என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.
    • வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    தனக்கு தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவரான இவர், ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.

    வீட்டைச் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்கும் `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரிக்க கற்றுக்கொண்டு, அதை தொழிலாக முன்னெடுத்து இன்று அரசு அலுவலகங்கள் வரை கொண்டு சேர்த்திருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்த இந்த கைத்தொழிலை, மற்றவர்களுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். கடந்த 34 வருடங்களாக, தொடர்ந்து வரும் இந்த சேவை பற்றி, கலைச்செல்வி பகிர்ந்து கொண்டவை...

    `இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாட்டில், வீட்டுப் பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுதான், இன்று பல பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது. நானும், அப்படித்தான் வீட்டுப்பராமரிப்பு பொருள் தயாரிப்பைக் கற்றுக்கொண்டேன். சின்ன முதலீட்டில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருந்ததால், இன்று வரை தொடர்கிறேன்'' என்றவர்,சிறுதொழிலாக முன்னெடுத்து இன்று, அரசு அலுவலகங்களுக்காக `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரித்து வழங்கும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறார்.

    `ஏழை-எளிய பெண்களின் வாழ்க்கை முன்னேற, சிறுதொழில் மிகவும் அவசியம். அதுவும் வீட்டுப் பராமரிப்பு பொருள் தயாரிப்பு சம்பந்தமானதாக இருந்தால், பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். என் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக அதை உணர்ந்து கொண்டேன். இப்போது, அதை மற்ற ஏழைப் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்' என்றவர், இதுவரை சென்னையை சுற்றியிருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களை சிறுதொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். சிறிய முதலீட்டிற்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு, தன்னால் முடிந்த தொழில் வளர்ச்சி முயற்சிகளை முன்னெடுக்கிறார்.

    `நான் சுயமாகவே பயிற்சி கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும், பெண்கள் குழுக்களுடன் இணைந்து, 2 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பொதுவாக, வீட்டுப்பராமரிப்பு பொருட்களை தயாரிக்க, வெறும் 2 நாட்கள் பயிற்சியே போதுமானது. 2 நாட்கள் பயிற்சியிலேயே, ரூம் பிரஷ்னர், லிக்வீட் டிடெர்ஜெண்ட், டிடெர்ஜெண்ட் பவுடர், பினாயில், டிஷ்வாஷர், சானிடைஷர்... இப்படியாக 10 பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொள்ளலாம். அது பல குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்' என்பவர், தொழில்முனைவோர் வளர்ச்சி பணிகளுக்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார். சமீபத்தில் கூட, இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    `பெண்களின் ஏழ்மை, அவர்களை தொழிலாளர்களாக மாற்றிவிடுகிறது. சிலர் அடுக்குமாடிகளில் வீட்டு வேலை செய்கிறார்கள். சிலர் ரசாயன நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி, ஏழை பெண்களையும் சுய தொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றுவதுதான் என் ஆசை. அந்த பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்' என்கிறார்.

    • சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை.
    • வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல.

    சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும், வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அத்தகைய தாவரங்கள் நமக்கு பிடித்தாலும் வீட்டுக்குள் வைத்து வளர்க்காமல் இருப்பது நல்லது.

    முற்களால் ஆன தண்டு போன்ற அமைப்பைக் கொண்ட இந்த கள்ளி செடிகள் உங்களது ஆற்றலை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே அதை வீட்டினுள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வளர்ச்சி குன்றிய இந்த பொன்சாய் தாவரம் நமது வாழ்க்கையிலும் வளர்ச்சி ஏற்படுவதை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

    பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த பொன்சாய் செடிகளை எல்லோருமே வளர்க்க ஆசைப்படுவோம். ஆனால் அதை வீட்டின் வெளிப்புற வராண்டாவில் வைக்கலாம். வீட்டு வாசலுக்கு நேராகவோ அல்லது படுக்கையறை மற்றும் சமையலைறையைப் பார்த்தபடி வைக்கக் கூடாது. அது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

    மூங்கில் செடி

    இந்த செடியை நீங்கள் வீட்டின் முன்புறத்தில் வைக்கலாம். இவை நமக்கு ஒரு விதமான அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. இதை நாம் வீட்டை நோக்கி திருப்பி வைக்கும்போது, வாழ்வதற்கான ஆதாரம் இல்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

    பொட்பேரி

    இவை பெரும்பாலும் வீட்டை அழகுபடுத்த பயன்படுத்தப்படும் உலர்த்தப்பட்ட இலைகள் ஆகும். ஏனெனில் இந்த இலைகள் இழக்கப்பட்ட ஆற்றலைப் பற்றி கூறுபவை. இவை ஒரு விதமான முன்னோக்கிய எண்ணங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

    அரச மரம் மற்றும் அதன் வேர்கள் அதிகப்படியான நீரை உறிஞ்சக்கூடியவை. இதனால் இவற்றை நம் வீடுகளில் நடும் போது அவை சுவர்களில் விரிசல்களை ஏற்படுத்துவதோடு அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும்.

    செடிகளை வைப்பதில் நாம் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை

    உங்கள் படுக்கை அறையில் செடிகளை வைக்காதீர்கள். செடிகள் மிகவும் ஆற்றல் மிக்கவை என்பதால் அவை உங்கள் படுக்கை அறையின் காற்றோட்ட தன்மையை கெடுக்கும். இதனால் நீங்கள் காலை எழும்போது சோர்வாக காணப்படுவீர்கள். சில அழியக்கூடிய தாவரங்கள் எதிர்மறையான ஆற்றலை உருவாக்கும். எனவே அவற்றை உடனடியாக மாற்ற வேண்டியது அவசியம்.

    • பிரியமான மகளுக்கு பாசமான தந்தை ஒரு பரிசு அளிக்கிறார்.
    • ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்பு பரிசாக வழங்கி இருக்கிறார்.

    பிரியமான மகளுக்கு பாசமான தந்தை எதை பிறந்தநாள் பரிசாக வழங்குவார்... நல்ல உடை அல்லது டெடி பியர், அல்லது விலை உயர்ந்த வாட்ச், ஐபோன்... இப்படி எதுவாகவும் இருக்கலாம்... ஆனால் ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார். அது நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறது என்றால் நம்புவீர்களா?

    பட்ரீசியா மவ் என்ற பெண், 'நல்ல தந்தையின் பரிசு' என்று அவர் அழுக்கு தண்ணீர் வழங்கியதை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "தந்தை தனக்கு இப்படி ஒரு பரிசை வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த காலத்தில், அவர் முதலுதவி பெட்டி, பெப்பர் ஸ்பிரே, என்சைக்ளோபீடியா, ஒரு சாவிக்கொத்து, மற்றும் அவர் எழுதிய புத்தகம்... இப்படி பல பரிசுகளை வழங்கியுள்ளார். " என்று எழுதியுள்ளார்.

    இதை ஏன் கொடுக்கிறேன் என்று தந்தை விளக்கியதையும் அவர் கூறியுள்ளார். "குலுக்கும்போது, அழுக்கு பாட்டிலில் எல்லா இடமும் அசுத்தமாகி காட்சி தரும். அதுபோலவே நாம் வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு படபடக்கும் போது எல்லாம் இருளாக (அழுக்காக ) தோன்றும். ஆனால் அமைதியை கடைப்பிடித்தால் அழுக்கு படிந்துவிடுவதுபோல துன்பங்கள் குறைந்து எங்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் பிரதிபலிக்கும்" என்று தந்தை கூறியதாக அவர் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

    அடேங்கப்பா அழுக்கு பாட்டிலில் ஜென் தத்துவம்...

    • எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.
    • எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும்.

    எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும். எலி, கரப்பான் பூச்சி போன்றவை வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே வீடு அசுத்தமாவதோடு பல்வேறு கொடிய நோய்க்கிருமிகளையும் அது பரப்பி விடும். குறிப்பாக எலிகள் பிளேக் வைரசை பரப்பும் ஆபத்து அதிகம். அதனால் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் வீட்டில் உள்ள எலிகளை உடனடியாக விரட்டுவதும் மிக அவசியம்.

    வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் பீநட் பட்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகப் பிடிக்கும். அதேபோல தான் பீநட் பட்டர் உங்களுடைய வீட்டில் உள்ள எலிகளுக்கும் பிடிக்கும்.

    பொதுவாக எலிகளை பிடிக்க வீட்டில் எலிப்பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு, கருவாடு ஆகியவற்றை வைப்பதுண்டு. ஆனால் எலிப்பொறியில் சிறிதளவு பீநட் பட்டர் தடவி, அதன் அருகிலும் சிறிது பீநட் பட்டரை உள்ளுக்குள் வைத்துவிடுங்கள். பீநட் பட்டரை சாப்பிட முயற்சிக்கும்போது அதில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையால் சிறிது நேரம் நன்கு அவற்றின் கால்கள் மாட்டிக் கொள்ளும். அடுத்த நாள் காலையில் எலிப்பொறியில் நிச்சயம் எலி மாட்டியிருக்கும்.

    எப்படி விரட்டுவது?

    புதினா

    புதினா இலைகள் எலிகளுக்கு எதிரி என்றே சொல்லலாம். புதினா இலைகளில் இருந்து வரும் நல்ல நறுமணம் எல்லோருக்கும் பிடிக்கும். எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் ஃபிரஷ்ஷான புதினா இலைகளைக் கசக்கி போட்டு வைக்கலாம். அதேபோல புதினா சேர்க்கப்பட்ட டூத்பேஸ்ட்டுகள் கடைகளில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக தடவி வைக்கலாம். புதினாவின் வாசனையில் எலி மயங்கிவிடும்.

    பிரிஞ்சுஇலை

    பிரியாணி இலை என்று அழைக்கப்படுவது தான் பிரிஞ்சி இலை. இதில் நல்ல வாசனை இருக்கும். பிரியாணி, மாமிச உணவுகள் செய்யும்போது வாசனைக்காகவும் ஜீரண சக்திக்காகவும் சேர்த்துக் கொள்ளப்படும் வாசனை மிகுந்த இலை தான் இந்த பிரிஞ்சி இலை.

    இந்த இலைகளில் இருந்து வரும் நறுமணம் எலிகளுக்குப் பிடிக்காது. பிரிஞ்சி இலையை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்தோ அல்லது கொரகொரப்பான பொடியாகவோ செய்து எலி வரும் இடங்களில் ஒரு பேப்பரில் அல்லது தட்டில் போட்டு வைத்துவிட வேண்டும். எலிகள் அந்த இலைகளை நுகரும்போது மயங்கிவிடும். இதனால் எலி மறுபடியும் வராது.

    கம்பி வலை

    பொதுவாக வீட்டில் ஏதேனும் சில வழிகளை எலிகள் நுழைவதற்காகத் தேர்வு செய்து வைத்திருக்கும். அந்த வழித்தடங்களைக் கண்டு பிடித்துவிட்டால் போதும் நீங்கள் உங்களுக்கு சவால் விடும் எலிகளை மிஞ்சி விடலாம். மெல்லிய இரும்பு அல்லது எஃகினால் ஆன கம்பி வலைகள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் எலிகள் நுழையும் ஓட்டை, வாஷ்பேஷன் டியூப் போன்ற இடங்களில் அடைத்து வைக்க வேண்டும். எலிகள் உள்ளே நுழையாமல் இருக்கும். சில சமயங்களில் நுழைய முயற்சி செய்யும் போது எலிகளின் கால்கள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும்.

    பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடா எல்லோருடைய வீடுகளிலும் வைத்திருப்பது மிகவும் நல்லது. இது பாத்திரங்கள் சுத்தம் செய்வது தொடங்கி, வீட்டை சுத்தப்படுத்த, கறைகளை நீக்க, சருமத்துக்கு பயன்படுத்த என பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுகின்றன. எலிகளை விரட்டுவதிலும் பேக்கிங் சோடாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் பேக்கிங் சோடா கரைசலை தெளித்து விட வேண்டும். பேக்கிங் சோடாவில் சிறிது வினிகர் சேர்த்தும் தெளிக்கலாம். அது இன்னும் விரைவான பலன்களைத் தரும்.

    • நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.
    • பொருத்தமான மற்றும் சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் நேர்த்தியான ஆடைகள் அணிவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பொருத்தமான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பதற்கும் கொடுக்க வேண்டும். அணியும் ஆடையின் நிறத்திற்கும், அதன் வடிவத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளாடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பேக்லெஸ், லோ நெக்லைன், டி-ஷர்ட் ஆப் ஷோல்டர் என பலவிதமான ஆடைகள் உள்ளன. அவற்றுக்கு பொருத்தமான மற்றும் சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பதை பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

    டி-ஷர்ட்:

    டி-ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியும்போது எவ்விதமான பிராக்களை அணிந்தாலும் பொருத்தமாக இருக்கும். மெல்லிய மற்றும் வெளிர் நிறங்களைக் கொண்ட ரவிக்கைகளை அணியும்போது டிஷர்ட் பிராக்களை அணியலாம்.

    பேக்லெஸ் உடைகள்:

    பேக்லெஸ் அல்லது லோ நெக்லைன் போன்ற நவீன ஆடைகளை அணியும் போது 'ஸ்டிக் ஆன் பிரா அணிந்தால் உங்கள் தோற்றம் மேம்படும். அது மார்பகத்துக்கு இயற்கையான வடிவத்தை கொடுக்கும்.

    ஆப் ஷோல்டர் உடைகள்:

    தோள்பட்டை முழுவதுமாக வெளியே தெரியக்கூடிய உடைகள் அளியும்போது பட்டைகள் இல்லாத பிராக்களை அணியலாம். சற்றே பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் இத்தகைய பிராக்களை தவிர்ப்பது நல்லது.

    ஆழமான 'வி' கழுத்து உடைகள்:

    ஆழமான வி கழுத்து கொண்ட நவீன ஆடைகள் மற்றும் ரவிக்கைகளை அணியும் போது பிளஞ் எனப்படும் ஆழமான கழுத்து கொண்ட பிராக்களை அணிவது பொருந்தமாக இருக்கும்.

    வெள்ளை நிற ஆடைகள்:

    வெள்ளை மற்றும் வெளிர் நிற ரவிக்கைகள் அணியும்போது சரும நிறம் கொண்ட நியூடு பிராக்கள் பொருத்தமாக இருக்கும்.

    ஜிம் உடைகள்:

    உடற்பயிற்சி செய்யும்போது சாதாரண பிராக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய சமயங்களில் அணிவதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் 'ஸ்போர்ட்ஸ்' பிராக்களை பயன்படுத்துவது அவசியமானது.

    கவுன் மற்றும் லெகங்கா:

    துப்பட்டா இல்லாத ஆடைகள், கவுன் மற்றும் லெகங்கா போன்ற ஆடைகளை அணியும்போது 'பேடட்" பிராக்கள் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

    திருமண உடை:

    திருமணத்திற்கு அணியும் ஆடைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் 'பிரைடல்" பிராக்களை திருமணத்தின்போது அணிந்தால் மணமகளின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    ரவிக்கைகள்:

    போட் நெக், ஆங்கில எழுத்து வி மற்றும் யூ வடிவ கழுத்து என அனைத்து வகையான ரவிக்கைகளை அணியும்போதும், மார்பகங்களை முழுவதுமாக முடக்கூடிய 'புல் கப் பிராக்களை அணிவது பொருத்தமாக இருக்கும்.

    • வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும்.
    • ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

    புதிதாக வீசு கட்டும்போதும், பண்டிகை மற்றும் விஷேச நாட்களிலும் வீட்டை அலங்கரிக்க வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும். ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய மின்விளக்குகள் அமைக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

    புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு:

    ஹாலின் நடுவில் தங்க நிற விளக்கும். ஹாலின் மூலைப் பகுதிகளில் நீலம், பிங்க், ஊதா என சுவரின் வண்ணத்திற்கு ஏற்ற வகையிலும் மின்விளக்குகளை அமைக்கலாம். படுக்கை அறையில் வெளிர் சில்வர். சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம். பால்கனி மற்றும் வீட்டின் முன்புறம் மஞ்சள். நீலம் அல்லது வெளிர் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம்.

    வீட்டின் முன்புறம் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு குடுவை வடிவ விளக்குகளையும், படுக்கை அறைக்கு தரையுடன் ஒட்டி இருக்கும்படியான மின்மினிப்பூச்சிகள் போல காட்சி அளிக்கும் ஓயர் வடிவ விளக்குகளையும், பால்கனி அல்லது மாடிப்பகுதிக்கு சிறிய வடிவில் இருக்கும் போக்கஸ் வகை மின்விளக்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

    பண்டிகை காலங்களில்:

    பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். விட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும். பால்கனிக்கு சில்வர் நிற விளக்குகளையும். வீட்டின் திரை, ஜன்னல் மற்றும் மாடிப்படிகளுக்கு ஊதா மற்றும் வெளிர் பிங்க நிற விளக்குகளையும், படுக்கை அறைக்கு மங்கிய மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிற விளக்குகளையும் அமைக்கலாம்.

    ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தங்க நிற விலக்கையும், பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நீலம், சிவப்பு மற்றும் பச்சை என கலவையான நிற விளக்குகளையும், வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளுக்கு ஊதா மற்றும் சில்வர் நிற விளக்குகளையும் அமைக்கலாம். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஏற்றபடி மின்விளக்கு வடிவங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

    பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்த்துக்களை பகிரும் நிகழ்வுகளுக்கு செயின் விளக்குகளையும் ஆள்மிக நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் 2 அடி அளவில் இருக்கும் நிளமான விளக்குகளையும், பாரம்பரியம் சார்ந்த பண்டிகை நாட்களுக்கு கிளிப் வடிவிலான எல்.இ.டி. விளக்குகளையும் அமைக்கலாம்.

    குழத்தைகள் இருக்கும் வீட்டில் தனித்தனியாக வயரில் இணைக்கப்பட்டிருக்கும் சீரியல் மின்விளக்குகளுக்கு பதிலாக தொடர்சியாக ஒரு பைப்பிற்குள் மூடி இருக்கும்படியான ரோப் மின்விளக்குகளை பயன்படுத்தலாம். கண்ணாடி மற்றும் பைபர் கிளாஸ் மூலம் கிளிப் மின்விளக்குகள் பாதுகாப்பானவை. அது மட்டுமில்லாமல் இவற்றில் தண்ணீர் பட்டாலும் மின்கசிவு ஏற்படாது.

    • கணவரின் குடும்ப உறவுகளுக்கும் இடையே உண்டாகும் புரிதலும் முக்கியமானதாகும்.
    • மாமியார்-மருமகள் இடையே இணக்கம் இருக்க வேண்டும்.

    திருமணம் என்பது கணவன்- மனைவி என்ற இருவரை மட்டுமில்லாமல், புதிதாக குடும்பத்தில் பல உறவுகளையும் இணைக்கக்கூடிய பந்தமாகும். இதில் தம்பதிக்குள் மட்டும் புரிதல் இருந்தால் போதாது. புதிதாக குடும்பத்தில் இணையும் பெண்ணுக்கும், கணவரின் குடும்ப உறவுகளுக்கும் இடையே உண்டாகும் புரிதலும் முக்கியமானதாகும். குறிப்பாக, மாமியார்-மருமகள் இடையே இணக்கம் இருக்க வேண்டும். அதற்கான சில ஆலோசனைகள்...

    மருமகள், வேறு ஒரு குடும்பத்தில் இருந்து புதிதாக தங்கள் குடும்பத்திற்கு வந்த உறவு என்றாலும், இனி இந்த குடும்பத்தின் முக்கியமான உறவு என்பதை மாமியார் நினைவில் கொள்ள வேண்டும். தங்களுடைய மகன் மற்றும் மகளை நடத்துவது போலவே, மருமகளையும் சமமாக நடத்த வேண்டும். எந்த வகையிலும் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.

    மருமகளுக்கு தெரியாத விஷயங்கள், குடும்ப பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் என அனைத்தையும் பொறுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே. மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.

    திருமணமான புதிதில் தம்பதிக்குள் புரிதல் ஏற்பட சில காலம் தேவைப்படும். இந்த சமயத்தில், அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதை உடனடியாக தீர்ப்பதாக நினைத்து அவர்களுக்கு இடையே நுழையக்கூடாது. இது மகன்-மருமகளின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆவதுடன், மாமியார் மீது தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தும். அவர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கவும் வழிவகுக்கும்.

    புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு எதிர்கால வாழ்க்கையை பற்றி பலவிதமான கற்பனைகள் இருக்கும். புதிய இடத்திற்கு செல்வது. புதுப்புது விஷயங்களை தேடுவது என பலவற்றை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதுகுறித்து. அவர்களை

    கேள்வி கேட்டு சங்கடப்படுத்துவது, எடுத்ததற்கு எல்லாம் கட்டளையிடுவது என நடந்து கொள்ளாமல் அமைதியாக இருங்கள். அவர்களாகவே. அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் வகையிலான சூழலை ஏற்படுத்துங்கள். இது உங்களின் மதிப்பை மருமகளின் முன்பு உயர்த்தும்.

    மகன், மருமகள் பற்றி எதிர்மறையான விஷயங்களை மற்றவர்களிடம் பகிரும்போது அது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மருமகள் பற்றி பிறரிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும்போது, அது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    உறவை சுமூகமாக்கும் விஷயங்களில் ஒன்று குடும்ப உறுப்பினர்களின் நல்ல செயல்களை உடனுக்குடன் பாராட்டுவதாகும்.

    மருமகளின் அலுவலகத்தில் கிடைக்கும் பதவி உயர்வு, பிறந்தநாள், திருமணநாள் அனைத்து முக்கிய நாட்களிலும், மருமகளை பாராட்டுவதுடன். அவருக்கு பிடித்த பரிசு பொருட்கள் கொடுப்பது, பிடித்த உணவை சமைத்துக் கொடுப்பது என மருமகளை கொண்டாடுங்கள். இது உங்கள் மீதான பாசத்தையும். அன்யோன்யத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

    • பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம்.
    • பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை "மூன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்கிறோம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்: பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும்.

    பிறக்கும் போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.

    இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் முன் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:

    6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும், தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.

    இதுதவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:

    45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.

    • மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
    • ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.

    பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

    மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

    தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

    இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

    தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.

    ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

    தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.

    முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    • உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான்.
    • செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும்.

    நாம் தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ. ஈ. சி. பி2, பி12 மற்றும் கரேடினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது. மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமாள அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை உடலின் ஆற்றலை அதிகரித்து தான் முழுவதும் உடலை நிரேற்றத்துடன் வைத்திருக்க உதவும், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

    தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல். வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

    காலையில் எழுந்தவுடன். உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் இது சிறு நீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

    உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது. சளி. ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • பொருளாதார ரீதியில் பெண்கள் தான் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.
    • கற்ற கல்வியால் ஆண்களுக்கு நிகராக உயர்ந்து வருகிறார்கள்.

    இன்றைய சூழலில் பல குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் பெண்கள் தான் முதுகெலும்பாக இருக்கிறார்கள். கற்ற கல்வியால் ஆண்களுக்கு நிகராக உயர்ந்து வருகிறார்கள். அதே வேளையில், கல்வி கற்காத கிராமப்புற பெண்களும் சிறு தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து அசத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊன்றுகோலாக சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

    நம்மில் பலரும் சுய உதவிக்குழு என்றால் குடும்ப தலைவிகளுக்கு அவசர காலங்களில் கடன் வழங்கி உதவிக்கரம் நீட்டும் அமைப்பாகத்தான் அறிந்திருப்போம். ஆனால், சுய உதவி குழுவினர் எண்ணினால், எட்ட முடியாத உயரம் என்று எதுவும் இல்லை என்பதை நிரூபணம் செய்து காட்டி இருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூரை சேர்ந்த சுயஉதவி குழுவினர்.

    இவர்கள் தேர்வு செய்த சிறுதொழில், இந்த மாவட்டத்தின் அடையாளமான மரசிற்ப கலை. ஏற்கனவே இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த சிற்பங்கள் மக்களிடையே சென்றடையாததால், இத்தொழிலை சார்ந்து இருந்த கலைஞர்கள் பலரும் கூலிவேலை போன்ற மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டார்கள்.

    தங்கள் வீட்டு ஆண்கள் கைவிட்ட மர சிற்ப தொழிலை, இவர்கள் தைரியமாக கையில் எடுத்து அதில் புதுமை புகுத்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார்கள். கூடவே இப்பிரபஞ்சத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தவிர்க்க அதற்கு மாற்று பொருட்களையும் தயார் செய்து, அசத்தி வருகிறார்கள். தங்கள் மகளிர் குழு முன்னெடுத்திருக்கும் இந்த மர சிற்ப கலை பற்றி அதன் தலைவியான ஆர்.லட்சுமி பகிர்ந்து கொண்ட விஷயங்கள்...

    உங்களை பற்றி?

    நான் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது கணவர் ராஜா கூலிவேலை செய்து வருகிறார். எங்கள் சுய உதவி குழுவை சேர்ந்த 30 பேர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சங்கல்ப் திட்டத்தின் கீழ் மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றோம். பயிற்சியை நாங்கள் 24 பேர் முழுமையாக நிறைவு செய்து, தற்போது பல்வேறு வகையிலான மர சிற்பங்களை உற்பத்தி செய்து, அதற்கு இயற்கையான பொருட்களில் இருந்து கிடைத்த வண்ணங்களை பூசி விற்பனை செய்து வருகிறோம்.

    மர சிற்பங்கள் தயார் செய்யும் தொழில் மீது உங்கள் குழுவுக்கு ஈடுபாடு வரக் காரணம் என்ன?

    எங்கள் பகுதியில் ஆண்கள் மரத்தால் ஆன சாமி சிலைகள் செய்வார்கள். நாங்கள் அங்கு கூலி வேலைக்கு சென்று, சிலை தயாரிக்க பயன்படும் மரப்பலகைகளுக்கு மெருகு ஏற்றும் வகையில் உப்புத்தாள் தேய்த்து வந்தோம். அப்போது தான் நாமும் இந்த தொழிலை செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது. இதையடுத்து நாங்கள் 30 பேர் கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து, அதற்கான உதவியை செய்து தருமாறு கேட்டோம். அவரும் ஏற்றுக்கொண்டு, எங்களுக்கான உதவிகளை செய்ய தொடங்கினார். பின்னர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அரசு சார்பில் இப்போது மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். எனவே நாங்கள் ஒருங்கிணைந்து அரசிடம் கேட்டோம், அவர்களும் உதவியை செய்தார்கள், செய்தும் வருகிறார்கள்.

    பயிற்சி எத்தனை காலம்? எங்கு நடந்தது?

    எங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் எம்.ஆர்.எம்.ஆர்.எம். கல்ச்சுரல் பவுண்டேஷன் மற்றும் மரசிற்ப பணிகளில் இந்திய அளவில் பத்மஸ்ரீ விருது பெற்ற மர சிற்ப பயிற்சியாளர் ராஜூ பயிற்சி அளித்தார். எப்படி எந்திரத்தை கையாள்வது, இயற்கையான பொருட்களில் இருந்து நிறத்தை எப்படி எடுப்பது, அதை பக்குவப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள். மேலும் எங்கள் கிராமத்தில் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சிற்பங்கள் செய்வதற்கான கட்டிடத்தை அரசு கட்டிக்கொடுத்து இருந்தது. அங்கு வைத்து தான் பயிற்சியும் நடந்தது. மொத்தம் 60 நாட்கள் பயிற்சியாகும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடந்தது. வீட்டுவேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பயிற்சியில் கலந்து கொண்டோம்.

    பயிற்சி எளிதாக இருந்ததா?

    முதலில் எந்திரத்தின் அருகே செல்லவே பயந்தோம். அதன் பின்னர் அதை கையாளக்கற்றுக்கொண்டோம். தற்போது எங்களது கற்பனையில் புதிது புதிதாக பொருட்களை உருவாக்கி வருவதால் ஆர்வமும் அதிகரித்துள்ளது. இரண்டு இடங்களில் கண்காட்சி அரங்கம் அமைத்தபோது, பலரும் ஆர்வமுடன் பார்த்து வாங்கி சென்றனர். இதனால் இதன் மீதான நாட்டம் இன்னும் அதிகரித்துள்ளது. மக்களின் தேவையை அறிந்து, பொருட்களை தயார் செய்து வருகிறோம்.

    நீங்கள் தயார் செய்யும் பொருட்களுக்கு இயற்கையான முறையில் தயாரித்த வண்ணம் பூசுகிறீர்களே, இது எதற்காக?

    தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையிலான பொருட்களை தயார் செய்து வருகிறோம். வெறும் மர சிற்ப பொருட்களை கொடுத்தால் மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் தான் வண்ணம் பூசுகிறோம். அதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் பொருட்களிலும் இயற்கையான பொருட்களில் தயாரான வண்ணம் பூசுகிறோம். இதை குழந்தைகள் கடித்தால் கூட எதுவும் ஆகாது. அந்த வகையில் பார்த்து, பார்த்து ஒவ்வொரு பொருட்களையும் தயார் செய்கிறோம்.

    இயற்கை வண்ணமா? அது என்ன புதிதாக உள்ளதே?

    ஆம்! பலா மரத்தின் பட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தை எடுப்போம். புங்கமர காயில் இருந்து பச்சை நிறம், தூங்கு மூஞ்சி மரத்தின் பூவில் இருந்து ஆரஞ்சு, அதன் காய்களில் இருந்து இன்டிகோ நிறம் என்று ஒவ்வொரு மரத்தில் இருந்தும் கிடைக்கும் பொருட்கள் மூலம் வண்ணங்களை எடுக்கிறோம்.

    நகைகளை எவ்வாறு உருக்குவார்களோ அதேபோன்று அடுப்பு தயார் செய்து, பட்டை அல்லது காய்கள் போன்றவற்றை உலக்கையால் நசுக்கி, அந்த நீரை எடுத்து காய வைத்து நிறத்தை உருவாக்குவோம். காலையில் பணியை தொடங்கினால் மதியத்துக்குள் 3 நிறத்தை தயார் செய்ய முடியும். அவ்வாறு எடுக்கும் நிறத்தை 15 நாட்கள் வைத்து பயன்படுத்துவோம்.

    மர சிற்பங்கள் தயார் செய்ய வேலையை எவ்வாறு பிரித்துக்கொள்கிறீர்கள்?

    மர சிற்பங்கள் தயார் செய்வதற்கென்று 4 எந்திரங்கள் உள்ளது. நாங்கள் 24 பேர் பயிற்சி முடித்துள்ளோம். இதில் 8 பேர் வீதம் ஷிப்டு அடிப்படையில் வேலை செய்து வருகிறோம். மின்கட்டணம், மரக்கட்டைகள் போன்ற செலவுகளை கணக்கிட்டு வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வோம். சிற்பங்கள் செய்ய தேவையான மரக்கட்டைகளை நாங்களே பட்டறைக்கு சென்று வாங்கி வருகிறோம். ஆனால் மரங்கள் விலை சற்று உயர்வாக இருப்பது தான் கஷ்டமாக உள்ளது. இந்த பொருட்கள் செய்வதற்கென்று நாங்கள் தேர்வு செய்யும் மரங்களாக, வெப்பாலை, மாவலிங்கம் மரம், வாகை, நாவல், வேம்பு போன்ற மரங்கள் உள்ளன.

    உங்களால் யாருக்கேனும் பயிற்சி அளிக்க முடியுமா?

    தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் பயிற்சி பெறுவதற்கு ஆர்வமாக வந்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

    உங்களது அடுத்த இலக்கு?

    நாங்கள் தயார் செய்யும் பொருட்கள் முற்றிலும் இயற்கை சார்ந்தவை தான். எனவே குழந்தைகள் விளையாடுவதற்காக நாங்கள் தயார் செய்யும் பொருட்களை தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வாங்கி கொடுத்தால், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், கள்ளக்குறிச்சியில் எங்கள் சுய உதவிக்குழுவின் இந்த தொழிலை ஒரு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருக்கிறது.

    குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறீர்களா?

    வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் கிளாஸ்களைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் மரத்திலான கிளாஸ், மளிகைப் பொருட்களை போட்டுவைக்க தேவையான பொருட்களையும் தயார் செய்கிறோம். மேலும், நகைகள் போட்டுவைக்க பெட்டி, குங்கும சிமிழ் என்று வீட்டு உபயோகத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்கிறோம்.

    உங்களை போன்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    பெண்கள் ஆண்களின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இதற்கு முன்னர் தான் இருந்தது. ஆனால் தற்போதைய காலம் அப்படியானதாக இல்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு வருமானம் வருகிறது. சொந்த காலில் பெண்களும் நிற்கலாம். எதிலும் லாபம் கிடைக்குமா? வரவேற்பு இருக்குமா? என்று எண்ணிக்கொண்டு இருக்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவு செய்தால் வெற்றி பெறலாம். மகளிர் குழுவை பொறுத்தவரை என்றும் வெற்றித்தான் உண்டு'' என்றார்.

    • பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
    • பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஆடுகளை பாரம்பரியமாக வளர்த்து வருபவர்கள் ஒரே கிடாயை பல ஆண்டுகள் இனவிருத்திக்காக பயன்படுத்துகின்றனர்.

    இனவிருத்தி மேலாண்மை

    இவ்வாறு பயன்படுத்தும் போது உள் ரத்த சொந்தங்கள் கூடி பிறக்கக்கூடிய பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பிறக்கக்கூடிய குட்டிகளில் இறப்பு விகிதம் கூடியும், இனவிருந்திய பண்புகள் மற்றும் வளர்திறன் பாதிப்புடனும் காணப்படுகிறது.

    இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பட்டியில் இனவிருத்திக்காக வளர்க்கப்படும் கிடாக்களை மாற்ற வேண்டும். மாற்று மந்தைகளில் இருந்து பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய ரத்த சொந்தங்களை தவிர்த்து உற்பத்தியை மேன்மை அடைய செய்ய முடியும்.

    கொட்டகை பராமரிப்பு முறைகள்

    பகுதிநேர மேய்ச்சல் முறையில் ஆடுகளை லாபகரமாக வளர்க்கலாம். இரவு நேரங்களில் மட்டும் ஆடுகளை அடைப்பதற்கு கொட்டகை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி என்ற அளவில் இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும். தரையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கொட்டகையின் தரைத்தளம் இருக்குமாறு அமைக்க வேண்டும். சாதாரண மண் தரையின் அமைப்பே போதுமானது.

    கொட்டகையின் மத்தி உயரம் 10 முதல் 11 அடியாகவும், சாய்ப்பு உயரம் 78 அடியாகவும் இருக்குமாறு அமைத்தல் அவசியம். வெள்ளாடு கொட்டகையாக இருந்தால் 2½ அடி பக்கவாட்டு சுவரும், செம்மறியாட்டு கொட்டகையாக இருந்தால் 1 அடி பக்கவாட்டு சுவரும் தேவை. மேலும் தரையில் இருந்து 4 அடிக்கு கம்பிவலை அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்

    மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளுக்கு குறைந்த விலை தாவர வகை கழிவுகள் மற்றும் உலர் தீவனங்களை கொடுத்து வளர்க்கும் போது அவற்றின் உடல் எடை நன்றாக கூடும். மேலும் ஒரு நாளைக்கு 8 மணி நேர மேய்ச்சல் அவசியமாகிறது. அதிக குளுமை இல்லாத நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கு அனுப்பலாம் மேலும் மாலை வேளைகளில் ஆடுகள் நன்றாக மேயும்.

    ×