search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனா ஊரடங்கால் இளம்பெண்களிடம் அதிகரித்துள்ள உடல் எடை
    X
    கொரோனா ஊரடங்கால் இளம்பெண்களிடம் அதிகரித்துள்ள உடல் எடை

    கொரோனா ஊரடங்கால் இளம்பெண்களிடம் அதிகரித்துள்ள உடல் எடை, கர்ப்பப்பை கோளாறுகள்

    கொரோனா ஊரடங்கு மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக மகப்பேறு டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.
    கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் வாழ்வியலையும் புரட்டி போட்டுவிட் டது. வீட்டில் முடங்கியதால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    குறிப்பாக மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மகப்பேறு நிபுணர் டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நோய் அறிகுறிகளுக்கு மனஅழுத்தம், சீரான உடற்பயிற்சியின்மை, சரியான நேரத்துக்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது, முறையற்ற தூக்கம் போன்றவை காரணிகளாக இருக்கின்றன.

    எங்கள் ஆஸ்பத்திரிக்கு தற்போது அதிக இளம் பெண்கள் சினைப்பை வியாதிகளுக்காக வருகிறார்கள். அவர்கள் அதிக மனஅழுத்ததுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. இதில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.

    ஏற்கனவே பெண்கள் சினைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஊரடங்கு அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு அதிக நாட்கள் உதிரபோக்கும் இருந்தது.

    ஊரடங்கு காலத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டில் அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களில் வசிக்கும் தங்களின் பெற்றோர்கள் பற்றி கவலைப்பட்டுள்ளனர்.இது போன்ற பல்வேறு மனரீதியான பிரச்சினைகளால் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என்றார்.

    இன்னொரு டாக்டர் கூறும்போது, ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் பெண்களின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. முழு நேரமும் சமையலறையில் கிடந்ததால் தேவைக்கு அதிகமான உண வுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
    Next Story
    ×