என் மலர்

  இயற்கை அழகு

  சருமத்தின் பொலிவைப் பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்வது எப்படி?
  X

  சருமத்தின் பொலிவைப் பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்வது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
  • ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

  சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

  தேவையானவை: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, மென்மையான பருத்தி துணி, வெந்நீர்

  செய்முறை: உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்யவும். மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தித் தேய்க்கவும். இப்போது, பருத்தி துணியை வெந்நீரில் நனைக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.

  துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைக்கவும். இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்குப் பதிலாக, எண்ணெய்யை அகற்றுவதுபோல் அழுத்தி மசாஜ் செய்யவும். அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.

  Next Story
  ×