என் மலர்
பெண்கள் மருத்துவம்
சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது.
பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள் ஆரோக்கியத்திற்கும் கொடுத்து முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாக்கும் வரை அவர்களுக்குத் தொல்லைத் தந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்கள்தாக்கிக் கொண்டே தான் இருக்கும்.
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். இருந்தாலும் பல பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் வரை அதைப் பற்றிக் கடுகளவும் தெரிவதில்லை.
ஈஸ்ட்ரோஜென் என்னும் பெண்களுக்கான ஹார்மோன் அவர்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாயைப் போலவே புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்த கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்தப் பாதுகாப்பை முறித்து இருதய நோயை ஏற்படுத்துகின்றன.

சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாகக் கண்டுகொள்கிறார்கள், ஏனெனில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை.
அவர்களுக்குக் காய்ச்சல் வந்தது போல மிகவும் சோர்வாகவோ அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல்/வாந்தி அல்லது முதுகு, கை,தாடை ஆகிய ஒன்றில் வலி வரலாம்.
இதன் விளைவாகச் சிலருக்கு மாரடைப்புக்குப் பின்னர் வாழ்நாளை அதிகரிக்கும் பீடா பிளாக்கர்ஸ், ACE இஹிபிடர்ஸ், ஆஸ்பிரின் போன்ற உயிர் காப்பான்கள் கிடைக்கின்றது. 38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள் ஆண்களில் 25% பேர் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள்.

கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும்.
மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும். அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம்.
கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம்.

சிசேரியன்களுக்கு சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.
கர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்துகொள்ளலாம்.

சிலருக்கு இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.
அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.
ஹார்மோன்கள் அடங்கிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிப்பது இதன் முதன்மைக் காரணம். மாத்திரை, பேட்ச், ஊசி என எந்த வடிவிலான குடும்பக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் அதை உபயோகிக்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் இப்படி இடையிடையே மாதவிலக்கு வருவது சகஜம். அவற்றிலுள்ள அதிகப்படியான ஹார்மோன்கள், கருப்பையின் உறைகளில் ஏற்படுத்துகிற மாற்றங்களே காரணம் என்பதை மருத்துவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
க்ளமிடியா என்றொரு பால்வினை நோய் இருக்கிறது. அது பாதித்திருப்பதன் அறிகுறியாகவும் இந்த ரத்தப் போக்கு வரலாம். கர்ப்பப்பையின் உள் உறைகளில் தொற்று ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகலாம். சில பெண்களுக்கு அரிதாக பாதிக்கிற ஒரு பிரச்சனை ‘வான் வில்லி பிராண்ட்’. ரத்தம் உறைவது தொடர்பான இந்தப் பிரச்சனையின் காரணமாகவும் இடையிடையே ரத்தப் போக்கு வரக்கூடும். இதற்கு முறையான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஹைப்போ தைராய்டு, கல்லீரல் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருந்தாலும் இப்படி இருக்கலாம். கர்ப்பப் பையின் உள் உறைகளில் ஏற்படுகிற ஃபைப்ராய்டு கட்டிகளும் இப்படி இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்கை ஏற்படுத்தலாம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனப்படுகிற சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்குப் பொதுவாகவே மாதவிலக்கு சுழற்சி முறையற்றுதான் இருக்கும். அவர்களில் சிலருக்கு இப்படி இடைப்பட்ட ரத்தப்போக்கு இருக்கலாம்.
கர்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படுகிற மெனோபாஸுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் அளவுகள் கன்னாபின்னாவென மாறும். அதன் அறிகுறியாகவும் இப்படி நிகழலாம்.
எந்தக் காரணத்தால் இடைப்பட்ட ரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும். பால்வினை நோய், ரத்தம் உறைதல் பிரச்சனை, சிறுநீரக பாதிப்புகள், ஃபைப்ராய்டு, புற்றுநோய் போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். மெனோபாஸின் அறிகுறி என்றால் பயப்படத் தேவையில்லை.
இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்குடன், அடிவயிற்றில் அதிகமான வலி, காய்ச்சல், மெனோபாஸுக்குப் பிறகு தொடரும் ரத்தப் போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..

உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
முதன் முதலில் கர்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.
உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட இயற்கை வழியை பின்பற்றலாம்.
விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும்.
சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட இந்த இயற்கை வழியை பின்பற்றலாம்.
சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.
வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

காலையில வெறும் வயிற்றில் கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் எதுவானாலும் சாப்பிடனும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். இது உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!
திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவை நடக்கிற போது, ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம். எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.
எப்போதும் சமையலறையில் கிடைக்கக் கூடிய வெல்லம், உங்கள் மாதவிடாயை முன்பாகவே தூண்டுவதில் சிறந்த வீட்டு மருத்துவமாகும். எள் விதைகளுடன் வெல்லத்தைச் சாப்பிடவும் அல்லது ஒரு டம்ளர் இஞ்சிச் சாறுடன் வெல்லத்தை, வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முன்பாகவே வரவழைப்பதில் உதவும் என்று நம்பப்படுகிறது.
முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.
குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குவாதம் கூடாது. மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.
ஒருவேளை மனைவிக்கு சிசேரியன் தேவைப்படுமானால், அதற்கு அவர் மனதளவில் தயாராக உதவ வேண்டும். கணவரும் அதற்குத் தயாராகிவிட வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், பிரசவத்தின்போது மனைவியின் அருகில் கணவர் இருக்கலாம். கணவருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும் மனைவிக்கு ஆறுதலாகவும் இருக்கும்.
எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். எனவே, குழந்தை பிறந்தவுடன், எவ்வளவு விரைவில் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் தூக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு வலுப்படும்.
குழந்தை பிறந்த பிறகும் மனைவிக்கு உணர்வுபூர்வமாக மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ப்பிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறான உதவிகள் தாயின் மனதில் உற்சாகத்தைக் கொடுக்கும். அது தேவையான தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.

நாற்பது வயது பருவம் பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் உணவு மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் மட்டுமே ஆயுள் வரை நிம்மதியாக வாழ முடியும்.
‘இந்தியர்களின் உணவுப் பழக்கம் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, வெளிநாட்டை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்தியல் நிபுணர் ஒருவர், ‘அவர்களுக்கு 15 வயதில் ஒரு உணவை ரொம்ப பிடித்துவிட்டால், 45 வயதிலும் அதைதான் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்’ என்று பதிலளித்தார். இது உண்மைதான். இந்தியர்களில் பலர் சிறுவயதில் விரும்பியதைதான், கடைசி காலம் வரை ருசிக்கிறார்கள்.
தனக்கு பிடித்த உணவை சாப்பிட எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் வயதுக்கும், பருவத்திற்கும், உடல் அமைப்புக்கும் தக்கபடி சாப்பிடப்படும் உணவுகளே உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தரும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டு, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும்.
ஏன்என்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ‘மனோபாஸ்’ என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம். அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்குதக்கபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால்தான் அழகாகவும் தோன்ற முடியும்.
நாற்பது வயது என்பது பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஒரு வேகத்தடை போன்றது. அதுவரை விரும்பிய உணவுகளை எல்லாம் விதவிதமாக சாப்பிட்டாலும், அந்த வேகத்தடை பருவத்தில் உணவில் முழு அளவில் பெண்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். ஏன்என்றால் அந்த பருவத்தில் ஹார்மோன்களில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகள் உடலுக்குள் பெருங்கலாட்டாவை உருவாக்கும்.
அந்த கலாட்டா காலத்தில் கவனமின்றி சாப்பிட்டால் உடல் எடை கிடுகிடுவென ஏறிவிடும். உதாரணத்திற்கு, ஒரு பெண்ணுக்கு 40-45 வயதில் ஏற்படும் இந்த ஹார்மோன் கலாட்டா, அந்த பெண்ணுக்கு இனிப்பு உணவுகள் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தலாம். அதனால் அவர் இனிப்பை விரும்பி, அதிக அளவில் உண்பார். அது அவரது உடல் எடையை அதிகரிக்கவைத்துவிடும். எனவே நாற்பது வயதுக்கு மேல் பெண்கள் அனைவரும் உடல் எடையில் கவனமாக இருங்கள். ஒரு கிலோ அதிகரித்தாலும், ஒரு கிலோ குறைந்தாலும் உடனடியாக அதில் கவனம் செலுத்துங்கள்.

இந்திய தாய்மார்கள் பொதுவாகவே தங்கள் உடல் ஆரோக்கியத்தில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் தங்கள் மகள் பூப்படையும்போது அவளுக்கு சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்கி, அவர்களை வளர்த்து ஆளாக்க பெரும்முனைப்புக் காட்டுவார்கள். அதே நேரத்தில், ‘மகள் பூப்படையும்போது அவள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்று, தான் மனோபாஸ் நிலையை அடையும்போதும் தன் உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு தகுந்தபடி தானும் உணவுகள் உண்ணவேண்டும்’என்ற உண்மையை உணர்ந்துகொள்ள அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் 40 முதல் 50 வயது பருவத்தில் பெரும்பாலான பெண்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. அதனால் அடுத்த பத்தாண்டுகளில் அவர்கள் நோயாளிகளாகிவிடுகிறார்கள்.
மனோபாஸ் காலகட்டம் உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது பெண்களுக்கு அதுவரை இருந்த உற்சாகம் குறைந்ததுபோல் ஆகிவிடும். சோர்வும், எரிச்சலும், கவனச்சிதறலும் உருவாகும். அதுவரை சரியான உணவு சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள்கூட அப்போது அவைகளில் அலட்சியம் காட்டுவார்கள். அந்த அலட்சியம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அலட்சியமே பிற்காலத்தில் உடல் குண்டாவதற்கும், இதய நோய் போன்றவை தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகிறது.
மனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அதனால் எலும்புகளில் தேய்மானம் தோன்றும். அது மட்டுமின்றி அவ்வப்போது தசைவலி, தசைப் பிடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் கொழுப்பு நீக்கிய பால், தயிர், பன்னீர், கீரை வகைகள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நாற்பது வயது காலகட்டத்தில் பெருமளவு பெண்கள் தங்கள் அடிவயிறு கனத்து போவது போன்ற உணர்வு ஏற்படுவதாக சொல்கிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால்தான் இந்த நிலை ஏற்படுகிறது என்றாலும், உணவுகள் மூலம் இந்த பிரச்சினையின் வீரியத்தை குறைக்கலாம். அதற்காக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். ஆப்பிள், காலிபிளவர், கேரட் போன்றவை பொருத்தமானது.
நாற்பது வயது பருவம் பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் உணவு மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் மட்டுமே ஆயுள் வரை நிம்மதியாக வாழ முடியும்.
கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல் ஆலோசகர்), சென்னை.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
சராசரி எடை கொண்ட பெண்கள் 10 முதல் 16 கிலோகிராம் வரை எடை கூடலாம். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 1.5 கிலோ, அடுத்த மூன்று மாதங்களில் 5 முதல் 7 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். இறுதி மூன்று மாதங்களில் 2 முதல் 3 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
உடல் பருமனான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உடல் எடை மிகவும் குறைவாக உள்ள பெண்கள் கரிப்ப காலத்தில் 12 முதல் 18 கிலோ வரை எடை ஏறலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எடையில் மிகவும் அதிகரித்தாலோ, அல்லது சரியாக அதிகரிக்காமல் இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். அதுவும் உணவை மூன்று வேளையாக மட்டும் சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது நலம்.
சாப்பிடவேண்டியவை
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் என அனைத்து வகை உணவுகளையும் கர்பிணிகள் சாப்பிடலாம்.

குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை பெண்கள் சாப்பிடுவது நலம்.
கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
உடலுக்கு அதிகம் சூடு தரும் பப்பாளி, அன்னாசி பழம், எள்ளுருண்டை போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது. நன்கு பழுத்த பப்பாளி சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். கர்பிணிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். அதனால் காய்கறி, பழங்கள் மற்றும் பயிறுவகைகள் போன்ற நார்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக மசக்கையால் பெண்கள் அதிகமாக வாந்தி எடுக்கும் சமயத்தில் எளிதாக ஜீரணமாகும் உணவை சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும். பலர் எட்டு மாதங்கள் வரை வாந்தி எடுப்பர். பெண்கள் அதற்காக பயப்பட தேவையில்லை. அந்த சமயங்களில் தேவையான உணவை சாப்பிட தவறக்கூடாது. அதிகமான வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய தண்ணீர், பழரசம் சாப்பிடவும்.

அத்தியாவசியத்திற்காக வாடகைத்தாயை உருவாக்கி, பலர் தாய்- தந்தையாகிக்கொண்டிருக்க, மறுபுறம் பேஷனுக்காக சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை என்பது குடும்பத்தின் அச்சாணி. அதனால் திருமணமாகி, கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கிறது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தாய்மையடைய முடியாத நிலை ஏற்படும்போது பெண்கள் கலங்கிப்போகிறார்கள். தங்களுக்கு வாரிசு இல்லையே என்று ஏங்குகிறார்கள்.
அந்த ஏக்கத்தை தீர்க்க இலைமறைவு காயாக உருவானது வாடகைத்தாய் முறை. ஆனால் இப்போது அதுவே ஒரு பேஷனாக அவதாரமெடுத்திருக்கிறது. ஒரு புறம் வேறு வழியே இல்லாமல் அத்தியாவசியத்திற்காக வாடகைத்தாயை உருவாக்கி, பலர் தாய்- தந்தையாகிக்கொண்டிருக்க, மறுபுறம் பேஷனுக்காக சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
வாடகைத்தாய் முறை உருவானது வெளிநாட்டில். அங்கு தனித்து வாழ்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அவசிய தேவையாக இருந்தது. நம் நாட்டை பொறுத்தவரை குழந்தை இல்லாத, குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லாத தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் நாளடைவில் பலரும் வாடகைத்தாய் வசதியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே கணவன், மனைவியாக வாழ்பவர்கள் மற்றும் தனித்து வாழும் ஆண், பெண் இருபாலரும் இந்த முறையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் கலாசாரம் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. பணம் தேவைப்படும் பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வாடகைத் தாய்களாக அமர்த்தப்படுகிறார்கள். குழந்தையை பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
பிரபல மருத்துவர் நய்னா பட்டேல் 10 ஆண்டு களாக வாடகைத்தாய் மூலமாக சுமார் 1120 குழந்தைகளை சமூகத்திற்கு தந்திருக்கிறார். வாடகைத்தாய் முறை விவாதமாக மாறிவருவது பற்றி அவர் சொல்கிறார். ‘‘சமூகத்தின் எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஒரு சேவை இருக்கிறது என்றால் பலரும் அதை பயன்படுத்தத்தான் முயற்சிப்பார்கள். அதை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் எந்த கலாசாரத்தையும் காப்பாற்றிவிட முடியாது. குழந்தை இல்லாத தம்பதிகளின் மன வேதனையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் பலர் வாடகைத்தாயாகி, குழந்தை இல்லாத தம்பதியரின் ஏக்கத்தை போக்குவதற்கு முன்வந்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? விபசாரத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும்போது வாடகைத்தாய் விஷயத்தை ஏன் குரூரமான கண்களோடு பார்க்க வேண்டும்.
எந்த சட்டம் என்றாலும் அது இயற்றப்படுவதற்கு முன்பு அதில் சம்பந்தப்பட்டவர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். வெளிநாட்டு தம்பதிகள் கூட இந்தியா வந்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு போகிறார்கள். அவர்கள் அதற்கு 11 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ரூ.6 லட்சம் வரை செலவழிக்கிறார்கள். இந்த தொகை வாடகைத்தாயாகும் பெண்ணின், ஏழை குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். அதை ஏன் தடுக்க வேண்டும்?’’ என்கிறார், அவர்.
வாடகைத்தாய்மார்கள் சில வரைமுறைகளுக்கு உட்படவேண்டியதிருக்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக வேண்டும். அதற்கு முன்பாக ஒரு குழந்தையாவது ஆரோக்கியமாக பெற்றெடுத்திருக்க வேண்டும். வயது அதிகமாக இருக்கக்கூடாது. உடலில் வேறு எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல குழந்தை தேவைப்படும் தம்பதிகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் வாடகைத்தாய் முறையை கையாள வேண்டும். திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் மட்டுமே இந்த முறையை பயன்படுத்தலாம். குழந்தை என்பது உணர்வுபூர்வமான விஷயம். ஏற்கனவே குழந்தையை பெற்றெடுத்தவர்கள் மீண்டும் வாடகைத்தாய் மூலம் மற்றொரு குழந்தையை பெற்றெடுக்கும் விஷயம் பிரச்சினைக்குரியது.
அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது அதன் மனநிலை பாதிப்புக்குள்ளாகும். அதுபற்றி சிந்திக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஆண் மட்டும் தனியாக வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது கஷ்டமான காரியம். இதையெல்லாம் சிந்திக்காமல் விளையாட்டுதனமாக வாடகைத்தாய் சேவையை பயன்படுத்தக்கூடாது என்ற எதிர்ப்பு குரலும் ஒலிக்கிறது.
வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது உருவாகும் பின் விளைவுகளை பற்றியும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும். எதையும் சமுதாயம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் நன்மை, தீமை உள்ளடங்கி இருக்கிறது. பெற்ற தாயைவிட குழந்தைக்கு இந்த உலகத்தில் முக்கிய பாதுகாப்பு வேறு எதுவுமில்லை. பெற்றெடுக்காதவர்கள் குழந்தைக்கு தாயாகுவது சிரமம்தான். பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிவிடலாம். ஆனால் பணத்தை கொடுத்து அம்மாவை வாங்க முடியாது.
வாடகைத்தாய் முறையில் ஐ.வி. எப். சிகிச்சை குறிப்பிடத்தக்கது. தாயின் கரு முட்டையையும், தந்தையின் விந்தணுவையும் ஒன்று சேர்த்து பரிசோதனை கூடத்தில் வளர்த்து வாடகைத்தாயின் கர்ப்பத்தில் புகுத்தப்படுகிறது. அந்த கருவை வளர்த்து முழுமையாக்கி குழந்தையாக பெற்றுத்தரும் வேலைமட்டும்தான் வாடகைத்தாய்க்குரியது.
அதனால் குழந்தை தாய்-தந்தையின் பண்பை பெற்றிருக்கும். இதனால் பலரும் இந்த முறையை விரும்புகிறார்கள். ஆனால் கருமுட்டை தாயிடம் இல்லாதபோது அதற்கு வேறு அணுகுமுறை அவசியப்படுகிறது. அப்போது வாடகைத்தாயின் கருப்பை மட்டுமல்ல, கருமுட்டையையும் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். அல்லது வேறு யாரிடமிருந்தாவது கருமுட்டை பெறலாம்.
மகப்பேறு மருத்துவர் ஒருவர் சொல்கிறார்: ‘‘ஆரம்பத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்து வந்த விஷயம் இப்போது பரவலாகி விட்டது. வாடகைத்தாயாக இருப்பதற்கு பல பெண்கள் முன்வருகிறார்கள். நாங்கள் வாடகைத்தாயின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அவர்கள் குழந்தை பெறும் நிலையில் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் முறையாக தெரிவித்துவிட்டு அவர்கள் அனுமதித்தால் மட்டுமே நாங்கள் சம்மதிக்கிறோம். விருப்பமுள்ள சில குடும்பத்தினரை நானே அழைத்து பக்குவமாக எடுத்துரைக்கிறேன். இந்தியாவில் சில ஆயிரம் சிகிச்சை மையங்கள் உள்ளன. வாடகைத்தாயாக விருப்பம் தெரிவிப்பவர் களுக்கென தனி வாடகை வீடு எடுக்கப்பட்டு குழந்தை பெறும் வரை அவர்கள் அங்கு குடியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, முறையான சிகிச்சை அனைத்தும் வழங்கப்படுகிறது. மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கப்படு கிறார்கள்’’ என்கிறார். இவர் சொல்வது போன்று வாடகைத்தாய் முறை வேகமாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டு, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும்.
பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டு, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும். ஏன்என்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ‘மனோபாஸ்’ என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம்.
அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்குதக்கபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால் தான் அழகாகவும் தோன்ற முடியும்.
* காலை எட்டு மணிக்குள் தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.
* உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம். அதனால் வாரத்தில் மூன்று நாட்களாவது காலை இளவெயில் உடலில் படட்டும்.
* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள்.
* வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை சாப்பிடுங்கள். அதில் மிளகுதூள் கலந்து சாப்பிடுவது எல்லா வயதினருக்கும் சக்தி தரும்.
* மூன்று நேரமும் சாதம் உண்ணும் பழக்கம் இருந்தால், அதை முதலில் இரண்டு நேரமாக குறைத்து, பின்பு மதியம் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுங்கள். சாதத்தை மூன்று நேரமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாமல் போய் விடும்.

* 40 வயதிற்கு மேல் தசை பலமிழப்பு, கண்பார்வை குறைபாடு போன்றவை ஏற்படும். அவைகளை சரிசெய்ய கேரட் ஜூஸ் தயார் செய்து அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் பருகிவரவேண்டும். இது பார்வை நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
* பெண்கள் 40 வயது தொடங்கும்போதே மாமிசம் உண்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதுபோல் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களையும் பருகக்கூடாது. அதில் இருக்கும் பாஸ்பரஸ் அவர்கள் உடலில் இருக்கும் கால்சியத்தை வீணாக்கிவிடும். சிறுவயதில் இருந்தே பெண்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை வழங்கிவரவேண்டும்.
* முட்டை, இறைச்சி மூலம் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைத்தால், அது உடலில் இருக்கும் கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். அதனால் பெண்கள் 40 வயதுக்கு மேல் அத்தகைய புரோட்டீனை தவிர்த்து, இயற்கை உணவுகள் மூலம் கிடைக்கும் புரோட்டீனை உட்கொள்ளவேண்டும். சோயாவில் இது அதிக அளவில் உள்ளது.
* 40 வயதுக்கு மேல் இளநரை, முடி உதிர்தல், பார்வைக்குறைபாடு, தசை சுருக்கம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். அதற்கு நிவாரணம் தருவது, கறிவேப்பிலை. இதனை தினமும் எல்லா வகை உணவிலும் சேர்க்கிறோம். ஆனால் சாப்பிடும்போது அதனை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திவிடுகிறோம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி போன்றவைகளையும் பயன்படுத்துங்கள்.
* நாற்பது வயதாகும்போது ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையை பெற்று, உங்கள் உடலுக்கு பொருத்தமான உணவுகள் பட்டியலை பரிந்துரைக்க செய்யுங்கள். அந்த பட்டியல்படி உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். அதுபோல் டாக்டரை சந்தித்து உடல் பரிசோதனையும் செய்யுங்கள். அவர் பரிந்துரைத்தால் கால்சியம், வைட்டமின்-டி போன்ற மாத்திரைகளையும் உட்கொள்ளுங்கள்.

கர்ப்பத்திற்குத் திட்டமிடுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு எதுவும் நேராமல் தவிர்க்க, புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.
கர்ப்பத்தின்போது, தாயிடமிருந்து ஆக்சிஜனும் உணவும் குழந்தைக்கு செல்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் புகைபிடிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் இந்த வேதிப்பொருள்கள் குழந்தையையும் அடைகின்றன. புகைபிடிப்பது, குழந்தைக்கு மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்ணுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
புகைபிடிக்கும் பெண்கள் குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். அவர்கள் எளிதில் கர்ப்பமடைய மாட்டார்கள்.
நிக்கோட்டின் ஃபெல்லோப்பியன் குழாய்களை குறுகச் செய்யலாம், இதனால் கரு அதில் செல்வது தடைபடலாம். இதனால் கருக்குழாய் கருவளர்ச்சி ஏற்படலாம். இதனால் பெரிய சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கருக்கலைப்பு செய்ய நேரிடலாம்.
புகைபிடிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் அல்லது கர்ப்பத்தில் பிற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்களால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படலாம் சில சமயம் தாய் மற்றும் சேயின் உயிருக்கே கூட ஆபத்தாகலாம்.
புகைபிடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையைக் கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும், அப்படிப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் சிறியதாகவும், குறைந்த ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
ஆரோக்கியமற்ற, குறைவான எடையுடன் பிறக்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் அதிக நோய்களால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம், அரிதாக சில குழந்தைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.

குழந்தை திடீரென இறப்பது (SIDS) எனும் கொடிய நிகழ்வு, பெரும்பாலும் புகைபிடிக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே நேர்கிறது.
புகைபிடிக்கும் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும்போது, நுரையீரல் செயல்பாடு குறைவாக இருக்கலாம்.
இந்தக் குழந்தைகளுக்கு பின்னாளில் ஆஸ்துமாவும் பிற நுரையீரல் நோய்களும் உண்டாகலாம்.
பிறவி இதயக் கோளாறுகள், பிளவுபட்ட உதடுகள், பிளவுபட்ட தாடை போன்ற பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம்.
குழந்தைகள் வளரும்போது, கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் கொண்டிருக்கலாம்.
பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் கர்ப்பத்திற்கும் குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகள்...
பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதாலும் கர்ப்பத்திற்கும் குழந்தைக்கும் பாதிப்பு உள்ளது. இந்தப் புகையை கர்ப்பிணிப் பெண் அதிகம் சுவாசிக்க நேர்ந்தால், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, குறைப்பிரசவம், குழந்தை எடை குறைவாகப் பிறப்பது மற்றும் பிற கர்ப்பப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இரண்டாந்தர புகையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, நுரையீரல் மற்றும் காத்து நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி குழந்தை திடீரென இறக்கும் (SIDS) வாய்ப்பும் அதிகம்.
கர்ப்பமாகத் திட்டமிடும் பெண்கள், புகைப்பழக்கத்தை விட்டுவிடுவது மிக நல்லது, அவசியமும் கூட. ஆகவே, கர்ப்பத்திற்குத் திட்டமிடுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு எதுவும் நேராமல் தவிர்க்க, முதலில் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது நல்லது.

அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறைக்கு மேல், கருத்தரித்து 24 வாரங்களுக்கு முன்பாக கருச்சிதைவு ஏற்படுவதையே தொடர் கருச்சிதைவு என்கிறோம்.

மருத்துவரீதியாக, அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலமாக அல்லது கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு வெளியேற்றப்படும் திசுவை ஆய்வு செய்து கருச்சிதைவு கண்டறியப்படுகிறது. கர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 25 சதவீதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 5%-க்கும் குறைவான பெண்களுக்கே தொடர்ச்சியாக இரண்டு முறை கருச்சிதைவு ஏற்படுவதாகவும் சுமார் 1% பெண்களுக்கு மட்டுமே மூன்று அல்லது அதிக முறை தொடர் கருச்சிதைவு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும், குரோமோசோம் அல்லது ஜீன்களில் ஏற்படும் கோளாறுகளே கருச்சிதைவுக்குக் காரணமாக உள்ளன, மேலும் கருச்சிதைவு என்பது தற்செயலான போக்கில் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவதுடன் தொடர்புடைய காரணங்களில் சில:
மரபியல் காரணங்கள்: பெரும்பாலான கருச்சிதைவுகளுக்கு கருவின் மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோம் கோளாறுகளே காரணமாக உள்ளன.
அதிக வயதில் கர்ப்பமடைதல்: வயது அதிகமுடைய பெண்கள் கர்ப்பமடையும்போது, தொடர் கருச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குரோமோசோம் கோளாறுகளால், கரு முட்டையின் தரம் குறைவாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கருப்பையில் கோளாறுகள்: சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பையின் வடிவம் ஒழுங்கற்றதாக இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் அவர்களின் கருப்பையில் கோளாறுகள் ஏற்படலாம். கருப்பைக்கு போதிய இரத்தம் செல்லாததாலும் கருப்பையில் அழற்சி ஏற்படுவதாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான காரணங்கள்: சில சமயம், நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான காரணங்களாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம். ஆரம்ப காலத்திலேயே கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் 10 முதல் 20% பெண்களுக்கு, ஆன்டிஃபோஸ்ஃபோலிப்பிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறு இருந்துள்ளது.
மகப்பேறு தொடர்பான நோய்கள்: பெண்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான கோளாறுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், உதாரணம்: நீரிழிவுநோய், தைராய்டு நோய், சினைப்பை நீர்க்கட்டிகள் அல்லது புரோலாக்டின் அதிகமாக இருத்தல்
நோய்த்தொற்று சம்பந்தமான காரணங்கள்: ருபெல்லா, சைட்டோமேகலோவைரஸ், HIV, பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று, கிலாமிடியா, கொனோரியா, சிஃபிலிஸ் போன்ற கர்ப்பகால நோய்த்தொற்றுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம்.
சுற்றுச்சூழல் தொடர்பான காரணங்கள்: தொழில் காரணங்களுக்காக இரசாயனங்கள், பிற சுற்றுச்சூழல் நச்சுப் பொருள்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் கருச்சிதைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
இயல்புக்கு மாறான விதத்தில் இரத்தம் உறைதல்: தாய்க்கு இரத்தம் உறையும் முறையில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், அது நஞ்சுக்கொடி உருவாக்கத்தில் ஏதேனும் குறைபாடுகளை ஏற்படுத்தலாம், நஞ்சுக்கொடி இரத்த நாளங்களில் இரத்தம் உறைய வழிவகுக்கலாம். இரத்தம் உறைதலுக்கு எளிதில் பாதிப்படையும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற்படலாம்.