என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பெண்கள் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.
    நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், சுற்றுலா செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர். இன்றும் சிலர் மாதவிடாய் ஏற்படுவதை உடலில் நடக்கும் சாதாரண ஆரோக்கிய நிகழ்வாக கருதுவதில்லை. இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.    

    மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன. மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது ஒவ்வாமையை உண்டாக்கும். பெண்களின் கர்ப்பப்பை பூ போல மென்மையானது. அதனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    பெண்கள் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு. கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும். எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.

    உங்களது ஆரோக்கிய பின்னனி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

    வெளிநாடுகளில் வலி நிவாரணிகள், ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் மாத்திரைகளை நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளில் வாங்க முடியாது. ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை. நாமே மருந்தின் பெயரை சொல்லி மாத்திரைகளை வாங்கிக்கொள்கிறோம். மாத்திரைகள் உண்டாக்கும் பின்விளைவுகளை பற்றி தெரியாமல் அதனோடு விளையாடி, ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறோம் என்பது தான் உண்மை.

    நீங்கள் இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால், பின்னாளில் உங்களுக்கு மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும்.
    மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய காரணமாகும்.
    நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்பு ஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர். வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

    முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திடீரென்று மூச்சு வாங்குதல், வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

    வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும். இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லும். எனவே இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இவ்வாறு கூடும்போது, இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ளலாம். இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். வலியில்லா மாரடைப்பை தவிர்க்கலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு. மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய காரணமாகும். பல பெண்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை. மாறாக தொலைக்காட்சியில் அதிக நேரம் மூழ்கிவிடுகின்றனர். அப்போது ஏதாவது நொறுக்குத்தீனியையும் சாப்பிடுகின்றனர். மேலும் இப்போதைய பெண்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். சிறிய வி‌‌ஷயங்களை கூட சகிக்கும் தன்மை இல்லை. எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபட வேண்டும்.
    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது.
    குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் இப்போதைய இளம் தாய்களுக்கு குழப்பம் உண்டு. அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்கிறது மருத்துவ அறிவியல்.

    தாய்ப்பால் கொடுக்கும் போதே அந்த தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதை தொடரலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கர்ப்ப காலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை தொடர்வதில் தவறில்லை.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்’ என்ற நிலையான சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியாவதை தடை செய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும்.

    புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கரு உருவாவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம். பிரசவத்துக்கு பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.

    சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கர்ப்ப கால மசக்கை எனும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை சமாளிக்கலாம். கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மிகத் தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது மீண்டும் கருவுற்ற நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் தாய்ப்பால் சீம்பாலாக மாற வாய்ப்புண்டு. அதை குடிக்கும் குழந்தை தாய்ப்பாலின் சுவையில் மாற்றத்தை உணரும். இதனால் குழந்தை பால் குடியை வெறுக்கலாம். சில நேரம் அதிக ஆர்வத்துடன் பால் குடிக்கலாம். ஒரு வேளை, பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுக்கும் குறைவாக இருந்து, அடுத்த கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலைத் தொடரும்போது குழந்தையின் எடை சராசரியாக அதிகரிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கலாம். இந்த நிலையில் குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கிறதா என்பதை கீழ்க்காணும் முறையில் உறுதி செய்யலாம். குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும். உடல் எடை வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சராசரியாக அதிகரிக்கும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை மலம், சிறுநீர் கழிக்கும். குழந்தை நன்றாகத் தூங்கும்.
    குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறி இருக்கும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

    குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் நிறம் மாறி இருக்கும். முதலில் அது சிவப்பு நிறத்திலும், பின் சற்று நிறம் குறைந்தும் இறுதியில் லேசான பழுப்பு நிறத்திலும் இருக்கும். அதன் பின் லேசான மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும். இறுதியில் இந்த மாதவிடாயானது இரத்தமாக இல்லாமல், அதிக உறைந்த நிலையிலும் உலர்ந்தும் இருக்கும். இது படிப்படியாக குறைந்து இறுதியில் நின்று விடும். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மோசமான துர்நாற்றம் வீசியதாக கூறுகிறார்கள்.

    இருப்பினும், இந்த மகப்பேற்று இரத்தப் போக்கானது ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும், ஆனால் சில பெண்களுக்கு அதற்கு மேலும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அது கவலைக்குரியதல்ல. இந்த வெளியேற்றங்களின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது எதாவது தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது இரத்தம் கட்டிகளாக வெளியேறினாலோ மருத்துவரை சந்தியுங்கள்.

    தாய்ப்பால் உடலில் உள்ள சுரப்பிகளை தூண்டுகிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கும் போது, உடலில் புரோலேக்ட்டின் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் வரை பாய்கிறது. புரோலேக்ட்டின் உடலிலிருந்து கரு முட்டை வெளிப்படுவதை தவிர்க்கிறது. இதனால் உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது.

    மாதவிலக்கு ஏற்பட்டாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இதனால் பாலின் சுவையில் மாற்றம் ஏற்படாது. மாதவிடாய் காலத்திலும் தாய்ப்பால் பாதுகாப்பானதே. இதன் காரணமாக தாய்ப்பாலின் அளவு குறையலாம். இது தற்காலிகமானதே தவிர நிரந்தரமல்ல. சிறிது நாட்களில் மீண்டும் பழைய படி அதிகரித்து விடும். இது உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. 
    பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.
    பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள். அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள். புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள். இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.  

    கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய் ஏற்படாது என்பது தான். அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும், பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.

    தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.

    1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய் விரைவில் ஏற்படும்.

    2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.

    சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.

    குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
    பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இம்மாற்றங்களால் பெண்களின் உடல் பலவித மாற்றங்களை, வடிவங்களை அடைகிறது; பெண்களின் மனமோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாற்றத்தை எட்டுகிறது. இந்நிலையில் பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    1. பெண்களே! உங்கள் இதயம் சாதாரண அளவை விட 12% பெரியதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய ஏற்படும்; உங்களுக்காக, உங்கள் குழந்தைக்காக..! இருதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் 9 வது மாதத்தில் நிகழும்..

    2. உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இருமடங்கு இரத்தத்தை பம்ப் செய்து, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    3. இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட அதிகரிக்கின்றன; சாதாரண நிலையை விட. ஆரோக்கியான நிலையை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள இந்த அதிகரிப்புகள் அவசியமே!

    இந்த கருத்துக்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், இவை உண்மையே! ஆகையால், கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் கவனம் காட்டி, உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவீராக..!
    அதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
     
    இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
     
    அப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
     
    கணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
     
    இதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்.
    உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாம் நிற்க, நடக்க, ஏன் நம்முடைய உருவமே எலும்பால் தான் உருவாகிறது. அப்படிப்பட்ட எலும்பு தேய்ந்து போனால், நாம் உருவமற்றவராகி விடுவோம். ஆகவே, எலும்பு தேய்மானத்தை தடுக்கும் வழிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

    இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும்போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால்போதும்.

    வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம்.

    பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

    வயது 30 ஐ தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின்-டி அதிகம் உள்ளது. வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்கவேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும். எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.

    புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துவிடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள்மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்.

    உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல், எந்தவித உடற்பயிற்சியும் இன்றி இருத்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. மேலும் கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு சிறுவயதிலேயே எலும்பு வலுவிழக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட் செய்யப்பட்ட துரித உணவுகள், குளிர்பானங்கள் குடிப்பதும் எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகிறது.

    எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒருவேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும்.

    பெண்களின் மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும். மெனோ பாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும். வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
    கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மன ரீதியிலான மாற்றங்களை சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த போஸ்ட்பார்ட்டம் காலத்திலும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள்.
    ‘போஸ்ட்பார்ட்டம்’ இந்த வார்த்தையை பலர் அறிந்திருப்போம். ‘பார்ட்டம்’ என்றால், ‘பிரசவம்’ என்று அர்த்தம்.

    பிரசவத்துக்கு பிறகான காலகட்டம் என்பதுதான் ‘போஸ்ட் பார்ட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த முதல் ஆறு வாரங்கள் வரையிலான காலத்தை, ‘ஆரம்ப நிலை போஸ்ட்பார்ட்டம்’ என்றும், அதற்கு அடுத்த மூன்று மாதங்கள் வரையிலான காலத்தை ‘டிலேய்டு போஸ்ட்பார்ட்டம்’ என்றும் சொல்கிறோம். கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மன ரீதியிலான மாற்றங்களை சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த போஸ்ட்பார்ட்டம் காலத்திலும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள்.

    ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது உடல் அளவில் என்னென்ன மாற்றங்களை சந்தித்தாரோ, பிரசவத்துக்கு பிறகு அதிலிருந்து அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறார். எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு இந்த பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

    இதன் காரணமாக அவர் மிகவும் சோர்வாக இருப்பார். இதுவே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தால் தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தை பராமரிப்பு என்று அழுத்த, அந்த தாய்க்கு தூக்கம் சரியாக இருக்காது.

    முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை பழக்கத்தில் இருந்தது. அதனால் வீட்டு பெரியவர்கள் வழிகாட்ட அத்தை, சித்தி என்று மற்ற பெண்மணிகள் ஒத்தாசை செய்ய, புதிதாக பூமிக்கு வரும் குழந்தையை ஒரு தாயால் நிம்மதியுடன் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அவரவர் தாயார் அல்லது மாமியார் மட்டுமே பிரசவத்துக்கு துணையாக இருக்கிறார்கள். எப்படி தன் மகளுக்கு அல்லது மருமகளுக்கு இதுபோன்ற சமயங்களில் தோள்கொடுக்க வேண்டும் என்று இவர்களில் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக, குழந்தையை சரியாக பார்த்துக்கொள்கிறோமா, இல்லையா என்கிற மனப் பதற்றத்துக்கு தாய் ஆளாகிவிடுகிறார்.

    இதுகுறித்த கவலையே அவரை பிரதானமாக ஆக்கிரமித்து கொள்வதால், பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும்.

    மூன்று மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பி பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்கு தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் ‘போஸ்ட்பார்ட்டம்’ காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லை’ என்று தாய் வருந்த வேண்டிய அவசியம் இல்லை.

    பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும் போது அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது கடமையாகும்..
    பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும் போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும். இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

    பெண்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள்


    `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால் தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும் கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும். “டீன் ஏஜ் பருவத்தினர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகள் இருக்கின்றன.

    `சரியான உணவைச் சாப்பிடுகிறோமா, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா?’ என்பதே அந்தக் கேள்விகள். `டீன் ஏஜ்’ பருவம் என்பது உணர்ச்சிக ளால் நிறைந்தது. அதனால், அவர்கள் எதையும் மிக எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அதே உணர்வுடன் உணவில் கட்டுப்பாடின்றி இருப்பது தவறு” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

    “பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் தொடங்கும் போதே பருவம் எய்தி விடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளு க்கு உணவின் மீதான கவனிப்பு அதிகம் தேவைப் படுகிறது. `டீன் ஏஜ்’ பெண்களுக்கு என்னென்ன உணவுகள் தேவைப்படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    * கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை, உடலின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் புத்துணர்ச்சி யுடன் செயல்பட முடியும்.

    * உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்த பட்சம் தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.

    * உடலின் இரும்புச் சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டைச் சாப்பிடலாம். இது `டீன் ஏஜ்’ பெண்களுக்கு, மாதவிடாய் கால சிக்கல் களைத் தீர்க்க உதவும். இல்லை யென்றால், ரத்தச் சோகை, உயரம் அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளை உட்கொள்ளலாம்.

    * `டீன் ஏஜ்’ பருவத்தினர் பலரும் பால் சார்ந்த பொருள்களை ஒதுக்கி விடுகின்றனர். பால், சீஸ், தயிர் போன்ற வற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் சத்துகள் இதயத்தைப் பாதுகாக்கும்; தசைகளை வலிமை யாக்கும்.

    * எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமையலாம். முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    * தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

    நேரத்துக்கு உணவு…

    * காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள் ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன் ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம். உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

    * மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தை களிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவர்கள் நேரம் தவறிச் சாப்பிடுகிறார்கள் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும் பாலானவர்கள், காலை உணவை 11 மணிக்கும் மதிய உணவை 4 மணிக்கும் சாப்பிடுகிறார்கள்.

    இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங் களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

    * ஒரு நாளைக்கான உணவை சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு மூன்று வேளை சாப்பிடுவது என இரண்டுமே சரியான உணவுப் பழக்கம் தான். ‘மூன்று வேளை உணவு’ என்ற கணக்கு, ஆறு என அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. ஒரு வேளை சாப்பிட வில்லை என்றாலும் வைட்டமின், கார்போ ஹைட்ரேட், தாதுச்சத்துகள் போன்ற உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.

    * ஸ்நாக்ஸ் பிரியர்கள் சிப்ஸ், பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நட்ஸ், பழங்கள், உலர் பழங்கள், சிறுதானிய லட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.

    சரியான உணவுப் பழக்கம்

    * பெரும்பாலான கல்லூரி மாணவிகள், பஃப்ஸ் மற்றும் டீ, காபி வகைகளைப் பசி எடுக்கும் போது உட்கொள்வதுண்டு. இதில் டீ, காபிக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது. ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் டீ, காபி குடித்தால் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

    * பசி எடுத்தால், அலட்சியப் படுத்தாமல் கண்டிப்பாகச் சாப்பிட்டு விட வேண்டும். சரியான நேரத்தில் பசி எடுக்க வில்லை என்பதற்காக சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பசியின்மைக் கான காரணத்தை அறிந்து தீர்வு காண வேண்டும்.

    * உணவைப் போலவே உடற் பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் ரத்தம் சுத்திகரிப் படுவதுடன் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்; மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். குறிப்பாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

    * எடை அதிகரிக்கும் போது, பி.எம்.ஐ அளவுபடி உயரமும் எடையும் சீராக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.
    கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.
    ‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். ஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.

    ‘‘கருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.

    ‘வலியற்ற’ பிரசவத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் தனித்துவமானது. தாயாகப்போகும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு அழகான, இயல்பான சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப்பிறப்பை கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

    ‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

    முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது
    தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் எதுவென்று அறிந்து கொண்டால் விரைவில் கர்ப்பமடையலாம்.
    தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.

    ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிவருகிறது..   
     
    * பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின்கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.   
     
    * கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.   
     
    * இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது? என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம். இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    ×