என் மலர்
சமையல்
- பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்திருக்கின்றன.
- இன்று பாகற்காய் ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - கால் கிலோ,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளி - கோலி அளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.
பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.
இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
- இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 2
கொண்டைக்கடலை - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவைக்கேற்ப
பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப
செய்முறை :
கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.
எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.
இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.
இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
- வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1/4 கப்
கேரட் துருவல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 6
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
- நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு - 100 கிராம்
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை :
நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள்.
அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
கடாயை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள்.
கருவாடு ரெடி ஆனதும் சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி இந்த நெத்திலி கருவாட்டை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை.
- எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு அடை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ
தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 10 பல்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரை மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
4 மணிநேரம் கழித்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அரைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!
பலன்கள்:
கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செடார் சீஸ் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பிரெட் தூள் - 3 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ள கொள்ள வேண்டும்.
மசித்த உருளைக்கிழங்கு, கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், பிரெட் தூள், உப்பு, சீஸ், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பின் இதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.
பின்னர் ரவுண்ட் கட்டர் வைத்து வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.
வாய்க்கு ஸ்பூன் வைத்து வரைய வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் சாப்பிடவும்.
ஸ்மைலிகளை பாக்ஸில் போட்டு ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வடை மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
- இன்று வடை மோர் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மெதுவடை அல்லது பருப்பு வடை - 10
தயிர் - 2 கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஊறவைத்து நைசாக அரைக்க :
அரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
கொரகொரப்பாக அரைக்க :
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது துண்டு
தாளிக்க :
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
* அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
* கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
- நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.
தேவையான பொருள்கள்:
கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
முழுப் பூண்டு - 1
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய்ப் பால்- 50 மில்லி
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.
செய்முறை:
நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.
ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.
மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.
இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான டிபன் இது.
- குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம்- 1,
பீன்ஸ் - 10,
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
ப.மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மதுரையில் பன் பரோட்டா மிகவும் பிரபலம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
முட்டை - 1
பால் - 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.
* பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.
* இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
* அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.
* தேய்த்த மாவை விரலால் சூற்றி (வட்ட வடிவில்) வைக்கவும்.
* ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்.
* சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.
* இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன், மட்டன் சால்னா சூப்பராக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடை குறைய தினமும் முளைக்கட்டிய பயறை சாப்பிடலாம்.
- சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய பயறில் ஊட்டச்சத்துகள் அதிகம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய பயறு கலவை - ஒரு கப்,(அனைத்து பயிறுகளும் கலந்தது)
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு , மிளகுத்தூள் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முளைக்கட்டிய பயறை வேக வைக்கவும். சிறிதளவு வேக வைத்த பயறை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பயறை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த பயறு சேர்த்து கலந்து பருகலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
- இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்).
கடலை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 5 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






