என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பின் மீண்டும் கர்ப்பமடைய விரும்புபவர்கள் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
    ஒரு பெண் கர்ப்பம் என்றவுடன் அவளை தூக்கிவைத்து கொண்டாட நினைப்பவர்கள், அதே கர்ப்பம் கலைந்துவிட்டது என்றவுடன் என்ன செய்வதென தெரியாமல் தவிக்க, அந்த பெண்ணால் மட்டும் அதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பின் மீண்டும் கர்ப்பமடைய விரும்புபவர்கள் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

    1. ஒன்றுக்கும் மேற்பட்ட கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் உங்கள் உடல் இன்னொரு கர்ப்பத்துக்கு தயாராக உள்ளதா என்பதை மருத்துவரிடம் பரிந்துரை செய்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒருமுறை கருச்சிதைவு ஏற்படும்போது அதன் மரபு ரீதியான ஒரு சில விஷயங்கள் பிறப்புறுப்பின் அருகாமையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை சோதனை மூலம் கண்டறிய வேண்டியது முக்கியம்.

    2. நீங்கள் 35 வயது உடையவராக இருந்தால் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்பின்னர் செயல்படுவது நல்லது. புகைப்பிடித்தல் பழக்கத்தினாலும் கரு மலட்டு தன்மை என்பது உண்டாகலாம்.

    3. ஒருமுறை கருச்சிதைவு என்றால் உடனே மனம் தளர்வது உங்கள் மனதை மீண்டும் கர்ப்ப நிலைக்கு தள்ள முடியாமல் தவிக்க வைக்கும். எனவே, கருச்சிதைவுக்கு பின்னர் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் 100 சதவிகித தெளிவுடன் இருத்தல் வேண்டும்.

    4. ஏதோ ஒரு நன்மைக்கே நம் கரு கலைந்திருக்கிறது என நினைத்து அதை கடந்து மீண்டும் எப்படி கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பதை சிந்தியுங்கள். நம்பிக்கை என்பது உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மிக விரைவில் அழகிய குழந்தையை நீங்கள் ஈன்றெடுக்கலாம். நீங்கள் நம்பிக்கையற்று பயம் மற்றும் பதட்டத்துடன் மீண்டும் ஒரு குழந்தை பெற்றாலும், அவன் பயமற்று தைரியமாக பிறப்பான் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? உங்களால் தான் உங்கள் குழந்தையும், அவர்கள் குணங்களும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

    கருச்சிதைவு என்பது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்றாலும், நாளை பிறக்க போகும் குழந்தையை கண்டு இதுவும் கடந்து போகும் என்பதை உணருங்கள்.
    30 வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது.
    திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்கள் 21 வயதிலிருந்து 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது தாய்க்கு ஆரோக்கியம்.

    இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த வயதுக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஓராண்டு முன்னே பின்னே இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது. சமீபகாலமாக திருமணமான வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடுகிறார்கள்.

    20, 21 வயதில் திருமணமான பெண்கள் இப்படி குழந்தை பேறை தள்ளிப் போடலாம். ஆனால் 30, 35 வயதில் திருமணம் செய்து கொண்டு, நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது காலகாலமாய் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். ஏனெனில் வயது கூடக் கூட சிறிய குறைபாடுகள் கூட பெரிய குறைபாடுகளாக மாறக்கூடும்.

    பெண்களென்றால் சினை முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஆண்களென்றால் உயிரணுக்களின் உயிரோட்ட வேகம் குறைந்து விடும். 30 வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது. காலம் தாழ்த்திய அல்லது பருவம் கடந்த திருமணம் என்றால் ஆண், பெண் இருவருமே உரிய மருத்துவ சோதனை செய்து கொள்வது பின்னால் சில பிரச்சினைகள் வராது தடுக்க உதவும்.

    திருமணத்திற்கு முன் தெரிந்தோ, தெரியாமலோ முறையற்ற உறவுகளில் ஈடுபட்டிருந்தால் பால்வினை நோய்கள் தாக்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் உயிரணு எண்ணிக்கையை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஏதேனும் குறைகள் இருப்பதை நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இனிய மணவாழ்க்கை அமையும்.

    மனைவி வேலைக்கு போக வேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்பு. வேலை பார்க்கும் பெண்களுக்கும், வேலை பார்க்காத பெண்களுக்கும சினை முட்டை கருத்தரிப்பதில் கூட வேறுபாடு இருப்பதை காண முடிகிறது. மனது, உடல், கருமுட்டை இம்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண்களில் வேலை பார்க்காத பெண்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பதில் வெற்றி கிடைப்பது அதிகம். காரணம் எந்த டென்ஷனும் இல்லாமல், மனசு லேசாகி, உடலும் லேசாகி உறவில் ஈடுபடும் போது கருமுட்டை சினைப்பது எளிதாகிறது.
    சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

    இது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.

    சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.

    தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.

    குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம்.

    தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.

    தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை. அவ்வாறு உங்களுக்கு பால் பற்றாக்குறை இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
    அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதற்காக அவர்கள் பின்பற்றும் தவறான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
    ‘அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், ‘ஒரே வாரத்தில் எடை குறைக்க’, ‘இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்’ என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல!

    இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும். உதாரணமாக... உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று முயன்று, ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது. குறுகிய நாட்களுக்குள் அதிகமாக எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், அதற்காக மேற்கொள்ளும் இயற்கைக்கு ஒவ்வாத முயற்சிகளின் விளைவுகள், விபரீதத்தையே கொண்டுவந்து சேர்க்கும்.

    ஜிம்மில், ‘இந்த எலெக்ட்ரானிக் மெஷினில் எந்த வொர்க் அவுட்டும் செய்யாமல் நின்றாலே போதும். இந்த எலெக்ட்ரானிக் பெல்ட்டை கட்டிக்கொண்டாலே போதும்... அது தானாக உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிடும். இப்படி தினமும் செய்வதால், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் நாளுக்குநாள் கரைக்கப்படும்.



    இதனால் உடல் எடை குறைந்து அழகான உடல் வாகை பெறலாம்’ என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். உண்மையில் இதனால் உடல் எடை குறைவதுபோன்றுதான் ஆரம்பத்தில் தோன்றும், போகப்போக முன்பு இருந்த எடையைவிட அதிகரிக்கும் என்பது உண்மை. முன்பைவிட சுறுசுறுப்பு குறைந்து, சாதாரண வேலையைக்கூட செய்யமுடியாத நிலையும் ஏற்படக்கூடும்.

    ‘எந்த மருந்தாலும், பவுடராலும் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கமுடியாது. சரிவிகித உணவுக் கட்டுப்பாடும், போதிய உடற் பயிற்சியும்தான் ஒருவரது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கும்.

    ஜிம்முக்குதான் போக வேண்டும் என்பதில்லை. வாக்கிங், சைக்கிளிங், ஷட்டில், யோகா, ஏரோபிக்ஸ், ஸ்விம்மிங், ஸும்பா என...  ஏதாவது ஒன்றை நேரம், சூழல், விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். தரையில் செய்யக்கூடிய ஃப்ளோர் எக்ஸர்சைஸ்களாகத் தேர்ந்தெடுத்து வீட்டில் செய்யலாம்.

    வயிறு, பின்பக்கம், தொடை, உடம்பு என்று உடலின் குறிப்பிட்ட பாகங்களில் மட்டும் அதிக எடை கொண்டிருப்பவர்கள், பிரத்யேகப் பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம். இதை ஜிம்மில் டிரெயினரிடம் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே செய்யலாம். தொடர்ந்து ஒருவர் உடற்பயிற்சி மேற்கொண்டு, திடீரென விட்டுவிட்டால் முன்பு இருந்த எடை, மீண்டும் கூடிவிடும். சமயங்களில் அதிக மாகவும்கூட வாய்ப்புள்ளது.
    இன்றைய இளைய தலைமுறையினரின் முறையற்ற உணவுமுறை, வாழ்க்கை முறையின் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்...
    இன்றைய இளைய தலைமுறையினர் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

    பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

    ‘பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். பிசிஓடி பிரச்சனை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.

    திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்!

    சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம். 30 பிளஸ்ஸில் திருமணம்... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.



    கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்!

    7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.

    இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்சனைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்சனைகளைத் தரலாம்.

    எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம்.

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!


    பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும்.

    14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
    55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.
    இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதால் அதனைப் பற்றி அதிகம் கூறப்படுகின்றது. குறிப்பாக இளம் வயது பெண்கள் கூட தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி ஆரம்ப காலத்திலேயே கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.

    * வயிற்றுப் பிரட்டல், தலை ஏதோ ஒரு சங்கடம் கொடுக்கும்.

    * வலியோ, அகவுகர்யமோ இரண்டு கைகளிலுமோ அல்லது ஒரு கையிலோ, தோள் பட்டையினைத் தொடர்ந்தோ இருக்கும்.

    * முதுகு வலி, கழுத்து வலி, முகவாய் வலி, வயிற்று வலி இருக்கும்.

    * நெஞ்சு வலி, நெஞ்சில் அகவுகர்யம் இவை இருக்கும்.



    முறையான மருத்துவ பரிசோதனைகளை எடுக்காமல் இருப்பது பலரின் அபாய பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது.

    உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள்.

    * ரத்த கொதிப்பு பாதிப்பு இருக்கின்றதா?

    * பரம்பரையில் இருதய நோய் பாதிப்பு இருக்கின்றதா?

    * 30 நிமிடமாவது அன்றாடம் நடக்கின்றோமா?

    * குடும்ப மருத்துவர் என்ற பழக்கம் உள்ளதா?

    இவைகளை அறிந்து சரி செய்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு உங்கள் கையில்தான்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அது பிரசவத்தில் போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்சனை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    * நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்… தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    * குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    * சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    * எடை கூடுதல்

    * உயர் ரத்த அழுத்தம்

    * கரு கலைதல்

    * மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    * டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    * வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    * ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    * நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்… சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்



    * கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    * கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்சனைகள்

    * பிறப்புநிலைக் கோளாறுகள்

    * பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    * மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    * மஞ்சள் காமாலை

    * ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    * பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    * குறைப் பிரசவம்

    * Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    * மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
    தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும், பெண்களுக்குக் கூடுதல், கவனம் தேவைப்படுகிறது. பொதுவாகப் பெண்களுக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வலிப்புகளை உருவாக்கும் தன்மை உடையது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவக் காலம், குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன், ரசாயன மாற்றங்கள் வலிப்பு நோயைப் பாதிக்கக்கூடும்.

    வலிப்பு உள்ள ஒரு பெண், கருத்தரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அது போலவே, கருத்தரித்த பெண்களுக்கு முதன்முறையாக வலிப்பு வந்தால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு, முகப்பரு, எடை கூடுவது, முடி உதிர்வது, பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOD) போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டே பெண்களுக்கு வலிப்பு நோய் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    வலிப்பு நோய் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதத் தடையும் இல்லை. தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பெறுவது, போன்றவை இயல்பாக எல்லோரையும் போல இருக்கும் என்பதால் அச்சம் தேவை இல்லை.

    திருமணத்துக்காக, வலிப்பு நோய்க்கான மாத்திரைகளைக் குறைப்பதோ, மாற்றுவதோ அல்லது நிறுத்திவிடுவதோ வலிப்பு வரக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும். தாயின் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் அது நல்லதல்ல.

    வலிப்பு உள்ள பெண்கள், கூடுமானவரை கருத்தடை மாத்திரைகளை (ஹார்மோன் பில்ஸ்) தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, மாற்று கருத்தடை முறைகளைக் (காப்பர்-டி, பெண் உறை போன்றவை) பின்பற்றுவது நல்லது.



    பிரசவ கால ஜன்னியில் (Eclampsia), கர்ப்பிணிகளுக்கு வலிப்பு வரக்கூடும். ரத்தக் கொதிப்பு அதிகமாவதால் ஏற்படும் மூளை பாதிப்பே இதற்குக் காரணம். உடனே மருத்துவரால் கவனிக்கப்பட வேண்டிய நிலை இது.

    தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

    மகப்பேறு காலத்தில் தாய்க்கோ, சிசுவுக்கோ அல்லது இருவருக்குமோ ஏற்படும் வலிப்பு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால், மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வலிப்பு மாத்திரைகளால் 2 முதல் 3 சதவீதம்வரை, பிறக்கும் குழந்தைக்கு ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட வலிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களின் குழந்தைகளுக்கு ஊனம் இருக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.

    வலிப்புகளால் ஏற்படும் விளைவுகள், மருந்துகளால் வரும் பக்கவிளைவுகளைவிட மோசமானவை. அதனால், மகப்பேறு காலத்தில் வலிப்புகளைக் கட்டுப்படுத்துவதே முதன்மையாகக் கருதப்படும்.

    வலிப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்; தாய்ப்பாலில் வலிப்பு மருந்துகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், பயப்பட வேண்டாம்.
    கர்ப்பகாலத்தில் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். இதனை சரிசெய்ய பெல்ட் அணிவது நல்லதா என்பது குறித்து பார்க்கலாம்.
    கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

    கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும். பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

    இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போடவேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

    குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்துபோன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும். அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.
    கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மன அழுத்தம், உடல் நலம் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
    கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும்.

    தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்சனைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

    கர்ப்பக் காலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

    எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
    உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.



    அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

    அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

    வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம். பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

    பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்சனை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.

    இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.
    பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.
    பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும்.

    ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

    * குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார்மோனானது அண்டவிடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும்.



    * நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாலிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.

    * பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறாவிட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது. அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாசமானது.

    இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும். ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சொல்லப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே சரிசெய்துவிடலாம்.
    பெண்களின் மலட்டுத் தன்மைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் ஒழுங்கற்ற உணவு முறையும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
    கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்சனையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

    * மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்சனையைப் போக்க உதவும்.

    * கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்சனையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.

    * குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.



    * ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

    * மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும்.

    * முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
    ×