கலக்கலான சுவையில் நண்டுக்கால் ரசம்

இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.
கலக்கலான சுவையில் நண்டுக்கால் ரசம்
Published on

தேவையான பொருள்கள்:

கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

முழுப் பூண்டு - 1

சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 4

தக்காளி - 2

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தேங்காய்ப் பால்- 50 மில்லி

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

செய்முறை:

நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com