என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. 

    `பாலிசிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்சனையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

    * மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்சனையைப் போக்க உதவும். 

    * கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்சனையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும். 



    * குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். 

    * ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

    * மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும். 

    * முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

    * குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும். 

    பெண்களுக்கு ஏற்படும் கருக்குழாய் அடைப்பு பிரச்சனைக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கருத்தரிப்பதில் சிக்கலை சந்திக்கிற பெண்கள் இதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் 20 சதவிகித பெண்களுக்கு காசநோயே கருத்தரிக்காமைக்கு முக்கிய காரணம். இந்நோய் 90 சதவிகிதம் வரை கருக்குழாயை பாதிக்கிறது. காசநோய் பெரும்பாலும் உடலில் மற்ற பகுதியிலிருந்து முக்கியமாக நுரையீரல் பாதிப்பில்இருந்து, நிணநீர் வழியாகவோ அல்லது ரத்த நாளங்கள் வழியாகவோ கருப்பையை அடைகிறது. இப்படி அடையும் இந்நோய் கருக்குழலையே முதலில் பாதிக்கிறது. இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலத்திலேயே தெரிவதில்லை. 

    கருத்தரிக்காததற்கான பரிசோதனைகளை செய்யும் போதே தெரியவருகிறது. இந்நோயின் பாதிப்பு இருந்தால் 6098 சதவிகிதம் வரை பெண்கள் கருவுறாமல் அவதிப்படுகிறார்கள். 44 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோய் இரண்டு கருக்குழலையும் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து பிறகு கருத்தரிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். இப்பெண்களுக்கு கருக்குழாயில் கருவுறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    என்னென்ன சிகிச்சைகள்?

    சிகிச்சை முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் சிகிச்சை. மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இரண்டுமே அனுபவமும் திறமையும் உள்ள மருத்துவர்களால் செய்யப்பட வேண்டியவை. டியூபோபிளாஸ்டி என்கிற சிகிச்சை மைக்ரோஸ்கோப்பிக் மேக்னிஃபிகேஷன் முறையில், மைக்ரோ கருவிகளைக் கொண்டு மிக மிக கவனத்துடன், தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்யப்படும்போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.



    சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி  எனப் பெயர். இப்போது ஃபாலோபோஸ்கோப்பி என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற எண்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள நுண்ணிய மயிரிழைகளான சிலியாவின் இயக்கத்தையும் கண்டறியலாம்.

    ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை  கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

    ஹைட்ரோசால்பிங்ஸ்  எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப் படுகிற லேசர் மைக்ரோ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.

    கார்னுவல் பிளாக் (Cornual block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீன ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் எண்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள்ளே செலுத்தி சரியாக்கலாம்.

    சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம்.  ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.    

    35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம், எலும்பு தேய்மானம்.
    35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்சனை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.

    இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

    தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

    எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.
    சர்க்கரை நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைத்து கொள்வதில்லை என்றால் பிறகும் குழந்தை மோக்ரோசோனிக் குழந்தை (பெரிய குழந்தை) அல்லது சர்க்கரை குழந்தை என்று சொல்வார்கள்.

    சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் ஊசி மூலமோ அல்லது மாத்திரையின் மூலமோ எடுத்துக் கொள்ளலாம்.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளை போலிக்ஆசிட் மாத்திரைகளை குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து போலிக்ஆசிட் 5 எடுத்துக் கொள்ள வேண்டும். இது எந்தவித குறையும் இல்லாத நலமான குழந்தை பிறக்க உதவும்.

    டைப்-1 சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கர்ப்பத்தை தள்ளி போடா கூடாது. இவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோய் இருப்பதால் மற்ற உடல் பிரச்சனைகளாக இரத்த அழுத்தம், இதய கோளாறு, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன் இந்த உடல் பிரச்சனைகள் சரி செய்து கொள்வது நல்லது.

    டைப் -2, சர்க்கரை நோய் உள்ள பெண்கள் Metformin போன்ற சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசிகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் பல ஆராய்ச்சிகளில் கர்ப்பகாலத்தில் Metformin மாத்திரைகளை விட இன்சுலின் ஊசிகளே கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என அழகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்.
    தாய்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே அதீத அழகைக் கொடுக்கும் பருவம். அது அகத்திலிருந்து வெளிப்படுகிற அழகு. ஆனாலும், கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம். திடீரென பயத்தைக் கிளப்பும் இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களும், தீர்வுகளும்… 

    கர்ப்ப காலத்தில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்புக் கட்டிகள், அதிக சீபம் சுரப்பதால் சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிப்பதுடன், பருக்கள் வரும். கர்ப்ப காலத்தில் திடீரென கிளம்புகிற பருக்கள், தற்காலிகமானவையே. வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பும் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதால் வழக்கத்தைவிட கர்ப்பிணிகளின் முகத்தில் அழகு கூடும். அதேநேரம் சருமத்தின் நீர்ச்சத்து குறைவதால் ஒருவித வறட்சி நிலை ஏற்படும். இக்காலங்களில் கூடியவரையில் கெமிக்கல் கலந்த எந்த அழகு சாதனங்களையும் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன், சருமத்தின் சொரசொரப்பை நீக்க, பாலாடை தடவுவது போன்ற பாதிப்பில்லாத இயற்கை வழிகளைப் பின்பற்றலாம். 

    கர்ப்ப காலத்தில் மெலனினை தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் நிறமாற்றங்கள் உண்டாவது இயல்பு. திருஷ்டி பொட்டு மாதிரி ஆங்காங்கே மங்கும் வரும். இந்தப் பிரச்சனையை கர்ப்ப கால முகமூடி என்றுகூட சொல்வதுண்டு. மற்ற பிரச்சனைகளைப் போலவே இதுவும் பிரசவமானதும் தானாக மறைந்து விடும். சிலர் இந்த மங்கைப் பார்த்ததும் பயந்து பியூட்டி பார்லர் போய் கெமிக்கல் பீலிங் போன்ற சிகிச்சைகளை செய்வதுண்டு. அவையெல்லாம் மிக ஆபத்தானவை.

    கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. அடர்த்தியான கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்தப் பிரச்சனை வருகிறது. பிரசவமானதும் இந்த ரோமங்கள் உதிர்ந்து விடும் என்பதால் அதைப் பற்றிய பயம் வேண்டாம். ஒருவேளை பிரசவத்துக்குப் பிறகும் அது அப்படியே இருந்தால், சரும மருத்துவர் அல்லது அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறையில் ரோமங்களை நீக்கிக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ரோமங்களை நீக்கும் கிரீம் உபயோகிப்பதோ, வாக்சிங் செய்வதோ வேண்டாம்.

    பெண்களுக்கு 30 - 35 வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் அதிகம் வருகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
    மின் இயந்திரங்களின் வருகைக்கு முன்பு, பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்ததால், துணி துவைப்பது, அம்மி ஆட்டுக்கல் கொண்டு உடலை அசைத்து வேலை செய்வது, கீழே அமர்ந்து காய்கறிகளை அரிவது என பல வேலைகளை செய்து வந்தனர். 

    இவை அனைத்திலும் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் படித்து, அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் சூழலில், வீட்டு வேலைகளில் பெரும்பாலும், உடல் உழைப்பு குறைந்து மின் இயந்திரங்களின் ஆதிக்கம் பெருகிவிட்டதால் உடல் அசைவுக்கென சில உடற்பயிற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன.

    பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகும். அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குக் கூட ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்.



    இதனால் முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அதிக உடல் எடை, முகச் சுருக்கம், முகப்பரு, வயது மூப்புத் தோற்றம் போன்றவையும் வருகிறது. 80% பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தினம் ஒரு முறையாவது கீழே உட்கார்ந்து எழ வேண்டும். மேலும் இன்டியன் டாய்லெட் பொஸிஸன் பயன்படுத்த வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுப்பெறும்.

    நமது உணவு முறைகளும் இயற்கையானதாக இருத்தல் வேண்டும். உணவில் பச்சை நிற காய்கறி, பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பப்பையினை மாதாமாதம் சுத்தப்படுத்துவதே மாதவிடாய். 35 நாட்களுக்கு மேல் பீரியட்ஸ் வரவில்லை என்றால் கர்ப்பப்பை பிரச்சனை. மாதவிடாய் பிரச்சனையில் துவங்கும் இது குழந்தையின்மை பிரச்சனைவரை கொண்டு செல்லும்.
    பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொலஸ்ட்ரால் காரணமாகத் தான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொலஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

    சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமன் அடைவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

    முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

    கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4¾ கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty Acids) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

    இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச்சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப்பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.

    அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

    விட்டமின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

    கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் உருவாகும்.



    குடலில் விற்றமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

    ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப்படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும்.

    ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

    துரித உணவு (Fast Food), வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

    பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
    பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.
    தற்போது உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டு மோகத்தால் ஆண்களும், பெண்கள் பல்வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம். பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

    சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் டல்லாகி, விரைவிலேயே முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.

    புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

    புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும், உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.



    புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

    பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

    பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

    பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    * சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவாக சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
    குறைமாதத்தில் குறைப்பிரசவம் ஆன பெண்கள் மறுபடியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் 100- ல் 23 பெண்கள் கர்ப்பகாலத்தில் 20லிருந்து 33 வாரத்திற்குள் குறைப்பிரசவமாகி அதனால் கருயிழப்பு ஏற்படுகிறது. இதை பிரிடெர்ம் லேபர் என்பார்கள். இந்த குறைப்பிரசவத்தால் பாதிக்கக்கூடிய பெண்கள் இயல்பாக 22 லிருந்து 25 சதவீதம் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆகிறது.

    குறைப்பிரசவமான பெண்களுக்கு அடுத்து குழந்தைப்பேறு பகல் கனவாகவும் ஒரு பெரிய பயமாகவும் அமைகிறது. ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து நன்றாக வளரும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு இருந்த பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் குறைப்பிரசவம் ஆகி குழந்தையிழப்பு அது முதல் மூன்று மாதத்திலும் இருக்கலாம்.

    5 லிருந்து 6 மாதத்திலும் இருக்கலாம். சில பெண்களுக்கு ஆறு மாதத்தின் முடிவில் கூட இருக்கலாம். குறைப்பிரசவம் என்பது குழந்தை பிறந்து தாய்வயிற்றில் இல்லாமல் இன்குபெட்டர்லையோ தீவிர கண்காணிப்பிலிலோ வளரக்கூடிய நிலை வரும் வரைக்கும் பிரசவமாகி அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளால் குழந்தை வளர்ப்பு பாதிக்கக்கூடிய நிலை தான் குறைப்பிரசவம் என்பார்கள்.

    இந்த குறைப்பிரசவம் 16-23 வரம் வரைக்கும் ஆகலாம். இந்த குறைப்பிரசவம் ஆவதால் பெண்ணுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தன் தவறால் தான் குறைப்பிரசவம் ஆனது என பல பெண்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த குறை பிரசவம் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தமபதியர்கள் 16-33 வாரம் வரைக்கும் பிரசவ வலி ஏற்பட்டு அதனை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் கொடுத்ததும் அந்த பிரசவ வலி நிற்காதபட்சத்தில் கரு கருப்பையை நோக்கி நகர்ந்து வெளியே வந்து விடுவது தன குறைப்பிரசவம்.
    குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது.
    அடிக்கடி ‘டி அண்ட் சி‘ எனப்படும் கருப்பைத் திசுச்சுரண்டல் செய்து கொள்வதால் கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வாய் திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்த நிலையில் கரு சிதைந்துவிடும். அவ்வாறு நிகழாதபோது குறைப் பிரசவம் உறுதியாகும். 

    குழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி முற்றுப்பெறும் முன்பே வெளியேற்றிவிடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறைமாதக்குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி. கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை குறைவாகப் பிறந்துவிடுதல் இன்னொரு காரணம். இந்தக் குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி என்று பெயர்.

    பொதுவாக குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து சாப்பிடாதவராக இருந்து, கர்ப்ப கால பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்தச் சோகை மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பால்வினை நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைப்பிரசவம் நிகழும்.



    ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் ரத்தச் சோகை மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல், ரத்தச் சோகை, பிபி (ரத்தக்கொதிப்பு), சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள், இதய நோய்கள் மற்றும் தொடர்ந்த சீதபேதி இருந்தாலும் குறைப் பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65 விழுக்காடு தாயின் உடல் நலக்குறைவால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். தாயின் வயது இன்னொரு முக்கிய காரணம். 

    16 வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சான் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப் பிரசவம் நிகழும். செப்டேட் யுடரஸ் எனப்படும் தடுக்கமைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக் கருப்பை, ஒற்றைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கருப்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும். 

    பிறவியில் வரும் பிரச்சினைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் எனப்படும் நார்க்கட்டிகள், கருப்பை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருப்பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறைப் பிரசவத்தை உண்டாக்கும். குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
    மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின்போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம். 

    * மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று தான் உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால், அதனாலேயே கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

    * ஜங்க் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே மாதவிடாய் காலத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

    * மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

    * பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள்.

    * மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இக்காலத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

    * யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்ப்பதே நல்லது.

    * பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணி நோய்த்தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் உண்டாக்கும். ஆகவே இக்காலத்தில் துணிகளுக்கு பதிலாக சுத்தமான சானிடரி பேடுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது
    கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா, வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

    கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம். 

    இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

    முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. 

    பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்

    கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 

    8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

    எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
    ×