என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    அனைத்து பெற்றோர்க்கும் பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
    அனைத்து பெற்றோர்க்கும் பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஆனால் இது குறித்து தெரிவிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. பல பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருக்க கூடாதா என ஏங்குகிறார்கள். இவர்கள் என்ன குழந்தை பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்த டிப்ஸ்களை படித்து கண்டுப்பிடியுங்கள்.
     
    * பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
     
    * கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தை என்றால் பெண்ணின் வலது மார்பகம் சற்று பருத்து காணப்படும். மேலும் அந்த மார்பகத்தில் உள்ள பால் வெண்மையாகவும், கலங்கலாகவும் இருக்கும்.

    ஆணா, பெண்ணா அறிந்து கொள்வது எப்படி
     
    * அந்த கர்ப்பிணியின் சிறுநீர் பழைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அப்பெண்ணிற்கு குழந்தை வயிற்றின் வலது பக்கத்தில் இருப்பதாக தோன்றும்.
     
    * மேலும் அப்பெண் உட்காரும் போதும், உட்கார்ந்து எழும்பும் போதும் வலது கையை ஊன்றுவாள்.
     
    * மார்பகப்பாலை ஒரு துளி எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது பாலானது மிதக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தாள் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கும்.
     
    * கர்ப்பிணிப்பெண்ணின் இடது மார்பகம் பருத்து காணப்படுத்தல், அதிக சோம்பலுடன் காணப்படுதல், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுதல், அடிக்கடி பசி ஏற்படுதல் மற்றும் உட்காரும் போது இடது கையை ஊன்றுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறக்கும்.
    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.    

    இது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.

    சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.

    தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.

    கட்டாயம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம். பிரச்சனை தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.

    தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை. 
    பெண்கள் பல விஷயங்களையும் வெளிப்படையாக மகப்பேறு மருத்துவரிடம் உரையாட முன் வர வேண்டும். அப்படி எந்தெந்த விஷயங்களை பெண்கள் தவிர்க்கக் கூடாது என்று பார்க்கலாம்.
    திருமணத்திற்கு முன் அல்லது பின் பாலியல் பழக்கங்கள் மற்றும் வெஜினாவின் ஆரோக்கியம் குறித்த சந்தேகம், பயம் இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களுடைய பிரச்னைகளை விட பல வகையான கதைகள், பிரச்னைகளை தினம் தினம் அவர்கள் கேட்டிருக்கக் கூடும். எனவே என்ன நினைப்பாரோ என தயங்காமல் வெளிப்படையாகப் பேசுங்கள்.

    சிலர் மருத்துவ ஆலோசனைகளின்றி மருந்தகங்களில் கருத்தடை மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும், எப்படி ,எப்போது எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் குறித்து கட்டாயம் மகப்பேறு மருத்துவரிடம் உரையாட வேண்டும். அவரின் அறிவுரைப்படி மாத்திரைகளை பயன்படுத்துங்கள்.

    திடீரென உடல் எடை அதிகரித்தல், மார்பகங்களில் பருக்கள், மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போதல், அடி வயிற்றில் அடிக்கடி திடீர் வலி, மாதவிடாயில் மற்றவர்களைக் காட்டிலும் தாங்கமுடியாத வலி போன்ற சராசரி பெண்கள் உணராத வித்யாசமான பிரச்னைகளை நீங்கள் உணர்கிறீர்கள் எனில் கட்டாயம் அதை மகப்பேறு மருத்துவரிடம் சொல்லுங்கள்.

    வெஜினாவில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம், அரிப்பு, எரிச்சல் உண்டாகிறது எனில் அதை சாதரணமாகக் கடந்துவிடாமல் மருத்துவரிடம் பேசுங்கள். அவை அதிகமாகும் முன்னரே கவனித்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம்.

    உடலுறவு கொள்ளும்போது வலி, இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளை மருத்துவரிடம் தயங்காமல் பகிருங்கள். அதேபோல் எவ்வளவு முயற்சித்தும் கருத்தரிப்பதில் பிரச்னை,சந்தேகங்கள் இருந்தாலும் அதைக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசுவதே நல்லது.
    கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

    புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.

    இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும். அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம். அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
    சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். கர்ப்பிணிகள் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் இது பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

    ‘‘கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தாய்க்கும், குழந்தைக்கும் கடும் வலிப்பு ஏற்பட்டு, அதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதை பிரசவகால வலிப்பு நோய் எக்லாம்சியா(Eclampsia) என்கிறோம். மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எக்லாம்சியாவை கவலைக்குரிய காரணியாகவும், விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.

    வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறப்பது அல்லது பிறந்தவுடன் இறப்பது போன்ற சிக்கல்களை 14-ல் ஒரு எக்லாம்சியா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கிறார்கள். எக்லாம்சியாவுக்கு முந்தைய ப்ரீ எக்லாம்சியா(Pre-eclampsia) என்ற கருவுற்ற 20 வாரங்களுக்குள் உள்ள நிலையில் காணப்படும் சில அறிகுறிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பிரசவ நேர வலிப்பால் ஏற்படும் தாய், சேய் மரணம் போன்ற ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.’’

    ‘‘ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புகள் குறிப்பாக சிறுநீரகம் அல்லது ஈரல் செயலின்மை ஏற்படலாம். இதுபோன்ற பேறு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம்.’’

    ‘‘பேறு காலத்தில் ப்ரீ எக்லாம்சியா ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. கருப்பைக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாமை. (இந்நிலை பொதுவாகப் பனிக்குடத்துடன் தொடர்புடையது.) சில நேரங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பின் இயக்கமின்மை காரணமாகலாம்; ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, வளரும் கரு மற்றும் கருப்பையின் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; சில பெண்களின் மரபணுக்களும் ப்ரீஎக்லாம்சியா பாதிப்புக்கு காரணமாகலாம்.’’

    ப்ரீ எக்லாம்சியா அடையாளங்கள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?

    ‘‘சில நேரங்களில் ப்ரீஎக்லாம்சியா எந்த விதமான அடையாளங்களோ, நோய்க்குறிகளோ இன்றி தாக்கும். நோய்க்குறிகள் இருந்தால் அவை ரத்த அழுத்தம் இரு முறைகளுக்கு மேல் 140/90 அளவைத் தாண்டும். தலை சுற்றல் அல்லது வாந்தி, கடுமையான தலைவலி, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஈரல் செயல்பாடு பரிசோதனை இயல்பற்று இருத்தல், மூச்சுத் திணறல், சிறுநீரில் புரதச்சத்து அதிகரித்தல், வலது பக்கம் விலா எலும்புக்குக் கீழே மேற்பகுதியில் வயிற்று வலி, திடீர் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம். இயல்பான பேறுகாலத்தின் போதும் இது ஏற்படலாம் என்பதால் மேற்கொண்ட பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.’’

    ப்ரீ எக்லாம்சியாவுக்கான பரிசோதனைகள் என்னென்ன?


    ‘‘ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் ஈரல், சிறுநீரகம், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவை இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சிறுநீரகப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் சிறுநீரில் 24 மணி நேரத்தில் புரதச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். புரதம் கிரியேடினைன் விகிதத்தை சிறுநீர் ரேண்டம் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். கரு அல்ட்ரா சவுண்ட், அழுத்தம் இல்லா நிலைக்கான பரிசோதனை அல்லது பயோ பிசிகல் புரொஃபைல் மூலம் கண்டுபிடிக்கலாம்.’’

    இதிலுள்ள சிக்கல்கள் என்ன?

    ‘‘ப்ரீஎக்லாம்சியா கடுமையாக இருக்கும் பட்சத்தில் தாய், சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முன் கூட்டியே குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிய வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக கருப்பையிலிருந்து பனிக்குடம் பிரிந்து செல்வதற்கான அபாயம் அதிகம். ப்ரீ எக்லாம்சியாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் முற்றிய நிலையில் வலிப்பு நோய் ஏற்படக் கூடும். ப்ரீ எக்லாம்சியா காரணமாகப் பனிக்குடத்துக்குப் போதிய ரத்தம் செல்லாமல் குறையும் நிலையில், கருவுக்குக் குறைந்த அளவே ஊட்டச்சத்து கிடைக்கும். இது கருவின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.’’

    ப்ரீ எக்லாம்சியாவைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு?

    ‘‘ப்ரீ எக்லாம்சியாவைக் குறிப்பாக அதிக அபாய கட்டத்தை சிறப்பாக மேலாண்மை செய்யத் தொடக்கத்திலேயே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை எடுத்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் மாத்திரை, மருந்துகளையோ, வைட்டமின், மினரல் மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்ப்பகால முழுவதுமே மருத்துவ ஆலோசனை முக்கியமாகும்.’’

    ப்ரீ எக்லாம்சியா பாதிப்பு இருக்கும்போது, தாயையும், சேயையும் அது எவ்வாறு பாதிக்கும்?

    ‘‘தாயைப் பொருத்தமட்டில் உடலுறுப்பு பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற பாதிப்புகளும், குழந்தைக்கு மெதுவான கரு வளர்ச்சி, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி தடங்கல்களும் ஏற்படலாம்.

    ’’ப்ரீ எக்லாம்சியாவுக்கான சிகிச்சை...‘‘பிரசவம் ஆவதற்கு இன்னும் சில காலம் ஆகுமென்றால் மருத்துவர் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேறு காலத்தில் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக கொடுக்கப்படும் பல மாத்திரைகள் ஆபத்தானவை என்பதால் சரியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும்.

    கடுமையான ப்ரீ எக்லாம்சியா சிண்ட்ரோம் இருப்பின் அவரது ஈரலைத் தற்காலிகமாக மேம்படச் செய்யவும், ரத்தத் தட்டணுக்கள் மேம்படவும், பேறு காலத்தை நீட்டிக்கவும் ஸ்டீராய்ட்ஸ் மருந்துகள் வேலை செய்யும். வலிப்பு இருந்தால், அதை சரிவர கையாள, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையான ஓய்வு முக்கியம். பிரசவத்துக்கு முன்பே மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது சிறந்தது.’’
    இன்றைய திகதியில் பிரசவத்தின் போது ஏற்படும் வலி தவிர்க்க முடியாதது. இதனை முழுமையாக தவிர்ப்பதற்காக அறிமுகமாயிருக்கும் இருக்கும் நவீன சிகிச்சை தான் ‘ஹிப்னோ பர்த்திங்’.
    இன்றைய திகதியில் பிரசவத்தின் போது ஏற்படும் வலி தவிர்க்க முடியாதது. இதனை முழுமையாக தவிர்ப்பதற்காக அறிமுகமாயிருக்கும் இருக்கும் நவீன சிகிச்சை தான் ‘ஹிப்னோ பர்த்திங்’.

    குழந்தைப் பிறப்பு என்பது இனிமையான ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வின் போது ஏற்படும் மன அச்சத்தை போக்கி, வலியை குறைத்து கொள்ள உதவும் சிகிச்சைதான் ஹிப்னோபர்த்திங்.

    குறிப்பாக ஒவ்வொரு பெண்ணின் பிரசவத்தின்போது கேட்டகாலமைன் என்ற திரவம் உடலில் உற்பத்தியாகி, வயிற்றில் இருக்கும் சிசுவின் நகர்வை இறுக்கமாக்கி, வலி மிகுந்த அனுபவமாக மாற்றி விடுகிறது. இந்நிலையில் இந்த புதிய நுட்பம் மூலமாக மனதை எளிமைப் படுத்தப்படுவதால் அது இனிமையான அனுபவம் என ஆழ்மனத்தில் பதிய வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். பிறகு ஆழ்மன நம்பிக்கையின் காரணமாக எண்டோமார்பின் என்ற திரவம் சுரந்து, குழந்தையை எளிதில் வெளிவர உதவுகிறது.

    இன்றைய திகதியில் பிரசவத்தின்போது பெண்களுக்கு பெரும்பாலும் எபிடுரல் அனஸ்தீஸியா எனப்படும் மயக்கமருந்து அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக வலியற்ற நிலையில் பிரசவம் நடைபெறுகிறது. ஆனால் ‘ஹிப்னோ அனஸ்தீஸியா ’என்ற நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சியால், பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான வலி உணர்வு குறைக்கப்படுகிறது. இதனால் குழந்தை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், தெளிவான மனநிலையுடனும் பிறக்கிறது. குழந்தை பாதுகாப்பாகவும் தாயின் வயிற்றில் இருந்து வெளியேறும்.

    இதன் போது கர்ப்பமான பெண்களுக்கு எந்தவிதமான மருந்தோ ,சிகிச்சையோ தரப்படுவதில்லை. தாயின் மனநிலையை அறிந்து, அவருக்கு குழந்தைப்பேறு குறித்த அச்சத்தை மனதில் இருந்து அகற்றி, பிள்ளைப்பேறு ஒரு இனிமையான அனுபவம் என்ற உண்மையை மகிழ்ச்சி அலைகளாக அவர்களின் ஆழ்மனதில் புரியவைத்து, பதிய வைக்கிறோம்.

    இதனை கணவன் மனைவி என இருவரும் பயிற்றுவிக்கிறோம். இதன்மூலம் அவர்களின் மனதில் உள்ள இறுக்கம் கரைகிறது. பிரசவம் எளிமையாகிறது. அத்தருணத்தில் இவர்கள் இயல்பாக செய்து கொள்ளும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்புகளுக்கு எந்தவித தடையும் இல்லை.

    பொதுவாக இந்தவித முறையான பயிற்சி, பெண்கள் கருத்தரித்த ஐந்தாவது மாதம் முதல் மேற்கொள்ளலாம். எந்த மகப்பேறு மருத்துவரிடம் கர்ப்ப கால பராமரிப்பு சிகிச்சை செய்து கொள்கிறீர்களோ.. அவர்களின் உதவியோடு இந்த பயிற்சியை பெறலாம். இதுகுறித்த விழிப்புணர்வு தற்போது இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது
    பெண்களுக்கு 9-வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது.
    கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து மாற்றங்களையும், சோதனைகளையும் சாதனைகளாக்கி, முதல் ஆறு மாதங்களைக் கிடக்கின்றனர். பின்னர் தன் குழந்தை பூமியைத் தொடப்போகும் அந்த நொடிக்காக காத்திருக்கத் தொடங்குவாள்.. இந்த காத்திருப்பு தருணத்தில், பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்…

    பெண்களுக்கு 9வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது. இவ்வலியானது, பெண்கள் அதிகம் வேலை செய்யும் நாட்களில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வலி ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நீடிக்கும்.

    பிரசவம் சுகப்பிரசவமாக அமைய, மேலும் விரைவில் நிகழ அதிக வேலை செய்ய வேண்டும் என்று கூறிய அறிவாளியின் பேச்சைக் கேட்டு, நடப்பதால் பெண்கள் இத்தகைய பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. வேலை செய்ய வேண்டும் ஆனால், அது 6 மாதம் வரை, அதுவும் அளவாக..!

    பொய்யான வலி எது மெய்யான வலி எது என்பதை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பமா? பொய்யான வலி ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரை ஒரே மாதிரியாக வலிக்கும். ஆனால், மெய்யான வலி நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகும்..! இந்த வேறுபாடு கொண்டு, உண்மையான வலியை அறியலாம்.

    இம்மாதிரியான பொய்யான வலியை தவிர்க்க, பெண்கள் 9வது மாதத்தில், குறைந்த வேலைகளை செய்வதும், அதிக தண்ணீர் அருந்துவது, அதிக நேரம் நிற்காமல் இருப்பது போன்றவை உதவும்.. இக்காலகட்டத்தில், அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

    பிரசவம் என்பது ஒரு அழகான, அற்புதமான அனுபவம். கர்ப்பகாலம் என்பது சோதனை கலந்த சாதனையான பயணம். இப்பயணத்தில் தன்னம்பிக்கையுடன், சரியான உணவு, ஊட்டச்சத்துடன் உற்சாகமாக ஈடுபடுங்கள்..! 
    பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில், குறைவான உடல் எடையோடு பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும்.
    ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில், குறைவான உடல் எடையோடு பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும்.

    கர்ப்பிணிகள் சமச்சீர் உணவினை உண்ண வேண்டும். ஒவ்வொரு மாதமும் டாக்டர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து தேவையான மருத்துவ பரிசோதனைகளையும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் மாத்திரைகளைத் தேவையான அளவு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரம் மற்றும் தூய்மையான பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அவற்றை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

    அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கத் தொடங்கிவிட வேண்டும். இது குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை தருகிறது. அத்துடன் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. முக்கியமாக மாதவிடாய் நின்ற காலத்தில் இடுப்பு எலும்புமுறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

    குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் பழச்சாறு, இட்லி, சோறு, வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவு வகையை சிறிதுசிறிதாக உண்ண கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

    குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்று கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ஓ.ஆர்.எஸ். கரைசலை மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பதின்ம வயது பெண்கள் வைட்டமின் மற்றும் கனிமம் நிறைந்த பலவகையான சமச்சீரான உணவினை உண்ண வேண்டும். இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    உடல்நலத்தை மட்டும் பேணுவது ஆரோக்கியம் அன்று. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். உடற்பயிற்சி அவசியம் செய்து சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

    குடும்பத்தினர் அனைவரும், சுத்தமான நீரையே பருக வேண்டும். பெண் குழந்தை என்று பாரபட்சம் காட்டாமல் ஆணுக்கு நிகராக நல்ல உணவு, சிறந்த கல்வி, தைரியம், தன்னம்பிக்கை அளித்து பெண்ணை வளர்க்க வேண்டும். மன உளைச்சலை சமாளிக்கவும், நிர்வகிக்கவும் கற்றுத்தர வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கி, சர்வதேச அரங்கில் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும்!
    நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.
    உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. அதிலும் கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவுகளே குழந்தையை சென்றடைகிறது. பிரசவத்தின் பின்னும் தாய்ப்பாலூட்டுவதால் தாயின் நிலையை பொறுத்தே குழந்தையின் உடல்நிலை அமையும். சில உணவு வகைகள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் சிலவற்றை தவிர்க்க வேண்டும். இங்கு தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.  

    1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள்.

    2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது உங்கள் குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.

    3 இது குழந்தையின் உடலில் பல அலர்ஜி மற்றும் உணர்திறன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் சாப்பிட்டவுடன் பரிசோதித்து பாருங்கள். குழந்தையிடம் மாற்றங்களை கண்டால் உடனடியாக தவிர்ப்பது நலம்.

    4 ப்ரோக்கோலி உங்களுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்று தான். ஏதாவது ஒரு சமயத்தில், செரிக்க நேரம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.

    5 செர்ரி பழங்களில் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

    6 வேர்க்கடலை சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.

    7 தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகளும், கீரைகளும் உதவும் என்றாலும், மிளகுக்கீரையும் வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) அதில் சேராத ஒன்று. அவை தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் தவிர்த்திடுங்கள். இல்லையேல் நீங்கள் அதை தொடர்ந்து உண்ணலாம். நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள். 
    பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன் உடல் மெலிவாக, அழகாக இருப்பார்கள். திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தை பிறந்தவுடன் இடுப்பு சதை, வயிற்றுச் சதை வித்தியாசம் தெரியாமல் குண்டாகி விடுகின்றனர். என்ன காரணம் தீர்வு என்ன? உடல் எடை உடனே குறைய மாத்திரைகள் சாப்பிட்டு அதன் பக்க விளைவாக கிட்னி ஒழுங்காக இயங்குவதில்லை. பெண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலில் தைராய்டு. பாரா தைராய்டு தொண்டை உள் பகுதியில் உள்ளது.

    தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். உடல் வளர்ச்சி ஒழுங்காக இருக்காது. சோம்பேறியாக இருப்பார்கள். தலைமுடி கொட்டும். இருதயத் துடிப்பு சீராக இருக்காது. எப்பொழுதும் வியர்வை வியர்த்துக் கொண்டேயிருக்கும். தைராலீய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் உடல் எடை குறைந்து கொண்டே வரும். கண்கள் பிதுங்கி நிற்கும். உடல் சோர்வுடன் காணப்படுவர்.

    பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதோடு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும். மன அமைதியின்றி தவிப்பர். பார்த்தீர்களா! இந்த தைராய்டு சுரப்பியால் உடல் எடை கூடுகின்றது, குறைகின்றது. இதற்குத் தீர்வு இந்த சூன்ய முத்திரையால் கிடைக்கும்.

    பெண்கள் உடல் எடை குறையவும், அழகாக திகழவும், தலை முடி கொட்டாமல் கரு கருவென்று வளரவும், கருப்பபை வியாதி நீங்கி குழந்தைப்பேறு பெறவும் இந்த சூன்ய முத்திரயை தினமும் மூன்று வேளை செய்யுங்கள். இதுதான் இளமையின் சூட்சுமம் (ரகசியம்). மறவாதீர்கள்.

    முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும்.

    பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.
    கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன்கள் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் அல்லது மூல நோய் ஏற்படலாம். கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்சத்து இருப்பதால்... இந்த நிலையில் உங்களை காக்க பயன்படுகிறது.
    கொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ... இல்லையோ... கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் பயனைடைகிறார்கள். அப்படி என்ன தான் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொய்யா பழம் தந்துவிடுகிறது? வாருங்கள் பார்க்கலாம்.

    1. இந்த கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தி என்பதை இந்த கொய்யா தருகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்க, இதனால் பல நோய்களிலிருந்து உங்களை இந்த கொய்யா பழம் காப்பாற்றுகிறது.

    2. கர்ப்பிணி பெண்கள் இரத்த அழுத்த விஷயத்தில் கவனத்துடன் இருத்தல் மிகவும் வேண்டிய ஒன்றாக அமைகிறது. கொய்யா பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது.

    3. கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24ஆம் வாரத்தில். இதனால், இரத்த சர்க்கரை நீரிழிவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க, கொய்யா சாப்பிடலாம்.

    4. கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன்கள் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் அல்லது மூல நோய் ஏற்படலாம். கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்சத்து இருப்பதால்... இந்த நிலையில் உங்களை காக்க பயன்படுகிறது.

    5. நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமான உணவை செரிமான மண்டலத்திற்குள் சரியான நேரத்தில் அனுப்ப கொய்யா உதவுகிறது. மேலும், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைக்கும் கொய்யா சிறந்த தாக அமைகிறது.

    6. கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், உங்களுக்கும், கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்குமான கண் குறைப்பாட்டை போக்க கொய்யா உதவுகிறது.

    7. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9ம் இருக்கிறது. இதனால், உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

    8. கொய்யா பழத்தில் வைட்டமின் சி, ஈ, கரோட்டினாய்ட், ஐசோ பிளேவனாய்ட், பாலிபீனால் என ஆக்சிஜனேற்ற பண்பு கொண்ட தன்மைகள் இருக்கிறது. இதனால், கிருமிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவாக அமைகிறது.

    9. கொய்யாவில் இருக்கும் நார்சத்து இதயத்துக்கு நல்லது. இதனால், உங்கள் இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடும். ஒருவேளை இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம்.

    10. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம். இந்த கொய்யா பழத்தில் தேவையான அளவிற்கு இரும்பு சத்து இருப்பதால், கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிட்டு வரலாம்.

    11. கொய்யா பழத்தில் கால்சியம் இருப்பதால், உங்கள் உணவு முறையில் கொய்யாவை சேர்த்துக்கொள்வது நல்லது.

    12. கொய்யா பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், காலை சுகவீனம் நீங்கும். உங்களுக்கு குமட்டல் எடுக்கும்போது, கொய்யாவை ஒரு கடி கடிக்கலாம். அதேபோல், விதை நீக்கி மோருடன் கலந்து சாப்பிட, வயிறு பிரச்சனை நீங்க, வாந்தியும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
    உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. சிலர் சென்ற மாதத்தில் வந்த மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் சிலருக்கு அந்த தேதியை ஞாபகம் வைத்துக் கொள்வது சற்று கடினமான காரியம். அதனால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகிறது என்பது குறித்த குழப்பம் இருக்கும். சில மாதங்களில் ஒரு வாரம் முன்கூட்டியே கூட மாதவிடாய் உண்டாகலாம்.

    ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது மாதவிடாய் சுழற்சி குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம். புதிய கர்ப்பத்தடை முயற்சி மேற்கொள்ளுதல் அல்லது வேறு சில காரணத்தினால் கூட மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு தோன்றலாம். ஆனால் உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து நீங்கள் அடுத்த சில தினங்களில் உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.

    உடலின் ஹார்மோன் மாறுபாடு காரணமாக, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு சார்ந்த பொருட்களைத் தேடி சுவைக்கும் உணர்வு அதிகரிக்கும். பொதுவாக அதிகம் இனிப்பு சேர்க்காதவர்கள் கூட சாக்லேட்டை தேடி பிடித்து சாப்பிடும் எண்ணம் கொள்வார்கள். மாதவிடாய் சுழற்சி முழுவதும் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சமச்சீரான உணவு அட்டவணையைப் பின்பற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் எளிதில் சமாளிக்கும்படியான நாட்களாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

    ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் மாதவிடாய் காலம் முழுவதும் அதிகரித்த சோர்வு காணப்படும். உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் காரணமாக உடல் இயல்பை விட அதிகமாக சோர்வாக உணரலாம். இது இயற்கையானது தான். இந்த சூழ்நிலையை அமைதியாக எதிர்கொண்டு, அதிகமான ஓய்வு எடுத்து கொள்ளலாம். உங்களை நீங்களே அவசரப்படுத்தி எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம்.

    சிலருக்கு பாதங்களில் வீக்கம் உண்டாகலாம். சில பெண்கள் தங்கள் அடிவயிறு, மார்பகம் போன்ற சில இடங்களில் வீக்கத்தை உணரலாம். சிலருக்கு கைகள், முகம், கால்கள் போன்றவையும் வீக்கமாக இருக்கும். உடலில் அதிக திரவம் தங்குவதால் இந்த நிலை உண்டாகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உடலில் வீக்கம் ஏற்படும்போது படுத்துக் கொண்டே இருக்காமல் உடலை அசைத்துக் கொண்டிருப்பதால் இந்த வீக்கம் குறையலாம். அதனால் நடைபயிற்சி, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் வீக்கம் குறையும்.
    ×