என் மலர்
அழகுக் குறிப்புகள்
- ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
- ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.
தேவையானவை: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, மென்மையான பருத்தி துணி, வெந்நீர்
செய்முறை: உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்யவும். மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தித் தேய்க்கவும். இப்போது, பருத்தி துணியை வெந்நீரில் நனைக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.
துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைக்கவும். இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்குப் பதிலாக, எண்ணெய்யை அகற்றுவதுபோல் அழுத்தி மசாஜ் செய்யவும். அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.
- கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு.
- வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது. அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகைகளின் ஓர் வடிவமைப்பு உக்தி (அ) உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.
அதி உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன. பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்தவிதமான உருவம், வடிவம், வித்தியாசமான வளைவுகள் போன்றவற்றை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அணிபவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகை பிரிவுகளையே காணலாம். அதில் அதிகபட்ச கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன. பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள், செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன. சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.
பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக, அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன. பூக்கள் என்பதால் எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகள் கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது.
வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ்கள் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும், சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம். மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன. பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்கள், காதணிகள், நெக்லஸ்கள், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன. பார்த்தவுடன் பரவசமூட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடையில்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரமாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.
- கேரட்டை அழகு குறித்த பராமரிப்பில் அதிக அளவு உதவுகிறது.
- முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கேரட்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணற்ற குணநலன்களை கொண்டிருக்கிறது. இதே போன்று அழகு குறித்த பராமரிப்பிலும் அதிக அளவு உதவுகிறது.
முகத்தின் கருமை நிறம் முதல் இளவயதிலேயே முகத்தில் உண்டாகும் சுருக்கம் வரை அனைத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கேரட்டுக்கு உண்டு. எதற்கு எப்படி பயன்படுத்தினால் பலனை அழகாக பெற்றுவிடலாம் என்பதை தெரிந்துகொண்டால் போதும். தினம் ஒரு கேரட் வாழ்நாள் முழுக்க உங்கள் முகத்தை பேரழிகியாக காண்பிக்கும்.
கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு, ஆன்டி ஆக்சிடண்ட் எல்லாமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல சரும அழகுக்கும் உதவுகிறது. உடலில் கொலாஜன் சுரப்பு குறைந்தால் சரும சுருக்கங்கள் எளிதில் அடையும். இந்த சுரப்புக்கு வைட்டமின் சி தேவை. கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது. சருமம் ஜொலிஜொலிப்புடன் இருக்க தினம் ஒரு கேரட் சாறு குடித்தால் கூட போதும்.
கேரட் மாஸ்க் சருமத்தில் இருக்கும் மூன்று அடுக்கு வரை சென்று சுத்தம் செய்யகூடியது. 10 முறை ஃபேஸ் மாஸ்க் செய்து பொலிவு தரும் முகத்தை இந்த கேரட் மாஸ்க் ஒரே முறை தந்துவிடும்.
கேரட் பாதிஅளவு இருந்தால் போதும் கேரட்டை விழுதாக மசித்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தேவையெனில் காய்ச்சாத பால் சிறிது விட்டு முகம், கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், நிறம் உடனடியாக மறைவதை பார்க்கலாம்.
சிறந்த ஃபேஷியல் எஃபெக்ட் என்று சொல்லகூடிய பேக் இது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தின் எண்ணெய்பசையை அகற்ற உதவுவதோடு சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. கேரட் சருமத்தை மென்மையாக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை தளராமல் வைக்கிறது.
கேரட்- 1, பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன், இரண்டையும் பாதி நிலையில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் தயிர், பன்னீர், எலுமிச்சை சேர்த்து கலந்து முகத்துக்கும், கழுத்துக்கும் பேக் போட்டு நன்றாக காயும் வரை விட வேண்டும். முகத்தை இறுக்கி பிடிக்கும் அளவு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச் பளிச்.
கேரட்டை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி அதனுடன் சமளவு பன்னீர், கற்றாழை சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். முகம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் ஸ்ப்ரேவை முகத்தில் அடித்து பஞ்சால் துடைத்து எடுத்தால் முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும். குறிப்பாக வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு கேரட் சாறு முகத்தில் அதிகப்படியான நன்மையை தரும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி லேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.
- தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம்.
- நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.
நீண்ட, பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இத்தகைய கூந்தலைக்கொண்ட பெண்கள், அதை முறையாக பராமரிப்பது முக்கியம். அதற்காக பயன்படுத்தும் ஷாம்பு முதல் சீப்பு வரை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.
* நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும்போது முடி உடையக்கூடும். அதற்கு பதிலாக 'பிரஷ்' போன்ற அமைப்புடைய சீப்பை உபயோகித்து முடி உடையாமல், சேதம் அடையாமல் காக்கலாம்.
* இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது. தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
* நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.
* நீளமான தலைமுடி மென்மையாக இருக்கும். அது கடினமான துணிகளுடன் உராயும் பொழுது சேதமடையும். இதைத் தவிர்க்க 'சாட்டின்' போன்ற மென்மையான துணியால் ஆன தலையணை உறையை உபயோகிப்பது நன்று.
* முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.
* அனைத்து வகையான தலைமுடியிலும் வெடிப்பு ஏற்படுவது இயல்பானது. ஆகையால், அவ்வப்போது கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். இதனால் முடி சேதமடைவதைத் தடுக்க முடியும்.
* தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம். இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்துங்கள். கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.
* நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மையானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள். ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது. மேலும், தலைமுடியில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற 'மைக்ரோ பைபர்' டவல்களை உபயோகிக்கலாம்.
- இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
- சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியலாம்.
அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்) கூடுதல் அழகைத் தருவதாக இருக்கின்றது.மிகவும் மிருதுவான பீச், சந்தனம், பிஸ்தா, ஆரஞ்சு,கிரே, பிங்க் வண்ண புடவைகளுக்கு போச்சம்பள்ளி மற்றும் இக்கத் டிசைன்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்து பிளவுஸ் பீஸாகத் தருகிறார்கள்.
இந்த பிளவுஸ் பீஸ்கள் அந்தப் புடவைக்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது. இதுபோன்ற லினன் ஜூட் புடவைகள் பெயர் மற்றும் வண்ணத்திற்கு ஏற்றது போலவே மிகவும் மிருதுவாக, மென்மையாக இருக்கின்றன. இந்தப் பிளெயின் புடவைகளில் கோல்டன் ஜரி கட்டங்கள் வருவதுபோல வடிவமைக்கப்பட்டு வருவது கூடுதல் அழகாக இருக்கின்றது. புடவை தலைப்பில் வரும் குஞ்சங்களும், கோல்டன் மற்றும் புடவை நிறத்தில் வருவதுபோல செய்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.
பிச்வாய் சில்க் புடவைகள்
மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம். காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.
இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது. உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.
சாஃப்ட் காதி சில்க் புடவைகள்
பிளெயின் வண்ணப் புடவைக்கு தலைப்பு மற்றும் பார்டர் பூ டிசைன் வருவதுபோல் வடிவமைத்து தலைப்பில் டேஸில்ஸ் எனப்படும் குஞ்சம் தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது இந்தப் புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் போன்ற வண்ணங்களை உடலுக்குத் தந்து பார்டர் மற்றும் தலைப்பில் பெரிய பூ டிசைன் இருப்பது போன்று தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகளிலேயே இக்கத் டிசைன்களை மிகவும் அழகாகத் தந்திருக்கிறார்கள். பார்டரும், பிளவுஸும் ஒரே டிசைனில் இருப்பது அருமையாக இருக்கின்றது. அணிந்தால் உடலுடன் ஒட்டி வரும் இந்தப் புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் பிரிண்ட்கள் இருக்க பார்டர் மற்றும் பிளவுஸ் பிளெயினாக இருப்பது போன்று வரும் புடவைகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வரும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் வெளியில் உடுத்திச் செல்வதற்கு ஏற்றவையாக உள்ளன.
சாட்டின் சில்க் புடவைகள்
தொட்டாலே வழுவழுப்பாகவும், மெத்தென்றும் இருக்கும் இந்த சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியும் பொழுது அவர்களை சற்று குறைந்த உடல்வாகு இருப்பதுபோல் காட்டக்கூடிய புடவை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் ஏராளமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வருவதால் எதை எடுப்பது எதை விடுவது என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிலும் இந்த புடவைகளில் வரும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் இந்தப் புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டுகின்றன.சாட்டின் சில்க் புடவைகளுக்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. இந்தப் புடவைகளின் தலைப்பில் மட்டும் டிசைன்கள் வந்து உடல் முழுவதும் பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது, தலைப்பில் வரும் பெரிய டிசைன் பார்டரிலும் அதே பெரிய அளவில் வருவது, தலைப்பில் வரும் டிசைன் இரண்டு பக்க பார்டரி லும் வந்து உடல் பகுதி பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது என ஒவ்வொரு புடவையும் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.
- சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும்.
- முட்டையின் வெள்ளைக்கரு சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள துணை புரியும்.
முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சரும சுருக்கம், எண்ணெய் பிசுபிசுப்புதன்மை, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும். சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணை புரியும்.
* சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை கொண்டிருந்தால் முகப்பரு, கரும்புள்ளி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும்.
* சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை குலைக்கும். அதனை அவ்வப்போது அப்புறப்படுத்துவது சிரமமாக இருக்கும். அத்தகைய சிரமத்திற்கு ஆளாகுபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக 'பிரஷ்' மூலம் தடவ வேண்டும். முட்டைக்கரு நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.
* சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும். அதனால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் அந்த பாதிப்பு நீங்கி விடும்.
- காஃபி தூள் நம்ம முகத்தை அழகாக காட்டவும் பயன்படுகிறது.
- காஃபி தூளை சரும அழகிற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
காஃபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காஃபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காஃபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும்.
எனவே காஃபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காஃபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.
என்னடா நம்ம காஃபி குடிக்க மட்டும் தான் பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காஃபி தூள் நம்ம முகத்த அழகாக காட்டவும் பயன்படுகிறது.
காஃபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.
ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.
கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை, கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
- எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
- தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.
முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.
* கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
மிருதுவான பாதங்கள் கிடைக்க :
* தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.
* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
* கால்கள்(legs) அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால் தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.
* ஸ்கர்ட் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள்(legs) வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.
வெடிப்பு மறைய :
* மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால்(legs) வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால்(legs) வெடிப்பில் பூசி வர கால்(legs) வெடிப்பு குணமாகும்.
* கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.
* உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள்(legs) அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
* பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால்(legs) வெடிப்பு மறையும்.
- விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.
- கொலோஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை இழக்க நேரிடும்.
நீல ஒளியின் பயன்பாட்டை குறைப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* மின்னணு சாதனங்களின் திரையை அதிக நேரம் பார்ப்பது கண்கள், சருமத்தை பாதிப்பதோடு தூக்க சுழற்சிக்கும் இடையூறை உண்டாக்கும். அதனால் திரையில் செலவிடும் நேரத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.
* மின்னணு சாதனங்களை படுக்கை அறைக்குள் கொண்டு செல்லும் வழக்கத்தை தவிருங்கள். தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக செல்போன், லேப்டாப் பார்ப்பதை தவிருங்கள்.
* இரவில் செல்போனை உபயோகப்படுத்துவதாக இருந்தால் 'நைட் மோட்' எனப்படும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அது நீல ஒளியின் வெளிப்பாட்டை குறைக்கும்.
* சருமத்திற்கு சன்ஸ்கிரீன் உபயோகிப்பதும் நல்லது. அது நீல ஒளி உள்பட தீங்கு விளைவிக்கும் அனைத்து கதிர்வீச்சுகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்கும்.
செல்போன், கம்ப்யூட்டர், டி.வி., லேப்டாப் போன்ற திரையில் இருந்து வெளிப்படும் 'புளூ லைட்' எனப்படும் நீல ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவை சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறது, புதிய ஆராய்ச்சி. அந்த நீல ஒளி சரும நிறமிகளை பாதிப்பதோடு விரைவில் வயதான தோற்றத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கிறது.
தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதற்கு ஏற்ப, மின்னணு சாதனங்கள் வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டன. காலையில் வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிர்வது தொடங்கி இரவில் தூங்க செல்வதற்கு முன்பு வரை சமூகவலைத்தளங்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. கொரோனா பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும், ஆன்லைன் கல்வி முறையும் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திவிட்டன.
இந்த சாதனங்கள் நீல ஒளியை உமிழ்வதால் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் இருந்து வெளிப்படும் நீல ஒளி சருமத்தில் ஆழமாக ஊடுருவி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். மேலும் கொலோஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை இழக்க நேரிடும். அதன் காரணமாக முன்கூட்டியே வயதாகும் தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.
கொலோஜன் என்பது மனித உடலில் அதிகமாக காணப்படும் புரதமாகும். அதுபோல் எலாஸ்டின் என்பது தசைகள் சுருங்கி விரிவடையும் பகுதிகளில் காணப்படும் புரதமாகும். இந்த இரண்டு புரதங்களின் உற்பத்தியும், செயல்பாடும் தடைபடும்போது விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்ள நேரிடும்.
நீல ஒளி சரும நிறத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும். இரவில் நீல ஒளியை வெளிப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்துவது உடலின் உயிர் கடிகார செயல்பாட்டை சீர்குலைத்து தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்திவிடும். ஒருசில சரும பிரச்சினைகளை இரவில் இயற்கையாகவே சரி செய்யும் செயல்முறை உடலில் நடைபெறும். அந்த செயல்முறையும் பாதிப்புக்குள்ளாகும். கண்களுக்கு அருகில் கருவளையம் தோன்றும். அது வயதான தோற்றத்துக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையும்.
- வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும்.
- எப்சம் உப்பு முகப்பருவை போக்க சிறந்த மருந்து.
எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.
தசை வலி, மன அழுத்தம், அஜீரணம், மன அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. எப்சம் உப்பை நீரில் கரைக்கும்போது இதிலிருக்கும் சல்பேட், மெக்னீசியம் போன்றவை வெளிப்படும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானவை. எப்சம் உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு. எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும். கரும்புள்ளிகளுடன் சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற சரும பாதிப்பை அனுபவிப்பவர்கள் எப்சம் உப்பை பயன்படுத்துவது நல்லது.
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாமல் அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.
- அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
- குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.
எத்தனை முறை குளிக்கலாம்?
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.
அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?
பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.
சூடான நீரை தவிருங்கள்:
அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:
குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.
உடலை உலர வையுங்கள்:
குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.
- கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
- கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.
கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.
உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.
கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.






