீதம் 2015-ம் ஆண்டு 30 சதவீதம் என ஏறுமுகமாகவே இருந்துள்ளது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டிருந்தது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சரி செய்துவிடலாம். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தகுந்த டாக்டர்களை அணுக வேண்டும்.

மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.
புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனசுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். வாசிப்பவர் வயதானவர் என்றால் கேட்கவே வேண்டாம், வயிற்றில் புளியை கரைக்கும். இயற்கையோடு இயைந்த நம் பாரம்பரிய வாழ்வியலை மறந்து, செயற்கை தன்மை நிரம்பிய மேற்கத்திய கலாசாரங்கள் நமக்குள் புகுந்து கொள்ள தொடங்கியதில் இருந்தே பல தொற்றா நோய்கள் நமக்கு நெருக்கடி கொடுக்கின்றன.
அந்த நோய் கூட்டத்தில் வி.ஐ.பி. வரிசையில் புற்றுநோய் உட்கார்ந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அநேகரும் நினைப்பதுபோல் புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. புற்றுநோயில் வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்; அதில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
இன்றைய தினம் தவிர்க்க முடியாத நோயாகி வருகிறது புற்றுநோய்! 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கோ, எவருக்கோ வந்து கொண்டிருந்த புற்றுநோய் இப்போது ஜலதோஷம் பிடிப்பதுபோல் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைமைக்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் எந்த புற்றுநோய் என்பதை தெரிந்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால், இன்றைய நவீன மருத்துவத்தில் அதை எதிர்கொள்வது எளிது என்பதும் உறுதியாகி உள்ளது.
உடலில் கட்டி தோன்றிவிட்டாலே அது புற்றுநோய்தான் என்று அவசரப்பட்டு முடிவு கட்ட வேண்டாம். எல்லாக் கட்டிகளும் புற்று நோய்க் கட்டிகள் அல்ல! ஆபத்தானதும் அல்ல! விதிவிலக்கும் உண்டு. BR-CA 1 -2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகத்தில் புற்று நோய் வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், சினைப்பையில் புற்றுநோய் வருவதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருமுன் காக்க மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையையும் மேற்கொண்டார். புற்றுநோய் வரலாற்றில் உலக அளவில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு இது. இந்தியாவில் புற்றுநோயை வென்றவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (நுரையீரல் புற்றுநோய்), நடிகைகள் கவுதமி, மனீஷா கொய்ராலா (மார்பக புற்றுநோய்) என பலரும் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் ஏற்படுகிறது. 10 லட்சம் பேர் ஏதாவது ஒரு புற்றுநோயால் இறக்கின்றனர். 1½ லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 72 ஆயிரம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கின்றனர். 1 லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
85 ஆயிரம் ஆண்களுக்கும், 35 ஆயிரம் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. 100 பேரில் 13 பேர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வருகின்றனர். மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.

மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்துப் பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை கன்சல்ட் செய்துவிடுவது நல்லது."
50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்துத் தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தப்பில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துப் பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50-க்கு முன்னாடியே நின்றுவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம்.
ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார்மோனானது அண்ட விடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும்.
நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாவிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.
பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறா விட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது. அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாசமானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும்.
ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறா விட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சொல்லப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே சரி செய்து விடலாம்.

மார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாவாடை நாடா கட்டுவதால் இடுப்பு புற்றுநோய் வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
புற்றுநோய் பெண்களை தான் அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக கூறப்படுவது இடுப்பில் பாவாடை நாடாவை இறுக்கமாக கட்டுவதால் ஏற்படுவதாகும்.
தினசரி நாள் முழுவதும் பாவாடை நாடாவை இறுக்கி முடிச்சு போடுவதால் இடையில் கயிறு இறுகி புற்றுநோய் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம் இருந்தாலோ, எரிச்சல், அரிப்பு போன்றவை இருந்தாலோ மருத்துவரை அணுகவும்.
பாவாடை நாடாவைக் கயிறு போல் கட்டாமல் பெல்ட் போன்று அகலமாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து, வீட்டில் இருக்கும் நேரங்களில் பாவாடையை இறுக்க கட்டாமல் லூசாக கட்டிக் கொள்ளுங்கள்.

குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும்.
ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.
அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள்... திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
32 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 32 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.
ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.
இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூற முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை.தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள்.
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெரு கூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்க ரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டது தானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறி விடுகிறார்கள்.
மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்து மதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம் தான் இதற்கு காரணம்.
இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள். அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? இது போன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.
முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...
டி-சர்ட் பிரா
இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளி விவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்து விடும்.
இந்த பிரச்சினையை போக்க வந்தது தான் டி-சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்து கொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.
டீன்-ஏஜ் பிரா
டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.
புல் போர்ட் பிரா
வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இது தான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.
நாவல்டி பிரா
திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா
விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.
மெட்டர்னிட்டி பிரா
கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.
நர்சிங் பிரா
கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.
கன்வர்டபுள் பிரா
பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.
இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

தாய்மையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவைப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள், உறவினர்கள் காட்டாயத்திற்காக மட்டும் முடிவு எடுக்காமல், உங்களுடைய மனநிலை, உடல் நலம் பொறுத்தே கருத்தரிக்க திட்டமிடுங்கள்.
முதல் பிரசவம் என்பதால் அதை பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. மேலும் தனிக்குடும்பம் பெருகிவிட்ட நிலையில் இந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும். எனவே, கருத்தரிக்கு முன், கர்ப்ப காலங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வரும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சந்தேகங்கள், பிரச்சனைகள் பற்றி அறிவுரை, ஆலோசனைகள் கேட்க அனுபவமிக்க ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்வது கர்ப்ப காலங்களில் வரும் ஐயங்களை சரி செய்ய உதவும்.
உடல்நலம் மற்றும் ஆரோகியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாட்கள் உணவில் அலட்சியம் இருந்தாலும் கருத்தரிகும் முன் சரியான உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், பெண்கள் தன் சிறு வயதிலிருந்து சத்துள்ள உணவை சாப்பிட்டு வளர்ந்தால் கர்ப்ப காலங்களில் குறைவான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருத்தரிக்க போவதற்கு முன் பெண்களுக்கு அதைப்பற்றி அதிகமான பயம் இருக்ககூடும். பயத்தை போக்குவதற்கான ஆலோசனை, மன தைரியம் தரக்கூடிய தகவல்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மேலும் ”தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தை பிறக்கும்” என்று தினமும் எண்ணுவது மூலம் ஆழ்மனதில் பாசிடிவ்வான எண்ணங்கள் வரும். அது பயத்தை போக்க உதவும்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழல் தேவைப்படும். கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவ வேண்டும். எனவே, அதிக சத்தம், இரைச்சல் இல்லாத, அமைதியான, ஆனந்தமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். எளிதில் தொற்று மற்றும் நோய் கிருமிகள் பரவாதவாறு வீட்டை சுத்தமாக வைத்திருக்க பழக வேண்டும்.
பாசிடிவ்வான மனநிலையை தருகிற விஷயங்களான மெல்லிய இசை, புத்தகம், கைவினைப் பொருட்கள் செய்வது குழந்தைக்கு புத்திகூர்மையை அதிகரிக்கும்.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மன அழுத்தத்தை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பக்குவத்தையோ, சூழலையோ அவர்கள் உருவாக்க வேண்டும். அதிக வேலைபளூ இருக்ககூடாது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்ததில் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த வித பிரச்சச்னையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு இணையாக உள்ள இன்னொன்று சேமிப்பும். முன்பு போல தற்போதைய நிதி நிலை இல்லை. மருத்துவத்தில் தொட்டதற்கு எல்லாம் பணம் என்ற நிலை உருவாகிவிட்டது. மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலையை பாதுகாக்க மருத்துவ செலவுகள் நிறைய இருக்கும். அதற்கு ஏற்ப பணம் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.
தாய்மையை பற்றிய முழு புரிதலோடு தாய்மை அடைந்து, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்கள். சிறந்த மனிதர்களை இந்த உலகத்திற்கு கொடுக்க வழி செய்வோம்.

முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.
அப்படி பெண்களுக்கு உடலில் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு அதிகமாக தொடையில் கொழுப்பு சேர்வதாகவும், அவர்களுக்கு இதய நோய் அதிகமாக தாக்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
அதேசமயம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானோருக்கு கால்களைக் காட்டிலும் வயிற்றில் அதிக கொழுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதை யூரோபியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
இந்த இடத்தில் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். அதாவது ஆப்பிள் உடல் அமைப்புக் கொண்ட பெண்கள் உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் இடுப்பு, தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.
அதேசமயம் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.
"பெண்ணின் உடல் அமைப்பு என்பது அவர்களுக்கு அதிகமாக கொழுப்பு எங்கு சேர்கிறதோ அதைப் பொருத்தே அமைகிறது. இவற்றைக் கரைக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைக்கான ஆய்வு இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப் படி உங்கள் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்" என ஆய்வின் பேராசிரியர் கூறியுள்ளார்.

கர்ப்பம் தரித்த அந்த நிமிடம் முதல், பிரசவம் முடிந்த பின் தாய்ப்பால் சுரப்பு நிற்கும் வரை பெண்களின் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.
கர்ப்பம் தரித்த அந்த நிமிடம் முதல், பிரசவம் முடிந்த பின் தாய்ப்பால் சுரப்பு நிற்கும் வரை பெண்களின் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் கர்ப்ப காலத்திலும், அதன் பின்னரும் பெண்களில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இப்படி நிகழும் மாற்றங்களில், பிரசவத்திற்கு பின் பெண்களின் வாழ்வில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும், பாதிப்பினை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்..!
கர்ப்பகால, பிரசவ கால ஹார்மோன் மாற்றங்களால், ஹார்மோனின் சமநிலையற்ற தன்மையால் அல்லது தாய்ப்பால் சுரப்பிற்கு காரணமான ஹார்மோன்களால், பெண்களின் மார்பகங்களில் புண்கள், தோலுரிதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து, உங்களுக்கு வலியினை உண்டாக்கலாம்; இந்த புண்கள், தோலுரிதல் அனைத்தும் அவையே சில காலத்தில் மறைந்துவிடும். மார்பகங்களின் அளவு மறுபடலாம்.
பிறப்புறுப்பில் வெளியேறும் திரவங்களில் மற்றும் திரவம் வெளியேறும் காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். சுகப்பிரசவம் நிகழ்ந்திருந்தால், பிறப்புறுப்பில் 2 வாரங்களுக்கு வலி இருக்கும்; பின் சரியாகிவிடும்.
பிரசவ கால ஹார்மோன் மாற்றத்தால், கர்ப்ப காலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதில் தொந்தரவுகள் நேரலாம். சில புதிய ஹார்மோன்கள் உடல் எடையை குறைவதை தாமதப்படுத்துவதாய் உள்ளன.
கர்ப்ப காலத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்களால், பெண்களுக்கு அதிகமான முடி உதிர்வு ஏற்படலாம். இப்பிரச்சனைகளால் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பிரசவ காலா ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. சரியான உறக்கம் இல்லாததால் அவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் தொடங்கி வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வரை முதுகுவலியால் பெரும் அவஸ்தையை அனுபவிகிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் பல உடல் மாற்றங்கள், உபாதைகள் என தினம் தினம் போராட்டம்தான். அதில் ஒன்றுதான் ’முதுகு வலி’. வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் தொடங்கி வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வரை முதுகுவலியால் பெரும் அவஸ்தையை அனுபவிகிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தின் மூன்று அல்லது நான்காம் மாதத்திலிருந்தே தொடங்கும் இந்த முதுகு வலி கடைசி ஒன்பது மாதத்தோடு நின்றுவிடுவதில்லை குழந்தை பிறந்த பின்பும் தொடர்கிறது என்பதுதான் தலையாயப் பிரச்சனை.
”கர்ப்பகாலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்கள் சுரக்கும். இதை ஆங்கிலத்தில் ’Pregnancy hormones'என்று அழைப்பார்கள். இது மூட்டுகள் மற்றும் தசைநார்களை தளர்த்துவது மட்டுமன்றி, இடுப்புப் பகுதியின் தசைகளையும் தளர்த்தும். இதனால் உடல் கூடுதல் எடையைத் தாங்குவதற்கு சிரமப்படும். இதனால்தான் முதுகுவலி ஏற்படுகிறது”.
முதுகு வலி என்பது எல்லா பெண்களுக்கும் வராது. கர்ப்பமடைவதற்கு முன்பே அவர்களுடைய முதுகுத் தண்டு எலும்புகளின் வலிமை குறைவாக இருந்தாலும், முதுகுவலி இருந்திருந்தாலும் எடை கூடும்போது வலி அதிகமாக இருக்கும் எனக் கூறும் மருத்துவர், பிரசவத்திற்குப் பின் வரும் முதுகுவலிக்கும் இதுதான் காரணம் என்கிறார்.
”கர்ப்பகாலத்தில் மாதங்கள் அதிகரிக்க அதிகரிக்க குழந்தையின் வளர்ச்சி, எடை அதிகரிக்கும். குழந்தை வளர்வதற்கு ஏதுவாக பெண்களின் கர்ப்பப்பை, தசை நார்கள், எலும்புகள் விரிவடையும். உதவியாக பின் முதுகு தானாக வளைந்து கொடுக்கும். அப்படி வளையும் போது எலும்புகளுக்குக் கிடைக்கும் அழுத்தத்தால் வலி ஏற்படும். எலும்புகளின் வலிமைகுறைவாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும்.
அது உறுதியாக இருக்கும்பட்சத்தில் முதுகு வலி இருக்காது. இந்த முதுகுவலிப் பிரச்னை இன்று பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்காகத்தான் பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு இந்த முதுவலியே சாட்சி”.
”அதேபோல் பிரசவத்திற்குப் பின்னும் பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதை அறுவை சிகிச்சையின்போது போடப்படும் ஊசிகளால்தான் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட அந்த முதுகு வலியின் தொடர்ச்சிதான் பிரசவத்திற்குப் பிறகு வரும் முதுகுவலிக்கும் காரணம்”.
இந்த பெரும் காரணங்களைத் தவிர்த்து நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது, அதிக வேலைகள் செய்வது, நீண்ட தூரம் நடப்பது போன்ற உடல் உழைப்புகளை அதிகமாக செய்யும்போதும் முதுகுவலியை அதிகப்படுத்தும்.
இதுதவிர வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் பலரும் முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்டாயம் மணிக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் இலகுவாகும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
”வேலை செய்யும் இடத்தில் நாற்காலி வயிற்றுக்கு உறுதுணையளிக்கும் விதமாக இருக்க வேண்டும். முதுகுக்கு குஷன் பேடுகளை வைத்துக்கொள்ள வேண்டும். கணினியானது நிமிர்ந்து அல்லது எட்டிப் பார்ப்பதுபோல் இருக்கக் கூடாது. அவ்வாறு நிமிர்வதாலும் வலி ஏற்படும்.
தீராத முதுகுவலியை குறைக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்....
வெதுவெதுப்பான தண்ணீர் கொண்ட ஹீட் பேடைக் கொண்டு முதுகில் ஒத்தடம் தரலாம்.
வீட்டில் இருக்கும் பெண்கள் அமரும்போது முதுகுக்கு பிடிமானம் தரும் குஷன் பேடுகளை வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்கும், முதுகுக்கும் பக்கபலமாக இருக்கும் கர்ப்பகால தலையணைகளை உறங்குவதற்குப் பயன்படுத்தலாம்.
எடை தூக்குதலைத் தவிருங்கள். அணியும் காலணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஹீல் இல்லாமல் பாதங்களுக்கு இதமான ஷூ, சமதளத்தில் இருக்கும் காலணிகளை அணியலாம்.
இரத்தப்போக்கு, கர்ப்பப்பை உறுதியின்மை போன்ற கர்ப்பகால பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் பிசியோதெரப்பியின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் பச்சைக்குத்திக்கொள்ளலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு உள்ளது.. அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் எதெல்லாம் செய்யலாம் செய்யக் கூடாது என்பதை மருத்துவர்களின் அறிவுரைப்படியே செய்ய வேண்டும். அப்படி சிலருக்கு கருவுற்ற காலத்தில் பச்சைக்குத்திக்கொள்ளலாமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி..
கருவுற்ற காலத்தில் பச்சைக் குத்திக்கொள்ள ஆசை வருகிறது அல்லது புதிய டிசைன்களைப் பார்த்ததும் குத்திக்கொள்ள ஆசை தோன்றுகிறது, மற்றவர்களைப் பார்த்ததும் தானும் பச்சைக் குத்திக்கொள்ள எண்ணம் தோன்றுகிறது இப்படி எந்த வகையிலும் உங்களுக்கு ஆசை உதிர்க்கலாம். ஆனால் குழந்தையின் நலன் கருதி குறைந்த நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக பச்சைக் குத்திக்கொள்ளும் போது சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளச் சொல்வார்கள். அந்த முன்னெச்சரிக்கைகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது. குறிப்பாக கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கட்டாயம் அந்த நாட்களில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பச்சைக்குத்தப் பயன்படுத்தப்படும் சாயத்தில் மெர்க்குரி, அர்செனிக் போன்ற கடுமையான விளைவுகளை உண்டாக்கக் கூடிய உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமான நாட்களில் எந்த பக்கவிளைவுகளையும் பொருத்துக்கொள்ளலாம். ஆனால் கர்பகாலத்தில் உள்ளே இருக்கும் குழந்தையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல் பச்சைக்குத்தப் பயன்படுத்தப்படும் ஊசி கடுமையான வலியை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் கத்துவதோ, வலியை தாங்குவதோ உள்ளே இருக்கும் குழந்தையையும் தாக்கும். ஊசி சரியாக குத்தப்படவில்லை எனில் அதன் மூலம் கிருமிகள், கெமிக்கல்கள் உடலுக்குள் செலுத்தப்படலாம்.
கருவுற்ற காலத்தில் பச்சைக் குத்திக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு இன்றுவரை ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுக்கொண்டிருக்கின்றன. விடை கண்டுபிடிக்கவில்லை. அதில் இதுவரை செய்யப்பட்டதிலும் பச்சைக்குத்திக்கொள்ளக் கூடாது என்பன போன்ற எதிர்மறை ரிசல்டுகளே வந்துள்ளன.
எனவே கருவுற்ற காலத்தில் பச்சைக் குத்திக் கொள்ளலாமா கூடாதா என்ற விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் ஆபத்தைக் கையில் எடுப்பது சரியல்ல. எனவே எவ்வளவு ஆசை இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப் பெற்ற பிறகு பச்சைக்குத்திக்கொள்ளுங்கள்.