என் மலர்
பெண்கள் மருத்துவம்
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வளைகாப்பு, சீமந்தம் என்று சொல்லி அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க் கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப் போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்குக் குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம். அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்தப் பெண்ணால், குழந்தைக்கு முழுமையாகத் தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்குத் தூக்கம் ஒரு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கும். இதைச் சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி
ஓய்வெடுப்பது ஒன்றுதான்.
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்’ என்கிற மனநல சிக்கல் தாக்கலாம். தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.
சிலருக்குப் பிரச்னை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.
பெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எந்த வகையான வயிற்று வலிக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்று பார்க்கலாம்.
பெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எல்லாருடைய வயிற்று வலிக்கும் காரணங்கள் வேறு வேறு. காரணங்களுக்கேற்ப சிகிச்சைகளும் வேறுபடும்.
கருமுட்டை வெளியாகிற நாட்களில், அதாவது மாதவிலக்கு முடிந்த பத்து நாட்களில் இடுப்புப் பகுதியில் வலி வரும். இது பயப்பட வேண்டிய வலியல்ல. ஒன்றிரண்டு நாட்களில் தானாகச் சரியாகிவிடும். குழந்தை வேண்டிக் காத்திருப்போருக்கு அந்த நாளில் உறவு கொள்ள வேண்டும் என உணர்த்துகிற அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
Premenstrual Syndrome எனப்படுகிற பி.எம்.எஸ். பிரச்சனையின் அறிகுறியாகவும் இடுப்பு வலி ஏற்படும். இந்த வலி இடுப்பில் மட்டுமின்றி, பின் முதுகுப் பகுதிக்கும் பரவும். ஒன்று முதல் 3 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பையானது திசுப்படலம் ஒன்றை உருவாக்கும். அந்தப் பகுதியில்தான் கருவானது பதிந்து வளரும்.
கருத்தரிக்காத பட்சத்தில் அந்தப் படலம் உதிர்ந்து, வெளியேறும். கர்ப்பப் பையானது அந்தத் திசுப்படலத்தை சிரமப்பட்டு வெளித்தள்ளுவதால் ஏற்படுகிற வலியே அது. இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண மாத்திரைகளோ, வெந்நீர் ஒத்தடமோ போதும். உடற்பயிற்சி செய்வதும் வலியிலிருந்து நிவாரணம் தரும்.

தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். சினைக் குழாய்களில் கருத்தரிக்கும்போதும் இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான வலி ஏற்படும். உதிரப்போக்கு, வாந்தி, தலைசுற்றல் போன்றவை கூடுதலாக சேர்ந்து கொள்ளும். இது உடனடியாகக் கவனிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சனை. இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம்.
Pelvic inflammatory disease எனப்படுகிற பிரச்னையும் இடுப்பு வலியை அறிகுறியாகக் காட்டும். இந்தப் பிரச்சனை குணப்படுத்தக் கூடியதே. கவனிக்காமல் விட்டால் கர்ப்பப்பை, சினைப்பைகளை முழுமையாகப் பாதிக்கலாம். வயிற்று வலி, காய்ச்சல், பிறப்புறுப்பில் அசாதாரணக் கசிவு, சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி போன்றவையும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். தீவிரமானால் சிகிச்சை தேவைப்படலாம்
ஃபைப்ராய்டு பிரச்சனையின் மிக முக்கிய அறிகுறியே இடுப்பு வலிதான். கட்டி போன்ற ஃபைப்ராய்டுகள், புற்றுநோய் அபாயம் இல்லாதவை. 30 முதல் 40 வயதுப் பெண்களுக்கு இது மிகவும் சகஜம். சில பெண்களுக்கு அதிகமான ரத்தப் போக்கு, வயிறு மற்றும் இடுப்பு வலி, போன்றவையும் இருக்கும். அப்படி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
பரம்பரைத் தன்மை, பணிச்சுமை, அடிக்கடி இடம் மாறுதல், ஊர் மாறுதல், குடும்பத்தில் வறுமை, குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், பாலியல் தொல்லைகள், பெற்றோருடன் அல்லது புகுந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாதது, தம்பதிகளுக்குள் பிணக்கு, கணவரின் இரண்டாம் திருமணம், குடிப்பழக்கம், மனைவியை அடித்தல், திட்டுதல் போன்ற தீயநடத்தைகளின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், ஒவ்வாத குடும்பச் சூழல், குடும்பத்திலும் சமூகத்திலும் ஆதரவற்ற நிலை, உறவுமுறை சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வு, நெருங்கிய உறவுகளில் அல்லது நட்பில் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரிவுகள், பண இழப்பு, பணி இழப்பு, முதல் பிரசவ பயம், சென்ற பிரசவத்தில் ஏற்பட்ட கொடிய அனுபவங்கள், உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்றவற்றால் மனம் பாதிக்கப்படுவது இயல்பு.
* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.
* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.
* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.
* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.
* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
புத்தாண்டில் இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
பெண்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அதை அவர்கள் தங்கள் புத்தாண்டு உறுதி மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்கள்!
பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்த்துவிடக்கூடாது. அதில் வழக்கமான அரிசி உணவு களுக்குப் பதில் தானியங்களையும், பச்சை காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஒரு கப் பழச்சாறு, வேகவைத்த முட்டை, பால் அல்லது தயிர், சிறிதளவு கொழுப்பு கலந்த உணவு ஆகிய அனைத்தும் காலை உணவில் இடம்பெறவேண்டும். இந்த சரிவிகித சத்துணவை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் சிறிதளவு இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும்.
வீட்டில் உள்ள ஆண்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்வார்கள். அதை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல், அவர்களும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் நெகிழ்ச்சியாகும். எலும்புகளும் வலுவாகும். நாள் முழுக்க உற்சாகம் கிடைக்கும்.
தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகவேண்டும். இது ரத்தத்தை சுத்தி செய்து, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். சரும அழகிற்கும் தண்ணீர் பருகவேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகினால் சிறுநீர் பாதை தொற்றும் ஏற்படாது.
பெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு ஒரு கப் பால் பருகுங்கள். டாக்டர் அனுமதியோடு தினமும் ஒரு கால்சியம் மாத்திரை சாப்பிடலாம். பால் மற்றும் பால் வகை பொருட்களில் இருக்கும் கால்சியம் மட்டும் போதாது, காய்கறிகளில் இருக்கும் கால்சியமும் உடலுக்கு தேவை. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறைந்தால் மன அழுத்தம் தோன்றும். எளிதாக ஜீரணமாகக் கூடிய பிஸ்கெட், சாக்லேட் போன்றவைகளை உடனடியாக சாப்பிடும் விதத்தில் வைத்திருப்பது நல்லது. வைட்டமின் சி சத்து தினமும் உடலுக்கு தேவைப்படுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களிலும், காய்கறிகளிலும் இந்த சத்து இருக்கிறது.
உப்பு, இனிப்பு இந்த இரண்டையும் முடிந்த அளவு பெண்கள் உணவில் இருந்து அப்புறப் படுத்திவிடவேண்டும்.
சோர்வு, தலைசுற்றுதல், தலைவலி, தளர்ச்சி போன்றவை இருந்தால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ரத்த சோகையால் முடியும் உதிரும். அவர்கள் ஈரல், கீரை வகைகள், நெல்லிக்காய், திராட்சை போன்றவைகளை அதிகம் சாப்பிடவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இரும்பு சத்து மாத்திரைகளும் சாப்பிடலாம்.
உடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம். தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும். பிரஷ் பழையதாகிவிட்டால் மாற்றிவிடவேண்டும். பற்களின் ஆரோக்கியத்திற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் நல்லது.
கொழுப்பு என்றாலே பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அவசியமாகிறது. நமது மூளையின் 60 சதவீதத்தை கொழுப்பு திசுக்கள்தான் நிர்மாணிக்கிறது. அதனால் வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பு கொண்ட பொருட்களை மட்டும் தவிர்த்திடுங்கள்.
உடல் மெலிய வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறுக்குவழி எதையும் கடைப்பிடிக்கக்கூடாது. அது உடல் மெட்டோபாலிக் சிஸ்டத்தை பாதிக்கும். ஜீரணத்தில் கடுமையான சிக்கலை தோற்றுவிக்கும்.
பெண்கள் குழந்தை பிறந்த பிறகு, வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்கள் குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.
பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.
கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.
கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும்.
மேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.

சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது. குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்.
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.
பாட்டி, அம்மாவுக்கு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருந்தால், அதிகக் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.
நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.
ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும்.
பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும் குறைவான, ஆரோக்கியமான உடல்வாகைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 65 சதவிகிதம் பெண்கள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் என பல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். கூடவே தனிமை உணர்வு, மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனதுக்கும் நிம்மதியின்மையைத் தந்துவிடும்.
இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான் எலும்புகளின் கால்சியம் அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் கால்சியம் குறையும். சாதாரணமாக தினமும் 1,000 மி.கி கால்சியம் தேவைப்பட்டால், மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியம். மாதவிடாய் முடியும் நேரத்தில் கால்சியம் மட்டும் போதாது; அதை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை.
* காலை - நீராகாரம் அல்லது தேநீர்... முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு இரண்டு.
* காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் இரண்டு, ஒரு வாழைப்பழம்.
* மதிய உணவு - கருங்குறுவை அல்லது மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி அல்லது வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை / பசலைக் கீரை, சுரைக்காய் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு.
* மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டலுடன் தேநீர்.
* இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் பால் சேர்த்துக்கொள்ளலாம்).
இவற்றை மட்டும் தினமும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும்.
வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்யும் பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை.
தன் கணவன், தன் குழந்தை, தன் வீடு என்று தன் வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்பவள் பெண். காலையில் எழுவது முதல், இரவு தூங்கச் செல்வது வரை தன் குடும்பத்தினர் நலன் ஒன்றுக்காகவே தீவிரமாக உழைப்பவள்.
குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரத்யேக உணவு தயாரித்துக்கொடுப்பது, மருந்து மாத்திரைகள் தருவது என்று அவர்கள் குணம் பெற ஓயாது கவனம் செலுத்தும் குடும்பத்தலைவிகள், தங்கள் உடல்நலத்தைப் பராமரிக்கிறார்களா என்றால், இல்லை.
உடல்நிலை சரி இல்லாவிட்டால்கூட ஏதேனும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு, சிலர் அதைக்கூட செய்யாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை. அதற்கு பதில், காபி, டீ மட்டும் அருந்திவிட்டு எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வர்.

தவறு: காலையில் கணவனுக்கு குழந்தைக்கு உணவு தயாரித்து, அவர்களை அனுப்பிவிட்டு, வீட்டு வேலை எல்லாம் முடித்த பின் உணவு எடுத்துக்கொள்வது அல்லது காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் உணவு எடுத்துக்கொள்வது பெரும்பாலான குடும்பத்தலைவிகளின் பழக்கம். அதேபோல, இரவு அனைவரும் உண்ட பிறகு கடைசியில் மிச்சம் மீதியை உட்கொள்வர்.
சரி: யாராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மேலும், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில், 10 மணி நேரத்துக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது.
நீண்ட இடைவெளி இருந்தால், அது செரிமானத்தைப் பாதிக்கும். அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், உடல் பருமன் ஏற்படும்.
காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.
அன்றைய தினத்தை திட்டமிட்டுச் செயல்பட்டாலே, நேரமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.
கர்ப்பிணிகள் விட்டமின் - பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.
இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் - பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில் பிரச்சனை, கரு தங்கலில் பிரச்சனை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் - பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின் வளர்ச்சிக்காகவும், தாயின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும், குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமானது.
‘உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருக்கும் பெண் எனில், திருமண நாளில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் திருமணத்துக்கு 3 மாதங்கள் முன்பிருந்தேகூட எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் விட்டமின் - பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் உடலுக்குப் போதாது என்பதால், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.
இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேண்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது.
பீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால், பெண்களுக்குப் பல சுகாதாரக் குறைபாடுகள், பிரச்சனைகள் உண்டாகின. நம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். குறைந்தபட்சம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.
ஒரு சிலர் ஈர கசகசப்பைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற பேட்களை வைக்கிறார்கள். ஈர உணர்வுதான் இல்லையே என மாலை வரை ஒரே நாப்கினை வைத்திருக்கிறார்கள். இதனால், அரிப்பு, அலர்ஜி உண்டாகும். காட்டன், சிந்தெடிக் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், காட்டன்தான்.
இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேன்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது. இன்பெக்ஷனும் உண்டாகலாம். ஒரு நாப்கினை நீண்ட நேரம் வைத்திருந்தால், சிலருக்கு யூரினரி டிராக்கில் இன்பெக்ஷன் உண்டாகும்.

இந்தச் சமயத்தில், 'அடிக்கடி யூரின் போகவேண்டியுள்ளதே' எனத் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது தவறு. தண்ணீரும் குடிக்காமல், பேடையும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது ஆரோக்கியமல்ல. வேலைப் பரபரப்பில், நிறையப் பெண்கள் இந்தத் தவற்றை செய்கிறார்கள்.
சில பெண்கள் பீரியட்ஸ் சமயத்தில், பிறப்பு உறுப்பில் வெப்பமாக பீல் பண்ணுவார்கள். இதை இன்பெக்ஷன் என்று நினைத்துப் பயந்துவிட வேண்டாம். சிலருக்குப் பிறப்பு உறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், திகுதிகுவென்று எரியும். இதுவும் யூரினரி இன்பெக்ஷன் கிடையாது. பீரியட்ஸ் சமயத்தில் இப்படி ரணமாவது சகஜமே.
முதல் நாளில் ரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி பேட் வைத்துக்கொள்ளூம் பெண்கள், மூன்றாம் நாளில் ரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே பேடையே பயன்படுத்துவது தவறு.
நாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, அலர்ஜியை தரவில்லையோ, அதைப் பயன்படுத்துங்கள்.
கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை.
மணமான பெண்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம், 35 வயது முதல், 45 வயது வரையுள்ள பெண்கள், இந்த பருவத்தில் ஒருமுறையாவது, ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.அதேபோல், 35 முதல் 45 வயதிற்குள், ஹெச்.பி.வி., பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.
பாப்ஸ்மியர் பரிசோதனையில், வைரசால் உண்டாகும் மாறுதல்களை மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். 35 வயதிற்கு கீழ் இருந்தால், இந்தப் பரிசோதனை தேவை இல்லை. மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பெண்களும், பாப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன.
பெண்களுக்கு நோய்த்தொற்று, ஹார்மோன் குறைபாடு காரணமாக பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன.
மாதவிலக்கு சமயங்களில் வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைப் பழச்சாற்றைத் தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நின்றுவிடும்.
உள்ளி, மிளகு, பேரீச்சம் பழம், மாவிலங்கப் பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து பாக்கு அளவு உருண்டையை ஒருவாரத்துக்குச் சாப்பிட்டால் மாதவிலக்கு சீராகும்.
சந்தனக்கட்டையை பன்னீர் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து 100 மி.லி. பன்னீரில் கலந்து அதில் குல்கந்து சேர்த்து மூன்று சொட்டு சந்தன அத்தரையும் சேர்த்துக் கலக்கி ஒருவாரத்துக்குக் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.

புதினா இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகும்.
மாதவிலக்கு வருவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டால் மாதவிலக்கு தள்ளிப் போகும்.
மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் பச்சை வாழைக்காயைத் தோல்நீக்கி சிறுசிறு துண்டுகளாகக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு நின்று போகும்.
செம்பருத்திப் பூ மொட்டுகளின் சாறு எடுத்து தினமும் காலை மாலை இருவேளையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.
ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.






