என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இந்த சமயத்தில் பெண்கள் சந்திக்கும் உடல்நலம் பிரச்சனைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    பெண்ணோயியல் நோய்கள், தாக்குதல்களைப் பற்றி பேசவும், மருத்துவரிடம் செல்லவும் இன்றும் பல பெண்கள் மருத்துவரிடம் வருவதில்லை. பிரச்சினை கூடும் பொழுது சிகிச்சையும் கடினமாகி விடுகின்றது. ஆகவே பெண்கள் அறிய வேண்டியது.

    * வருடா வருடம் பெண்களுக்கான சில பிரத்யேக பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

    * ஒழுக்கமான உடல் உறவு தனி மனித ஒழுக்கம் மட்டுமல்ல. 20 வகையான நோய்கள் ஒழுக்கமற்ற உடல் உறவுகளால் பரவுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து எய்ட்ஸ் உட்பட பல பாதிப்புகளை கொண்டு வந்து விடும்.

    * உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை நீக்கும். மாதவிலக்கு வலியின்றி இருக்கும்.

    * உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.

    * 30 வயதிற்குள் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது.

    * பிறப்புறுப்புகளை கடின, கார சோப் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.

    * மாதவிடாய் நிற்கும் காலத்தில் பல பெண்கள் சில பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களை இக்கால கட்டத்தில் தாவர உணவினை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது.

    * மாதவிலக்கு காலத்தில் வயிற்றை இழுத்து பிடித்து வலி, கால் வலி இவற்றினை அனுபவிப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று ஒமேகா, கால்ஷியம் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

    * மாதவிலக்கு முறையற்று இருந்தால் முதலில் எடையினை கவனியுங்கள். அதிக மனஉளைச்சல் கூட காரணம் ஆகலாம். தைராய்டு பிரச்சனை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியினை அன்றாடம் செய்யுங்கள்.

    * சிலருக்கு மாதவிலக்கு சுற்றின் நடுவில் சிறு சிறு ரத்த திட்டுகள் ஏற்படலாம். பாலிப்ஸ் எனப்படும் கருப்பை வாய் இவற்றில் ஏற்படும் சதையின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம். மருத்துவர் இதனை பரிசோதித்து நீக்கி விடுவார்.

    * சிலருக்கு மாதவிலக்கிற்கு ஓரிரு நாட்கள் முன்பு ஒருவித மனசோர்வு, பயம், எரிச்சல், சக்தி இன்மை, அதிகம் எதனையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். அதிக பழங்கள், காய்கறிகள், நார்சத்து கூடிய உணவு இவை தீர்வு கொடுக்கும். அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால் மிகவும் குறைத்து கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெற்று பி-காம்ப்ளெக்ஸ், கால்ஷியம் சத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராயின் அதனை மருத்துவரிடம் அவசியம் சொல்லவும்.



    ஆரோக்கியமான உணவும் கருத்தரிக்க உதவும்.

    * புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை கருத்தரிக்கும் காலத்தில் மிக அவசியம்.

    * பாதாம் பருப்பு, பூசணி விதை, பாதாம், ஃப்ளாக்ஸ் விதை, சியா விதை இவை கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள்.

    * அடர்ந்த பச்சை நிற இலைகள், காய்கறிகள் இவைகளில் வைட்டமின் பி6 நிறைய கிடைக்கும். இவை ஹார்மோன்களை சீராக வைக்க உதவும்.

    * முட்டை சிறந்த புரோட்டின் உடையது. விந்து அணுக்கள் குறைபாடு உடையவர்கள் மருத்துவத்துடன் இதனையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    * பூசணி விதையிலுள்ள தாது உப்புகள் விந்து அணுக்களின் தரத்தினை உயர்த்துகின்றது.

    * வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி இவை ஆண், பெண் இருவருக்கும் சிரந்தது.

    * டின்னில் அடைத்த உணவுகள்,

    * அதிக சர்க்கரை உணவு,

    * ஃகேபின், செயற்கை சர்க்கரை, நிறக்கலப்பு,

    * ஆல்கஹால் ஆகியவை ஆகும்.

    ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இது அவரது தாய், பரம்பரை மற்றும் வேறு சில காரணங்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.

    * வயிற்றினைச் சுற்றி எடை கூடுதல்

    * பிறப்புறுப்பு வறட்சி ஆகலாம்.

    * சிறுநீர் பாதை, சிறுநீர் பையில் கிருமி தாக்குதல்

    * கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.

    * இக்கால கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    மேலும் * சேனை, * சோயா, * ஃப்ளாக்ஸ் விதை, * வைட்டமின் சி சத்து பழங்கள், * மனஉளைச்சல் இன்றி இருத்தல், * தேவையான நீர் அருந்துதல் ஆகியவை சிறந்தது.

    மார்பக புற்று நோய்:- மார்பக புற்று நோய் பற்றி இன்றைய கால கட்டத்தில் அதிக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகின்றது. நம் வாழ்க்கை முறையில் உணவு, உடற்பயிற்சி இவைகளை கடைபிடித்தாலும் குடும்பம், பரம்பரை, பெண் உறுப்புகள், மார்பக அடர்த்தி இவைகளும் மார்பக புற்று நோய்க்கு காரணம் ஆகின்றன.



    * அதிக எடை, * உழைப்பின்றி இருத்தல், * மது போன்றவையும் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    உடற்பயிற்சி இதனை தவிர்ப்பதில் முக்கிய பங்கு பெறுகின்றது. முறையான சுய பரிசோதனை (உங்கள் மருத்துவர் சொல்லிக் கொடுப்பார்) மற்றும் மருத்துவ பரிசோதனை என்பது அவசியமாகின்றது.

    பதட்டம்:- பதட்டம் பல விதங்களில் ஒருவரிடம் வெளிப்படும். கை, கால் நடுங்கும். சிலருக்கு நெஞ்சு பிடிப்பு போல இருக்கும் என பலவற்றினை கூறலாம். பதட்டம் என்பது ஒருவகை பயம். நிம்மதி இன்மை, ஏதோ இல்லாத ஒன்று இருப்பதாக நடந்து விடப்போவதாக நினைக்கும் பயம். ஆனால் இந்த பதட்டம் மனிதனை மிகவும் பாதிக்கின்றது என்பதால் இதிலிருந்து வெளிவருவதனை செயல்படுத்த வேண்டும்.

    * பலருக்கு எப்பொழுதும் ஒரு பீதி இருக்கும். தான் வேலை செய்யும் இடத்தில், பலர் இருக்கும் கூட்டத்தில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தேவையில்லாத பீதி இருக்கும். அதிகம் வியர்க்கும், நெஞ்சு படபடக்கும்.

    * சிலருக்கு இரவில் தூக்கமே வராது. அதிக சோர்வு இருக்கும். ஆனால் தூக்கம் வராது. இதற்கு காரணம் மனஉளைச்சலால், மூளை இரவில் ஓய்வு எடுப்பதில்லை.

    * சிலருக்கு அன்றாட சாதாரண வேலைகள் செய்வதே மூச்சு வாங்கும்.

    * சிறு சத்தம் கூட இவர்களுக்கு அதிர்வு ஏற்படும்.

    * ஏதோ எல்லாமே சரியாக நடக்காதது போல் இருப்பர்.

    * வாய் வறண்டு இருக்கும்.

    * கால், கைகள் வியர்த்த படியே இருக்கும்.

    * வயிற்று பிரட்டல், வாந்தி அடிக்கடி இருக்கும்.

    * உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.

    இத்தகு பிரச்சினைகளிலிருந்து அவசியம் வெளிவர வேண்டும். முதலில் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி சதைகளை வலுவாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இவை தெரிந்ததே. உடற்பயிற்சியின் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக இப்பொழுது கூறப்படுகின்றது. உறுதியாக கூற மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் அதனை இங்கு விவரித்துக் கூறவில்லை.

    அவ்வப்போது ‘உண்ணா விரதம்’ இருப்பதால் மூளையிலுள்ள திசுக்களில் சேரும் நச்சுக்கள் சுத்தமடைவதாகவும் கூறப்படுகின்றது.

    க்ரீன் டீ, மஞ்சள், ஒமேகா 3 இவைகள் மிக நன்மைகளை பயப்பதால் ஒருவரின் ஆரோக்கியம் கூடுவதன் மூலம் பதட்டம் குறைகின்றது. யோகாவும், தியானமும் ‘பதட்டம்’ குறைய மிகச் சிறந்த வழிகளாகும்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் பிரச்சினையாலோ மன அழுத்தம் அதிகரிக்கும்.
    கர்ப்பிணிகளுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் பிரச்சினையாலோ மன அழுத்தம் அதிகரிக்கும். இதை ப்ரிபார்டம் டிப்ரஷன் (Prepartum Depression) என அழைப்பர். உலளவில் 20 சதவீத கர்ப்பிணிகள் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    உடல் சோர்வு, பதற்றம், கவனக்குறைவு, தேவையின்றி ஏற்படும் பயம், எதிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது, அதிகமாக எரிச்சலடைவது, தூக்கமின்மை, குற்றவுணர்ச்சி, சோகமாக இருப்பது, அதிகப்படியான எடை அதிகரிப்பு அல்லது குறைவது, உணவு சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்ற பல அறிகுறிகள் ஏற்படும்.

    சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் கூட தோன்றலாம். நம் நாட்டில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அதன் காரணமாக பலர் பெண்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைகளை பெரிதாக கவனிப்பதில்லை.

    இத்தகைய மன உளைச்சல்கள் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே குடும்பத்தினர் கர்ப்பிணிகளின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தாரிடம் கர்ப்பிணிகள் மனம் விட்டு பேச வேண்டும். தங்களுக்கு உள்ள பயத்தை பற்றிப் பேசி தெளிவு பெற வேண்டும். இதற்கு குடும்பத்தாரும் அனுசரனையாக இருக்க வேண்டும்.

    பெண்களின் மன அழுத்தம் குறைய வீட்டில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். வழிப்பாட்டு தலங்கள், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு செல்லலாம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் போகலாம்.

    இந்த மன அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் பிறகு குழந்தை பிறந்த பின்பும் தாய்மார்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இது குழந்தை வளர்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்தும் மகிழ்ச்சியான சூழலும் தேவை என்பதால்தான் நம் நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுகிறது.

    வளைகாப்பு நிகழ்ச்சியில் சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தாய்மை அடைய போகும் பெண்ணுக்கு அழகழகான கண்ணாடி வளையல்களை அணிவித்து மகிழ்வர். வகை வகையான உணவு வகைகளை சமைத்து பரிமாறுவர். இதனால் அப்பெண்ணுக்கு மகிழ்ச்சியும் மன தைரியமும் ஏற்படும்.
    கர்ப்பமாக இருக்கும்பொழுது முதல் 4 நான்கு மாதங்களுக்கு வாந்தி, குமட்டல் ஆகியவை உண்டாவது இயற்கை தான். இதற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது என்ன பார்க்கலாம்.
    கர்ப்பமாக இருக்கும்பொழுது முதல் 4 நான்கு மாதங்களுக்கு வாந்தி, குமட்டல் ஆகியவை உண்டாவது இயற்கை தான். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

    சிலருக்குக் குமட்டல் நாள் முழுவதும்கூட தொடரும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் தான் ஏற்படும். இந்த கர்ப்ப காலத்தில் உண்டாகும் குமட்டலில் கூட, ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

    சரி. இந்த கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?... எப்படி குறைக்க முடியும்? என்று பார்க்கலாம்.

    தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதிலாக, அதை கொஞசம் கொஞ்சமாக, ஆறு வேளைகளில் சாப்பிடும்படி மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய சின்னச்சின்ன மாற்றங்களின் மூலம் மசக்கையை எளிதாகச் சமாளிக்கலாம்.

    காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

    குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிர்ப்பது நல்லது. உடலுக்கு ஆரோக்கியமான, அசௌகரியமில்லாத உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

    குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் அது அதிகமாகும். அந்த சிந்தனைக்கே போகாமல், முடிந்தவரையிலும் வாந்தி வரும் என்பது போன்ற நினைப்பைத் தவிர்த்திடுங்கள். 

    அடிக்கடி வாந்தி வருவதால், உடலில் நீர்ச்சத்தும் எலக்ட்ரோலைட்டும் குறைவாகும் வாய்ப்பு அதிகம். அதனால் குமட்டலும் வாந்தியும் அளவுக்கு அதிகமாக உண்டானால், மருத்துவரிடம் சென்று ஆலோசித்து ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 
    குழந்தைக்கான தவமிருக்கும் பெண்கள் தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும் வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
    திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

    கருவை பாதிக்கக்கூடிய உணவு எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன்படி தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும் வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம். கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் அந்த பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

    அதேபோல பப்பாளியிலும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.



    வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

    கரும்பிலும் வைட்டமின் சி உள்ளது. மேலும் கரும்பு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும். எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கரு கலைந்துவிடும்.

    வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

    எள் கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது. எனவே இதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
    கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகு வலி வரலாம்.
    கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகு வலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பக் காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாக உள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. 

    கர்ப்ப காலத்தில் நீங்கள் உடற்பருமன் அடைவதால் உங்கள் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. இந்த நிலைகளைக் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.

    சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் முதுகு வலிகளையும்கூட தவிர்க்கிறார்கள்.

    பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியாக நிற்கும் தோரணையாகும்.

    முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள்.

    தரையில் இருந்து பொருள்களைத் துாக்கும்போது அல்லது எடுக்கும் போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.. முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி உட்கார்ந்து பிறகு அந்தப் பொருளைத் துாக்க வேண்டும்.

    பளுவான பொருள்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத் துாக்குங்கள்.

    முடிந்தவரை, கூன் போடுவதுபோல் வளைவதைத் தவிருங்கள்.

    முதுகு வலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காரமல் அவ்வப்போது நடத்தல் போன்றவற்றை ஆறு மாதம் வரையில் பின்பற்றுங்கள்.

    முதுகு வலி தொடர்ந்து நீடித்தால், இதைப்பற்றி மருத்துவரிடம் கூறுங்கள். பிஸியோதெரபி நிபுணர்கூட உங்களுக்குத் தேவையான ஆலோசனையையும், சில உபயோகமான பயிற்சிகளையும் கூறுவார்.
    பெண்கள் மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    'ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. 

    பல பெண்கள் வீட்டு வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

    பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக தூங்கவில்லை என்றால் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.



    மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும். தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.

    நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

    இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
    பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் புட்டும், நல்லெண்ணெயில் உளுந்தவடை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நலுங்கு வைப்பதும் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்தது. வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு போன்றவை சேர்ந்த நலுங்கு மாவைப் பூசி மேலே சொன்ன உணவுகளை உண்ணக் கொடுப்பதன் மூலம் பெண்கள் நல்ல உடல் வளம் பெறுவார்கள். இது தமிழர் கலாசாரத்தில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. 

    சிறப்பு உணவுகளாக கற்றாழை லேகியம் கொடுப்பார்கள். கற்றாழையைப் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுப்பதால் அது மாதவிடாய் பூப்பு அழற்சியை ஒழுங்குபடுத்தும். இது மெட்டபாலிசத்தைச் சரிசெய்யும். சர்க்கரைநோய், மூலம், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

    இன்றைக்கு வளரிளம் பெண்களுக்கு சிவப்பணுக்கள் குறைவாக உள்ளன. மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, 15 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் ஆவது, நீண்டநாள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமலிருக்க எள், உளுந்து போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிடுவது, கீரைகளை அதிகம் சாப்பிடுவது, மாதுளம்பழத்தை சாப்பிடவேண்டியது அவசியம். இவை மாதவிடாய் சுழற்சி உண்டாக பெரிதும் உதவும்.



    பெண்களுக்கு ஏற்படும் உடல்சூட்டால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த வெள்ளைப்படுதலாலும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று காரணமாக விந்தணுக்கள் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலில் சாதாரண படிகாரத்தைப் பொடியாக்கி, தண்ணீரில் கரைத்துக் கழுவினால், கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். 

    இப்போதெல்லாம் தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்க்கிருமிகள் உண்டாகி பாதிப்பு ஏற்படுகிறது. நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளைப் பெண்கள் அணிய வேண்டும் என்று நம் பாரம்பர்ய தமிழர் கலாசாரத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. தாவணி, புடவை உடுத்துவது இடுப்புப் பகுதியில் உள்ள வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

    கர்ப்பப்பையின் தசைகள் லகுவாக சம்மணம் போட்டு தரையில் அமர்வது, பாண்டி ஆட்டம் ஆடுவது போன்ற விளையாட்டுகள் உதவும். எண்ணெய்க் குளியல், காய்கறிகள், பழங்கள், மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும். சிலர் `சீஸ்' சாப்பிடுகிறார்கள். அது நம் பெண்களுக்கு ஆகாது. அதற்குப் பதில் நெய் சாப்பிடலாம்.
    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.
    ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள். 

    அவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும். 

    குங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்படியே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக் குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து இருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவை தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன. 

    எனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல!
    நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படும் பித்தப்பை அலர்ச்சி, அல்லது பித்தப்பை கற்கள் தொடர்பிலான சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
    நீங்கள் நடுத்தர வயதுடைய பெண்மணியா? உங்கள் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான வலி இருக்கின்றதா? அப்படி இருக்குமாயின் உங்கள் பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கலாம். அந்த வகையில், நடுத்தர வயது பெண்களில் ஏற்படும் பித்தப்பை அலர்ச்சி, அல்லது பித்தப்பை கற்கள் தொடர்பிலான சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.

    பித்தப்பையானது ஈரலுக்கு அடியில் பித்தத்தை சேமிப்பதற்காக அமைந்திருக்கும் பை போன்ற ஒரு அமைப்பாகும். இதில் நாம் உண்ணும் உணவை செரிமானத்திற்கு தேவையான பித்தம் சுரக்கப்படுகின்றது. 

    இவ்வாறு சுரக்கப்படும் பித்தம் உணவில் காணப்படும் கொழுப்பு செரிமான பகுதிக்கு உதவி செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பித்தப்பையில் கற்கள் எப்படி உருவாகின்றது என்பதைப் பார்க்கலாம்.

    பித்தப்பையில் சுரக்கும் பித்தத்தின் செரிமானம் அதிகரிக்கும் போது, அவை கட்டித்தன்மையாகி பின்னாட்களில் கல்லாக உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் பித்தக்கற்களால் எமது உடலுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிறிய அளவில் இருக்குமாயின் அவை பித்தக்குழாய்களின் வழியாக உணவு செரிமான பகுதியை சென்றடைந்து, உணவு கழிவாக தானாக வெளியேறி விடும். 



    ஆனால் அவை அளவில் பெரிதாக இருக்கும் பட்சத்தில் பித்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி பித்தப்பையை வீங்கச் செய்கின்றது. இவ்வாறு பித்தப்பை வீங்குவதால் வயிற்றின் வலது பக்கத்தின் மேற் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படுகின்றது.

    அத்துடன் பித்தப்பையில் அலர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இதனால் வயிற்று வலி மிகவும் அதிகரிப்பதுடன் சாப்பிட முடியாமலும் போய் விடும். அத்துடன் வாந்தி எடுத்தல், காய்ச்சல் ஏற்படுதல், சிறுநீர் கழித்தலில் தடை ஏற்படுதல் போன்ற பல்வேறு உடலியல் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

    இவ்வாறன சந்தர்ப்பங்களில் நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பதுடன், அவரின் ஆலோசனையின் படி செயற்படுவதும் கட்டாயமானதாகும். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு பித்தப்பையின் கற்களை உடனடியாக அகற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். 

    இந்நோய் பெரும்பாலும் 40 தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், அதிகமான எடையை கொண்ட பெண்களுக்கும் தான் அதிகம் ஏற்படுகின்றது (சில ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது). 

    எனவே உங்களுக்கும் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக தாங்க முடியாத வயிற்று வலி இருக்குமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடி உங்கள் பித்தப்பையில் கற்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு கற்கள் இருக்குமாயின் உடனடியாக அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 
    கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

    கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் உப்பின் அளவை மாற்றலாம். ரத்த கொதிப்பு இருக்கிறது என உப்பை ஒரேயடியாக குறைத்து விடவோ தவிர்க்கவோ கூடாது. அது மிகவும் ஆபத்தானது.

    பொதுவாகவே மனிதர்களுக்கு உப்பு அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உப்பை தவிர்த்தால் அது பெண்களின் உடல் நலனையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். பெண்களுக்கு கைகால்கள் வீக்கம் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே கவனம் தேவை.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம். பின் எந்த காலத்திலும் அதை தொட வேண்டாம். ஏனென்றால் அவை பெண்களை மட்டுமல்ல குழந்தையின் உடல்நலனையும் கடுமையாக பாதிக்கும்.



    வீட்டில் உள்ள வேறு யாருக்காவது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட கர்ப்பிணிகளுக்கு அது ஆபத்தாகும். எனவே வீட்டில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டாம். 

    தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது நலம்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென்று சில உணவுகள் மீது ஆர்வமும் வெறுப்பும் ஏற்படும். அப்போது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். 

    மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், ரத்தகொதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அச்சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

    மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் சுயமாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது.

    கோபமாக இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம்.
    கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம்.

    கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.

    கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.
    கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். 
    பெண்கள் கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாளவேண்டும்.
    பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 85,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த‍ பெண்கள், இரண்டாவது குழந்தைக்கு சிறிது இடைவெளி வேண்டும் என்று நினைத்து என்ன‍தான் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினாலும், சிலநேரங்களில் எதிர்பாராத நேரத்தில் கருத்த‍ரித்து விடுகிறது.

    அப்ப‍டி கருத்தரிக்கும் போது, அக்கருவை கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும்போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியானமுறையைக் கையாளவேண்டும். இல்லா விட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே கருக்கலைப்பு செய்ய நினைப்போருக்கு சில இயற்கைப் பொருட்களைக் கொடுத்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்கள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். இப்போது கருக்கலைப்பிற்கு உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போம்.

    குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.

    கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதாலேயே தான்.



    பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

    கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

    வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சை வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

    எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள்.

    சிலபெண்களுக்கு வலுவான கருவாக கருத்தரித்திருந்து, மேற்கூறிய முறைகள் பயன்தரவில்லை என்றால், அவர்கள் முறையாக மருத்துவரை அணுக வேண்டியதுதான்.

    ×