என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்களின் மனமானது கர்ப்பகாலத்தில் பெரிய மாற்றத்தை அடைகிறது. அதாவது இந்நிலையில் பெண்களின் இதயம் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
    கர்ப்பம் என்பது பெண்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த காலத்தில் பெண்களில் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களால் பெண்களின் உடலில் மட்டுமல்லாமல் வடிவத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று இந்த பதில் பார்க்கலாம்.

    பெண்களின் மனமானது கர்ப்பகாலத்தில் பெரிய மாற்றத்தை அடைகிறது. அதாவது இந்நிலையில் பெண்களின் இதயம் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    முதலாவது உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இரண்டு மடங்கு இரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இரண்டாவதாக பெண்களின் இதயம் சாதாரண அளவை விட 12சதவீதம் பெரியதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயம் பெரியதாவதாக மாறுவதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய தூண்டுகிறது.

    உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்காகவும் இந்த இதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் ஒன்பதாவது மாதத்தில் ஏற்படுகிறது.

    மூன்றாவதாக இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட சாதாரண நிலையை விட அதிகமாகின்றன. இந்த மாற்றங்கள் ஆரோக்கியான குழந்தையை பெற்று எடுக்க உதவுவது மட்டுமல்லாமல் உங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

    இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் அதிக கவனம் செலுத்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள்.

    பிரசவம் ஆன பெண்கள் பலருக்குள்ளும், முக்கியமான இரண்டு கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகள் என்ன? அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.
    ஒன்று, ‘பிரசவம் முடிந்து அடுத்து மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் முன்பே மீண்டும் கர்ப்பமாகி விடுகிறார்களே, அதற்கான காரணம் என்ன?’ என்பது. இன்னொன்று ‘பிரசவத்திற்கு பின்பு எந்த கருத்தடை முறையை கையாளவேண்டும்’ என்பது. அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.

    பிரசவத்திற்கு பின்பு பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மீண்டும் பழைய நிலைய அடைய, மூன்று மாதங்கள் வரை தேவைப்படும். ஆனாலும் மூன்று, நான்கு வாரங்களில் மீண்டும் தாம்பத்திய உறவை மேற்கொள்ளலாம் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் மூன்று மாத இடைவெளி தேவை என்று சொல்கிறது.

    பிரசவத்திற்கு பின்பு முதல் முறையாக கருமுட்டை வெளியாகி, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மாத சுழற்சி மீண்டும் தொடங்கும். பிரசவத்திற்கு பின்பு முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு, முதல் கருமுட்டை உருவாகும் காலத்தில் தாம்பத்தியம் மேற்கொண்டால் மீண்டும் தாய்மைக்கான வாய்ப்பு உருவாகிவிடலாம். அதனால் பிரசவமான பெண்கள் முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கருத்தடை முறை எதையாவது கடைப்பிடிப்பது நல்லது.

    பிரசவத்திற்கு பின்பு கர்ப்பத்தடையை ஏற்படுத்திக்கொள்வதற்காக பெண்கள் பல்வேறு முறைகளை மேற்கொள்கிறார்கள். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன் மாத்திரைகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். கர்ப்பத் தடைக்கு ஊசி மருந்துகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் சில பக்கவிளைவுகளை உருவாக்கக்கூடியவை. சிலர் இவைகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் தாய்மையடைய விரும்பினால், தாய்மை பல வருடங்களாக தள்ளிப்போகும் சூழ்நிலையும் உருவாகிறது.

    தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் ‘காப்பர்-டி’ பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்களும், பெண்களும் அவரவருக்குரிய கருத்தடை உறைகளையும் பயன்படுத்தலாம். காப்பர்-டி பொருத்துவதாக இருந்தால், அதற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனென்றால் முன்பு ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால் அதனால் ஒருவேளை காப்பர்-டி பொருத்தும் இடத்தில் பக்கவிளைவுகளின் பாதிப்புகள் தென்படலாம். அதை டாக்டர் பரிசோதித்த பின்பு காப்பர்-டி பொருத்துவது நல்லது. அடுத்து குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் பெண்ணுக்கு ‘டியூபல்லிகேஷன்’ அறுவை சிகிச்சையோ, ஆணுக்கு ‘வாசக்டமி’ அறுவை சிகிச்சையோ செய்துகொள்ளலாம்.
    ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
    பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன.

    அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள் அதற்கான காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.

    பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

    வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.

    போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இலவங்கப்பட்டையை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

    பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டன. குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.

    சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்

    முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.

    பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.

    பூண்டு உணவில் நாம் அதிகம் சேர்த்ததுக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள பொருளாகும். இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.

    வெற்றிலையில் பல மகத்துவங்கள் அடங்கி உள்ளன. பிள்ளைப் பேறு பெண்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றிலை ஒரு வரபிராசாதம் என்றால் மிகையில்லை. வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது.

    இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருக்கின்றது.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருகின்றது. கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதனால், அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படுகின்றது.

    உடலில் பல மாற்றங்கள், குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் இருக்கும். குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலேயும் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

    கர்ப்பிணி பெண்களுக்கு பல நேரங்களில், கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.

    கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. அதிலும் குறிப்பாக போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.
    கர்ப்பகாலம் பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், முன்பு உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது.
    கர்ப்பகாலம் பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், முன்பு உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது. கர்ப்பகாலத்தில் வயிறு பெரிதாகிவிடுவதால் அதற்கு ஏற்ற சவுகரியமான உடைகள் அணியும்போது அவை கூடுதல் அழகு தராதவைகளாக இருந்தன. தொள தொள உடைகளுடனே பெண்கள் வலம் வந்தனர். தற்போது கர்ப்பிணிப் பெண்களும் மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கான உடைகளை பற்றிய விவரம்:

    கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது மேக்சி டிரஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்புகிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில், அதிக அழுத்தம்கொடுக்காத சிறிய ‘பெல்ட்’ அணிந்துகொள்ளலாம்.

    கூடுதலான பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் ‘ஜம்ப் சூட்’ அணிந்துகொள்ளலாம். அதற்கு பொருத்தமான டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். குண்டாகத் தெரியும் கர்ப் பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.

    பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்கள் அவர்களுக்கு அதிக சவுகரியத்தை தரும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங் களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் கூடுதல் அழகுதரும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ஒன் பீஸ் உடை, கர்ப்பிணிகளுக்கு அம்சமாக பொருந்தும்.

    ‘ரைப் டிரஸ்’ வகைகள் கர்ப்பிணிகளுக்கு ரசனையான தோற்றத்தையும், சவுகரியத்தையும் தரும். கர்ப்பகாலத்தில் மட்டுமின்றி பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

    கர்ப்பிணிகள் சாதாரண நிலை யில் அணிந்துகொள்ள ‘ஸ்கர்ட்’ பயன்படுத்தலாம். வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.

    பெண்கள் வழக்கமாக அணியும் இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. அதற்கு மாற்றாக கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள மெட்டர்னிட்டி ஜீன்ஸ் வடிவமைக்கப்படுகின்றன. நெகிழக்கூடிய மெட்டீரியலைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள இது சவுகரியமாக இருக்கும். அதற்கு ஏற்ற மேலுடை அணிந்துகொண்டால் வயிறு பெரிதாக தோன்றாது.
    மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.
    பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு தயாராகும்போதுதான் தங்கள் உடல்மீது அக்கறைகொள்ளத் தொடங்குகிறார்கள். முதலில், உச்சி முதல் பாதம் வரை தாங்கள் அழகாக ஜொலிக்கவேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அடுத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து கட்டுடலுடன் தோன்ற விரும்புகிறார்கள். அதோடு நல்ல உணவு முறைக்கு திரும்பி தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆர்வம்காட்டுகிறார்கள். அப்போது ஒருபுறம் ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். மறுபுறம் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள். மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.

    உணவுக் கட்டுப்பாடு: உணவுக் கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம். ஆனால் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, தளர்ந்து, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கி விடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும். அதற்குரிய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏன்என்றால் உணவு முறை என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு தனி நபரின் உடல்வாகு, வயது, வேலை, தூக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நிபுணர்கள் உணவை பரிந்துரைக்கிறார்கள். அதனால் உங்களுக்கான சரியான உணவை பரிந்துரைக்க அதற்குரிய நிபுணரை நீங்கள் சந்திப்பதே சிறந்தது. அதற்கு நீங்கள் விரும்பாவிட்டால் சத்தான உணவை வீட்டிலே சமைத்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்வியல் முறைகளையும் சரியாக்கிக்கொள்ளுங்கள்.

    எடை குறைப்பு: உடல் குண்டாக இருப்பவர்கள், ‘பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது’ என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும். எடை குறையும்போது மணப்பெண்களுக்கு தன்னம்பிக்கையும், அழகும் அதிகரிக்கும்.

    எல்லா பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக இருப்பதில்லை. சிலர் போதுமான எடையின்றி ஒல்லியாகவும் தோன்று கிறார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதி கரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ‘வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகிவிடும்.

    குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்து விடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

    வீட்டிலே செய்யலாம்: ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன்தரும்.

    ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கவேண்டும்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், ‘காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

    முதல் ஐந்து நிமிடங்கள்: பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    மணப்பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். கட்டுடலையும், ஆரோக்கியத்தையும் மேஜிக் போன்று உடனடியாக பெற்றுவிட முடியாது. அதற்கு கடுமையான பயிற்சியும், முயற்சியும், போதுமான கால அளவும் தேவை. அதனால் திருமணம் பேசி முடித்த பின்பு உடலை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து பெண்கள் அலட்சியம் காட்டாமல், எப்போதும் உடலில் அக்கறை செலுத்துங்கள். அதை இன்றே இப்போதே நடைமுறைப்படுத்துங்கள்.
    மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
    பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா? 

    மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள் ளன.

    * கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும். எனவே கூன் போட்டு உட் காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.

    * தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

    * கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

    மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன
     
    * வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

    * ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மா த்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். 

    * முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.

    * தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சி. தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.
    பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
    பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள்.  இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீன் ஏஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கருப்பை கட்டிகள் இருந்தால், அந்த முட்டைகளானது சரியாக முதிர்ச்சி அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்காமல்,

    அந்த முட்டைகள் கட்டிகளாக மாறி விடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத் தன்மையை உண்டாக்குகின்றன. அது மட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில்  ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

    அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

     * சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    * உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.

    * ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.

    * முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.

     * குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.

    * ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.

    * திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

    அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.

    * பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
    கொரோனா ஊரடங்கு மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக மகப்பேறு டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.
    கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் வாழ்வியலையும் புரட்டி போட்டுவிட் டது. வீட்டில் முடங்கியதால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    குறிப்பாக மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மகப்பேறு நிபுணர் டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நோய் அறிகுறிகளுக்கு மனஅழுத்தம், சீரான உடற்பயிற்சியின்மை, சரியான நேரத்துக்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது, முறையற்ற தூக்கம் போன்றவை காரணிகளாக இருக்கின்றன.

    எங்கள் ஆஸ்பத்திரிக்கு தற்போது அதிக இளம் பெண்கள் சினைப்பை வியாதிகளுக்காக வருகிறார்கள். அவர்கள் அதிக மனஅழுத்ததுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. இதில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.

    ஏற்கனவே பெண்கள் சினைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஊரடங்கு அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு அதிக நாட்கள் உதிரபோக்கும் இருந்தது.

    ஊரடங்கு காலத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டில் அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களில் வசிக்கும் தங்களின் பெற்றோர்கள் பற்றி கவலைப்பட்டுள்ளனர்.இது போன்ற பல்வேறு மனரீதியான பிரச்சினைகளால் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என்றார்.

    இன்னொரு டாக்டர் கூறும்போது, ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் பெண்களின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. முழு நேரமும் சமையலறையில் கிடந்ததால் தேவைக்கு அதிகமான உண வுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
    கொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.
    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பரிசோதனை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தனிநபர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். ஆனால் மாநிலங்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

    * வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்பும் தனிநபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவது கட்டாயம் ஆகும். தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களை அனுமதிக்க வேண்டும்.

    * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், குறிப்பாக தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் துரித பரிசோதனை (ஆன்டிஜன் பரிசோதனை) நடத்தப்படவேண்டும்.

    * கொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.

    * தாய்க்கு கொரோனா உறுதியானால் முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் குழந்தையை தூக்கும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

    * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும். நுழைவுப்பகுதியில் உடல்வெப்ப பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    * கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால நோய் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    * கொரோனா பரவலுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * பரிசோதனையை பொறுத்தமட்டில் முதலில் துரித பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதன்பிறகு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * துரித பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்த போதிலும் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் மறுபடியும் துரித பரிசோதனையோ அல்லது ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையோ செய்து கொள்ள வேண்டும்.

    * ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கும் நபர்கள், நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆபரேஷனுக்கு முன்பு 14 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * கடந்த 14 நாட்களில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
    ‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
    ‘ஏன்.. எப்போது பார்த்தாலும் ‘லெக்கிங்ஸ் அணிந்து வருகிறாய்?’ என்று சில பெண்களிடம் கேட்டால், ‘என் ‘வார்ட்ரோப்’பில் லெக்கிங்ஸ் மட்டுமே இருக்கிறது’ என்று பதில் சொல்லும் நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இளம் பெண்களிடம் மட்டுமே மவுசு பெற்றிருந்த இந்த ஆடை, தற்போது நடுத்தர வயது பெண்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது.

    லெக்கிங்ஸ் மேற்கத்திய நாட்டு பெண்களின் விருப்ப உடை. வருடத்தின் பெரும்பகுதி நாட்களை குளிரில் செலவிடும் அவர்கள் தங்கள் சருமத்தில் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக லெக்கிங்சை அணிந்து வருகிறார்கள். உடற்பயிற்சிக்கும் அது ஏற்ற உடையாக கருதப்பட்டதால், எல்லா நாட்டு பெண்களும் அதனை விரும்பத் தொடங்கியதோடு எல்லா காலநிலையிலும், எப்போதும் அணிந்துகொண்டிருக்கிறார்கள். உடலோடு ஒட்டி இருப்பதால் பயணத்திற்கு ஏற்றதாகவும் பெண்கள் இதனை கருதுகிறார்கள். ‘பிட்-இன்-ஷேப்’ என்பது லெக்கிங்சின் அடிப்படையான விஷயமாக இருப்பதால், இளம்பெண்களின் அத்தியாவசிய தேர்வாகிவிட்டது.

    கணுக்கால் வரையுள்ள லெக்கிங்ஸ் அதிக அளவில் விற்பனையானாலும், கால்களில் பாதிவரை (அதாவது மூட்டுவரை) உள்ளவைகளும் பெண்களை கவஇரத்தான் செய்கின்றன. ‘ஸ்பான்டெக்ஸ்’, அதாவது ‘லைக்ரா’ என்ற பாலியூரித்தின் இழைகளில் லெக்கிங்ஸ் தயாராகிறது. இது நெகிழ்வுத்தன்மை (எலாஸ்டிக்) கொண்டது. ஐந்து மடங்கு அளவுக்கு நெகிழ்வதோடு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். நைலான், காட்டன், சில்க், கம்பளி போன்றவைகளில் ஏதாவது ஒன்றில் ஸ்பான்டெக்ஸ் இழைகளை சேர்த்து லெக்கிங்ஸ் தயாராகிறது.

    பெண்களின் கால் வடிவமைப்பை அப்படியே எடுத்துக்காட்டும் தன்மையை அது கொண்டிருப்பதால், அவ்வப்போது ‘லெக்கிங்சை’ சுற்றி கவர்ச்சியான விவாதங்களும் தோன்றுகின்றன. ஆனால் இந்த கோடைகாலத்தில் இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.

    கோடைகாலத்தில் பெண்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கால் களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சான் உருவாகும். இத்தகைய ‘பங்கஸ்’க்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த பகுதியில் காற்று பட வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

    பெண்கள் கால் இடுக்குப் பகுதியில் ‘பங்கஸ்’ ஏற்படுவதை தவிர்க்க தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.

    லெக்கிங்ஸ் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று கருதும் பெண்கள், அதனை தேர்ந் தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பருத்தி இழைகள் சேர்த்தவைகளை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் நரம்பு இறுக்கம், சரும பாதிப்பு, தசைவலி போன்றவை தோன்றும்.

    பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘லெக்கிங்ஸ்’ வகையான ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இது பல்வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எந்த வகையான ‘லெக்கிங்ஸ்’ ஆக இருந்தாலும் அதனை அடிக்கடி துவைத்து நன்றாக உலரவைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் அணிந்து கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

    இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத்திறனை பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும். வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் தொடர்ச்சியாக அதை அணிவதை தவிர்ப்பதோடு அவ்வப்போது துவைத்து, உடுத்தவும் பழகிக்கொள்ளுங்கள். ஜீன்ஸ், லெக்கிங்ஸ் இருவகை ஆடை களையும் துவைப்பதிலும் கவனம் தேவை. வாஷிங் மெஷினில் இவைகளை போட்டு துவைக்கும்போது அவைகளில் இருக்கும் சோப் துகள்கள் முழுவதும் நீங்காது. முழுவதும் நீங்காத நிலையில் உள்ள ஆடைகளை உடுத்துவது நல்லதல்ல. அதனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவைகளை வாஷிங் மெஷின் அலசிய பின்பு, மீண்டும் வெளியே எடுத்து இருமுறை நன்றாக தண்ணீரில் அலசி, உலர வைத்து பயன்படுத்துங்கள்.
    ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.
    மனிதனின் நாகரீகம் முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் விளைவு ஆண்மை குறைவு. பல குடும்பங்கள் குழந்தை இல்லாமல் அவதிபடுகின்றனர். எனவே பிறகும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலுக் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வதே சிறந்தது. 

    எனினும் சிலர் தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசை படுவது உண்டு. அது போன்ற சமயங்களில் அவர்களது மனைவி அல்லது குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

    வெளி நாடு நிறுவனம் ஒன்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர் ஆண் குழந்தையை சுமக்கிறார் என்று அர்த்தம். கர்ப்பமாக இருக்கும் பொது பெண்களின் மார்பகம் பெரிதாகும்.

    அதற்கு காரணம் குழந்தைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் சுரப்பதற்கு மார்பகங்கள் பெரிதாகும். வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள். மேலும் கால் பாதங்கள் அதிக விறைப்புடனும், அதிக குளிர்ச்சியுடனும் இருந்தால் ஆண் குழந்தை பிறப்பது உறுதி. கர்ப்பமாக இருக்கும் பெண் இடது பக்கம் தூங்க விரும்பினால், அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

    பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண் , ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அந்த பெண்ணின் உடல் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே !

    உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப் படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

    ×