search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்
    X
    பிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

    பிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

    கர்ப்பம் தரித்த அந்த நிமிடம் முதல், பிரசவம் முடிந்த பின் தாய்ப்பால் சுரப்பு நிற்கும் வரை பெண்களின் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.
    கர்ப்பம் தரித்த அந்த நிமிடம் முதல், பிரசவம் முடிந்த பின் தாய்ப்பால் சுரப்பு நிற்கும் வரை பெண்களின் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் கர்ப்ப காலத்திலும், அதன் பின்னரும் பெண்களில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இப்படி நிகழும் மாற்றங்களில், பிரசவத்திற்கு பின் பெண்களின் வாழ்வில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும், பாதிப்பினை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்..!  

    கர்ப்பகால, பிரசவ கால ஹார்மோன் மாற்றங்களால், ஹார்மோனின் சமநிலையற்ற தன்மையால் அல்லது தாய்ப்பால் சுரப்பிற்கு காரணமான ஹார்மோன்களால், பெண்களின் மார்பகங்களில் புண்கள், தோலுரிதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து, உங்களுக்கு வலியினை உண்டாக்கலாம்; இந்த புண்கள், தோலுரிதல் அனைத்தும் அவையே சில காலத்தில் மறைந்துவிடும். மார்பகங்களின் அளவு மறுபடலாம்.

    பிறப்புறுப்பில் வெளியேறும் திரவங்களில் மற்றும் திரவம் வெளியேறும் காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். சுகப்பிரசவம் நிகழ்ந்திருந்தால், பிறப்புறுப்பில் 2 வாரங்களுக்கு வலி இருக்கும்; பின் சரியாகிவிடும்.

    பிரசவ கால ஹார்மோன் மாற்றத்தால், கர்ப்ப காலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதில் தொந்தரவுகள் நேரலாம். சில புதிய ஹார்மோன்கள் உடல் எடையை குறைவதை தாமதப்படுத்துவதாய் உள்ளன.

    கர்ப்ப காலத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்களால், பெண்களுக்கு அதிகமான முடி உதிர்வு ஏற்படலாம். இப்பிரச்சனைகளால் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    பிரசவ காலா ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. சரியான உறக்கம் இல்லாததால் அவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
    Next Story
    ×