search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?
    X
    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?

    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா?

    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.    

    இது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.

    சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.

    தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.

    கட்டாயம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம். பிரச்சனை தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.

    தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை. 
    Next Story
    ×