search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உள்ளாடை மீதான பெண்கள் விழிப்புணர்வு
    X
    உள்ளாடை மீதான பெண்கள் விழிப்புணர்வு

    உள்ளாடை மீதான பெண்கள் விழிப்புணர்வு

    பெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
    பெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்ளாடையின் தரமும், கட்சிதமாகப் பொருந்த உதவும் அதன் அளவும்தான் மேலாடைக்கு எடுப்பான தோற்றத்தைத் தரும். எனவே கடைக்குச் சென்று உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் காட்டக்கூடாது. நாப்கின்களை பெண்களே முன்வந்து வாங்கிச்செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல உள்ளாடை மீதான விழிப்புணர்வும் பெண்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம்.

    பருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

    உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.

    தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க 'அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் 'பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்படிப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக்களை வைத்திருத்தல் அவசியமாகும்.
    Next Story
    ×